ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
MGR நடிச்ச பாசமலர்
 மூர்த்தி

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 M.Jagadeesan

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 பழ.முத்துராமலிங்கம்

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 ayyasamy ram

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 ayyasamy ram

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

சமந்தா வரவேற்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 T.N.Balasubramanian

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 ayyasamy ram

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 ayyasamy ram

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 பழ.முத்துராமலிங்கம்

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 பழ.முத்துராமலிங்கம்

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 M.Jagadeesan

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 T.N.Balasubramanian

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

View previous topic View next topic Go down

best தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by krishnaamma on Thu Jan 26, 2017 5:29 pm

தை அமாவாசை அற்புதம் !திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர். இவர் அன்னை அபிராமி மீது மிகுந்தபக்தி கொண்டு எந்நேரமும் அன்னையைத் தியானித்துவந்தார்.ஆனால், ஊராரில் பலர் இவர் ஒரு பித்தர் என்று நினைத்து ஏளனம் செய்வர். ஆனால் அதைப்பற்றி எவ்வித கோபமும் கொள்ளாமல் தம்முடைய கடமை அபிராமியை போற்றி வணக்குவதுதான் என்று கொள்கையை கொண்டிருந்தார்.

அவர் அன்னை அபிராமி மீதும் அமிர்தகடேஸ்வரர்மீதும் பாடல்களை இயற்றி சன்னதியில் பாடி வரலானார்.ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மகராஜா பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக் கடையூர் ஆலயம் வந்தார். கோயிலில் இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர்.

அபிராமி சன்னிதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில்ஆழ்ந்திருந்தார், அபிராமி பட்டர்.மன்னர் அவரின் நிலையை அறிய அவரிடம், ‘இன்று என்ன திதி?’ என கேட்டார்... உலக சிந்தனை சிறிதும் இல்லாத அபிராமி பட்டர் தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய ‘பவுர்ணமி’ என்று பதிலளித்தார்.

ஆனால், அன்றோ அமாவாசை! கோபமுற்ற மன்னன், இன்று பவுர்ணமி நிலவை காட்ட முடியுமா என்று கேட்க...அதற்கு பட்டர் முடியும் என்றார்.இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன், ‘இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால்உமக்கு சிரச்சேதம்தான்’என்று கூறி சென்றுவிட்டார்.சூரியன் மறைந்தது… அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை.

உடனே அபிராமி பட்டர் கோவிலுக்குள் ஒரு குழி வெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்தில் இருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியை கட்டி தொங்கவிட்டு அதன்மேல் ஏறி நின்று அபிராமி அன்னையை வேண்டி துதித்தார்.‘இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்’ என்று சபதம் செய்தார்.

பின்பு, உதிக்கின்ற செங்கதிர் எனத்தொடங்கும் அபிராமி அந்தாதி பாடத்தொடங்கினார். ஒவ்வொரு பாடலும் முடியும்போதும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்து கொண்டே வந்தார். அப்போது 79–வது பாடலாக விழிக்கே அருளுண்டு எனத்தொடங்கும் பாடலை பாடி முடித்தார்.

உடனே அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த அன்னை அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச... அது பல கோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது.அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது.

‘‘தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடுக’’ என அபிராமி அன்னை பட்டரிடம் கூற, பட்டரும் ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.மன்னரும், மக்களும் பட்டரை பணிந்தனர். பட்டருக்கு மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.

ஒவ்வொரு தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும்.. அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள்…அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

Last edited by krishnaamma on Sun Jan 29, 2017 10:19 am; edited 1 time in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by krishnaamma on Thu Jan 26, 2017 5:29 pm

1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள்.

2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள்.

3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள்.

4. உயர்பதவிகளை அடையலாம்.

5. மனக்கவலை தீரும்.

6. மந்திர சித்தி பெறலாம்.

7. மலை யென வருந்துன்பம் பனியென நீங்கும்.

8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்.

9. அனைத்தும் கிடைக்கும்.

10. மோட்ச சாதனம் பெறலாம்.

11.இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.

12. தியானத்தில் நிலை பெறுவார்கள்.

13. வைராக்கிய நிலை அடைவார்கள்.

14. தலைமை பெறுவார்கள்.

15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள்.

16.முக்காலமும் உணரும் திறன் உண்டாகும்.

17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம்.

18. மரணபயம் நீங்கும்.

19. பேரின்ப நிலையை அடையலாம்.

20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.

21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும்.

22. இனிப்பிறவா நெறி அடையலாம்.

23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும்.

24. நோய்கள் விலகும்.

25. நினைத்த காரியம் நிறைவேறும்.Last edited by krishnaamma on Thu Jan 26, 2017 5:31 pm; edited 1 time in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by krishnaamma on Thu Jan 26, 2017 5:30 pm

26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.

27. மனநோய் அகலும்.

28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம்.

29. எல்லா சித்திகளும் அடையலாம்.

30. விபத்து ஏற்படாமல் இருக்கும்.

31. மறுமையில் இன்பம் உண்டாகும்.

32. துர் மரணம் வராமலிருக்கும்.

33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும்.

34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்.

35. திருமணம் நிறைவேறும்.

36. பழைய வினைகள் வலிமை அழியும்.

37. நவமணிகளைப் பெறுவார்கள்.

38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள்.

39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம்.

40. பூர்வ புண்ணியம் பலன்தரும்.

41. நல்லடியார் நட்புப்பெறும்.

42. உலகினை வசப்படுத்தும்.

43. தீமைகள் ஒழியும்.

44. பிரிவுணர்ச்சி அகலும்.

45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.

46. நல்நடத்தையோடு வாழ்வார்கள்.

47. யோகநிலை அடைவார்கள்.

48. உடல்பற்று நீங்கும்.

49. மரணத்துன்பம் இல்லா திருக்கும்.

50. அம்பிகையை நேரில் காண முடியும்.

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by krishnaamma on Thu Jan 26, 2017 5:31 pm

51. மோகம் நீங்கும்.

52. பெருஞ் செல்வம் அடைவார்கள்.

53. பொய்யுணர்வு நீங்கும்.

54. கடன்தீரும்.

55. மோன நிலை கிடைக்கும்.

56. அனைவரையும் வசப்படுத்தலாம்.

57. வறுமை ஒழியும்.

58. மன அமைதி பெறலாம்.

59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள்.

60. மெய்யுணர்வு பெறலாம்.

61. மாயையை வெல்லலாம்.

62. எத்தகைய அச்சமும் வெல்லலாம்.

63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம்.

64. பக்திபெருகும்.

65. ஆண்மகப்பேறு அடையலாம்.

66. கவிஞராகலாம்.

67. பகை வர்கள் அழிவார்கள்.

68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும்.

69. சகல சவுபாக் கியங்களும் அடைவார்கள்.

70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம்.

71. மனக்குறைகள் தீரும்.

72. பிறவிப்பிணி தீரும்.

73. குழந்தைப்பேறு உண்டாகும்.

74. தொழிலில் மேன்மை அடையலாம்.

75. விதியை வெல்வார்கள்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by krishnaamma on Thu Jan 26, 2017 5:32 pm

76.தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள்.

77. பகை அச்சம் நீங்கும்.

78. சகல செல்வங்களை யும் அடைவார்கள்.

79. அபிராமி அருள்பெறுவார்கள்.

80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும்.

81. நன்னடத்தை உண்டாகும்.

82. மன ஒருமைப்பாடு அடையலாம்.

83. ஏவலர் பலர் உண்டாகும்.

84. சங்கடங்கள் தீரும்.

85. துன்பங்கள் நீங்கும்.

86. ஆயுத பயம் நீங்கும்.

87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள்.

88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம்.

89. யோக சித்தி பெறலாம்.

90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும்.

91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள்.

92. மனப்பக்குவம் உண்டாகும்.

93. உள்ளத்தில் ஒளியுண்டாகும்.

94. மனநிலை தூய்மையாக இருக்கும்.

95. மன உறுதி பெறும்.

96. எங்கு பெருமை பெறலாம்.

97. புகழும் அறமும் வளரும்.

98. வஞ்சகர் செயல்களி லிருந்து பாதுகாப்பு பெறலாம்.

99. அருள் உணர்வு வளரும்.

100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி : whatsup

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by சிவனாசான் on Thu Jan 26, 2017 8:32 pm

தை அமாவாசை சிறப்பு மிக்கது தான்>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

best திருக்கடையூர் திருவிளையாடல்... அபிராமியின் அற்புதம்!

Post by ayyasamy ram on Sat Jan 28, 2017 10:52 am

-
சோழவளநாட்டின் தஞ்சை நகரிலே உள்ள சிவ தலங்களில்
ஒன்றாக திகழுவது திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத
அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.

இந்த ஆலயத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வழிபாடு
நடத்தி வந்தவர் அபிராமி பட்டர் என்னும் சுப்பிரமணியன்.

இவர் சிறு வயது முதலே அன்னை அபிராமியிடம், அளவற்ற
அன்பும் பக்தியும் கொண்டிருந்தார்.

அபிராமியின் அற்புதம்

அவர் அன்னையின் மீது கொண்ட அன்பின் விளைவாக பல
துதிகளைத் தாமே இயற்றிப் பாடியும் வந்தார். ஒளி வடிவில்
அன்னையைத் தரிசித்து பேரின்பம் கண்டார்.

ஆனால், இவரின் தெய்வீக நிலையை மற்றவர்களால் புரிந்து
கொள்ள முடியவில்லை. இவரை பித்தன் என்று வசைபாடினர்.
ஆனால் அபிராமி பட்டரோ அதைக் பொருட்படுத்தாமல்,
அபிராமியைத் துதிப்பதும், அன்னையின் பேரில் துதிகள் இயற்றிப்
பாடுவதுமாய் இருந்தார்.

இந்நிலையில், ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையைத்
தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்த சரபோஜி மன்னர்,
திருக்கடையூருக்குத் தரிசனம் செய்ய வந்தார்.

மன்னனைக் கண்டதும் மக்கள் வணங்கி நின்று வரவேற்றனர்.
ஆனால், மன்னர் வந்திருப்பதை அறியாத பட்டர், அவரை
வணங்காமல், அன்னை அம்பிகையின் சிந்தனையில் கண்மூடிய
யோக நிலையில் ஆழ்ந்து இருந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள், " மன்னா! தங்களுக்கு தர வேண்டிய
மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பட்டர். எ
ந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன்" என்று
பட்டரைப் பற்றி மன்னரிடம் புகார்களை அடுக்கினர்.

ஒரு நிமிடம் யோசித்த சரபோஜி மன்னர், உண்மை எதுவென்று
அறிந்து கொள்ள எண்ணி, பட்டரை அழைத்து, 'இன்று என்ன திதி?'
என்று கேட்டார்.

மெய்மறந்த நிலையில் அன்னையின் யோக நிலையிலிருந்து
மீளாத பட்டர், சற்றும் தாமதிக்காமல், "பௌர்ணமி” என்றார்.

'அப்படியென்றால் இன்று இரவு முழு நிலவு வருமா?' என்று மன்னர்
திரும்ப கேட்க, "நிச்சயம் வருமே" என்றார் கண்மூடிய மோன
அபிராமிநிலையிலேயே பட்டர்.

(முழுநிலவாய் அன்னை பக்தனின் உள்ளத்தில் பிரகாசிக்கும்
போது, அடியவனுக்கு எல்லா நாளுமே முழுநிலவு நாள்தானே!
இதனால் சோதிப்பதற்காக, மன்னர் கேட்ட அன்றைய திதி பற்றிய
கேள்விக்கு, பௌர்ணமி என்று திதியை மாற்றிக் கூறி விடுகிறார்
பட்டர் ).
-
---------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34305
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by ayyasamy ram on Sat Jan 28, 2017 10:53 am

-

-
இதனால் சரபோஜி மன்னர் கடும்கோபம்கொண்டு, இன்று இரவு
முழுநிலவு வராவிட்டால் உனக்கு மரண தண்டனை.
இது அரசகட்டளை என்று கூறி மன்னர் சென்று விடுகிறார்.

அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம்
கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நடந்ததை உணர்ந்து மிகவும்
வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன்
என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே
நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்திய அவர்.

"இந்த தவறிலிருந்து அன்னையே தன்னைக் காத்தருளவேண்டும்"
என்று அவர் வேண்டிக்கொண்டார்.

பின்னர் அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி,
அதில் விறகை அடுக்கி அனல் மூட்டினார். அதற்கு மேல் ஒரு
விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி
அமர்ந்து கொண்டார். 'அன்னை எனக்குக் காட்சி கொடுத்து,
அற்புதத்தை நிகழ்த்தி இந்தப் பழியை நீக்காவிட்டால், தீயில்
விழுந்து உயிரை துறப்பேன்' என்று சபதமேற்று,

"உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பித்து, நூறு பாடல்களை
கொண்ட அபிராமி அந்தாதியை பாடினார். ஒவ்வொரு பாடல்
முடிந்ததும் ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டே வந்தார்.
பொழுது சாய்ந்தது; பட்டரின் நம்பிக்கையில் மாற்றமில்லை!
அமாவாசை வானம் இருள தொடங்கியது.
-
-------------------------------------
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34305
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by ayyasamy ram on Sat Jan 28, 2017 10:54 am

-

அபிராமியின் அற்புதம்...

-
ஆனால், அன்னையின் அற்புதத்தால் நிலவு நிச்சயம் வரும் என்ற
நம்பிக்கையில், தொடர்ந்து கொண்டிருந்தார் பட்டர். 78 பாடல்கள்
பாடி முடிந்தது 78 கயிறும் அறுபட்டு விட்டது மிகுதியாக இருந்த
கயிற்றில் உறியில் இருந்த வண்ணம் பட்டர் நம்பிக்கை இழக்காது
பாடிக்கொண்டே இருந்தார்.

பட்டர் 79 - வது பாடலாக அம்மா! ”விழிக்கே அருளுண்டு அபிராம
வல்லிக்கு” என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி
அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள். அபிராமி தனது தாடங்கம்
(தோடு) ஒன்றை கழற்றி வானில் வீசிட, அது பல கோடி நிலவின்
ஒளியாக ஜொலித்தது.

அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது.

அபிராமி, தன் பக்தன் பட்டரிடம், "நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய
சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய
அந்தாதியை தொடர்ந்து பாடு" என்றாள். பட்டரும்
‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ என தொடர்ந்து
100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.

அபிராமிப்பட்டரின் இந்த உறுதியான பக்தியை கண்டு சரபோஜி
மன்னரும், மக்களும் அகமகிழ்ந்தனர். மன்னரிடம் பட்டரை பித்தன்
என்று கூறியவர்கள் எல்லாம் பட்டரிடம் மன்னிப்பு வேண்டினர்.
மேலும் பட்டருக்கு மன்னன் நிலங்களுடன் பல மானியங்களையும்
அளித்தான்.

இந்நாளின் நினைவாக, வருடந்தோறும் தை அமாவாசை அன்று
திருக்கடையூரில் அபிராமி பட்டருக்கு அம்பிகை அருள்புரிந்த நிகழ்ச்சி
விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
-
--------------------------------------------
-விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34305
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by சரவணன் on Sat Jan 28, 2017 9:36 pm

அபிராமி தாயே!
:வணக்கம்:

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by krishnaamma on Sat Jan 28, 2017 10:47 pm

இதே கட்டுரை நான் ஏற்கனவே போட்டுள்ளேன் ராம் அண்ணா, எனவே, இதை அதனுடன் இணைக்கிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by சரவணன் on Mon Jan 30, 2017 12:38 am

நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செல்வேன்.
தற்போது இந்த கோவில் ஒரு வணிக தலமாக மாறிவிட்டது.

அமைதி இல்லை......பக்தர்க்கு மரியாதையை இல்லை. அறுபதாம் திருமணம் செய்பவருக்கு மட்டுமே இடம் உண்டு..................எனியும் அபிராமி தாயை கண்டாலே ஒரு மன அமைதி கிடைக்கும்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by krishnaamma on Mon Jan 30, 2017 12:43 am

@சரவணன் wrote:நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செல்வேன்.
தற்போது இந்த கோவில் ஒரு வணிக தலமாக மாறிவிட்டது.

அமைதி இல்லை......பக்தர்க்கு மரியாதையை இல்லை. அறுபதாம் திருமணம் செய்பவருக்கு மட்டுமே இடம் உண்டு..................எனியும் அபிராமி தாயை கண்டாலே ஒரு மன அமைதி கிடைக்கும்....
மேற்கோள் செய்த பதிவு: 1232825

வர வர எல்லாக் கோவில்களின் நிலைமையும் அது தான் சரவணன் சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by சரவணன் on Mon Jan 30, 2017 12:45 am

உண்மை தான் அம்மா! ஆனால் எங்கள் ஊர் தில்லை சரணாகத ரட்சகர் (சார்ந்தாரை கார்த்த சாமி) கோவிலில் நல்ல அமைதி கிடைக்கும், ஏனெனில் ஒரு பக்தர்களும் வருவதில்லை....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by krishnaamma on Mon Jan 30, 2017 12:46 am

@சரவணன் wrote:உண்மை தான் அம்மா! ஆனால் எங்கள் ஊர் தில்லை சரணாகத ரட்சகர் (சார்ந்தாரை கார்த்த சாமி) கோவிலில் நல்ல அமைதி கிடைக்கும், ஏனெனில் ஒரு பக்தர்களும் வருவதில்லை....
மேற்கோள் செய்த பதிவு: 1232837

சூப்பருங்க

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by T.N.Balasubramanian on Mon Jan 30, 2017 10:52 pm

எனக்கோர் சந்தேகம் ......விதண்டாவாதமென நினைக்கவேண்டாம்.  
இப்போது வருகின்ற பௌர்ணமி எல்லாம் அபிராமி பட்டர் பௌர்ணமிகளா ?
அப்பிடி என்றால் காலச்சக்கரத்தில் ஒரு அமாவாசை குறைவோ ?
தெரிந்தவர்கள் விளக்கம் கூறவும். 

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21102
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by krishnaamma on Mon Jan 30, 2017 10:57 pm

@T.N.Balasubramanian wrote:எனக்கோர் சந்தேகம் ......விதண்டாவாதமென நினைக்கவேண்டாம்.  
இப்போது வருகின்ற பௌர்ணமி எல்லாம் அபிராமி பட்டர் பௌர்ணமிகளா ?
அப்பிடி என்றால் காலச்சக்கரத்தில் ஒரு அமாவாசை குறைவோ ?
தெரிந்தவர்கள் விளக்கம் கூறவும். 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232902

இது விதண்டா வாதம் இல்லை ஐயா, உண்மை தான். 25000  அமாவாசைகளுக்கு ஒருமுறை இப்படி வருவதுண்டாம்...அதாவது 3  பவுர்ணமிக்கு தொடர்ந்து வருமாம்..............ஒன்று மஹா கவி காளிதாசர் காலத்தில் மற்றும் ஒன்று அபிராமி பட்டர் காலத்தில் என்று எங்கள் அப்பா கதை சொல்லி இருக்கிறார் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by T.N.Balasubramanian on Tue Jan 31, 2017 9:00 am

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:எனக்கோர் சந்தேகம் ......விதண்டாவாதமென நினைக்கவேண்டாம்.  
இப்போது வருகின்ற பௌர்ணமி எல்லாம் அபிராமி பட்டர் பௌர்ணமிகளா ?
அப்பிடி என்றால் காலச்சக்கரத்தில் ஒரு அமாவாசை குறைவோ ?
தெரிந்தவர்கள் விளக்கம் கூறவும். 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232902

இது விதண்டா வாதம் இல்லை ஐயா, உண்மை தான். 25000  அமாவாசைகளுக்கு ஒருமுறை இப்படி வருவதுண்டாம்...அதாவது 3  பவுர்ணமிக்கு தொடர்ந்து வருமாம்..............ஒன்று மஹா கவி காளிதாசர் காலத்தில் மற்றும்  ஒன்று அபிராமி பட்டர் காலத்தில் என்று எங்கள் அப்பா கதை சொல்லி இருக்கிறார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1232909

திருமதி சுதா சேஷய்யன் கூறுவதை பாருங்கள் !

   ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21102
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by krishnaamma on Tue Jan 31, 2017 10:14 pm

இது சரி அப்போ கவி காளிதாசர் காலத்தில் வந்த நிலவு??????புன்னகை எங்க அப்பா சொன்ன கதை சரிவரும் ஆனால் இந்த அம்மா சொன்ன கதை சரி வராதே ஐயா ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by T.N.Balasubramanian on Wed Feb 01, 2017 7:07 pm

@krishnaamma wrote:இது சரி அப்போ கவி காளிதாசர் காலத்தில் வந்த நிலவு??????புன்னகை எங்க அப்பா சொன்ன கதை சரிவரும் ஆனால் இந்த அம்மா சொன்ன கதை சரி வராதே ஐயா ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1232965

2000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து மூன்று பௌர்ணமிகள்.
300 ஆண்டுகளுக்கு முன் அபிராமி பட்டர் காலத்தில் கடைசியாக நடந்துள்ளது.
அடுத்தது 1700 ஆண்டுகளுக்கு பிறகு.  முடிந்தால் பார்ப்போம். புன்னகை புன்னகை
சுதா அம்மா அவர்கள் காணாமல் போன அமாவாசை பற்றிக்கூறவில்லை.
435 ஆண்டுகளுக்கு முன்காணாமல் போன நாட்களை பற்றி கூறியுள்ளார்.

பழைய பாடல் ஒன்று நினைவுக்கு 
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21102
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by M.Jagadeesan on Wed Feb 01, 2017 8:42 pm

எங்கே ராம் அவர்களைக் காணோம் ? அவர் இல்லாமல் அன்றாட செய்திகளை அறிந்து கொள்ள முடியவில்லை .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4877
மதிப்பீடுகள் : 2343

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by krishnaamma on Wed Feb 01, 2017 11:37 pm

@T.N.Balasubramanian wrote:

பழைய பாடல் ஒன்று நினைவுக்கு 
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by krishnaamma on Wed Feb 01, 2017 11:38 pm

@M.Jagadeesan wrote:எங்கே ராம் அவர்களைக் காணோம் ? அவர் இல்லாமல் அன்றாட செய்திகளை அறிந்து கொள்ள முடியவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1233014

நானும் கவனித்தேன் அண்ணாவை காணவில்லை.............வெளிநாடு போய் உள்ளாரா என்று தெரியவில்லை...........வருகை பதிவேட்டில் நேரம் மாறி வணக்கம் போட்டிருந்தார்..........புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum