ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 ayyasamy ram

நண்பன் - கவிதை
 ayyasamy ram

என்னவள்! – கவிதை –
 ayyasamy ram

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்....!!
 Dr.S.Soundarapandian

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
 Dr.S.Soundarapandian

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
 ajaydreams

பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்
 ayyasamy ram

இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
 ayyasamy ram

கோகுலாஷ்டமி
 T.N.Balasubramanian

கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
 T.N.Balasubramanian

தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
 Dr.S.Soundarapandian

ஒன்றை மட்டும் பார், இரண்டிருக்காது…!!
 Dr.S.Soundarapandian

ஞாபக மறதியைப் போக்க வழி !
 ayyasamy ram

மனைவி அமைவதெல்லாம் இறைவன்..........
 ayyasamy ram

நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்
 M.Jagadeesan

-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்."
 T.N.Balasubramanian

தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
 Dr.S.Soundarapandian

தரமணி - நவீன அவள் அப்படித்தான் !
 Dr.S.Soundarapandian

தலை கீழாக நின்றாலும் மாறமாட்டேன்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள்

View previous topic View next topic Go down

கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள்

Post by ayyasamy ram on Wed Oct 26, 2016 8:13 am

சிவகங்கை மாவட்டம், கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயாராக உள்ளது. மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும் அங்கு ஆய்வு தொடரும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தனியார் தோட்டத்தில் மத்திய தொல்லியல் துறையினர் கடந்த 2015-ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குடியிருப்புகள் தென்பட்டன.
-
சுடுமண் செங்கல், தமிழ், வடமொழி எழுத்துகள் நிறைந்த சுடுமண் பானையோடுகள், பொதுமக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், யானைத் தந்தங்களால் ஆன தாயக்கட்டைகள், தங்கக்காசுகள் என 5,300 பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. நீண்ட செங்கல் சுவர்களும், அறைகளும் கண்டறியப்பட்டன.
-
தொல்லியல் துறையின் பெங்களூரு கிளை அலுவலர்கள் மூலம் நடைபெற்ற இரு கட்ட ஆய்வுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. ஆய்வில் கிடைத்த பொருள்களின் மாதிரிகள் பெங்களூரு தொல்லியல் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
-
ஆய்வுக்காக தோண்டப்பட்ட 102 குழிகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. குழிகளில் வீடுகள், விசைத்தறிக்கான அறைகள் மற்றும் தண்ணீர் செல்வதற்கான சுடுமண் குழாய்கள் ஆகியவை பிளாஷ்டிக் தாளால் மூடப்பட்டு, அதன் மீது மண் போடப்பட்டுள்ளது.
-
அகழ்வாராய்ச்சி குழிகள் மூடப்படுவது சரியல்ல என பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் குரல் எழுப்பியுள்ளன. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாம் கட்ட ஆய்வின் கடைசிக்குழியை தொல்லியல் துறையினர் மூடினர்.
-
அப்போது தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், அகழ்வாய்வில் இரண்டு கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்டப் பணிக்கான இடத்தை அடையாளம் கண்டுள்ளோம். அதில் ஆய்வை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றனர்.
-
அருங்காட்சியகம் சாத்தியமா?: கீழடியில் தற்போது கிடைத்துள்ள பொருள்களைக் கொண்டு முழுமையான அருங்காட்சியகம் அமைப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மண்பானை ஓடுகள், பாசிகள் என சிறிய பொருள்களே தற்போது கிடைத்துள்ளன. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் நடத்தப்பட்டாலே அருங்காட்சியகத்துக்குரிய எண்ணிக்கையில் பொருள்கள் கிடைக்கும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
பெரிய கட்டட அமைப்புகளை பல கோடி ரூபாய் செலவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சாத்தியமற்றது. அவற்றை கண்ணாடி கூண்டுகள் அமைத்தே பாதுகாக்க முடியும்.
இல்லாவிடில் காற்று, மழையில் அவை அழியநேரிடும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அகழ்வாய்வு இடமா, சுற்றுலாத் தலமா?
-
கீழடியில் ஆய்வுக்குரிய இடத்தை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர் பீட்டர் அகழ்வாய்வு இடத்தைப் பார்வையிட்டார்.
-
மனித நாகரீகத்தின் தொன்மையான சான்றுகளை காண வந்ததாக கூறினார். மதுரை செந்தமிழ்க் கல்லூரி மாணவியர் ஏராளமானோரும் வந்திருந்தனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற தொல்லியல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
-
தொல்லியல் அகழாய்வு, தனிச் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டது. ஆய்வாளர்கள் தவிர மற்றவர்கள் நெருங்கவோ, படமெடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. அகழாய்வுப் பொருள்களை கார்பன் கணக்கீடு சோதனையில் உறுதிசெய்த பின்னரே காலம், அதன் தொன்மை குறித்து அறிவிக்க வேண்டும்.
-
ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆய்வில் அதுவே கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் கீழடியில் ஆரம்பம் முதலே தமிழ் ஆர்வலர்கள் நேரில் பார்வையிட்டு இஷ்டத்துக்கு கருத்து கூறிவருவது சரியல்ல.
-
இதனால் ஆய்வுக்குரிய இடத்தை எளிதாக பெறமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அகழாய்வு என்பது அறிவியல் சம்பந்தப்பட்டது. இதில் உணர்வுகளுக்கு இடமில்லை என்றார்.
-
தினமணி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30517
மதிப்பீடுகள் : 8836

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum