ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கந்த சஷ்டி ஸ்பெஷல் - ஸ்கந்த மஹிமை

View previous topic View next topic Go down

கந்த சஷ்டி ஸ்பெஷல் - ஸ்கந்த மஹிமை

Post by ayyasamy ram on Tue Nov 01, 2016 5:01 pm

ஸ்கந்த மஹிமை
-
ஸ்கந்தனுடைய மகிமையைக் கேட்பதாலும் படிப்பதாலும்
கலியினால் ஏற்படும் பாவங்கள் விலகுகின்றன.
"ஸ்கந்தஸ்ய கீர்த்தி மதுலாம் கலிகல்மஷ நாசினீம்" என்கிறது
ஸ்ரீ ஸ்காந்த மஹா புராணம்.
-
முதல் கல்பத்தில் வந்த துவாபர யுகத்தில், யாவருக்கும் வேதமோ,
அதன் பொருளோ, பிற வித்தைகளோ முறைப்படி தெரியவில்லை.
உலகுக்குக் காரணமாக விளங்குவது எது என்பது புரியாமல்
இருந்தபோது, பிரம விஷ்ணுக்கள் கயிலாய மலையை அடைந்து,
சிவபெருமானிடம் இந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்குமாறு
வேண்டினர்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: கந்த சஷ்டி ஸ்பெஷல் - ஸ்கந்த மஹிமை

Post by ayyasamy ram on Tue Nov 01, 2016 5:01 pm


தேவர்களைப் பார்த்து சிவபிரான் கூறினார்:
"விஷ்ணுவும் பிரமனும் பூமியில் வியாசராகவும் மனுவாகவும்
தோன்றி வேத சாஸ்திர சாரமாகப் புராணங்களையும், ரிஷிகளுடன்
சேர்ந்து சூத்திரங்களையும் உலகம் உய்யுமாறு அருளுவார்களாக"
என்றார்.
-
அதன்படி, விஷ்ணுவானவர் வியாசராகத் தோன்றி, பதினெட்டுப்
புராணங்களை அருளினார். அவற்றுள் பத்துப் புராணங்கள்
சிவபெருமானது மகிமையைப் பேசும் ஸாத்விகங்கள் என்பர்
பெரியோர். சைவ புராணங்கள் பத்தில் ஸ்காந்த புராணம் சுகத்தை
அளிப்பதாகச் சிறந்து விளங்குகிறது.
-
"ஸ்காந்தம் ஸுகதம் உத்தமம் ஸர்வ வேதாந்த ஸாரஸ்வம்" என்பது
இப்புராண வாக்கியம். இதில் ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் உள்ளன.
அதன் ஐம்பது கண்டங்களுள் ஐந்தாவதான சங்கர சம்ஹிதையில்
30000 ஸ்லோகங்கள் உள்ளன. அதிலுள்ள சிவரஹஸ்ய கண்டத்தில்
ஸ்ரீ ஸ்கந்த அவதாரம் விவரிக்கப்பட்டுள்ளது.
-
இச்சரிதத்தை நம்பி வாழ்பவர்கள், நல்ல மனைவி, குழந்தை பாக்கியம்,
பசுக்கள் முதலிய பேறுகள் அனைத்தும் பெறுவர் என்கிறது இந்தப்
புராணம்.
-
சூரபதுமனின் துன்புறுத்தல்களுக்காளான தேவர்களின்
பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய சிவபெருமானின் நெற்றிக்
கண்களிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் ஆறு குமாரர்களாக
ஆகி, அக்னியும் வாயுவும் அதனைச் சுமந்துகொண்டு வந்து கங்கையில்
நாணற்காட்டிலுள்ள தாமரை மலரில் விடவும், அப்பொறிகள் ஆறு
குழந்தைகள் ஆயின.
-
தேவர்களின் மகிழ்ச்சியைக் கூறவும் வேண்டுமோ?
"நாம் கேட்டதோ ஒரு சிவ குமாரன்தானே. நமக்குச் சிவனருள்
தந்திருப்பதோ ஆறு குமார்கள் அல்லவா" என்று குதூகலித்தார்கள்.
இங்கே, வியாசபகவான் "ஸ்ரீ பரமேசுவரன் மகிழ்ந்தால் உலகத்தில்
எதுதான் கிட்டாது?" என்கிறார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: கந்த சஷ்டி ஸ்பெஷல் - ஸ்கந்த மஹிமை

Post by ayyasamy ram on Tue Nov 01, 2016 5:02 pmமுருகனின் திரு அவதாரம் எதற்காக நடைபெற்றது என்பதைக்
கச்சியப்பர் தனது கந்தபுராணத்தில் அருமையாக எடுத்து
உரைக்கிறார்:
-
உருவமும் அருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய.
-
உலகம் உய்ய வேண்டும் என்ற எல்லையற்ற கருணையினால்
முருகப்பெருமான் திருஅவதாரம் செய்தான் என்றார் கச்சியப்பர்.
அந்த பரப்பிரமத்தை இப்படிதான் வருணிக்க முடியும்.
-
உருவமும் அருவமும் கடந்த கந்தக்கடவுள், ஆறு முகங்களும்
பன்னிரு கரங்களும் கொண்டவனாக உதித்தான். எதிலிருந்து
உதித்தான் என்றால், ஜோதிப்பிழம்பிலிருந்துதான்.
-
ஆகவே, சிவ ஜோதியின் மறு வடிவமே கார்த்திகேயன் என்பது
பெறப்படுகிறது. "மூவிரு வடிவும்" அன்னை உமாதேவி அணைத்து
எடுத்தவுடன், "ஒன்றாகிக் கந்தன் என்று பேர் பெற்றனன்" என்று
கந்தபுராணம் கூறும்.
-
இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் குமாரக் கடவள் வீற்றிருக்கும்
சோமாஸ்கந்தக் கோலம், பகலுக்கும் இரவுக்கும் நடுவில் மாலை
அமைந்திருப்பதுபோல் இருந்தது என்கிறார் கச்சியப்பர்.
-
சிவபெருமானின் திரு வாக்கினாலேயே கந்தனின் பெருமையைக்
கந்தபுராணம் மூலம் அறிவிக்கிறார் கச்சியப்பர். இருவருக்கும்
பேதம் கிடையாது என்பதை உணர்த்தும் அருமையான பாடல் இது -
-
---------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: கந்த சஷ்டி ஸ்பெஷல் - ஸ்கந்த மஹிமை

Post by ayyasamy ram on Tue Nov 01, 2016 5:02 pm


-
ஆதலின் நமது சத்தி அறுமுகன் ; அவனும் யாமும்
பேதகம் அன்றால் ; நம்போல் பிரிவிலன் ; யாண்டும் நின்றான்;
ஏதமில் குழவி போல்வான்; யாவையும் உணர்ந்தான்; சீரும்
போதமும் அழிவில் வீடும் போற்றினர்க்கு அருள வல்லான்.
-
இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் முருகன் விசுவரூபம் காட்டிய
போது, அவ்வுருவில் எண் திசைகளும் ஈரேழு உலகங்களும்,
எட்டு மலைகளும், ஏழு கடல்களும், திருமாலும் சிவபெருமானும்
அனைத்து உயிர்களும் தெரிந்தன. இதனைத் தேவர்கள் வாக்காக,
-
அம்புவி முதலாம் பல் பேரண்டமும் அங்கங்கு உள்ள
உம்பரும் உயிர்கள் யாவும் உயிரலாப் பொருளும் மாலும்
செம் பதுமத்தினோனும் சிவனொடும் செறிதல் கண்டோம்
எம்பெருமானின் மெய்யோ அகிலமும் இருப்பதம்மா!
--
என்பதன் மூலம் அறியலாம்.
-
பானுகோபனை வென்று திரும்பிய வீரவாகு, முருகப்பெருமானிடம்
வரம் வேண்டும்போது, குபேர வாழ்க்கையையும், இந்திர பதத்தையும்,
மாலயன் பதத்தையும் வேண்டேன். நின் பாத மலர்களில் அன்பு
பூணும் ஒன்றையே வரமாகக் கோருகின்றேன் என்றார்.
-
-----------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: கந்த சஷ்டி ஸ்பெஷல் - ஸ்கந்த மஹிமை

Post by ayyasamy ram on Tue Nov 01, 2016 5:03 pm


-

- போர்க்களத்தில் சூர பதுமனுக்கு முருகப்பெருமான்
விசுவரூபம் காட்டியதும், சூரன் தன்னை அறியாமலேயே,
நல்லறிவு பெற்றவனாய், ‘
-
‘இக்குமரனைப் பாலன் என்று
அலட்சியமாகக் கருதிவிட்டேன். மாலயனுக்கும் ஏனைய
தேவர்களுக்கும் மூல காரணமாய் இருக்கும் மூர்த்தி இவன்
அல்லவோ? இவ்வடிவின் அழகையும், ஒளியையும் எவ்விதம்
சொல்வேன்!
-
இந்த அற்புத வடிவு எங்கும் காண இயலாத ஒன்று அல்லவா?
இந்த அற்புதக் கோலத்தைப் பல தடவைகள் பார்த்தாலும்
தெவிட்டவில்லை யாருக்கும் புலப்படாத இவ் வடிவை
தேவர்களும் காணமாட்டார். அழியா வரம் பெற்றதால் மட்டுமே
நேரில் நான் பார்க்க முடிந்தது.
-
ஆயிரம் கோடி மன்மதர்களின் உருவெல்லாம் ஒருசேரத்
திரண்டு ஒன்றாக வந்தாலும் இக்குமரனின் திருவடிகளது
அழகுக்கு நிகராகாது என்றால், இம்முழு வடிவுக்கு எதனை
உவமையாகக் கூற முடியும்?
-
எனது கண்களில் நீர் பெருகுகின்றது. எனது கால்கள் இவனை
வலம் வர வேண்டும். கைகள் இவனைத் தொழ வேண்டும்.
தலை தாழ்ந்து வணங்க வேண்டும். நாவினால் துதித்துக்
கசிந்துருகி விழி நீர் பெருக்க வேண்டும். என் எலும்புகள் மெழுகு
போல் உருகுகின்றனவே! எனது தவப்பயனாய் இவ்வடிவம் கண்டும்,
மானம் ஒன்றால் தடுக்கப்பட்டுவிட்டேனே" என்று ஒரு கணம் உருகி
செயலற்று நின்றான்.
-
பகைவனுக்கும் அருளிய பரம கருணையாளனான பன்னிருகை
வேலனின் நாமம் நம்மைக் கரையேற்ற வல்லது.
-
"படிக்கின்றிலை
பழனித் திருநாமம்
படிப்பவர் தாள் முடிக்கின்றிலை;
முருகா என்கிலை"

-
என்பார் அருணகிரிநாதர்.
-
"மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்"

என்பது கந்தர் அலங்காரம்.
-
ஆலகால விஷத்தைக் குடித்து அனைத்து உயிர்களையும் அழியாமல்
காத்த நீலகண்டனின் மைந்தன் நமக்கு என்றும் துணையாய்
இருப்பான். இதனை அருணகிரியார், கந்தர் அலங்காரத்தில்,
-
"ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே."
-

என்று அருளிச் செய்துள்ளார். மயிலேறிய மாணிக்கமாம் வள்ளி
மணாளனின் திருவருள் என்றென்றும் தழைப்பதாக.
-
-------------------------------------------------

- சிவபாதசேகரன்
தினமணி - ஆன்மிகம்

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: கந்த சஷ்டி ஸ்பெஷல் - ஸ்கந்த மஹிமை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum