ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
 ayyasamy ram

பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம்
 ayyasamy ram

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை

View previous topic View next topic Go down

யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை

Post by ayyasamy ram on Wed Nov 02, 2016 7:17 am


-
ஓம் சரவணபவ. கந்த சஷ்டி விழா ஆரம்பித்ததால் அழகுவேல் முருகனை, தமிழ் மொழியின் ஆதி மூலனைப பற்றி பதிவிட விரும்புகிறேன்.

கந்தனின் பிறப்பு:


துன்பத்தில் இருக்கும் தேவர்களை சூறபத்மனிடம் இருந்து காப்பாறும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய “அதோமுகம்” (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.

அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வரும் வேளை அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினன் உலகமுய்ய.
ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் “ஆறுமுகசுவாமி” எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.

வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதின்மர் தோன்றல்:


சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனருகில் இருந்த பார்வதிதேவி பாய்ந்து ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன. அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதுமர் (100009) தோன்றினர். இவர்கள் அனைவரும் பின்பு முருகனின் படைவீரர்களாயினர்.

பல பெயர் நாயகன்:

சரவண பொய்கையில் குழந்தைஆனதால் -சரவண பவன்
கங்கை ஏந்தியதால் -காங்கேயன்
கார்த்திகை பெண்களால் பாலுட்டபட்டதால் -கார்த்திகேயன்
விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் -விசாகன்
ஆறுமுகம் கொண்டதால் -ஆறுமுகன்,சண்முகன்
ஆறு குழந்தைகள் ஒன்றியதால்- ஸ்கந்தன்,கந்தன்
தமிழில் முருகு என்றால் அழகு,அழகானவன் -அதனால் முருகன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32541
மதிப்பீடுகள் : 10814

View user profile

Back to top Go down

Re: யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை

Post by ayyasamy ram on Wed Nov 02, 2016 7:20 am

கந்த சஷ்டி விளக்கம்:

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்ற்க் கூடிய ஒன்று.
கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும்
கஷ்டத்திலிருந்த்தும் காபாற்றுகிறது.
-
கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச்
சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து
ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது?
-
இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.
முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும்,
பனிரெண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து
என்னைக் காக்க வேண்டும்.
-
அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற ம
கனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும்,
நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும்
குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும்,
பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும்,
அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில்
மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும்
முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
-
அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைகிறார்,

வதனத்திற்கு அழகு வேல்,
நெற்றிக்குப் புனிதவேல்,
கண்ணிற்குக் கதிர்வேல்
நாசிகளுக்கு நல்வேல்,
செவிகளுக்கு வேலவர் வேல்,
பற்களுக்கு முனைவேல்,
செப்பிய நாவிற்கு செவ்வேல்,
கன்னத்திற்கு கதிர்வேல்,
கழுத்திற்கு இனிய வேல்
மார்பிற்கு இரத்தின வடிவேல்,
இளமுலை மார்புக்கு திருவேல்,
தோள்களுக்கு வடிவேல்
பிடறிகளுக்கு பெருவேல்,
அழகு முதுகிற்கு அருள்வேல்,
வயிறுக்கு வெற்றிவேல்
சின்ன இடைக்கு செவ்வேல்,
நாண்கயிற்றை நால்வேல்,
பிட்டம் இரண்டும் பெருவேல்,
கணைக்காலுக்கு கதிர் வேல்,
ஐவிரல்களுக்கு அருள்வேல்,
கைகளுக்கு கருணை வேல்,
நாபிக்கமலம் நல்வேல்
முப்பால் நாடியை முனை வேல்,
எப்போதும் என்னை எதிர் வேல்,
பகலில் வஜ்ர வேல்,
இரவில் அனைய வேல்,

-
அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.
அடுத்தது எத்தனை விதமான பயத்திலிருந்து காக்க வேண்டும்,

பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள்,
அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள்,
ப்ரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும்
முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும்
பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு,
நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள்
எல்லாம் சஷ்டி கவச்ம் படித்தால் செயலிழந்து விடும்
என்கிறார்.

பின் மிருகங்களைப் பார்ப்போம்,


புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும்
செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம்
சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு,
ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை,
குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற
வியாதிகள் இதப் படித்தால் உடனே சரியாகி விடும்
என்கிறார்.

இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரஹங்களும்
நமக்குத் துணை இருப்பார்கள் சத்ருக்கள் மனம் மாறி
விடுவார்கள் முகத்தில் தெய்வீக ஒளி வீசும்.
கந்த சஷ்டி கவசம் படியுங்கள் வேலனப் போற்றுங்கள்.
சூர சம்ஹாரத்திற்காக காத்திருப்போம்.
---
வெற்றிவேல்!! வீரவேல்!!
-
-Abirami Govindarajan
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32541
மதிப்பீடுகள் : 10814

View user profile

Back to top Go down

Re: யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை

Post by சிவனாசான் on Wed Nov 02, 2016 9:54 am

அருமையான ஆன்மீகப்பதிவுங்க அய்யா நன்று.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2734
மதிப்பீடுகள் : 986

View user profile

Back to top Go down

Re: யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum