ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திருப்பு முனைகள்
 Meeran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விராட் கோலியின் செல்லப்பெயர் ‘சிக்கூ’ …

View previous topic View next topic Go down

விராட் கோலியின் செல்லப்பெயர் ‘சிக்கூ’ …

Post by ayyasamy ram on Wed Oct 19, 2016 9:24 pm


-
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் ‘புயல்’ விராட் கோலிக்கு ‘சிக்கூ’
என்ற வேடிக்கையான செல்லப் பெயர் இருப்பது தெரிய
வந்துள்ளது.

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் 27 வயதான விராட் கோலி,
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நிறைய சாதனைகளை
படைத்துக்கொண்டே இருக்கிறார். சமீபத்தில் டெஸ்ட்
கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய
கேப்டன் என்ற மகத்தான சிறப்பை பெற்றார்.

ரன் குவிக்கும் எந்திரமாக உருவெடுத்துள்ள விராட் கோலியின்
செல்லப்பெயர் என்ன தெரியுமா? ‘சிக்கூ’. தமிழில் சொல்ல
வேண்டும் என்றால் சப்போட்டா பழம்.
எப்படி இந்த பெயர் வந்தது தெரியுமா?

கோலியின் வாழ்க்கை பயணம் அடங்கிய ‘டிரைவன்:
தி விராட் கோலி ஸ்டோரி’ என்ற சுயசரிதை புத்தகம் ஒன்று
அண்மையில் வெளியானது. அதில் டெல்லி கிரிக்கெட் அணியின்
உதவி பயிற்சியாளராக செயல்பட்ட அஜித் சவுத்ரி கூறியுள்ள
சுவாரஸ்மான தகவல் வருமாறு:-

அப்போது டெல்லி அணி ரஞ்சி கிரிக்கெட்டில்
விளையாடுவதற்காக மும்பைக்கு சென்றிருந்தது. அச்சமயம்
விராட் கோலி 10 முதல்தர ஆட்டங்களில் கூட ஆடவில்லை.
என்றாலும் ஒரு வீரராக அவரும் அணியில் அங்கம் வகித்தார்.

டெல்லி அணியில் ஷேவாக், கவுதம் கம்பீர், ரஜத் பாட்டியா,
மிதுன் மன்ஹாஸ் ஆகிய பிரபல வீரர்களை பார்த்ததும்
அவருக்கு உற்சாகம் தாங்கல. இது போன்ற பெரிய வீரர்களுடன்
ஓய்வறையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால்
கோலி மிகவும் மகிழ்ச்சியில் காணப்பட்டார்.

‘சிக்கூ’ பெயர்

ஒரு நாள் மாலை, சலூன் கடைக்கு சென்று தனது சிகை
அலங்காரத்தை வித்தியாசமாக மாற்றிக்கொண்டு
தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்தார். சில இளம் வீரர்களை
நோக்கி வேகமாக ஓடி வந்த விராட் கோலி தனது புதிய
தோற்றம் எப்படி இருக்கிறது என்று ஆர்வமுடன் கேட்டார்.

அருகில் நின்ற நான் அவரிடம், ‘ஒன்றும் மோசமாக இல்லை.
ஆனால் தலையை பார்க்க ‘சிக்கூ’ (சப்போட்டா) மாதிரி
இருக்கிறது’ என்று தமாஷ் செய்தேன். ஆனால் கடைசியில்
அதுவே அவரது செல்லப்பெயராக ஒட்டிக்கொண்டது.
இதை கோலி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அப்போது அவரது ஒரே இலக்கும், முயற்சியும், அணியில்
தனது இடத்தை நிலைநிறுத்துவதில் மட்டுமே இருந்தது.
சவால் அளிக்கக்கூடிய ஒரு மிக திறமையான இளைஞர்
என்பதை நான் அறியவில்லை. அதே சமயம் இன்னும் அதிக
ரன்கள் குவிக்க வேண்டும், அனைவரது கவனத்தையும்
ஈர்க்க வேண்டும் என்பதில் அவரது கவனம் இருந்தது.

இவ்வாறு அஜித் சவுத்ரி அதில் கூறியுள்ளார்.

குருவுக்கு மரியாதை

விராட் கோலியின் முன்னேற்றத்தில் அவரது ஆரம்ப கால
பயிற்சியாளரும், ஆலோசகருமான ராஜ்குமார் ஷர்மாவின்
பங்கு அளப்பரியது. இதை கோலி எப்போதும் பெருமையாக
கூறுவார். கோலி, தனது ஆசான் மீது எந்த அளவுக்கு அன்பும்,
மரியாதையும் வைத்திருக்கிறார் என்பதற்கு சிறு
சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம்.

2014-ம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று காலையில், ராஜ்குமார்
ஷர்மாவின் வீட்டிற்கு கோலியின் சகோதரர் விகாஸ் சென்றார்.
வீட்டை அடைந்ததும் செல்போனை டயல் செய்து ராஜ்குமாரிடம்
கொடுத்தார். எதிர்முனையில் பேசிய விராட் கோலி,
‘ஆசிரியர் தின வாழ்த்துகள்’ என்று கூறிய போது ராஜ்குமாரின்
கையில் விகாஸ் சாவிகொத்தை ஒன்று வைத்து அழுத்தினார்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டின் வெளியே வந்து
பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். அங்கு அழகான கார் ஒன்று
நின்று கொண்டிருந்தது. ஆசிரியர் தின பரிசாக தனது
ஆலோசகருக்கு கோலி வழங்கும் பரிசு என்று விகாஸ் கூறிய போது,
ராஜ்குமார் நெகிழ்ந்து போய் விட்டார்.

விராட் கோலியின் சுயசரிதை புத்தகத்தில் இந்த சம்பவத்தை
நினைவு கூர்ந்துள்ள ராஜ்குமார், ‘இதை சும்மா பரிசாக மட்டும்
பார்க்கவில்லை. என்னுடன் இணைந்து பணியாற்றிய போது
எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார், தனது வாழ்க்கையில்
பயிற்சியாளரின் பங்களிப்பு எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை
அவர் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியதாகவே இதை
கருதுகிறேன்’ என்றார்.

———————————–
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: விராட் கோலியின் செல்லப்பெயர் ‘சிக்கூ’ …

Post by T.N.Balasubramanian on Thu Oct 20, 2016 6:45 pm

கோலி விளையாடுவாரா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20643
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum