ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜுனியர் விகடன்
 Meeran

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 ayyasamy ram

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 ayyasamy ram

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 ayyasamy ram

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 ayyasamy ram

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 ayyasamy ram

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ayyasamy ram

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

யாருக்கும் தெரியாது - நகைச்சுவை

View previous topic View next topic Go down

யாருக்கும் தெரியாது - நகைச்சுவை

Post by ayyasamy ram on Mon Nov 07, 2016 1:44 pm


-
ஒரு வீட்டில் எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்
கொண்டிருந்தது.
எலி வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.

வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக்
கொண்டிருந்தார்கள்.

ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும்
என்று ஆவலோடு பார்த்தது எலி.
அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.
அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல
இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய்
சொன்னது “பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி
வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது.”

கோழி விட்டேற்றியாகச் சொன்னது” உன்னைப் பொறுத்த
வரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.
நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு
பிரச்சினையும் இல்லை.”

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம்
அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும்
அதேபதிலைச் சொல்லியதோடு “நான் எலிப்
பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்.” என்றது.

மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம்
போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதே
பதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும்
பரவாயில்லை “எலிப்பொறியை பார்த்து என்னையும்
பயப்படச் சொல்கிறாயா?” என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை
வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப்
போயினர்.
ஒரு அரை மணி நேரத்தில் ” டமால் ” என்றொரு சத்தம்.

எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி
ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று
எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு
ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும்
பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி “பாம்புக் கடிக்குப் பின்னால் வரும்
காய்ச்சலுக்கு “சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது”
என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது.
கோழி உயிரை விட்டது.
அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.
உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட
வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே
விருந்து வைத்தார்.
இந்த முறை ஆட்டின் முறை.
விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு
கவனித்துக் கொண்டிருந்தது.
பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான
எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.
எலி தப்பித்து விட்டது. அப்பாடா…

‪ :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று
வந்தால் “என்ன” என்றாவது கேளுங்கள்.
ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும்
என்று யாருக்கும் தெரியாது.
அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.
அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்……

—————————-

சவுந்தியன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34344
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: யாருக்கும் தெரியாது - நகைச்சுவை

Post by உமா on Mon Nov 07, 2016 4:30 pm

சிந்திக்க வைத்த நகைச்சுவை கதை
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: யாருக்கும் தெரியாது - நகைச்சுவை

Post by பாலாஜி on Mon Nov 07, 2016 4:54 pm

நல்ல பகிர்வு ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: யாருக்கும் தெரியாது - நகைச்சுவை

Post by ஜாஹீதாபானு on Mon Nov 07, 2016 5:57 pm

நல்ல கதை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30046
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: யாருக்கும் தெரியாது - நகைச்சுவை

Post by GunasekarenS on Mon Nov 07, 2016 6:58 pm

பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
(எலிப்பொறியில்?!)
avatar
GunasekarenS
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 142
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: யாருக்கும் தெரியாது - நகைச்சுவை

Post by Dr.S.Soundarapandian on Mon Nov 07, 2016 8:13 pm

:நல்வரவு:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4442
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: யாருக்கும் தெரியாது - நகைச்சுவை

Post by விமந்தனி on Mon Nov 07, 2016 9:32 pm

அருமையிருக்கு அருமையிருக்கு


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: யாருக்கும் தெரியாது - நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum