ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 ayyasamy ram

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 ந.க.துறைவன்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா?

View previous topic View next topic Go down

ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா?

Post by ayyasamy ram on Wed Oct 26, 2016 8:25 am

சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான
செய்தி, எந்த அரசியல் கட்சிகளையும் உலுக்கவில்லையா?
-
என் மகள் பிரம்மிக்கு 11 வயது. ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.
பள்ளிக்குப் போகிற அக்கறை இல்லாமல் காலையில்
சில நாட்கள் வெகுநேரம் தூங்குவாள். அவளைப் பள்ளிக்குக்
கொண்டுசேர்ப்பதற்குள் படாத பாடு பட வேண்டும்.
-
அப்படிப்பட்ட ஒரு நாளில் கண்ணில் பட்டது அந்தச் செய்தி.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் செப்டம்பர் 26 அன்று
அதிகாலை 4 மணி இருளில் 11 வயதுச் சிறுமி அழுகையோடு
அலைந்திருக்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும்
பிரிந்துவிட்டார்கள்.
-
ஏழாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தி, ஆயிரம் ரூபாய்க்குத்
தன்னை விற்றுவிட்டார்கள் என்றிருக்கிறாள் அந்தச் சிறுமி.
அவளை வாங்கியவன் தன் வீட்டிலும் உறவினர் வீட்டிலும்
அந்தக் குழந்தையை இடுப்பொடிய வேலை
வாங்கியிருக்கிறான்.
-
ஓய்வு ஒழிச்சல் இல்லை. தூங்க நேரம் இல்லை. வயிற்றுக்குப்
போதுமான சோறும் இல்லை. பிஞ்சு இடுப்பை ஒடித்து
அடிமைத்தனத்துக்குள் ஆழ்த்திவிட்டது அந்த ஆயிரம் ரூபாய்.
-
“நான் படிக்கணும்ணா…” என்று அவள் கேட்டிருக்கிறாள்.
தனக்கு உதவிசெய்து காப்பாற்றியவர்களிடம் அந்தப் பிஞ்சு
கேட்ட பிச்சை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்
தோல்வியாக மட்டும் எனக்குத் தெரிய வில்லை.
-
பேருந்து நிலையத்திலிருந்த சிலரின் உதவியால் மாவட்டக்
குழந்தைகள் நல அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் அவள்
போய்விட்டிருக்கிறாள்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30554
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா?

Post by ayyasamy ram on Wed Oct 26, 2016 8:25 am


-
பெற்றோர் மீது புகார்
-
1098 எனும் கட்டணமில்லா தொலைபேசிக்கு ஓராண்டில்
சராசரியாக இந்தியாவில் 20 லட்சம் அழைப்புகள் வருகின்றன.
“இப்படி வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை கட்டாய
வேலையில் மாட்டிக்கொண்ட குழந்தைகள் பற்றியது தான்”
என்கிறார் குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளர்
தாமஸ் ஜெயராஜ்.
-
“முதலில் பார்த்தபோது அவள் நடுநடுங்கிப் போயிருந்தாள்.
தற்போது அரசின் காப்பகத்தில் இருக்கிறாள். இனிமேதான்
பள்ளியில் சேர்க்கணும். இவளைக் கட்டாய உழைப்பில்
ஈடுபடுத்தியவர் மீது காவல்துறையில் புகார் தந்துள்ளோம்.
-
குழந்தையை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளிவிட்ட பெற்றோர்
மீதும் புகார் பதியுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்” என்கிறார்
காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பின்
பொறுப்பாளர் டாக்டர் மணிகண்டன்.
-
சில ஆண்டுகளுக்கு முன்னால் நார்வே நாட்டில் வசித்த இந்திய
மென்பொருள் பொறியாளர், அவரது மனைவியிடமிருந்து
குழந்தைகளை அரசு பறித்து வைத்துக் கொண்டது.

‘குழந்தைக்குத் தேவையான பராமரிப்பைக் கொடுக்கவில்லை’
என்பது குற்றச்சாட்டு. சர்வதேச அளவில் இந்த விவகாரம்
விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத் துறை போராடி
அந்தக் குழந்தைகளை மீட்டது.
-
ஒரு ஆண்டு காலத்துக்குப் பிறகு, குழந்தைகள் இந்தியா வந்து
சேர்ந்தன. தாயிடம் இணைந்தன. அமெரிக்காவிலும் இதுபோன்ற
ஒரு சம்பவம். குழந்தையை நன்றாகப் பராமரிக்கவில்லை
என்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த பெற்றோர் கைது
செய்யப்பட்டனர்.
-
குழந்தைகள், ஒரு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும்
சொந்தமானவர்கள் அல்ல. குழந்தைகள் சமூகத்தின் சொத்துகள்.
மக்கள் நல அரசுகள் அப்படித்தான் பார்க்கின்றன.

குழந்தையைக் கைவிட்டதற்காகப் பெற்றோர் மீது வழக்கு போடும்
நிலை அரசுக்கு இருக்கிற கடமையின் அடையாளம்தான்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30554
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா?

Post by ayyasamy ram on Wed Oct 26, 2016 8:26 am


மனதை உலுக்கும் சூழல்
-
இந்தியச் சூழல் மனதை உலுக்குகிறது. ஆள் கடத்தல் தொடர்பாக
2015-ல் இந்தியாவில் பதிவான குற்றங்களில் பாதிக்கப் பட்டவர்கள்
40% குழந்தைகள். பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக
அவர்கள் வாங்கப்பட்டார்கள். விற்கப் பட்டார்கள்.

இது கடந்த ஆண்டைவிட 25% அதிகம். பாதிக்கப்பட்ட 9,127 பேரில்
18 வயதுக்குள்ளானவர்கள் 43% என்கின்றன தேசியக் குற்றப்
பதிவேடுகளின் நிறுவனம் தரும் புள்ளிவிவரங்கள்.

தாம்பரத்திலிருந்து தப்பித்த சிறுமிக்கு உதவும் உள்ளங்கள்
கிடைத்தன. கிடைத் திருக்காவிட்டால்? அப்படிக் கிடைக்காமல்
எத்தனை எத்தனை குழந்தைகள் இந்தப் புள்ளிவிவரங்களுக்குள்
புழுங்கித் தவிக்கும்? கோவில்பட்டியில் சில தினங்களுக்கு முன்புகூட
10 வயதுச் சிறுமியைப் பாய் முடைகிற கம்பெனியினர் கடத்தி,
20 நாட்கள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினர் என்றும்
கடத்தவில்லை, பெற்றோர் சம்மதத்தின்பேரில்தான் வைத்திருந்தோம்
என்றும் மாறுபட்ட செய்திகள் வந்தன.

வெட்கமாக இல்லையா?

எப்படித் தீர்வுகாண்பது இந்தப் பிரச்சினைக்கு?
சமூகத்தில் காணப்படும் மௌனத்தைவிட அரசியல் களத்தில்
காணப்படும் மௌனம்தான் மனதை அரிக்கிறது. ஆளும்
கட்சியான அதிமுகவுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை.

பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இது ஒரு பிரச்சினை
இல்லை. காங்கிரஸுக்கு, கம்யூனிஸ்ட்டுகளுக்கு, பாமகவுக்கு,
விடுதலைச் சிறுத்தைகளுக்கு, மதிமுகவுக்கு எவருக்குமே
பிரச்சினை இல்லை என்றால், யாருக்குத்தான் இது பிரச்சினை?

ஒரு குழந்தையை நடைப்பிணமாக ஆக்கும் இந்தக் கொடுமை
ஏன் யாரையும் உலுக்கவில்லை?
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30554
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா?

Post by ayyasamy ram on Wed Oct 26, 2016 8:26 amஉலகின் பெரும்பான்மை நாடுகளின் ஊடகங்களுக்குச்
செய்திகளைப் பரிமாறும் ‘ராய்ட்டர்’ நிறுவனம்
‘15 டாலருக்கு சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்டாள்’
என்ற தலைப்பில் இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
யாருக்குமே வெட்கமாக இல்லையா?

பூனை கருப்பா, சிவப்பா என்பது முக்கியமில்லை.
அது எலியைப் பிடிக்க வேண்டும். காரியம் முக்கியமா, வீரியம்
முக்கியமா என்பார்கள் கிராம மக்கள். காரியம் நடக்க வேண்டும்.
எந்தக் கொள்கையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள்;
எப்படியான திட்டங்களை வேண்டு மானாலும் வகுத்திடுங்கள்;
குழந்தைகள் விற்கப்படுவதை, பிச்சையெடுக்க அனுப்பப்
படுவதைத் தவிர்க்க வழி காணுங்கள்.

அரசு இதைக் கையில் எடுக்க வேண்டும் என்றால், முதலில்
அரசியல் களத்தில் இதுகுறித்து விரிவான விவாதங்கள் நடக்க
வேண்டும். முதலில் பேசுங்கள்!
-
----------------------------------------------
த.நீதிராஜன்
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30554
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா?

Post by T.N.Balasubramanian on Thu Oct 27, 2016 2:22 pm

தலைகுனியவேண்டிய செய்தி .
மத்திய மாநில அரசு இது போன்ற விஷயத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான
சட்டத்துடன் வரவேண்டும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20296
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum