ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 19, 2017 7:56 am

சென்னை:
‛ பிரதமரை சந்தித்து தமிழக பாரம்பரிய உரிமையான
ஜல்லிக்கட்டை நடத்த உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள
வலியுறுத்துவேன்' என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
-
இன்று காலை 10.30 மணிக்கு பிரதமரை சந்திக்கிறார்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 19, 2017 7:59 am

---
போராட்டக்குழுவினர் பேட்டியில் கூறியது:
-
'முதல்வர், பிரதமரை சந்தித்து பேசினாலும் ஜல்லிக்கட்டு நடக்கும்
வரை போரட்டத்தை தொடருவோம். நாளை  பல கல்லூரிகளுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் போராட்டக்களத்தில் இன்னும்
ஏராளமான மாணவர்கள் திரள்வார்கள்' என தெரிவித்தனர்.
-
-----------------------
சென்னை:

ஜல்லிக்கட்டு நடத்தகோரி போராட்டம் நடத்தும் இளைஞர்களின்
பிரதிநிதிகளிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,
இன்று(ஜன.,19) இது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க
இருப்பதாக தெரிவித்துள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 19, 2017 8:01 am

-
--

சேலம்:
-
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கார்கில் போரில்
பங்கேற்றதற்காக, பெற்ற பதக்கத்தை திருப்பியளிக்கப்
போவதாக, முன்னாள் படைவீரர் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, கொங்கணாபுரத்தைச்
சேர்ந்தவர் செல்வராமலிங்கம். முன்னாள் படை வீரரான இவர்,
நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்றார்.

பின், அவர் கூறியதாவது: நான், 1995 முதல், 2015 வரை, இந்திய
விமானப் படையில், வீரராக பணிபுரிந்தேன். கார்கில் போரில்
கலந்து கொண்டதற்காக, 'ஆப்ரேஷன் விஜய்' பதக்கம் வழங்கப்
பட்டது. ராணுவத்தில் இருந்து திரும்பிய பின், விவசாயம் செய்து
வருகிறேன்.

ஜல்லிக்கட்டுக்காக, காளை மாட்டை, பிள்ளைகளை போல்
வளர்ப்பது வழக்கம். இந்த கலாசாரத்தை அழிக்கும் வகையில்,
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளது. என் எதிர்ப்பை
காட்டும் வகையில், ராணுவத்தில் வாங்கிய பதக்கத்தை,
கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளேன்.இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 19, 2017 8:50 am


-
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக
எழுச்சி போராட்டம்; இலவச உணவு, டீ, பிஸ்கெட்
வினியோகம் களை கட்டியது
-
25 ஆயிரம் இட்லி வினியோகித்தவர்

-
திருவல்லிக்கேணியை சேர்ந்த சதீஷ்குமார்,
போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தனது லோடு வேன் மூலம்
இலவசமாக இட்லிகளை எடுத்து வந்து தொடர்ந்து சப்ளை செய்தார்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர், ‘‘காலையில் இருந்து
15–வது முறையாக இப்போது இட்லி கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன்.
ஒவ்வொருமுறையும் குறைந்தது 2 ஆயிரம் இட்லி முதல்
2 ஆயிரத்து 500 இட்லி வரை எடுத்து வந்தேன்.

நண்பர்கள் குழுவாக சமைத்து தருகின்றனர். அது மட்டுமல்ல,
அவர்கள் அக்கம்பக்கத்தில் இருந்து இட்லி மற்றும் பிற உணவுப்பொ
ருட்களை சேகரித்து தருகின்றனர்.

25 ஆயிரம் இட்லிகள் வினியோகம் செய்திருக்கிறோம்.
இது தொடரும். எங்களது ஒரே நோக்கம், இந்த போராட்டம் வெற்றி
பெற வேண்டும் என்பதுதான்’’ என்று கூறினார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 19, 2017 8:58 am


-
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பழநி பஸ் ஸ்டாண்ட்
ரவுண்டான அருகே முகநூல் நண்பர்கள் குழு
போராட்டத்தில் காளையுடன் கலந்துகொண்ட
சிறுமி.

படம் : கே.மணிகண்டன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு

Post by ராஜா on Thu Jan 19, 2017 11:19 am

நல்ல திரி , அப்படியே ஜல்லிக்கட்டு தொடர்பான பழைய பதிவுகளையும் ஒன்றாக இணைத்து விடுங்கள்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 19, 2017 4:26 pm


-

ஜல்லிக்கட்டு ஆதரவாக முன்னாள் உலக செஸ் சாம்பியன்
விஸ்வநாதன் ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு என்பது கலாசார அடையாளம்.
அதற்கு மதிப்பளிக்கவேண்டும். விலங்குநல உரிமைகளுக்கு
நானும் ஆதரவாளன் தான். ஆனால் இங்கு அதைவிடவும்
கலாசாரமும் வாழ்வாதாரமுமே முக்கியம்.

எனது மாநிலம் மீண்டும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும்
எழுச்சி கொண்டுள்ளது. தமிழண்டா என்பதில் நான் பெருமை
கொள்கிறேன்.

புதிய தலைமுறையினர் நவீனமாக மட்டுமல்ல, கலாசார
வேர்களை விடாதவர்களாகவும் உள்ளார்கள் என்று
கூறியுள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு

Post by கண்ணன் on Thu Jan 19, 2017 4:55 pm

@ayyasamy ram wrote:-
--

சேலம்:
-
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கார்கில் போரில்
பங்கேற்றதற்காக, பெற்ற பதக்கத்தை திருப்பியளிக்கப்
போவதாக, முன்னாள் படைவீரர் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, கொங்கணாபுரத்தைச்
சேர்ந்தவர் செல்வராமலிங்கம். முன்னாள் படை வீரரான இவர்,
நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்றார்.

பின், அவர் கூறியதாவது: நான், 1995 முதல், 2015 வரை, இந்திய
விமானப் படையில், வீரராக பணிபுரிந்தேன். கார்கில் போரில்
கலந்து கொண்டதற்காக, 'ஆப்ரேஷன் விஜய்' பதக்கம் வழங்கப்
பட்டது. ராணுவத்தில் இருந்து திரும்பிய பின், விவசாயம் செய்து
வருகிறேன்.

ஜல்லிக்கட்டுக்காக, காளை மாட்டை, பிள்ளைகளை போல்
வளர்ப்பது வழக்கம். இந்த கலாசாரத்தை அழிக்கும் வகையில்,
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளது. என் எதிர்ப்பை
காட்டும் வகையில், ராணுவத்தில் வாங்கிய பதக்கத்தை,
கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளேன்.இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------
மேற்கோள் செய்த பதிவு: 1231743


:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:
avatar
கண்ணன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 181
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 19, 2017 6:53 pm-
சென்னை :
மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில்
ஒரு போலீஸ் எஸ்.ஐ., சீருடையுடன் வந்து, தனது ஆதரவை தெரிவித்தார்.

இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு
போராட்டங்கள் நடந்து வருகிறது. மதுரையில் மாணவர்கள்
தமுக்கம் மைதானத்தில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம்
நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கு பணியில் இருந்த டிராபிக் எஸ்.ஐ., சேகரன்
சீருடையுடன் போராட்டம் நடத்திய மாணவர்கள் மத்தியில் வந்தார்.
இந்த போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன் என
அனைவரையும் பார்த்து கை கூப்பி வணங்கினார்.
-
மெய்சிலிர்க்க வைக்கிறது;
-
தொடர்ந்து அவர் பேசுகையில் ; இந்த போராட்டம் என்னை மெய்சி
லிர்க்க வைக்கிறது. எனது பணியே போனாலும் , பரவாயில்லை .
நான் உங்களோடு நிற்பேன் என்றார்.
-
மாணவர்கள் கரகோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவருக்கு நன்றி
தெரிவித்தனர். மேலும் , அய்யா நீங்கள் சீருடை போட்டுள்ளீர்கள் .
ஆதலால் நீங்கள் போராட வேண்டாம். உங்கள் சார்பில் உங்கள்
குடும்பத்தை சேர்ந்த மகன், மகள்களை எங்கள் போராட்டத்தில்
சேர வையுங்கள் என கூறி எஸ்.ஐ.,யை வழி அனுப்பி வைத்தனர்.
எஸ்.ஐ., அளித்த ஆதரவால் மாணவர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். -
------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 19, 2017 6:56 pm


-
காவல்துறைக்கு தோழனாக..


சென்னை- மெரினாவில் சுமார் 5 கி.மீ., தூரத்துக்கு திரண்டுள்ள
இளைஞர்களும், பெண்களும் கொட்டும் பனியிலும், போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

இரவில் மெரினா சாலையில் போக்குரவத்து நெரிசல் ஏற்படும்
போதெல்லாம், போலீசாருக்கு துணையாக களமிறங்கும்
இளைஞர்கள், போக்குவரத்து நெரிசலை சீர் செய்கின்றனர்.

மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்கள் சாப்பிட்டு வீசிய
இலைகள், பேப்பர்கள், வாட்டர் கேன்கள் மற்றும் பிளாஸ்டிக்
பைகளை அவர்களே அப்புறப்படுத்தினர்.

நள்ளிரவு நேரத்திலும் சளைக்காமல் அவர்கள் செய்த இப்பணி
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 19, 2017 10:03 pm

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம்
முழுவதும் வெள்ளிக்கிழமை அனைத்து தனியார்
பள்ளிகளும் இயங்காது என தமிழ்நாடு நர்சரி,
பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை, சிபிஎஸ்இ
பள்ளிகள் சங்க பொதுச் செயலர்
கே.ஆர்.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

-
-----------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum