புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_c10நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_m10நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_c10 
10 Posts - 53%
heezulia
நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_c10நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_m10நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_c10 
9 Posts - 47%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_c10நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_m10நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_c10 
52 Posts - 60%
heezulia
நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_c10நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_m10நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_c10 
30 Posts - 35%
T.N.Balasubramanian
நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_c10நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_m10நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_c10நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_m10நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2016 4:47 pm

நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் LHPBbnBRXamnRKw7WzNG+201610211611534996_Works-of-Actor-Sivakumar-goes-under-display-ahead-of-his_SECVPF
-

தமிழ் திரையுலகின் மார்கண்டேயனான நடிகர்
சிவக்குமாரின் 75-வது பிறந்தநாளையும், அவரது
திரையுலக வாழ்வின் 50-வது ஆண்டு விழாவையும்
வெகுசிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள நடிகர்
சூர்யாவும், கார்த்தியும் அவர் வரைந்த ஓவியங்களை
காட்சிப்படுத்தி மாபெரும் கண்காட்சி ஒன்றை
சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து
1965-ம் ஆண்டில் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தில்
துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார்.

அதன்பின்னர், ‘கந்தன் கருணை’, ‘உயர்ந்த மனிதன்’ உள்ளிட்ட
பல்வேறு படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் தனது
நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, பின்னர் கதாநாயகனாக
உயர்ந்தார்.

சிவாஜி கணேசனுடன் 14 படங்களிலும், மக்கள் திலகம்
எம்.ஜி.ஆருடன் இரு படங்களிலும், காதல் மன்னன்
ஜெமினி கணேசனுடன் 7 படங்களிலும், நவரச திலகம்
முத்துராமனுடன் 11 படங்களிலும் குணச்சித்திர வேடங்களில்
நடித்துள்ள சிவக்குமார், ஜெயலலிதாவுடன் 7 படங்களில்
நடித்துள்ளார்.

1970-களில் தொடங்கி இவர் கதாநாயகனாக நடித்த
‘சொல்லத்தான் நினைக்கிறேன்’,
‘வெள்ளிக்கிழமை விரதம்’,
‘அரங்கேற்றம்’,
‘மேல்நாட்டு மருமகள்’,
‘ஆட்டுக்கார அலமேலு’,
‘அன்னக்கிளி’,
‘பத்ரகாளி’,
‘கவிக்குயில்’,
‘சிட்டுக்குருவி’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல
வரவேற்பை பெற்றன.

உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பட் ஸ்டார் ரஜினிகாந்த்
போன்ற அன்றைய இளையதலைமுறை நடிகர்களுடனும்
இவர் சேர்ந்து நடித்துள்ளார். ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’
படத்தின் மூலம் சதமடித்த சிவக்குமார் ‘வண்டிச் சக்கரம்’,
‘சிந்து பைரவி’ ஆகிய படங்களில் நடித்து 1990-ம்
ஆண்டுவரை பரபரப்பான நடிகராக வலம் வந்தார்.

‘இனி ஒரு சுதந்திரம்’, ‘பொன்னுமணி’ ஆகியப்
படங்களில் வயதான தோற்றத்தில்வரும் இவர் தனது
குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

கூடாத பழக்கங்களை தவிர்த்தும், உடற்பயிற்சி மற்றும்
யோகாசனம் உள்ளிட்ட மனவளக்கலையில் தீவிர அக்கறை
செலுத்தியும், கிசுகிசுக்களுக்கு இரையாகாமலும் இளமை
மாறாத உடற்கட்டுடன் இன்றும் காணப்படும் இவரை
‘தமிழ் திரையுலகின் மார்கண்டேயன்’ என பலர்
குறிப்பிடுவதுண்டு.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2016 4:47 pm

சினிமா உலகுக்குள் நுழைவதற்கு முன்னர் சென்னையில்
உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்ற சிவக்குமார், விளம்பர
ஓவியங்கள் வரைபவராக ஆரம்பத்தில் பணியாற்றியுள்ளார்.

சினிமாவில் மும்முரமாக நடித்துவந்த வேளையிலும்
ஓய்வாக இருக்கும்போதும் ஓவியங்கள் வரைவதை வழக்கமாக
கொண்ட இவர், கவியரசு கண்ணதாசனின் கதை, வசனத்தில்
தயாரான ‘அதைவிட ரகசியம்’ படத்தில் ஓவியராக
நடித்துள்ளார்.

தனது தாயாரின் பெயரில் ஏழை மாணவர்களின் கல்விக்காக
நிதியுதவி அளிக்கும் அறக்கட்டளை ஒன்றையும் பல
ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

தற்போது ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளின் மூலம்
சாதனை படைத்துவரும் இவர் இதுவரை 195 படங்களில்
நடித்துள்ளார். விரைவில் இரட்டை சதம் அடிக்கவும்
காத்திருக்கிறார்.

வரும் 27-ம் தேதி 75-வது பிறந்தநாள் காணும் நடிகர்
சிவக்குமாரை பெருமைப்படுத்தும் விதமாக இவரது மகன்களும்
இன்றைய பிரபல நடிகர்களுமான சூர்யாவும், கார்த்தியும்
திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு சினிமா உலகில் அவர் அடியெடுத்து வைத்த
50-வது ஆண்டாகவும் அமைந்துள்ளதால் சென்னை கிரீம்ஸ்
சாலையில் உள்ள லலித் கலா அகாடமி கலைக்கூடத்தில்
சிவக்குமார் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக்க
இவரது மகன்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

வரும் 24-ம் தேதி திறந்து வைக்கப்படும் இந்த கண்காட்சி
வரும் 26-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. சிவக்குமாரின்
கைவண்ணத்தில் உருவான 140 ஓவியங்களை இந்த
கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு சிறிய புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன.

சிவக்குமார் நடித்த பல படங்கள் தொடர்பான அரிய
புகைப்படங்களும், சில முக்கிய தகவல்களும் இந்த
புத்தகங்களில் இடம்பெறுகிறது. மேலும், சிவக்குமார் ஆற்றிய
பத்து முக்கிய சொற்பொழிவு காட்சிகளும் டி.வி.டிக்களாக
வெளியாகவுள்ளது.

————————–மாலை மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 21, 2016 4:59 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு .சிவாகுமார் அவர்களே ...

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 21, 2016 5:21 pm

வயதுக்கேற்ற முதுமை இல்லை !
வாழ்க பல்லாண்டு சிவக்குமார் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 21, 2016 6:10 pm

அவருடைய தினசரி பழக்கவழக்கங்கள் ,முறையான வாழ்க்கைதான் ,
அவருடைய இந்த இளைய தோற்றத்திற்கு காரணம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 21, 2016 9:14 pm

சிவக்குமார் சினிமா உலகின் ஒரு செல்வக் குமார்.

சிந்து பைரவியை மறக்க இயலுமா

சிவக்குமார் சிரஞ்சீவியாகப் பிரார்த்திப்போம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக