ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வாழ்வியல் எது? - கவிதை
 ayyasamy ram

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி

View previous topic View next topic Go down

நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி

Post by ayyasamy ram on Sun Oct 09, 2016 4:16 pm


-
காட்டில் இருந்த ஒரு குடிசையில், ஒரு பெண்ணின் மடியில் தலைவைத்து ஒருவர் படுத்துக் கிடந்தார். கடும் நோயாளியான அவரும் அந்தப் பெண்ணும் கிழிசலான ஆடைகளை அணிந்திருந்தார்கள். பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடி, அவள் புடைவையை நனைத்தது. அப்போது குடிசை வாயிலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டு, கணவர் தலையை மெதுவாக கீழே வைத்து விட்டு அந்தப் பெண் வாசலுக்குப் போனாள் அங்கே…

ஆங்கிரஸ முனிவர் நின்றுகொண்டிருந்தார். வந்த பெண் அவரை வணங்கி எழுந்தாள். ஆங்கிரஸர் அவளுக்கு ஆசிகூற “அம்மா! யார் நீ? உன்னைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவளைப் போல் தெரிகிறது. அப்படி இருந்தால், ஏன் இந்தக் காட்டில் வந்து இருக்கிறாய்? உண்மையைச் சொல்.” எனக்கேட்டார்.

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட பெண் பதில் சொல்லத் தொடங்கினாள். “உத்தம ரிஷியே! நீங்கள் சொன்னது உண்மைதான். நான் அரசியாக இருந்தவள். என் கணவர் உள்ளே நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். தாயாதிகள் பொறாமை காரணமாகப் போரிட்டு, எங்களை இங்கே விரட்டிவிட்டார்கள். எங்களுக்குப் பழையபடியே ராஜ்ஜியம் கிடைக்க வேண்டும். நல்ல பிள்ளையும் பிறக்க வேண்டும். இதற்கு வழிகாட்டுங்கள்.” என வேண்டினாள்.

அவளின் சோகக் கதையைக் கேட்டு, ஆங்கிரஸ முனிவரே கண்ணீர் சிந்தினார். “அம்மா! அரசியே! கவலைப்படாதே. எப்படிப்பட்ட துயரமாக இருந்தாலும் அதற்கு ஒரு முடிவு உண்டு. வழியும் உண்டு. பக்கத்தில் தான் பஞ்சவடி இருக்கிறது. அங்குபோய் அங்கே எழுந்தருளியிருக்கும் அம்பிகையைப் பூஜைசெய். உனக்கு ராஜ்ஜியமும் கிடைக்கும். புத்திரனும் பிறப்பான்.” என்றார்.

அவர் வார்த்தைகளை அப்படியே ஏற்ற அரசி, கணவருடன் பஞ்சவடியை அடைந்தாள். ஆங்கிரஸ முனிவர் தானே முன்னின்று அவர்களுக்கு நவராத்திரி பூஜையைச் செய்து வைத்தார். முறைப்படி பூஜையைச் செய்த அரசியையும் அரசனையும் அழைத்துக் கொண்டு திரும்பிய ஆங்கிரஸர், அவர்களைத் தன் ஆசிரமத்திலேயே தங்க வைத்தார். அரசர் நோயிலிருந்து மீண்டார். அம்பிகையின் அருளால், அரச தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து, சூரியப் பிரதாபன் எனப்பெயர் வைத்தார்கள்.

அந்தக் குழந்தைக்கு ஆங்கிரஸ முனிவரே அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். முனிவர் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் முழுமூச்சுடன் கற்றுத் தேர்ச்சி பெற்ற சூரியப் பிரதாபன் இளைமையின் வாசலைத் தொட்டான்.

பிறகென்ன? வாலிபன் ஆன பிறகு பெற்றோரின் வாட்டத்தைத் தீர்க்க முயல வேண்டாமா? சூரியப் பிரதாபன் ஆங்கிரஸ முனிவரை வணங்கி, அன்னை-தந்தையின் அனுமதி பெற்று, பகைவர்கள் மீது உரிமைப்போர் தொடுத்தான்.

பகைவர்கள் தோற்று ஓடினார்கள். சூரியப்பிரதாபன் ஆசிரமம் திரும்பி ஆங்கிரஸ முனிவரை வணங்கி நடந்ததை விவரித்து மகிழ்ந்தான். பெற்றோருடன் நாடு திரும்பி அரியணை ஏறினான்.

துயரப் புயலிலேயே சிக்கித் தவித்த அரசியும் அரசனும் ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள். வேண்டுதல் நிறைவேறி விட்டதே என்பதற்காக அரசியும் அரசனும் தாங்கள் செய்து வந்த நவராத்திரி பூஜையை நிறுத்தவில்லை. தொடர்ந்து செய்து, அம்பிகையின் திருவடிகளிலே ஐக்கியமானார்கள். நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி நம்மையும் காக்க வேண்டுவோம்.


ஆன்மிகம் – தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32438
மதிப்பீடுகள் : 10727

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum