ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 T.N.Balasubramanian

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 தமிழ்நேயன் ஏழுமலை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Thamaraimanalan

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 T.N.Balasubramanian

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
 ayyasamy ram

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
 ayyasamy ram

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
 ayyasamy ram

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
 T.N.Balasubramanian

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
 T.N.Balasubramanian

துணிவே துணையாகும்!
 T.N.Balasubramanian

இனிய தந்தையர் தினம் 
 ராஜா

நீண்ட ஆயுள் வேண்டுமா?
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
 T.N.Balasubramanian

ஓங்கி அடிச்சா...!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!
 ayyasamy ram

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி
 ayyasamy ram

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
 ayyasamy ram

பசங்களுக்குத்தான் பெரிய மனசு
 T.N.Balasubramanian

சர்க்கரையை வெல்லலாம்
 T.N.Balasubramanian

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
 T.N.Balasubramanian

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
 மூர்த்தி

arimugam
 ayyasamy ram

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
 ராஜா

பேலியோ டயட்
 ராஜா

ஆளை விட்றா சாமி...!
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

குச்சி ஐஸ் வேணுமா…
 ayyasamy ram

கட்சியிலே தொண்டர் பலம் இலல்லையாம்…!!
 ayyasamy ram

இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
 M.Jagadeesan

மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
 ayyasamy ram

கொள்ளை வேந்தனே வருக’னு போர்டு வெச்சிட்டாங்களாம்..!
 ayyasamy ram

அப்பாவின் நினைவில் மகள்!
 ayyasamy ram

ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
 M.Jagadeesan

இந்தியா - பாக்., மோதல்:ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்
 ayyasamy ram

வட அமெரிக்காவில் தமிழ் விழா-FETNA 2017 –
 மூர்த்தி

அமெரிக்காவில் இந்த வாரம் - 5
 மூர்த்தி

ஆரோபம்
 sugumaran

64 அடி உயர கோதண்டராமர் சிலை வடிக்க பிரம்மாண்ட கல் இன்று பெங்களூரு பயணம்
 ayyasamy ram

சந்தேகம் சரியா 37: முதியோருக்கு அதிக ரத்த அழுத்தம் இயல்பா?
 T.N.Balasubramanian

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு...
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எஞ்சோட்டுக்காாி

View previous topic View next topic Go down

எஞ்சோட்டுக்காாி

Post by maheshpandi on Mon Dec 05, 2016 4:16 pm

எஞ்சோட்டுக்காாி

ஆத்தோரத்துல ஒரு அத்திமரம்
யாரு கைக்கும் அகப்படாத கட்டமரம்
வரத்தாடு மேய்க்கும்
வந்தட்டிக்காாி பொன்னுத்தாயிக்கும்
செம்பிலி ஆடு மேய்க்கும்
சின்னாளம்பட்டி செந்துருக்கத்துக்கும்
முந்தி நிழல் விாிக்கும்
மூதாதையர் வைச்ச மரம்

இவுக ஒத்தையடிப் பாதையில
ஓடைக்கரையில ஆடு மேய்க்கையில
ஒட்டுமொத்த சொந்தங்களும்
ஒறங்காமக் காத்திருக்கும்
இவுக வருகைய எண்ணி
ஆவாரம் புவும் ஐஞ்சாறு நாளா புத்திருக்கும்

இவுகளுக்கு சொந்தம் உண்டுன்னு
சொன்னனா இல்லையா
அதுக சல்லிக்கல்லு சரலக்கல்லு
கத்திக்கல்லு கருங்கல்லு
குறுங்கல்லு குண்டாங்கல்லு கூழாங்கல்லு
இவுக பாதம் தொடும் பந்தங்கள்

கள்ளி முள்ளு காக்கா முள்ளு
காரா முள்ளு சூரா முள்ளு
இண்ட முள்ளு எலந்த முள்ளு
சில்லி முள்ளு சிவனார் வேம்பு முள்ளு
நெருஞ்சி முள்ளு முக்குறுணி முள்ளு
இவுக இரத்த உறவு சொந்தங்கள்

ஒருநா பொன்னுத்தாயி நீ
காலுல முள்ளுக்குத்தி
கதறி அழுதப்போ
காடைக்குருவிகளும் கதவாலிக்குஞ்சிகளும்
உக்கி ஒறஞ்சிருச்சி
ராவெல்லாம் ஒறங்காம முளிச்சிருச்சி
அதெல்லாம் நெனைச்சிருக்கியா
இல்ல ஒன் இத்த மனசுக்குள்ள புதைச்சிருக்கியா

தண்டபாணி நாயக்கரு பிஞ்சையில
தண்டாம் பயறு போட்டப்ப்ப...
களவாண்டுத் திண்டுப்புட்டு
நாம கதை பேசி நிக்கையில
வெள்ளாமக் காடெல்லாம்
ஆடு மேய்ஞ்சி ஓஞ்சி வருதுக
அதுக்காக

உச்சி வெயிலுள ஒடசாலி மரத்துல
நாயக்கரு உன்னையும் என்னையும் கட்டப் போனப்போ
நாயக்கரு கையக் கடிச்சிப்புட்டு காணாமப் போனமே
நெனப்பிருக்கா இன்னும் ஒன் நெஞ்சுக்குள்ள

ஒடம்பத்தக்காாிக நாம ரெண்டுபேரும்
ஒருத்தனையே கட்டிக்கிடுவோம்னு
ஓடக்கரையில பேசிச்சிாிச்சோமே
ஓடத்தண்ணி போல அது வத்திப்போச்சே
ஒறைஞ்ச நெனப்புல மனசு இத்துப்போச்சே

எட்டூரத் தாண்டி எழவெடுத்தவன் ஒன்னக் கட்டிப்போக
வாடிப்பட்டி தாண்டி நானும் வாக்கப்பட்டுப்போக
இத்த பொழப்பாக எம்பொழப்பு இருண்டுருச்சி
பத்தமட பாய் போல ஒம்பொழப்பு சுருண்டுருச்சு

மலக்காரக் கெழவி நல்ல மனசுக்காாி
குட்டிப்பேத்திக் கெழவி கூடப்பொறந்தவ
ஏமஞ்சாமம்னாலும் பேறுகாலம் பாப்பவ
ஊருக்கே ஒலவைச்சிக் கஞ்சி ஊத்தினவ
ஓயாம ஒறங்காம அம்புட்டு வேலையும் செஞ்சவ
அஞ்சு மகனப் பெத்தவ அனாதையா செத்துக்கெடக்கா

காட்டுல களையெடுத்த சனமெல்லாம்
கருக்கல்ல ஊரு தேடிப்போறப்ப
நெய்க்காரக் குருவியெல்லாம்
நெலா வெளிச்சத்துல காஞ்சப்போ

கட்ட சாஞ்சா கெழவி செத்த எழவு சேதி சொல்லி
மதுர சக்கண்ணன் வவுறு காஞ்சி வாரானப்பா
கெழவி செத்த எழவுச் சேதி எஞ்செவுட்டுள போகுமுன்னே
எழவுக்கு நீயும் வந்திடுவ எப்படியும் உன்னப் பாத்துப்புடலாம்னு
என் உசுறக் கையில புடிச்சி
எட்டூரத்தாண்டி நானும் எட்டுவச்சு வந்தப்ப
எங்கண்ணுக்கு எட்டுன மட்டும் உன்னக் காங்கல
எங்கண்ணா முளி ரெண்டும் தூங்கல

துஸ்டிக்கு வந்த ஒட்டு ஒறவெல்லாம்
ஊரு தேசம் போனப்ப
எப்படியும் நீ வந்திருவ எங்கிற நெனப்பு
என்னை ஏமாத்திப் போயிடுச்சே

என்நெஞ்சாங்குலைய கழத்தி வச்சிப்புட்டு
எம்பொழப்பத் தேடி ஏமாந்த சிறுக்கி நானும் வண்டியேற
வக்கத்தவ நீயும் வராம இருந்திட்டியே
என்னைக்காச்சும் நீ ஊருக்கு வந்தா
வங்காத்துட்ட சேதி சொல்லி வழியனுப்பி வையி
இத்த ஒடம்புக்குள்ள ஒத்த உசுற புடிச்சிருக்கேன்
நெனப்ப முடிஞ்சி வச்சு நெதமும் காத்திருக்கேன்
வங்காத்தே தூது சொல்லு......
avatar
maheshpandi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 25
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum