ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
 ayyasamy ram

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
 ayyasamy ram

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்
 ayyasamy ram

கற்பூர வள்ளி’னு பெயர் வெச்சுட்டார்...!!
 ayyasamy ram

தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!
 ayyasamy ram

செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! –
 ayyasamy ram

ஆன்மீக அமுதம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
 ayyasamy ram

கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
 ayyasamy ram

ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை
 ayyasamy ram

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 karthikeyan M

காலண்டர் பொன்மொழிகள்
 ayyasamy ram

ரமலான் நல் வாழ்த்துக்கள்!
 அ.இராஜ்திலக்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 senbills

ஆண்களின் வாழ்க்கை தேடல்..
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
 ayyasamy ram

இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
 ayyasamy ram

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 ayyasamy ram

கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
 ayyasamy ram

அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது
 ayyasamy ram

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் தீ பிடித்து எரிந்ததில் 123 பேர் உயிரிழப்பு
 ayyasamy ram

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

டுபாக்கூர் டாக்டர்…!!
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 M.Jagadeesan

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 T.N.Balasubramanian

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்
 ayyasamy ram

படிக்கணும் நாமும் படிக்கணும்
 ayyasamy ram

சீற்றம் – கவிதை
 ayyasamy ram

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
 ayyasamy ram

ஆறு வித்தியாசம்…
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 ayyasamy ram

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
 ayyasamy ram

தமிழ்நேசன் அவர்களுக்கு
 balakama

அமெரிக்காவில் இந்த வாரம் - 6
 மூர்த்தி

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 ராஜா

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 
 M.Jagadeesan

காக்கைச் சிறகினிலே
 ayyasamy ram

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!
 ayyasamy ram

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 சரவணன்

திரிபலா சூரணம்!
 ayyasamy ram

பொண்டாட்டியே உதைப்பா...!
 ayyasamy ram

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 ayyasamy ram

பார்லி மழைகால கூட்டத்தொடர் ஜூலை 17 ல் துவங்குகிறது
 ayyasamy ram

பட்டாம் பூச்சியின் மரணம்
 ayyasamy ram

நிலா…மழை…குழந்தை
 ayyasamy ram

புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
 ayyasamy ram

நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
 ayyasamy ram

எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மடக்கொடி இல்லா மனை .

View previous topic View next topic Go down

மடக்கொடி இல்லா மனை .

Post by M.Jagadeesan on Wed Oct 19, 2016 7:25 am

நெற்றி நிறைய திருமண் இட்டுக்கொண்டு வரதராஜன் , நடராஜன் வீட்டுக்குள் நுழைந்தார் .

"வாப்பா ! வரது ! ஒரு வாரமா ஆளையே காணோமே ; என்ன விஷயம் ? "

"அதிருக்கட்டும் நட்டு ! உன் பெண்சாதி வீட்டில் இல்லையா ? "

" ஆமாம் வரது ! அவளோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி ஊருக்குப் போயிருக்கா ! போய் ஒரு வாரம் ஆவுது . ஆமாம் என் பொண்டாட்டி வீட்டில் இல்லைன்னு எப்படிக் கண்டுபிடிச்சே ? "

" இதென்ன கேள்வி ! வீடெல்லாம் ஒரே குப்பைக் கூளமா இருக்குது ; வாசல்ல கோலம் போடல ; அதனாலதான் கேட்டேன் . ஆமாம் உன் பொண்டாட்டி இல்லையே ! உனக்குக் கஷ்டமா இல்லையா ? "

" அவ இருந்தாலும் கஷ்டம் ; இல்லாட்டியும் கஷ்டம் ! "

" என்ன சொல்றே நீ ? "

" அவ இருந்தா சதா சர்வகாலம் சீரியல் பாத்துகிட்டு இருப்பா ; நாம ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு நியூஸ் கேட்கணும்னா முடியாது ; பேப்பர் படிச்சி தெரிஞ்சிக்கோங்கன்னு சொல்லுவா ! அவ இல்லாட்டி என்ன கஷ்டம்னா , சாப்பாடு கஷ்டம்தான் ! ஒருவாரமா ஹோட்டல் சாப்பாடுதான் ! "

"என்ன மனுஷனய்யா நீ ! ஒரு ரசம் வச்சி அப்பளம் பொரிக்க தெரியாதா உனக்கு ? கடையிலதான் அரைச்ச மாவு விக்கிறான் ; அத வாங்கி தோசை சுட்டு , மிளகாய்ப்பொடி வச்சிகிட்டு காலையில டிபனை முடிச்சிக்கலாமே ! தண்டத்துக்கு ஹோட்டல்ல போய் செலவு பண்றியே ! உடம்புக்கு ஒத்துக்குமா? "

' சமையல் வேலையெல்லாம் நமக்கு ஒத்து வராதப்பா ! அதெல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம் ! ஒளவையார் சொன்னது சரியாத்தான் இருக்கு !

" அப்பிடி அவங்க என்ன சொன்னாங்க ?  "

நீரில்லா நெற்றிபாழ் , நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப்பு இல்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை .

அப்பிடின்னு பாடியிருக்காங்க ! அதாவது வீட்டுல பொண்டாட்டி இல்லைன்னா , அந்த வீடே நாசம்னு பாடியிருக்காங்க !

" நட்டு ! அவங்க சொன்னது சரிதான் ! ஆம்பிளைங்க வீட்ல இருந்தாலும் ,இல்லாட்டாலும் ஒன்னும் தெரியாது ; ஆனா பொம்பிளைங்க இல்லைன்னா அது பளிச்சுன்னு தெரிஞ்சிடும் . அப்புறம் " நீரில்லா நெற்றி பாழ்ன்னு " சொல்லியிருக்காங்களே அதுவும் வாஸ்தவம்தான் . ஒருநாளைக்கு நெற்றியில  நாமம் இட்டுக்கலைன்னா எனக்கு சோறு தண்ணியே இறங்காது ! "

"  சிலபேருக்கு மத்தவங்களுக்கு நாமம் போடலைன்னா சோறு தண்ணியே இறங்காது ! "

" என்ன நட்டு ! கிண்டல் பண்றியா ? "

' இல்ல வரது ; உலகத்துல நடக்குறதைத்தான் சொன்னேன் ; தப்பா நினைச்சுக்காதே ! ஒளவையார் சைவ சமயி ; சிவனை கும்பிடறவங்க ; அதனாலதான் " நீரில்லா நெற்றி பாழ் " அப்பிடின்னு பாடியிருக்காங்க ! "

" நட்டு ! நெய்யில்லா உண்டி பாழ்ன்னு சொல்றாங்க ; நெய் விக்கிற விலையில தினமும் நெய் ஊத்தி சாப்பிட முடியுமா ? "

" வரது ! விதையிலிருந்து எடுக்குற எல்லாத்துக்கும் நெய்யின்னுதான் பேரு ; நீ ஏன் பசுமாட்டு நெய்ய நினைச்சுக்குறே ; பசுமாட்டு நெய் விலை ஜாஸ்தியாய் இருந்தா நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடு ! "

" நட்டு ! ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்ன்னு பாடியிருக்காங்க ; உண்மைதான் ! காவேரிக் கரையோரமா குடியிருக்குறவங்க எல்லாமே கொடுத்து வச்சவங்க ! தினமும் துணி துவைச்சுட்டு ஆசைதீரக் குளிச்ச்சிட்டு வரலாம் . "

" வரது ! அதெல்லாம் இனிமே முடியாது ; அவன் காவேரியில தண்ணி விட்டாதானே  நீ ஆசை தீரக் குளிப்பே ! '

" ஆமாம்பா ! எல்லாம் கனவா போயிடுச்சி ;  மெட்ராசுல சுமார் நூறு வருஷத்துக்கு முன்னாடி ஜனங்க கூவத்துல குளிப்பாங்களாம் ; அங்கேயே துணியும் துவைப்பாங்களாம் !  இப்பத்தான் கூவம் சாக்கடையா மாறிடுச்சி "

வரது ! இன்னொன்னு சொல்லியிருக்காங்களே பாத்தியா !

" உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் "

இந்தக் காலத்துல ஒன்னே ஒன்னு ; கண்ணே கண்ணுன்னு பெத்துக்கிறாங்களே , அது தப்புன்னு அந்தக் காலத்திலேயே பாட்டி சொல்லியிருக்காங்க ! உடன் பிறப்புன்னு ஒன்னு இல்லைன்னா ,  குழந்தைகளுக்கு பாசம்னா  என்னன்னு தெரியாமலேயே போயிடும் ; என்ன நான் சொல்றது சரிதானே ? '

" சரிதான் நட்டு ! வள்ளுவர் கூட " தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர் " அப்பிடின்னு பன்மையிலதான் பாடியிருக்கார் ! சரி நட்டு ! நான் போயிட்டு வரேன் ! நேரமாயிடுச்சி ! "

" போயிட்டு வாப்பா ! "
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4402
மதிப்பீடுகள் : 1984

View user profile

Back to top Go down

Re: மடக்கொடி இல்லா மனை .

Post by Ramalingam K on Wed Oct 19, 2016 7:54 am

@M.Jagadeesan wrote:

ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்

"
மேற்கோள் செய்த பதிவு: 1224820

வணக்கம் ஐயா !

இங்கு ஆறு என்றால் 'நதி' என்பதற்குப் பதிலாக " வழி" என்ற பொருள் நன்கு பொருந்துவதாக அமையலாம் என்பது அடியனது கருத்து.

ஒரு ஊரில் என்னென்ன அழகும் அற்புதங்களும் இந்துதான் என்ன பயன்!

அவற்றைக் காணவும், கண்டு ரசிக்கவும் , அவற்றால் பயன் பெறவும் அந்த ஊருக்குப் போக்குவரத்துப் பாதை இருந்தால்தானே அவ்வழகுகளால் அந்த ஊருக்கும் பிற இடங்களிலிருந்து அங்கு வருபவருக்கும் பயன் இருக்க முடியும் !

அவ்வாறு நல்ல பாதை இல்லாவிட்டால் , அந்த ஊரும் அதன் அழகும் எவருக்கும் பயன்படாமல் பாழாகிவிடும் அல்லவா.

"ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்" என்றால் நல்ல போக்குவரத்துப் பாதை இல்லாத ஊருக்கு அதன் அழகினால் எப்பயனும் இல்லை என்பது கொஞ்சம் மேம்பட்ட பொருளாகலாம் .


avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 254

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: மடக்கொடி இல்லா மனை .

Post by M.Jagadeesan on Wed Oct 19, 2016 8:30 am

" ஆறு " என்றால் " வழி " என்று ஒரு பொருள் உண்டு என்றாலும் , இந்தப் பாடலைப் பொருத்த அளவில்

" ஆறு " என்றால் நதி என்று கொள்வதே பொருத்தமாகும் .

நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று .

நல்லாறெனினும் = நல்ல + ஆறு + எனினும்

இங்கு வந்துள்ள ஆறு , வழியைக் குறிக்கும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4402
மதிப்பீடுகள் : 1984

View user profile

Back to top Go down

Re: மடக்கொடி இல்லா மனை .

Post by Ramalingam K on Wed Oct 19, 2016 5:15 pm

@M.Jagadeesan wrote:" ஆறு " என்றால் " வழி " என்று ஒரு பொருள் உண்டு என்றாலும் , இந்தப் பாடலைப் பொருத்த அளவில்

" ஆறு " என்றால் நதி என்று கொள்வதே பொருத்தமாகும் .

.
மேற்கோள் செய்த பதிவு: 1224823

அப்படியாகில் , இப்பாவின் தற்போது நிலவும் பொருள் மறுபரிசீலனைக்கு எடுத்தாகவேண்டும்.

எல்லா ஊர்களிலும் ஆறுகள் ஓடுவதில்லை.

ஆறுதான் ஒர் ஊருக்கு அழகு என்றால், ஊரில் பொதுவாக விளங்கும் மற்ற அற்புதங்கள் எல்லாம் பாழ் என்று பொருளாகிவிடும்.avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 254

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: மடக்கொடி இல்லா மனை .

Post by M.Jagadeesan on Wed Oct 19, 2016 7:02 pm

" ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் " என்பது பழமொழி .

ஆறு எல்லா ஊர்களிலும் ஓடுவதில்லை என்ற காரணத்தினால் இப்பழமொழி பொய்யாகிவிடாது .

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி ; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " என்பது பழமொழி . இப்பொழுது எல்லோருமே Brush & Paste தான் பயன்படுத்துகிறோம்; அதனால் இப்பழமொழி பொய்யென்று ஆகிவிடுமா ?

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4402
மதிப்பீடுகள் : 1984

View user profile

Back to top Go down

Re: மடக்கொடி இல்லா மனை .

Post by ayyasamy ram on Wed Oct 19, 2016 7:36 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29903
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: மடக்கொடி இல்லா மனை .

Post by Ramalingam K on Wed Oct 19, 2016 7:48 pm

@M.Jagadeesan wrote:" ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் " என்பது பழமொழி .

மேற்கோள் செய்த பதிவு: 1224876

மன்னிக்கவேண்டும் ஐயா !

அது பழமொழி அல்லவே -
நம் ஔவையின் பாடல் வரிதானே-
பாடல் வரியைப் பழமொழியாக்கினால் அது நம் பிழை என்பது அடியன் கருத்து.

இக்கருத்து நம் எண்ணத்தின் வெளிப்பாடே தவிற விவாதப் பொருள் அல்ல.

ஆறும் ஒரு ஊருக்கு அழகாகலாம். அதற்காக ஆறு மட்டுமேதான் அழகு என்பது எங்கோ இடிப்பதுபோல் தோற்றமளிக்கிறது என்பது அடியனின் எண்ணம்.

எப்படியாவது இருக்கட்டும். ஆனால் ஆறு என்பதனை வழி என்று பொருள் கொண்டால் ஔவையின் பாடல் மேலும் மலர்ந்து மணக்கும் என்பதில் கருத்து வேறுபாடு கொள்ளுதலில் நியாயம் இருக்க முடியாது.

நவில்தொறும் நூல் நயம் என்றும் இதனைக் கொள்ளலாம்-
வேண்டாம் என்றால் தவிர்த்தும் விடலாம்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 254

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: மடக்கொடி இல்லா மனை .

Post by M.Jagadeesan on Thu Apr 20, 2017 5:26 pm

தங்களுடைய வாதம் " விதண்டாவாதம் " என்பது என் கருத்து .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4402
மதிப்பீடுகள் : 1984

View user profile

Back to top Go down

Re: மடக்கொடி இல்லா மனை .

Post by Dr.S.Soundarapandian on Sat May 06, 2017 6:39 pmஆறு = நீரோடும் ஆறுதான் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3329
மதிப்பீடுகள் : 1694

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum