ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

View previous topic View next topic Go down

மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Post by ayyasamy ram on Tue Nov 01, 2016 7:34 am


-
சென்னை மௌலிவாக்கத்தில் பாதுகாப்பற்ற நிலையில்
உள்ள 11 அடுக்குமாடி கட்டடம் புதன்கிழமை (நவ.2)
இடிக்கப்பட உள்ளது என சென்னை பெருநகர வளர்ச்சிக்
குழமத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் சி.விஜயராஜ்குமார்
அறிவித்துள்ளார்.

இந்தக் கட்டடம் அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி
வரை இடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பெயரில் தமிழக
அரசின் சார்பில் திங்கள்கிழமை வெளியான அறிக்கை விவரம்:

பாதுகாப்பாக உள் வெடிப்பு முறையில்...: இந்த 11 அடுக்குமாடி
கட்டடத்தை இடிக்க நவீன உள் வெடிப்பு தொழில்நுட்ப முறை
("இன்ப்ளோஷன்' பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது, வெடி
மருந்துகள் பயன்படுத்தி, பாதுகாப்பான முறையில் வெடிக்கச்
செய்து, அதே இடத்தில் கட்டடம் உள்நோக்கி விழும் வகையில்
இடிக்கப்பட உள்ளது.

பாதுகாப்புக்கு..: இடிக்கப்பட உள்ள இந்த கட்டடத்தைச் சுற்றி
100 மீ சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து கட்டடங்களின் நிலை,
பொதுப்பணித் துறை, சிஎம்டிஏ உள்ளிட்டவை மூலம் ஆய்வு
செய்யப்பட்டன. மேலும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில்
கொண்டு விரிவான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்
கொள்ளப்பட்டுள்ளன.

தாற்காலிக தங்குமிடம்-ஆம்புலன்ஸ் வசதி: பொதுமக்கள்
தாற்காலிகமாக தங்குவதற்கு மதனந்தபுரம் பிரதான சாலையிலுள்ள
ஸ்ரீ எஸ்.ஏ.கே. ஜெய் மாருதி மஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தங்குமிடத்துக்குச் செல்ல கட்டணமில்லா பேருந்து வசதியும்,
இரண்டு தீயணைப்பு வாகனங்கள், நான்கு அவசர கால ஆம்புலன்ஸ்
வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

அதேபோல், 100 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும்
கட்டடம் இடிப்பது குறித்தும், மாற்று இடத்துக்குச் செல்வது குறித்தும்
தனித்தனியாக அறிவிப்பு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் வழங்கப்பட
உள்ளன.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே...: மேலும் கட்டடம்
இடிக்கப்படுவதற்கு முன்பு காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும்
இணைந்து அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வெளியேறி
விட்டார்களா என்பதை உறுதி செய்த பின்புதான் இடிக்கும் பணி
மேற்கொள்ளப்பட உள்ளது.

பீதி வேண்டாம்:
கட்டடம் இடிக்கப்படுவது குறித்து அப்பகுதி பொதுமக்கள் எவ்வித
அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை. கட்டடம் இடிக்கப்படும்
பணி முடிவடைந்தவுடன் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு
செல்வதற்கு உரிய அறிவிப்பு வழங்கப்படும். எனவே அப்பகுதியில்
உள்ள அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பினை வழங்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அரசின் செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Post by T.N.Balasubramanian on Tue Nov 01, 2016 10:35 am

முதல் முறையாக நவீன முறையில் இடிக்கப்பட உள்ள பலமாடி கட்டிடம் .

போதிய பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது நல்லதே .

இடிபடுவதை பார்க்க ஏராளமான கூட்டம் சேரும் .

ஏற்கனவே இந்த அடுக்கக குடியிருப்பில் குடிபுக பணம் கட்டியவர்கள் கதி என்ன ?
பணம் கிடைக்குமா ?????

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20294
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Post by M.Jagadeesan on Tue Nov 01, 2016 12:45 pm

கொடுத்த பணம் எள்ளுதான் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4639
மதிப்பீடுகள் : 2156

View user profile

Back to top Go down

Re: மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Post by T.N.Balasubramanian on Wed Nov 02, 2016 8:48 pmமவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் இருந்த 11 மாடி கட்டிடம் இன்று (புதன்கிழமை) இரவு 6.50 மணிக்கு இம்ப்ளோசன் என்ற நவீன தொழில்நுட்பத்தில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

கட்டிடத்தின் தூண்கள் அனைத்திலும் துளையிடப்பட்டு வெடிமருந்து நிரப்பப்பட்டது. ரிமோட்டை இயக்கிய 3 வினாடியில் மவுலிவாக்கம் கட்டிடம் தரைமட்டம் ஆனது.

கட்டிடம் இடிந்ததும் மவுலிவாக்கம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. கட்டிடம் இடிக்கப்பட்டதை அடுத்து மணலில் கட்டிய சிற்பம் போல சரிந்து விழுந்தது.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனம், தலா 11 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வந்தது. இதில், 'பிளாக் பி' என்ற 11 மாடி கட்டிடம், கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி திடீரென இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்தில் 61 பேர் இறந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். அதன் அருகில் உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, அந்தக் கட்டிடம் இன்று பகல் 2 மணி முதல் 4 மணிக்குள் கட்டிடம் முழுமையாக இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மழையின் காரணமாக இரவு 6.50 மணிக்கு கட்டிடம் இடிக்கப்பட்டது.

பாதுகாப்பு நடவடிக்கையாக, 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டிடங்கள், வீடுகளில் வசிப்பவர்கள் வெளி யேற்றப்பட்டனர்.

தமிழகத்தில் 11 மாடி கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது இதுவே முதல்முறை.

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20294
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Post by பாலாஜி on Thu Nov 03, 2016 1:12 pm

@T.N.Balasubramanian wrote:முதல் முறையாக  நவீன முறையில் இடிக்கப்பட உள்ள பலமாடி கட்டிடம் .

போதிய பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது நல்லதே .

இடிபடுவதை பார்க்க ஏராளமான கூட்டம் சேரும் .

ஏற்கனவே இந்த அடுக்கக குடியிருப்பில் குடிபுக பணம் கட்டியவர்கள் கதி என்ன ?
பணம் கிடைக்குமா ?????

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1225851

போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டிருந்த 11 அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டது அதில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான சாட்சியங்களை அழிப்பதற்காகவே என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ''சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு இடிந்து விழுந்த 11 மாடிக்கட்டடம் தவிர எஞ்சியிருந்த மற்றொரு 11 மாடிக்கட்டடமும் வெடி வைத்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் விலகிவிட்டாலும் அதிலுள்ள வீடுகளை வாங்கியவர்களுக்குத்தான் இன்னும் விடிவு பிறக்கவில்லை.

மவுலிவாக்கத்தில் பிரைம் டிரஸ்ட் ஹெயிட்ஸ் என்ற பெயரில் அடுக்குமாடி கட்டடத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தலா 11 மாடிகளை கொண்ட இரு உயர் அடுக்கு கட்டடங்களில் மொத்தம் 88 வீடுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

ஒரு கட்டடத்துக்கு the Faith என்றும் இன்னொரு கட்டடத்துக்கு The Belief என்றும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இவ்வாறு ஒட்டுமொத்த பெயரில் தொடங்கி தனித்தனி பெயர் வரை அனைத்திலும் 'நம்பிக்கை' இருந்த போதிலும், அதை நம்பி வாங்கிய மக்களின் நம்பிக்கைத்தான் காப்பாற்றப்படவில்லை. தரமற்ற வகையில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி கட்டடங்களில் ஒன்று கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம்28ஆம் தேதி விபத்துக்குள்ளாகி தரை மட்டமானது. இவ்விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்றிருந்த இன்னொரு கட்டடம் தான் நேற்று தகர்க்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்த கட்டடம் குறித்த பாதுகாப்பு அச்சங்கள் முற்றிலுமாக முடிவுக்கு வந்திருக்கின்றன. ஆனால், இக்கட்டடத்தில் வீடுகளை வாங்க் பணம் கட்டியவர்களின் நிலை தான் மேலும், மேலும் பரிதாபத்துக்குரியதாக மாறி வருகிறது. இந்தக் கட்டடத்தில் மொத்தம் 88 வீடுகள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு 60 கோடி என்று கூறப்படுகிறது. அவற்றில் 48வீடுகளை மக்கள் வாங்கியிருந்தனர். அந்த வீடுகளுக்காக அவர்கள் மொத்தம் ரூ.20.28 கோடி பணம் செலுத்தியிருந்தனர். 2014ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்துக்குப் பிறகு வீடுகள் இல்லாமல் போன நிலையில் அதற்காக அவர்கள் செலுத்திய பணத்தை திருப்பித்தர பிரைம் சிருஷ்டி மறுத்து விட்டது.

இந்தத் தொகையை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்து விட்டது. இதனால் தங்களின் சொத்தை விற்றும், வங்கிக் கடன் வாங்கியும் வீட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் கடன்காரர்கள் ஆனது தான் மிச்சம்.

சென்னையில் வாழும் நடுத்தர மக்களின் முதன்மைக் கனவு என்பது சொந்த வீடு வாங்குவதுதான். அதன்படி தான் அவர்கள் மவுலிவாக்கம் கட்டடத்தில் வீடுகளை வாங்கினார்கள். கட்டடம் இடிந்து விழுந்ததற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. ஏரிக் கால்வாய் என பத்திரப்பதிவுத்துறை ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தில் சட்டவிரோதமாக கட்டடம் கட்டிய கட்டுமான நிறுவனமும், கையூட்டு வாங்கிக்கொண்டு அதற்கு அனுமதி அளித்த அரசும் தான் கட்டடம் இடிந்ததற்கு காரணமாகும். சட்டவிரோத செயல்களால் பயனடைந்த கட்டுமான நிறுவனமும் அதற்குத் துணை நின்ற ஆட்சியாளர்களும் கிடைத்தவரை சுருட்டிக்கொண்டு ஒதுங்கி விட, எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் ஒட்டுமொத்த இழப்பையும் தாங்க வேண்டும் என்பது என்ன வகை நீதி?

மவுலிவாக்கம் கட்டடத்தை கட்டிய நிறுவனம் அதிமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அதிகாரித்தின் உச்சத்தை தற்காலிகமாக தொட்டுப்பார்க்கும் அமைச்சரின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறது.
இந்நிறுவனத்துக்கு அடுத்தடுத்து விதிகளை தளர்த்தி அனுமதி வழங்கியது முந்தைய ஆட்சியில் ஆதிக்கம் செலுத்திய நால்வரணியின் அங்கமாக இருந்தவர். இந்த கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியவர் முன்னாள் பெண் அமைச்சர். ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தான், முறைகேடுகளின் சாட்சியங்களையெல்லாம் அழிக்கும் நோக்குடன் இக்கட்டடமும் இடிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்களுக்கும் ஆட்சியாளர்கள் துணை போனதால், வீடுகளை வாங்க பணம் செலுத்தி விட்டு நடுத்தெருவில் நிற்கும் மக்களுக்கு அரசு தான் இழப்பீடு வழங்க வேண்டும். சேமித்து வைத்திருந்த பணத்தை வீட்டுக்காக முதலீடு செய்துவிட்டு, வங்கிக்கடன் தவனைக்காக மாத ஊதியத்தில் பெரும்பகுதியை செலுத்திவிட்டு வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கும் மக்களின் துயரங்களை அரசு உணர வேண்டும். மவுலிவாக்கம் வீட்டுக்காக அவர்கள் செலுத்திய பணத்தை அரசு திருப்பி வழங்க வேண்டும் அல்லது போரூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளில் அவர்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும்'' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தட்ஸ்தமிழ்


Last edited by பாலாஜி on Fri Nov 04, 2016 12:19 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19822
மதிப்பீடுகள் : 3995

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Post by T.N.Balasubramanian on Thu Nov 03, 2016 8:55 pm

பாவம் அவைகளை வாங்கிய மக்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20294
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum