ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 M.Jagadeesan

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 Dr.S.Soundarapandian

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 Dr.S.Soundarapandian

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ckavin

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

பூரானை அடிக்காதீர்கள்!
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 M.Jagadeesan

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இளமையில் வெல்! “திரு’ நிறைச் செல்வியர்!

View previous topic View next topic Go down

இளமையில் வெல்! “திரு’ நிறைச் செல்வியர்!

Post by ayyasamy ram on Wed Oct 12, 2016 7:42 am


-
குழந்தைகளிடம் ஐந்து வயதிற்குள்ளாகவே நல்லொழுக்கத்தையும்,
நற்சிந்தனைகளையும், நல்ல பழக்க வழங்கங்களையும் நாம்
விதைத்து விட்டோம் என்றால், அவை அவர்களின் எதிர்கால வாழ்வை
வளப்படுத்துவதுடன், பிறர்க்கும் பயன்படும் – வழிகாட்டும் என்பதில்
சந்தேகமே இல்லை.

அந்த வகையில், “கருவிலே திரு’வுடையவளாகத் திகழும் ரோஜா
என்ற சிறுமியைக் குறிப்பிடலாம். இவள், தான் வாழும் பகுதியினரை
மட்டுமல்லாமல் பல ஊர் மக்களையும் திரும்பிப் பார்க்கவும் திகைக்கவும்
வைத்திருக்கிறாள்.

திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளை அனக்காவூர் ஊராட்சி
ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியையான
பா.சுடர்க்கொடி நெகிழ்ந்து கூறியவை….

——————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30581
மதிப்பீடுகள் : 8922

View user profile

Back to top Go down

Re: இளமையில் வெல்! “திரு’ நிறைச் செல்வியர்!

Post by ayyasamy ram on Wed Oct 12, 2016 7:42 am

நான் பணிபுரியும் பள்ளியில் 2012-இல் நல்ல அழகும் அறிவும் கொண்ட
குழந்தை “ரோஜா’ முதல் வகுப்பில் சேர்ந்தாள். வாசிப்புத் திறனுக்கு என்று
பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நாள்தோறும் தேவாரப்
பாடல் ஒன்று கரும்பலகையில் எழுதிப் படிக்க வைப்பேன்.

“பூத்தேர்ந்து ஆயின கொண்டுநின் பொன்னடி’ என்பது திருஞானசம்பந்தரின்
திருவோத்தூர் தேவாரம். ஒரு நாள் இதை எழுதி வைத்தேன்.
எந்தக் குழந்தைகளும் மனனம் செய்யவில்லை. வாசிக்க மட்டுமே செய்தனர்.
ஆனால், இக்குழந்தை ரோஜா மட்டுமே என்னிடம் வந்து முழுப் பாடலையும்
கேட்டு, எழுதிப் படித்தாள்,
உடனே முழுப் பாடலையும் பாடிக்காட்டினாள்! எனக்கு வியப்பாக இருந்தது!
கூடவே நம்பிக்கையும் பிறந்தது!

செங்கல் சூளையில் கூலி வேலை செய்யும் முருகன், ரமா என்னும்
ரோஜாவின் பெற்றோரைக் கண்டு அவளது திறமைகளை எடுத்துக்கூறி,
அவர்கள் அனுமதியுடன் விடுமுறை நாள்களில் அவளை என் வீட்டிற்கு
அழைத்து வந்து அவளுக்குத் தேவாரப் பாடல்களை இசையோடு சொல்லிக்
கொடுத்தேன். ரோஜாவும் உடனுக்குடன் மனனம் செய்து இனிய குரலில்
அருமையாகப் பாடினாள்!

இதைக் கண்ட நான், இன்னொரு ஞானசம்பந்தர்தான் பிறந்திருக்கிறார்
என்று மகிழ்ச்சி அடைந்தேன்!

பிறகு, எங்கள் ஊரிலுள்ள கோயிலுக்கு ஒவ்வொரு சோமவாரத்தின்
போதும் அவளுக்கு ஞானசம்பந்தர் போல் வேடமிட்டு அடியார்கள் முன்
பாடவைத்தேன். அனைவரும் வியந்தனர்! அவள் நிறைய ஞானசம்பந்தர்
பாடல்களையே பாடிப் பலரையும் வியப்பில் ஆழ்ந்தினாள்!

6 வயதில் 150 தேவாரப் பாடல்களை மனனமாகப் பாடி
எங்கள் ஊர் மாவட்ட கலெக்டரிடம் 2013-ஆம் ஆண்டு
பாராட்டும் பரிசும்கூட பெற்றிருக்கிறாள்!

அதைத் தொடர்ந்து குடியாத்தம், தென்னெலப்பாக்கம்,
கல்பூண்டி, ஆரணி, குன்னகம்பூண்டி, வெடால், வந்தவாசி,
கோயம்புத்தூர், சேத்துப்பட்டு, கோட்டுப்பாக்கம், சேலம்,
ஆற்காடு, திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமம், வேலூர்,
சென்னை சிவம் தொலைக்காட்சி, காவேரிப்பாக்கம்
சுமைதாங்கி, ஆரணி முதலிய ஊர்களில் பாடி, பலரையும்
கவர்ந்துவிட்டாள்!

இப்போது “ரோஜா’ ஆறாம் வகுப்பில் படிக்கிறாள்! இப்போது
இவளுடன் முனுசாமி, ஆனந்தி என்பவர்களின் மகளான செல்வி
என்ற சிறுமியும் ரோஜாவுக்கு இணையாகப் பாடிவருகிறாள்.
தற்போது 125 குழந்தைகளுக்கு என் வீட்டிலேயே இலவசமாக
ஆன்மிக வகுப்புகளும் தேவாரப் பாடல்களும் சொல்லிக்
கொடுத்து வருகிறேன். குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்கின்றனர்.
இக்குழந்தைகளை மேடையேற்றிவிட்ட திருப்தி எனக்குக்
கிடைத்திருக்கிறது…” என்று பெருமிதத்தோடு கூறுகிறார்
சுடர்க்கொடி!

—————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30581
மதிப்பீடுகள் : 8922

View user profile

Back to top Go down

Re: இளமையில் வெல்! “திரு’ நிறைச் செல்வியர்!

Post by ayyasamy ram on Wed Oct 12, 2016 7:43 am


ரோஜாவிடம் பேச நெருங்கிய போது, எடுத்த எடுப்பிலேயே
“திருச்சிற்றம்பலம்’ என ஆரம்பித்து, “சொல்லுங்கம்மா’ என்று
பணிவுடன் கொஞ்சும் மழலை மொழியில் பேசியபோது உலகமே
மறந்துதான் போனது.

“தேவாரம் பாட எப்படி உங்களுக்கு விருப்பம் உண்டாச்சு?’ என்று
அவளிடம் கேட்டதும், “ஒருநாள் எங்க ஆசிரியர் ஒரு பாடலை
போர்டில் எழுதிப் போட்டுட்டுப் படிக்க சொன்னாங்க. நான் எல்லாப்
பாடலையும் எழுதித்தாங்கனு கேட்டு வாங்கி, உடனே மனப்பாடம்
செஞ்சு அவங்களிடம் பாடிக்காட்டினேன்.

அதிலேந்து எனக்கு இதில் விருப்பம் வந்துடுச்சு. நான் பாடுறது
எல்லோருக்கும் பிடிச்சிருக்குனு தெரிஞ்சதும்… நிறைய பாடல்களைக்
கத்துக்கிட்டுப் பாடணும்னு ஆர்வம் ஏற்பட்டுது.”

ரோஜா இவ்வாறு கூறியவுடன், “சரி ஏதாவது ஒரு பாடல் பாடுங்க
கேட்போம்…. உம்ம்… தேவாரத்துலேந்து வேண்டாம்… திருவாசகத்துல
ஒரு பாடல் பாடுங்க” என்றவுடன், “கண்கள் இரண்டும் அவன் கழல்
கண்டு களிப்பன ஆகாதே / காரிகையார்கள் தம் வாழ்வில் என் வாழ்வு
கடைப்படும் ஆகாதே” என்று மிக இனிமையாகக் கொஞ்சு தமிழில்,
நல்ல உச்சரிப்பில் இசையோடு பாடினாள்.

“சரி, இது எத்தனையாவது பதிகம்? இந்தப் பாடல் வரும் பதிகத்தின்
பெயர் தெரியுமா?” என்றவுடன் “ஓ… தெரியும்மா… திருப்படையாட்சி,
49ஆவது பதிகம், முதல் பாடல்” என்றவுடன் அசந்து போய்விட்டேன்!

“சரி.., நீ இன்னும் நிறைய தேவாரத் திருவாசகப் பாடல்களைக்
கத்துக்கிட்டு வருங்காலத்துல நிறைய பேருக்குச் சொல்லிக் கொடுப்பியா?”
என்றதும், “ஓ… கண்டிப்பாம்மா… எங்க ஆசிரியர் மாதிரியே சொல்லிக்
கொடுப்பேன்” என்றாள்.

இத்தகைய விளையும் பயிர்களை முளையிலே தெரிந்துகொண்டு
வளப்படுத்திய பா.சுடர்க்கொடி போன்ற தலைமையாசிரியைகள் பலர்
உருவாக வேண்டும். இச்சிறுமி சைவத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய
சொத்து என்றே கூறத்தோன்றுகிறது.

இச்சிறுமியை அறிமுகப்படுத்திய காவேரிப்பாக்கம் சிவ.நடராஜனுக்கு
மானசீகமாக நன்றி கூறினேன்.

————————————-
-இடைமருதூர் கி.மஞ்சுளா
சிறுவர் மணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30581
மதிப்பீடுகள் : 8922

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum