ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 ayyasamy ram

'மாதங்களில் நான் மார்கழி'
 ayyasamy ram

மரணத்தை வெல்லும் மார்கழி
 ayyasamy ram

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 ayyasamy ram

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 ayyasamy ram

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 ayyasamy ram

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 ayyasamy ram

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 ayyasamy ram

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:

View previous topic View next topic Go down

திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:

Post by T.N.Balasubramanian on Tue Oct 11, 2016 10:05 am

திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:பக்தர்கள் கடும் அதிர்ச்சி

திருக்குவளை, பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்த, 1,000 ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம் மாயமானது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஏழாம் நுாற்றாண்டை சேர்ந்த இக்கோவில், தேவார மூவரால் பாடல் பெற்றது. இக்கோவிலில், ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த, விலைமதிப்பற்ற மரகத லிங்கம் உள்ளது.

இக்கோவிலில் உள்ள சுயம்பு லிங்கத்திற்கு, காலை, 9:30, மாலை 6:30 மணிக்கு, பூஜை செய்யப்படுவது வழக்கம். தற்போது, விஜய தசமி விழாக்காலம் என்பதால், கடந்த ஒரு வாரமாக, தினமும் மரகத லிங்கத்திற்கும், பூஜை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலை பூஜை முடிந்து, மரகத லிங்கத்தை, இரும்பு பெட்டியில் வைத்து, இரண்டு பூட்டுகளால் பூட்டி விட்டு, அர்ச்சகர் சென்றார். மாலை, விநாயகருக்கு பூஜை செய்த பின், மரகத லிங்கத்தை எடுக்கச் சென்ற அர்ச்சகர், பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

கோவில் நிர்வாகம் மற்றும், நாகப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் கைரேகை நிபுனர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
மரகத லிங்கம் குறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: மரகதம் நம் நாட்டில் கிடைக்காது, கிழக்காசிய நாடுகளில் மட்டுமே கிடைக்க கூடிய, அரிய வகை கல். திருக்குவளை, பிரம்மபுரீஸ்வரர் கோவில், ஏழாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக இருந்தாலும், பின், வந்த ராஜேந்திர சோழன், கிழக்காசிய நாடுகளை வென்ற போது, அங்கிருந்து, மரகத கல்லை கொண்டு வந்து, இந்த கோவிலுக்கு லிங்கம் செய்திருக்கலாம் என, நம்பப்படுகிறது.

இந்திரனை துன்புறுத்திய அசுரர்களை, முசுகுந்த சக்கரவர்த்தி போரிட்டு வென்றால், தன்னிடம் இருக்கும், புகழ்வாய்ந்த மரகத லிங்கத்தை, அவனுக்கு தருவதாக கூறினார். முசுகுந்தன் போரில் வென்றும், மரகத லிங்கத்தை தர மனமில்லாமல், தேவ சிற்பியான மயன் மூலம், 6 லிங்கங்களை செய்து, தேவையானதை எடுத்துக்கொள்ள சொன்னார்.

இந்த நிலையில், இறைவனின் துணையோடு, உண்மையான லிங்கத்தை முசுகுந்தன் எடுத்துவிட, அனைத்து லிங்கங்களையும் அவனிடமே கொடுத்தார், இந்திரன். அவற்றை ஒவ்வொரு இடங்களில் வைத்து, கோவில் எழுப்பி, முசுகுந்தன் வழிபட்டதாக ஐதீகம் உள்ளது. அவையே, சப்த விடங்க தலங்கள்.

மரகத லிங்கத்தின் சிறப்பு:மரகத லிங்கம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதன் மீது, பால், தேன், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வர். அந்த தீர்த்தத்தை, தொடர்ந்து, 48 நாட்கள் பருகினால், பல்வேறு உடல் பிரச்னைகள் சரியாகும். மாயமான லிங்கத்திற்கு 1,000 ஆண்டுகளுக்கும் மேல், அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதால், அதன் மருத்துவ குணம்
அதிகரித்திருக்கும்.

திருடு போவது எப்படி? பொதுவாக, இந்த சிலைகளை உள்ளூர் சிலை திருடர்கள் திருடுவதில்லை. இதன் மதிப்பை உணர்ந்த, சர்வ தேச கொள்ளையர்கள் மட்டுமே இவ்வாறான திருட்டில் ஈடுபடுகின்றனர். இந்த லிங்கம், மிகச்சிறியது. அதனால், அதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இது, தொல்பொருள் ஆய்வுக் கழகத்தில், கலைப்பொருளாக பதிவு செய்யப்பட்டிருந்தால், மாவட்ட காவல்துறை, புதுடில்லியில் உள்ள 'கிரைம் ரெக்கார்டு பீரோ'வுக்கு, அதன் பதிவு எண், படம் ஆகியவற்றை அனுப்பி இருக்கும்.

அங்கிருந்து, அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு, தொடர் கண்காணிப்பில் இருந்தால், இரண்டு வாரங்களுக்குள், திருடனை பிடித்து விடலாம். பொதுவாக, கோவில் திறக்காத போது, தன் ஊருக்கு, வரும் வெளியூர்க்காரர்களைப் பற்றி, பொதுமக்கள் விசாரித்து, சந்தேகம் இருந்தால், போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஏனெனில், தமிழகத்தில், 58 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அவற்றில், 38 ஆயிரம் கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அனைத்திலும், புகழ் வாய்ந்த பொக்கிஷங்கள் உள்ளன. அவற்றை அரசால் காப்பது, சாத்தியமில்லை. பொதுமக்களிடமும் விழிப்புணர்வு வர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: இந்த கோவிலில் உள்ள மரகத லிங்கம், 1983ம் ஆண்டு, தொல்பொருள் ஆய்வுக் கழகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், விசாரித்தால், கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

எவற்றை பதிவு செய்யலாம்?
நுாறு ஆண்டுகள் பழமையான பொருட்கள், தொல்லியல் துறையால், கலைப்பொருளாக பதிவு செய்யப்பட்டு, இந்திய அரசின் ஆவணக் காப்பகத்தில், அதன் விபரங்கள் காக்கப்படும்.

இது ஒரு தொடர் கதை!

மரகத லிங்கம் மாயமானது குறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத்தை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: திருத்துறைபூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் திருவாரூர் திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோவில்களில் இருந்த மரகத லிங்கங்களும்; நாகப்பட்டினம் நீலாயி தாட்சாயிணி அம்மன் கோவிலில் இருந்த கோமேதக லிங்கமும் திருடுபோயுள்ளன. அந்த வரிசையில் தற்போது திருக்குவளை கோவில் மரகத லிங்கமும் இணைந்துள்ளது. இந்த கோவில் தர்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மரகத லிங்க திருட்டிற்கு காவல் துறையும், கோவில்
நிர்வாகமும் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி தினமலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20628
மதிப்பீடுகள் : 7965

View user profile

Back to top Go down

Re: திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:

Post by Ramalingam K on Tue Oct 11, 2016 10:51 am

அடக் கொடுமையே !

கடவுளையே திருடும் மனிதன் மகத்தானவன்தான்.

தன்னைத் திருடச்செய்து திருடனை வாழவைக்கும் கடவுள் திருவுடையோன்தான். இதுவும் அவனது திருவிளையாடல் என்று திருப்தி அடைவது நமது மானுட தர்மம்- திடமான முடிவும் கூட.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:

Post by T.N.Balasubramanian on Tue Oct 11, 2016 11:12 am

அதே மாதிரிதான் வேறொரு சம்பவம் சொல்லுகிறேன் .

ஒரு சமயம் நான் சென்னையில் இருந்து திருச்சி போவதாக இருந்தது . வீட்டிற்கு வந்த சகலை,திருச்சி பக்கத்தில் உள்ள திருப்பட்டூர் ஊரில் குடியிருக்கும் ப்ரம்ம ஸ்தலம் சென்று வர கூறியிருந்தார். மேலும்,
எல்லோருக்கும் அங்கே போகும் பாக்கியம் கிடைக்காது , நமக்கு போக விதித்திருந்தால் மட்டுமே போகமுடியும் என்றும் கூறி 5/6 வெளி நாட்டில் வாழ் தமிழக பக்தர்கள் அனுபவங்கள் சமாச்சாரங்கள் கூறினார் .
நானும் அங்கே சென்று தரிசனம் செய்து வந்தேன் .

நான் சென்று வந்த 10 /15 நாட்களுக்குப் பிறகு , திருடர்கள் சுவரேறி குதித்து உண்டியலை உடைத்து சென்றதாக செய்தி .  

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20628
மதிப்பீடுகள் : 7965

View user profile

Back to top Go down

Re: திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:

Post by M.Jagadeesan on Tue Oct 11, 2016 11:19 am

நிச்சயமாக ஏதாவது உள்குத்து இருக்கும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:

Post by Ramalingam K on Tue Oct 11, 2016 11:59 am

பரம்பொருளின் பவித்ரமும், சூட்சுமமும் யாரால்தான் அறிய முடியும் !

ஆனால் ஒன்று மட்டும் உண்மை ஐயா !

தோன்றியதெல்லாம் கடவுள் திருமேனி உட்பட ஒருநாள் மறைந்தாகவேண்டும்.
நமது மரகத லிங்கமும் இந்த இயற்கையின் நியதிக்குத் தன்னை ஆட்படுத்தி கொண்டுள்ளது.

விதியை நிர்ணயித்தவனே அதனை மீறக்கூடாது என்னும் தன்மையைக் கூட இந்த வைபவத்தின் மூலம் கூறாமல் நமக்கு உணர்த்தி இருக்கலாம்.

ஏதோ திருக்குவளையின் மரகத லிங்கம் காட்சியாகி இருக்கும்போதே காணும் பாக்கியத்தை அடியனும் பெற்றேன் 2001 இல் அடியேன் நாகப்பட்டினம் அஞ்சல் கோட்டத்தின் கண்காளிப்பாளராக இருந்தபோது. அது போதும் என்ற அளவில் திருப்தி அடைந்து கொண்டேன் இப்போது . இந்த விஞ்ஞான முன்னேற்ற காலத்தில் திட்டமிட்டே திருடப்பட்டிருக்கும் பரம்பொருள் மீண்டும் யதாஸ்தானம் திரும்புவாரா!

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:

Post by ராஜா on Tue Oct 11, 2016 12:33 pm

என்னது திருக்குவளையிலா?! புன்னகை புன்னகை அது இத்தனை நாள் கோவிலில் இருந்ததா ?!உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:

Post by T.N.Balasubramanian on Tue Oct 11, 2016 12:45 pm

@ராஜா wrote:என்னது திருக்குவளையிலா?! புன்னகை புன்னகை அது இத்தனை நாள் கோவிலில் இருந்ததா ?!

மேற்கோள் செய்த பதிவு: 1224101

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20628
மதிப்பீடுகள் : 7965

View user profile

Back to top Go down

Re: திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:

Post by M.Jagadeesan on Tue Oct 11, 2016 1:37 pm

முதல்வர் மருத்துவ மனையில் உள்ள நிலையில் , ஆறலைக் கள்வர்கள் அகப்பட்டதைச் சுருட்ட ஆயத்தமாகிவிட்டனர் .

அரசை வழிநடத்தவும் ,சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் , வலுவான தலைமை இப்போது தேவை . அதிகாரிகளை ஆட்சி செய்ய அனுமதிக்கலாகாது .அதிமுகவினர் தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது .

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு .

என்பார் ஐயன் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum