ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எவ்வாறு சமாளித்திருப்பார் ?

View previous topic View next topic Go down

எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by M.Jagadeesan on Tue Jan 24, 2017 11:21 am

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் , நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொண்டிருப்பார் ?

ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் நிறைவேறி இருக்குமா ?

போராட்டத்தின் இறுதியில் நடந்த வன்முறை நிகழ்வுகளை நடக்கவிட்டிருப்பாரா ?


ஈகரை அன்பர்கள் ஆரோக்கியமாக அலசவும் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by ayyasamy ram on Tue Jan 24, 2017 1:10 pm

ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆரம்பித்திலேயே
தடுத்திருப்பார்-
-
போராட்டம் நடக்க விட்டிருக்க மாட்டார்
-
அவருக்கு இந்தி சரளமா பேச வரும், அதனால் மத்தியில்
மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து, நிலைமையே
எடுத்துரைத்து ஆவன செய்திருப்பார்....
-
மாணவர்கள் போராட்டத்தால்தான், அவசர சட்டம்
அமுலுக்கு வந்தது என்ற மாயை ஏற்பட்டிருக்காது...!!
-
நிர்வாகத் திறமை மிக்கவர்...
கட்சியினர் மீது பிறர் சொல்லும் அவதூறுகளை சட்டென
நம்பி விடும் போக்கு ஒன்றுதான் குறையானது
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32475
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by T.N.Balasubramanian on Tue Jan 24, 2017 2:32 pm

நல்ல தலைப்பு .

திண்ணைப் பேச்சு பகுதிக்கு மாற்றப்படுகிறது .அங்கே தொடரலாம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by விமந்தனி on Tue Jan 24, 2017 10:24 pm

போராட்டம் நடக்க விட்டிருக்க மாட்டார்

மாணவர்கள் போராட்டத்தால்தான், அவசர சட்டம்
அமுலுக்கு வந்தது என்ற மாயை ஏற்பட்டிருக்காது...!!
- இது தான் நடந்திருக்கும்.

மத்தியில்
மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து, நிலைமையே
எடுத்துரைத்து ஆவன செய்திருப்பார்....
- இது நடந்திருக்காது.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by krishnaamma on Tue Jan 24, 2017 11:14 pm

@M.Jagadeesan wrote:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் , நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொண்டிருப்பார் ?

ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் நிறைவேறி இருக்குமா ?

போராட்டத்தின் இறுதியில் நடந்த வன்முறை நிகழ்வுகளை நடக்கவிட்டிருப்பாரா ?

ஈகரை அன்பர்கள் ஆரோக்கியமாக அலசவும் !

இரண்டு முயன்று நாட்களாக நானும் கிருஷ்ணா அப்பாவும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம் ஐயா, இன்று பார்க்கிறேன், நீங்கள் இங்கு பதிவு போட்டுள்ளீயிர்கள் .....நானும் ஆவலாக இருக்கிறேன் நம் உறவுகளின் கருத்துகளை அறிய புன்னகை .............. ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by krishnaamma on Tue Jan 24, 2017 11:15 pm

@ayyasamy ram wrote:ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆரம்பித்திலேயே
தடுத்திருப்பார்-
-
போராட்டம் நடக்க விட்டிருக்க மாட்டார்
-
அவருக்கு இந்தி சரளமா பேச வரும், அதனால் மத்தியில்
மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து, நிலைமையே
எடுத்துரைத்து ஆவன செய்திருப்பார்....
-
மாணவர்கள் போராட்டத்தால்தான், அவசர சட்டம்
அமுலுக்கு வந்தது என்ற மாயை ஏற்பட்டிருக்காது...!!
-
நிர்வாகத் திறமை மிக்கவர்...
கட்சியினர் மீது பிறர் சொல்லும் அவதூறுகளை சட்டென
நம்பி விடும் போக்கு ஒன்றுதான் குறையானது.-


சரியாக சொன்னிர்கள்  ராம் அண்ணா........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வி . பொ .பா அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by T.N.Balasubramanian on Wed Jan 25, 2017 6:59 pm

2016 இல் அலங்காநல்லூர் போட்டி நடந்த மாதிரி நினைவு.
அனுமதி கிடைத்ததா அல்லது நடத்தப்பட்டு , நடக்கவே இல்லை என 
போலீஸ் தகவல் தந்ததாக நினைவு.


ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by T.N.Balasubramanian on Wed Jan 25, 2017 8:33 pm

ஜெயலலிதா அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க சில கண்டிஷன்களுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதி மன்றம் அனுமதி கொடுத்தது .ஜல்லிக்கட்டு போன ஆண்டு நடந்தது.
அதை முன்னுதாரணமாக காட்டி இந்த ஆண்டும் வாங்கி இருப்பார் உயிருடன் இருந்திருந்தால். 
அவருடைய சாமர்த்தியம் எவருக்கும் இல்லை .வரவும் வராது .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by M.Jagadeesan on Thu Jan 26, 2017 10:41 am

@T.N.Balasubramanian wrote:ஜெயலலிதா அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க சில கண்டிஷன்களுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதி மன்றம் அனுமதி கொடுத்தது .ஜல்லிக்கட்டு போன ஆண்டு நடந்தது.
அதை முன்னுதாரணமாக காட்டி இந்த ஆண்டும் வாங்கி இருப்பார் உயிருடன் இருந்திருந்தால். 
அவருடைய சாமர்த்தியம் எவருக்கும் இல்லை .வரவும் வராது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232328

ஜல்லிக்கட்டு சென்ற ஆண்டு நடக்கவில்லை .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by M.Jagadeesan on Thu Jan 26, 2017 5:37 pm

16-01-2017 அன்று மாணவர்கள்போராட்டம் ஆரம்பித்தது .மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெரீனாவில் கூட ஆரம்பித்தனர் .26-01-2017  அன்று குடியரசு தினம் கொண்டாட உள்ள நிலையில் , அதுவும் மெரீனா கடற்கரையில் நடக்கவுள்ள நிலையில் , இவ்வளவு பெரிய கூட்டத்தை சேர அனுமதிப்பது தவறு என்ற உண்மை இன்றைய அரசுக்குத் தெரியாமல் போனது விந்தையே ! ஜெயலலிதா இருந்திருந்தால் இந்தக் கூட்டம் கூடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்திருப்பார் .

" இளைதாக முள்மரம் கொல்க " என்பது ஐயனின் வாக்கு .

அதாவது முள்செடியை துளிர்விடும்போதே கிள்ளி எறிந்துவிடவேண்டும் ; வளரவிட்டால் ஆபத்து . அந்த ஆபத்துதான்  போராட்டத்தின் இறுதியில் நடந்தது .மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் சிலர் கலந்துகொண்டு வன்முறை நிகழ்த்தினர் .

அடுத்து ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் நிறைவேறியிருக்குமா என்பது கேள்வி .

நிச்சயமாக அவசரச்சட்டம் வந்திருக்காது .

போராட்டம் தீவிரம் அடைந்த உடன் , முதல்வர் பன்னீர்செல்வம் ,பிரதமர் மோடியை சந்திக்க முடிவுசெய்கிறார் . பிரதமர் மோடி அவர்கள் , வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால் , மத்திய அரசால் அவசரச் சட்டம் கொண்டுவர இயலாது என்று தெரிவிக்கிறார் . அதே சமயத்தில் தமிழக அரசு அவசரச்சட்டம் கொண்டுவந்தால் , மத்தியஅரசு அதை ஆதரிக்கும் என்று கூறுகிறார் . ஒருநாள் தங்கியிருந்து அவசரச்சட்டத்திற்கு ஒப்புதல் பெற்றுச் செல்லும்படி கூறுகிறார் . OPS அவர்களும் உடன்படுகிறார் . வேலைகள் எல்லாம் மின்னல் வேகத்தில் நடைபெறுகின்றன .
.
தமிழக அரசால் இயற்றப்பட்ட இந்த அவசரச் சட்டம்  மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம், அதை  சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. தொடர்ந்து சுற்றுச்சூழல், கலாசாரத்துறை அமைச்சகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அமைச்சர்களும் உடனடியாக தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து உள்துறை அமைச்சகத்துக்கு திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.

இதற்காக அந்த மத்திய அமைச்சர்களை தலைநகரிலேயே தங்கியிருக்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. அதனாலேயே உள்துறை, கலாசாரம், சட்டம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அனுமதி விரைவாக கிடைத்துள்ளது. இவை அனைத்தும் ஒரே நாளிலேயே நடந்து முடிந்துவிட்டன.

இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் சார்பில் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. அதன்பின், அவசரச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, குடியரசுத் தலைவருக்கு பதிலாக மத்திய உள்துறை அமைச்சகமே அவசரச் சட்டம் குறித்து முடிவு எடுக்கலாம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அவசரச் சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து சென்னை தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவசரச்சட்டம் சட்டசபையின் ஒப்புதல் பெற்று ஆளுநரின் கையெழுத்திட்டு சட்டமாக்கப்பட்டது .

ஜெயலலிதா இருந்தால் என்ன செய்திருப்பார் ?

நிச்சயமாக பிரதமர் மோடியை சந்தித்திருக்கமாட்டார் . 2015 ஆம் ஆண்டு டிசம்பர் பெருவெள்ளத்தின்போது , மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறாத ஒரு முதல்வர் , ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்தித்து இருப்பார் என்றுஎண்ணுவது பேதைமை .
மிஞ்சி மிஞ்சிப் போனால் , நாடாளுமன்ற MP -க்களை விட்டு மோடியை சந்திக்கச் சொல்லியிருப்பார் .வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் என்னால் எதுவும் செய்ய இயலாது என்று மோடியும் கையை விரித்திருப்பார் . அத்தோடு பிரச்சினையை முடித்திருப்பார் . மேற்கொண்டு எந்த ஆலோசனையும் வழங்கியிருக்கமாட்டார் .

OPS அவர்களுக்குக் கிடைத்த வெற்றி அவர் பிரச்சினையை நேரடியாக அணுகியதுதான் .
ஆந்திர முதல்வரை நேரடியாக சந்தித்து கிருஷ்ணாநதி நீரைப் பெறுவதற்கு வழிவகை செய்தார் . ஆனால் ஜெயலலிதா அவர்கள் எதிலும் கௌரவம் பார்க்கக் கூடியவர் . சந்திரபாபு நாயுடுவைப் பார்த்துப் பேச அவருடைய EGO இடம் கொடுக்காது .

" காரியம் பெரிதா ? வீரியம் பெரிதா ? என்றால் காரியமே பெரிது என்று நினைப்பவர் OPS .
வார்தா புயலின்போது தான் ஒரு முதல்வர் என்பதையும் மறந்து , வரிந்துகட்டிக்கொண்டு வேலைசெய்தார் .

ஆனால் ஜெயலலிதா எதிலும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பவர் . அது எப்போதும் சரிவராது .பணிந்துபோக வேண்டிய இடத்தில் பணிந்துதான் போகவேண்டும் . துணிந்து நிற்கவேண்டிய இடத்தில் துணிந்து நிற்கவேண்டும் .

" அஞ்சுவது  அஞ்சாமை பேதைமை " என்பது ஐயனின் வாக்கு .

ஆகவே ஜெயலலிதா இருந்திருந்தால் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்காமல் போயிருக்கும் .

ஜெயலலிதாவுக்கு இந்திமொழி சரளமாகப் பேச வரும் . எனவே அவர் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து ஆவன செய்திருப்பார் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது .

அப்படியென்றால் இந்திமொழி தெரியாத முதல்வர்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்காதா ?
ஆங்கிலம் பேசத் தெரிந்தாலே போதுமானது . காரியங்கள் சாதிப்பதற்கு மொழி ஒரு தடையல்ல . முயற்சி இருந்தாலே போதுமானது . அதைத்தான் OPS செய்திருக்கார் .

வாராதுபோல் வந்த மாமணியாக , காட்சிக்கு  எளியனாக OPS அவர்கள் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல !

அவரிடம் குணங்கள் இருப்பதுபோலவே , சில குற்றங்களும் இருக்கலாம் . ஆனால்

" மிகைநாடி மிக்க கொளல் " என்ற வள்ளுவனின் கருத்துக்கு ஏற்ப அவரிடம் மிகுதியாக இருக்கின்ற நல்ல பண்புகளையே நாம் கருத்தில் கொள்ளவேண்டும் .

பொதுமக்களை அலங்கா நல்லூரில் நேரில் சந்தித்துப் பேசுகிறார்; மேடையில் அனைவருடனும் அமர்கின்றார் ; எதிர்கடசி தலைவர் இசுடாலினுடன் சந்தித்துப் பேசுகிறார் . குடியரசு தினக் கொண்டாட்டங்களில் இசுடாலினும் , தி .மு .க . வினரும் கலந்து கொள்கின்றனர் .  இதெல்லாம் ஜெயலலிதா ஆடசியில் கனவிலும் நடக்காத காரியங்கள் .

மொத்தத்தில் இவரை ஆளவிட்டால் , ஒரு பொற்கால ஆடசிக்கு வித்திடுவார் என்று நம்பலாம் .


இறுதியாக போராட்டத்தின் கடைசியில் நடந்த வன்முறைக்கு வருவோம் . அதில் ஒன்றை நிச்சயமாகச் சொல்லலாம் . அது மாணவர்கள் நடத்திய வன்முறை அல்ல . OPS அவர்களுக்குக் கெட்டபெயரை உருவாக்கவேண்டும் என்பதற்காக சில சமூக விரோதிகள் செய்த செயல் அது . அதற்குக் காவல்துறையும் துணைபோனதுதான் கொடூரம் . அது கடசிக்குள் நடந்த உள்குத்தா அல்லது வெளிக்குத்தா என்பது இனிமேல் தெரிய வரலாம் அல்லது தெரியாமலே கூடப் போகலாம் . எப்படி இருந்தாலும் இனி OPS அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலம் இது .

ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் இந்த வன்முறைக்குத் தேவையே இல்லாமல் போயிருக்கும் ; ஏனெனில் வன்முறையாளர்களின் நோக்கமே OPS அவர்களுக்குக் கெட்ட பெயரை உண்டாக்கவேண்டும் என்பதுதான் .    

" கேட்டினும் உண்டோர் உறுதி " என்பதுபோல இந்தத் தீமையிலும் ஒரு நன்மை விளைந்திருக்கிறது . தன் எதிரிகள் யார் என்பதை OPS அவர்கள் தெரிந்துகொண்டு விட்டார் .

இதுவரையில் மக்களால் வாழ்ந்த ஒரு முதல்வரின் சகாப்தம் முடிந்துவிட்டது ; இனிமேல் மக்களுக்காக வாழப்போகும் ஒரு முதல்வரின் சகாப்தம் தொடங்கிவிட்டது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by T.N.Balasubramanian on Thu Jan 26, 2017 7:13 pm

@M.Jagadeesan wrote:
@T.N.Balasubramanian wrote:ஜெயலலிதா அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க சில கண்டிஷன்களுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதி மன்றம் அனுமதி கொடுத்தது .ஜல்லிக்கட்டு போன ஆண்டு நடந்தது.
அதை முன்னுதாரணமாக காட்டி இந்த ஆண்டும் வாங்கி இருப்பார் உயிருடன் இருந்திருந்தால். 
அவருடைய சாமர்த்தியம் எவருக்கும் இல்லை .வரவும் வராது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232328

ஜல்லிக்கட்டு சென்ற ஆண்டு நடக்கவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1232436
7 ஜன., 2016 அன்று வெளியிடப்பட்டது
Indian Government approved Jallikattu 2016 in TamilNadu | Breaking NEWS .. TO watch More Videos Like this Log on to http://www.RamkiTV.com 

எந்தன் செய்தியின் ஆதாரம் மேலே உள்ளது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by M.Jagadeesan on Thu Jan 26, 2017 10:32 pm

கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு இந்த ஆண்டாவது நடத்த மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்குமா என்ற ஏக்கம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் இருந்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு ஜனவரி 7-ம் தேதி அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளும், மாடுகளுக்கான ஆயத்த பயிற்சிகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

ஆனால், ஜனவரி 12-ம் தேதி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடுத்த வழக்கால் உச்ச நீதிமன்றம் 'ஜல்லிக்கட்டுக்கு தடை' என்ற தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பானது தமிழக மக்களிடையேயும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆதாரம் : விகடன்
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by T.N.Balasubramanian on Fri Jan 27, 2017 10:42 am

முன்னுக்கு பின்னான ஆதாரங்களை ஊடகங்கள் கொடுக்கின்றன.
அதுதான் வாழ்க்கை என எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.
நன்றி Jagadeesan 
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by Hari Prasath on Sat Jan 28, 2017 4:33 pm

" காரியம் பெரிதா ? வீரியம் பெரிதா ? என்றால் காரியமே பெரிது என்று நினைப்பவர் OPS .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by T.N.Balasubramanian on Sat Jan 28, 2017 5:33 pm

" காரியம் பெரிதா ? வீரியம் பெரிதா ? என்றால் காரியமே பெரிது என்று நினைப்பவர் OPS .

சரியான முறையில் ஊக்குவித்தால், 
மற்றவர்கள் தலையீடு இல்லையெனில் ,
OPS திறமையாகவே செயல்படுவார், என்பதே எந்தன் கணிப்பு. 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by சசி on Sat Jan 28, 2017 8:04 pm

நல்ல விவாதம் ஐயா.
அம்மையார் இருந்திருந்தால் போராட்டம்
பண்ணவர்களை பொடாவில் வைத்திடுவார்.
ஆனாலும் எழுச்சியை சாதக
மாக மாற்றி இருப்பார்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by krishnaamma on Sat Jan 28, 2017 11:53 pm

@T.N.Balasubramanian wrote:
" காரியம் பெரிதா ? வீரியம் பெரிதா ? என்றால் காரியமே பெரிது என்று நினைப்பவர் OPS .

சரியான முறையில் ஊக்குவித்தால், 
மற்றவர்கள் தலையீடு இல்லையெனில் ,
OPS திறமையாகவே செயல்படுவார், என்பதே எந்தன் கணிப்பு. 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232694

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by M.Jagadeesan on Sun Jan 29, 2017 7:59 am

OPS திறமையாகவே செயல்படுகிறார் . தினமும் கோட்டைக்கு வருகிறார் .நேற்று விடுமுறை நாளிலும் கோட்டைக்கு வந்து அரசுப்பணி ஆற்றினார் .

காட்சிக்கு எளியனாக இருக்கிறார் ; மென்மையாகப் பேசுகிறார் ; நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்குக் கோபம் கொள்ளாமல் பதிலளிக்கிறார் .

மொத்தத்தில் இவர் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது .

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு சமாளித்திருப்பார் ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum