ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

View previous topic View next topic Go down

ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Post by ayyasamy ram on Sat Feb 25, 2017 1:32 pm


-
கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன்
என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து
அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும்
நடைபெறுகிறது. இதை சுவையாக வருணிக்கிறான் கம்பன்.

“அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு” –

(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம்
கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).

இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து “கருணையின்
கடல் அனையர்” என்று மதிப்பிடுகிறான். பின்னர் அவன்
மனதில் தோன்றியதை கம்பன் வருணிக்கும் அழகே தனி:-

“சதமன் அஞ்சுறு நிலையர்
தருமன் அஞ்சுறு சரிதர்
மதனன் அஞ்சுறு வடிவர்
மறலி அஞ்சுறு விறலர்”

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Post by ayyasamy ram on Sat Feb 25, 2017 1:34 pm


-
பொருள்:–

இந்திரனும் (சதமன்) அஞ்சும் தோற்றத்தை உடையவர்,
தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,
மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,
யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள்.

என்ன அழகான வருணனை!

அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும்
‘தனக்குவமை இலாதான்’ என்ற அடைமொழியை கம்பன்,
அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை ” தன் பெருங்
குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் –
என்கிறான் கம்பன் .

ராமனையும் லட்சுமணனையும் நேரில் பார்த்த அநுமன்

“வெல்கம் டு கிஷ்கிந்தா” – என்கிறான். அதாவது “கவ்வை
இன்றாக நுங்கள் வரவு” (உங்கள் வரவு துன்பமில்லாத
நல் வரவு ஆகுக) என்கிறான்

இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன்
ராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன்
வினவுகிறான்..

உடனே அனுமன்,

“யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ”
என்று பதில் தருகிறான்.


உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான்.
அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த
மிகப் பெரிய பட்டம் ஆகும்!


இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின்
செல்வன்
வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),
இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த
வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு
இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால்
தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச்
செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)?
அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ
(விடைவலான்)?

இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற
பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

-சுபம்
———————————————–
-லண்டன் சுவாமிநாதன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Post by M.Jagadeesan on Sun Feb 26, 2017 7:57 am

அனுமனுக்குப் பிறகு " சொல்லின் செல்வன் " என்ற பட்டம் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று யாராவது சொல்லுங்களேன் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Post by ayyasamy ram on Sun Feb 26, 2017 8:22 am


சொல்லின் செல்வர்
-
ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961)
--

--
“தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர்
‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்பட்ட பேராசிரியர்
இரா.பி. சேதுப்பிள்ளை.

அவரது சொன்மாரி செந்தமிழ்ச் சொற்கள் நடம்புரிய, எதுகையும்
மோனையும் பண்ணிசைக்க, சுவைதரும் கவிதை மேற்கோளாக,
எடுப்பான நடையில் நின்று நிதானித்துப் பொழியும்”
-
என்று அன்பழகன் குறிப்பிடுகின்றார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Post by ayyasamy ram on Sun Feb 26, 2017 8:29 am

ஈ.வெ.கி.சம்பத் அவர்களையும் சொல்லின் செல்வர்
என்று அழைப்பதுண்டு
-
-------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Post by M.Jagadeesan on Sun Feb 26, 2017 12:22 pm

நன்றி ராம் அவர்களே ! தங்கள் கூறியது முற்றிலும் சரி . ரா .பி . சேதுப்பிள்ளையின் நூல்களை படித்தால் , அவருடைய நடை மற்ற தமிழறிஞர்களின் நடையைவிட வித்தியாசமானது என்று தெரிந்துகொள்ளலாம் .
ஊரும் பேரும் , கடற்கரையிலே , தமிழ் இன்பம் போன்ற நூல்கள் அனைவரும் படிக்கவேண்டிய நூல்களாகும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Post by krishnaamma on Sun Feb 26, 2017 5:56 pm

@ayyasamy ram wrote:


மிக அருமையான படம் ராம் அண்ணா புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Post by krishnaamma on Sun Feb 26, 2017 5:57 pm

விவரங்களுக்கு மிக்க நன்றி அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Post by balakarthik on Mon Feb 27, 2017 7:10 pm

இன்று சொல்லின் செல்வர்கள் இல்லை செல்லில் சொல்பவர்கள் தான் உள்ளனர் ஐயா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Post by ayyasamy ram on Mon Feb 27, 2017 7:29 pm

ஓர் ஊரில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்
சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
அவர் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தபோது,
அவ்வரங்கில் இருந்து ஒவ்வொருவராக எழுந்து,
அந்த அரங்கினை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சுவாமிகள், ""ராமாயணத்தில்
அனுமனை "சொல்லின் செல்வர்' என்று குறிப்பிடுவார்கள்.
இந்த ஊரிலும் "சொல்லின் செல்வர்'கள் பலர் இருப்பதைப்
பார்க்கிறேன்'' என்றார்.

வெளியே சென்று கொண்டிருந்தவர்கள் செல்வதை விடுத்து,
ஆவலுடன் வாரியார் சுவாமிகளை நோக்கித் திரும்பி நின்றனர்.
உடனே வாரியார் சுவாமிகள், ""நான் நல்ல நல்ல பல
விஷயங்களைச் சொல்லின், அதைக் கேட்காமல் செல்பவரைத்தான்
சொல்கிறேன்'' என்றாராம்.
-
-------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Post by M.Jagadeesan on Tue Feb 28, 2017 8:49 am

ஆகா ! ராம் ஐயா அவர்கள் வாரியாரைப் பற்றிக் குறிப்பிட்டது மிகவும் பொருத்தம் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Post by krishnaamma on Wed Mar 01, 2017 11:18 pm

@ayyasamy ram wrote:ஓர் ஊரில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்
சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
அவர் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தபோது,
அவ்வரங்கில் இருந்து ஒவ்வொருவராக எழுந்து,
அந்த அரங்கினை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சுவாமிகள், ""ராமாயணத்தில்
அனுமனை "சொல்லின் செல்வர்' என்று குறிப்பிடுவார்கள்.
இந்த ஊரிலும் "சொல்லின் செல்வர்'கள் பலர் இருப்பதைப்
பார்க்கிறேன்'' என்றார்.

வெளியே சென்று கொண்டிருந்தவர்கள் செல்வதை விடுத்து,
ஆவலுடன் வாரியார் சுவாமிகளை நோக்கித் திரும்பி நின்றனர்.
உடனே வாரியார் சுவாமிகள், ""நான் நல்ல நல்ல பல
விஷயங்களைச் சொல்லின், அதைக் கேட்காமல் செல்பவரைத்தான்
சொல்கிறேன்'
' என்றாராம்.
-
-------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1234978

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகைஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum