ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கங்கை கொண்ட சோழன்
 rajabhai

My Introduction.
 kovarthanan

நம்மைப் போல் - கவிதை
 Dr.S.Soundarapandian

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 Dr.S.Soundarapandian

தெரு மக்களுக்குச் சொல்வது யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 Dr.S.Soundarapandian

வே, வோ, கா, கி
 Dr.S.Soundarapandian

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தொடரை வெல்வது யார்? இந்தியா-நியூஸி. இன்று பலப்பரீட்சை

View previous topic View next topic Go down

தொடரை வெல்வது யார்? இந்தியா-நியூஸி. இன்று பலப்பரீட்சை

Post by ayyasamy ram on Sat Oct 29, 2016 4:55 am


இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான
5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம்
விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும்
தலா இரு வெற்றிகளுடன் 2-2 என்ற கணக்கில் சமநிலையில்
உள்ளன. கடைசி ஆட்டத்தில் வென்று தொடரைக்
கைப்பற்றுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன.

நியூஸிலாந்து அணி இதுவரை இந்திய மண்ணில் இந்தியாவுக்கு
எதிரான ஒரு நாள் தொடரை வென்றதில்லை. அந்த குறையை இந்த
முறை தீர்ப்பதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் கடந்த
18 மாதங்களில் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை தவிர்த்து வேறு
எந்த ஒரு நாள் தொடரையும் இந்திய அணி வெல்லவில்லை.

அதனால் இந்தத் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய
கேப்டன் தோனி இருக்கிறார்.

இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தொடர்ந்து
தடுமாறி வருகிறார். கடந்த 4 ஆட்டங்களில் அவர் முறையே
14, 15, 13, 11 ரன்களே எடுத்துள்ளார். எனினும் கேப்டன் தோனி,
அணியில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்ப
மாட்டார் என்பதால் இளம் தொடக்க வீரரான மன்தீப் சிங்கிற்கு
இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது.

அதேநேரத்தில் மற்றொரு தொடக்க வீரரான ரஹானே ஓரளவு
சிறப்பாக ஆடி வருவது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

மிடில் ஆர்டரில் விராட் கோலியைத் தவிர்த்து வேறு யாருடைய
ஆட்டமும் மெச்சும்படியில்லை. கேப்டன் தோனி ஓர் ஆட்டத்தில்
80 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய ஆட்டங்களில் பெரிய அளவில்
ரன் சேர்க்கவில்லை. மணீஷ் பாண்டே இதுவரை சோபிக்கவில்லை.

கேதார் ஜாதவ், அக்ஷர் படேல், ஹார்திக் பாண்டியா போன்ற
ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்றிருந்தாலும், அவர்களால்
தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாதது பின்னடைவாக பார்க்கப்
படுகிறது.

வேகப்பந்து வீச்சில் தவல் குல்கர்னிக்குப் பதிலாக ஜஸ்பிரித் பூம்ரா
இடம்பெறுவார் என தெரிகிறது. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது.
சுழற்பந்து வீச்சில் கேதார் ஜாதவ், அக்ஷர் படேல், அமித் மிஸ்ரா
கூட்டணி பலம் சேர்க்கிறது.

நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் ஃபார்முக்கு திரும்பியிருப்பது
அந்த அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பலம் சேர்ப்பதாக
அமைந்துள்ளது. மற்றொரு தொடக்க வீரரான டாம் லதாம், கேப்டன்
கேன் வில்லியம்சன் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

ராஸ் டெய்லரும் ஓரளவு சிறப்பாக ஆடி வருகிறார். பின்வரிசையில்
ஜேம்ஸ் நீஷம் பலம் சேர்க்கிறார்.

வேகப்பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், டிம் செளதி, மட் ஹென்றி,
ஜேம்ஸ் நீஷம் கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்த
வரையில் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்குவது என நியூஸிலாந்து
முடிவு செய்தால் ஆண்டன் டேவ்சிச்சுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் கோரே
ஆண்டர்சன் சேர்க்கப்படலாம்.

இதற்கு முன்னர் 1995, 2000-இல் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு
எதிரான தொடரில் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி ஆட்டத்தில்
இந்திய அணியே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------

இந்தியா (உத்தேச லெவன்) ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே,
விராட் கோலி,
எம்.எஸ்.தோனி
(கேப்டன்/விக்கெட் கீப்பர்),
மணீஷ் பாண்டே,
கேதார் ஜாதவ், ஹார்திக்
பாண்டியா, அக்ஷர் படேல், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பூம்ரா.

நியூஸிலாந்து (உத்தேச லெவன்)
மார்ட்டின் கப்டில்,
டாம் லதாம்,
கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், பி.ஜே.வாட்லிங் (விக்கெட் கீப்பர்),
ஜேம்ஸ் நீஷம், ஆண்டன்
டேவ்சிச்/கோரே ஆண்டர்சன், மிட்செல் சேன்ட்னர்,
டிம் செளதி, டிரென்ட் போல்ட்,
மட் ஹென்றி.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30621
மதிப்பீடுகள் : 8970

View user profile

Back to top Go down

Re: தொடரை வெல்வது யார்? இந்தியா-நியூஸி. இன்று பலப்பரீட்சை

Post by ayyasamy ram on Sat Oct 29, 2016 4:56 am


மிரட்டும் மழை
-
வங்கக் கடலில் உருவான கியான்ட் புயல் விசாகப்பட்டினத்தை
தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்த
போதிலும், விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை இரவு
கனமழை பெய்தது. சனிக்கிழமையும் இடியுடன் கூடிய மழை
பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் ஆட்டம் மழையால்பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மைதானம் எப்படி?


விசாகப்பட்டினத்தில் இந்தியா 5 ஆட்டங்களில்
விளையாடியுள்ளது. அதில் 4 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும்
பதிவு செய்துள்ளது. 2014-இல் இங்கு நடைபெறவிருந்த
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஆட்டம்
ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் மழையால் கைவிடப்பட்டது.

போட்டி நேரம்: பிற்பகல் 1.30, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
-
------------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30621
மதிப்பீடுகள் : 8970

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum