ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 ayyasamy ram

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மகளிர் தினம் பெண்களுக்கு மட்டுமல்ல, திருநங்கைகளுக்கும் உரித்தானதே ஒப்புக் கொள்கிறீர்களா?

View previous topic View next topic Go down

மகளிர் தினம் பெண்களுக்கு மட்டுமல்ல, திருநங்கைகளுக்கும் உரித்தானதே ஒப்புக் கொள்கிறீர்களா?

Post by ayyasamy ram on Fri Mar 03, 2017 5:02 am


-

மார்ச் 8 சர்வ தேச மகளிர் தினம்.

மகளிர் தினத்துக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்,
அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள், லயன்ஸ் கிளப், ரோட்டரி
கிளப் அமைப்புகள், குடியிருப்பு வளாகங்களின் மகளிர்
அமைப்புகள், மகளிர் சங்கங்கள் எங்கெங்கு காணினும் மகளிர்
தினக் கொண்டாட்டங்களுக்கான முஸ்தீபுகள் பெண்களின் ஏ
கோபித்த ஆதரவுடன் வெகு விமரிசையாக நடந்து
கொண்டிருக்கின்றன.

முழுக்க முழுக்க கேளிக்கை நிகழ்ச்சிகளை மட்டுமே சிலர்
திட்டமிடலாம், சிலர் கொஞ்சம் தீவிரமாக யோசித்து உலக அளவில்
வெற்றி பெற்ற பெண்களின் போராட்ட வாழ்வையும், அவர்களது
வெற்றி வரலாறுகளையும் நினைவு கூரும் விதமாக விழா நடத்த
திட்டமிடலாம்.

சிலர் தங்களுக்குப் பிடித்த பெண் ஆளுமைகளை வரவழைத்து
அவர்களது தலைமையில் சர்வ தேச மகளிர் தினத்தைக்
கொண்டாடத் திட்டமிடலாம்.

எப்படியாயினும் இந்த மகளிர் நாள் என்பது எல்லாப்
பெண்களுக்குமானது என்பதை அனைத்துப் பெண்களும் உணர்ந்தே
இருக்கிறார்கள் என்பது வரை சந்தோசமே.
ஏனெனில் ஐ.நா வரையறையின் படி மார்ச் 8 உழைக்கும்
மகளிருக்கான நாள்!

இந்த நாட்டில் உழைக்காத மகளிர் என எவருமில்லை.
இல்லத்தரசியானாலும், உத்யோகத்தில் இருக்கும் பெண் ஆனாலும்
அனைவருமே இந்த சமூக அமைப்பில் அவரவர் குடும்பத்துக்கான
பங்களிப்பை எந்த வித பாரபட்சமும் இன்றி வாரி வழங்கிக்
கொண்டு தான் இருக்கிறார்கள்.

எல்லாம் சரியே, ஆனால் இந்த உலகில் ஆண்கள், பெண்கள் எனும்
இரு பாலினம் மட்டுமே இல்லை. திருநங்கைகள், திருநம்பிகள் எனும்
மூன்றாம் பாலினமும் உண்டு. அவர்களைப் பற்றிய நமது பார்வைகள்
என்ன?

குறிப்பாக ஆணாக அவதரித்து பெண்மைக்காக அடையாளங்களுடனும்,
உணர்வுகளுடனும் வாழும் திருநங்கைகளைப் பற்றிய நமது பார்வை
என்ன? முழுக்க, முழுக்க தங்களைப் பெண்களாகவே பாவித்துக்
கொள்ளும் அந்த திருநங்கை சமூகம் இந்த மகளிர் தினக் கொண்டாட்டங்கள்
பற்றி என்ன நினைக்கிறது? என்பதும் கவனிக்கத் தக்க விசயமே!
-
------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: மகளிர் தினம் பெண்களுக்கு மட்டுமல்ல, திருநங்கைகளுக்கும் உரித்தானதே ஒப்புக் கொள்கிறீர்களா?

Post by ayyasamy ram on Fri Mar 03, 2017 5:03 am


பெண் தன்மையுடன் வாழ்வதற்கான அவர்களது நீண்ட நெடிய
போராட்டங்கள், மகளிர் தினம் அவர்களுக்கும் சொந்தமானது தானே
என்ற கேள்வியை ஓசையுடன் எழுப்பி நிதானிக்கிறது.

இதோ அதை அவர்கள் சார்பாக பூ விற்கும் வர்ணம், சமூகப் போராளி
சங்கரி, உலகம் அறிந்த பரதக் கலைஞர் நர்த்தகி நட்ராஜ் எனும் மூன்று
திருநங்கைகளின் கருத்துக்கள் மூலமாகத் தெரிந்து கொள்வோம்.

சுட்டெரிக்கும் வெயில் ஆரம்பித்து விட்டது. உச்சி முதல் உள்ளங்கால்
வரை சூடு பரவி தலை வழியே நீராவி வெளியேறி தலைக்கு மேல்
அலையடிக்கிறதோ எனும்படியான தகிக்கும் வெக்கை நாள்.
சாலைகளில் விரையும் வாகனங்கள் புழுதி கிளப்பிக் கொண்டு
மறைந்தன. அத்தனை வெய்யிலிலும் சென்னை, விருகம்பாக்கத்தில்
ஒரு சந்தில் இருந்த அந்த சின்னஞ் சிறு பூக்கடையோரம் பெண்கள்
கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.

கூட்டத்தை நகர்த்தி விட்டு உள்ளே எட்டிப் பார்த்தால் ‘பன்’
கொண்டை போட்டு அதில் வட்டமாகப் பூச்சுற்றிய ஒரு நடுத்தர வயதுப்
பெண்மணி இருந்தார். தோற்றத்தில் ஆண்மை கலந்த பெண்மை.
குரல் இன்னும் அழுத்தமாக நான் ஆணாகப் பிறந்த பெண் என்றது.

அத்தனை வெயிலிலும் பளிச்சிடும் அலங்காரத்துடன் இருந்த வர்ணம்
சாலையில் செல்வோரை எல்லாம் பாரபட்சமின்றி தன்னிடம் பூ வாங்கிச்
செல்லும் படி அன்போடு அழைத்துக் கொண்டிருந்தார்.

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்கள் திருநங்கைகள் எனில்
அவர்களுக்கும் தானே உண்டு மகளிர் தினக் கொண்டாட்ட உரிமைகள்.

அதைக் குறித்து வர்ணத்திடம் கேட்ட போது;
-
----------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: மகளிர் தினம் பெண்களுக்கு மட்டுமல்ல, திருநங்கைகளுக்கும் உரித்தானதே ஒப்புக் கொள்கிறீர்களா?

Post by ayyasamy ram on Fri Mar 03, 2017 5:04 am


-

”முதலில் பெண்களே எங்களை அசூயையாகப் பார்க்கும் நிலை
மாறட்டும். அதற்கு அப்புறம் தான் எங்களுக்கு மகளிர் தினமெல்லாம்...”
என்றார்.

”பிறப்பில் ஆணாக இருந்தாலும், நான் எனது 10 வயதில் பெண்ணாக
உணரத் தொடங்கியதும், முதலில் என் அம்மாவிடம் தான் அதைப்
பற்றிச் சொன்னேன். அம்மா, என்னை அரவணைக்கவில்லை, மாறாக
பயந்து போனார்.

இதைப் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாதே. என்று என்னை
அடக்கினார். ஒரு கட்டத்தில் எனது பெண் உணர்வுகளை மறைக்க
இயலாத நிலையில் சொந்தக் குடும்பத்தினரால் வீட்டை விட்டு
வெளியேற்றப்பட்டேன்.

அம்மாவிடம் எனக்கு கோபம் இருந்தாலும் எனது வருத்தம் எல்லாம்
இந்த சமூக அமைப்பின் மீது தான் அதிகம் இருக்கிறது. ஏனெனில்
இன்றைக்கும் அதிகம் படித்து, பொருளாதார பலத்துடன் இருக்கிற
திருநங்கைகளில் சிலர் மட்டுமே சமூக அங்கீகாரம் பெற்று சுய
கெளரவத்துடன் இங்கு வாழ முடிகிறது.

என்னைப் போன்ற சாமானிய திருநங்கைகள் நிலை மிகவும் மோசம்.
நாங்கள் தினமும் யாருக்காவது பயந்து கொண்டே தான் வாழ்கிறோம்.”

”அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, எங்களுன் சேர்ந்து
அமர்ந்து பயணிக்க யாருக்கும் விருப்பமிருப்பதில்லை. மக்கள்
இப்போதும் திருநங்கைகளைக் கண்டால் ஏதோ நரகலைப் பார்த்த
மாதிரி முகம் சுளித்து விலகிப் போகிறார்கள்.

நாங்களும் பெண்கள் தான் என்பதை எங்களுக்குள் நாங்களே
உரக்கச் சொல்லிக் கொள்கிறோமே தவிர பெண்கள் எப்போதும்
அவர்களில் ஒருவராக எங்களை ஏற்பதே இல்லை.”

இந்த பாரபட்சம் விருகம்பாக்கம் குறுக்குச் சந்தில் பூ விற்கும்
வர்ணத்துக்கு மட்டும் இல்லை. படித்து விட்டு சமூக ஆர்வலராக இருக்கும்
திருநங்கை சங்கரிக்கும் இதே நிலை தான்.

சங்கரியும் தான் ஒரு திருநங்கை என்பதால் வீட்டை விட்டு
வெளியேற்றப் பட்டவரே. திருநங்கையாக உணர ஆரம்பித்த ஆரம்ப
நாட்களில், பயமும், அதீத கூச்சமும் நெட்டித் தள்ள மிகவும் அப்பாவியாக
இருந்த சங்கரி தனது பள்ளி நாட்களில் பாலியல் வன்கொடுமைக்கும்
ஆளானவர்.

இந்த சமூகத்தில் ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தையாக இருந்தாலும்,
அது பிறப்பில் அடைந்த மாற்றத்துக்கு அதை எப்படி பலியிட முடியும்?
அரவணைத்துக் காக்க வேண்டிய குடும்பம் வெளியேற்றியதால் தன்னந்
தனியாக தான் அடைந்த அவமானங்களே சங்கரியை பிற
திருநங்கைகளுக்காகப் போராடும் சமூகப் போராளியாக மாற்றி இருக்கிறது.

இன்று சங்கரி பல திருநங்கைகளுக்கு முன் மாதிரியாக இருந்து அவர்களை
வழி நடத்தும் பொறுப்பில் இருக்கிறார். அவர் மகளிர் தினம் பற்றி என்ன
சொல்கிறார் எனில்;
-
--------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: மகளிர் தினம் பெண்களுக்கு மட்டுமல்ல, திருநங்கைகளுக்கும் உரித்தானதே ஒப்புக் கொள்கிறீர்களா?

Post by ayyasamy ram on Fri Mar 03, 2017 5:05 am”நீங்கள் ஒரு பெண்ணாகவோ, திருநங்கையோ யாராக வேண்டுமானலும்
இருக்கலாம், ஆனால் சாலையில் இறங்கி நடக்கையில் பெண் எனும்
ஒரே காரணத்தால், எப்போது யாரால் தாக்கப் படுவோம், பாலியல்
வன்முறைக்கு உள்ளாக்கப் படுவோம், மானபங்கப் படுத்தப்படுவோம்
என்ற பயத்துடனே வாழும் நிர்பந்தம் இருக்கும் வரை மகளிர் தினக்
கொண்டாட்டங்களுக்கெல்லாம் என்ன அர்த்தம் இருந்து விட முடியும்?”
என்று காட்டமாக கேள்வி எழுப்புகிறார். அவர் கேட்பதிலும் நியாயம் உண்டு.

திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும்
முனைப்புகளில் சங்கரி போன்ற சமூக ஆர்வலர்களுக்கு இப்போதும்
கிடைப்பது ஏமாற்றங்களே; திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை
ஏற்படுத்தி தருவதில் அரசு எப்போதும் பாரபட்சம் காட்டியே வருகிறது.
அதைப் பற்றி சங்கரியின் கருத்து;

“உத்யோக விசயத்தில் இங்கே பெண்களுக்கே இன்னும் நியாயம்
கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருநங்கைகளின் வேலை
வாய்ப்புகளைப் பற்றிப் பேசி என்ன பயன்? நாங்கள் எங்களது
உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டு தான்
இருக்கிறோம். ஆனால் அது யாருடைய காதுகளையும்
சென்றடையவில்லை என்பது தான் மிகப் பெரும் துயரம்.”
-
வர்ணம், சங்கரி மட்டுமல்ல இந்தியத் திருநங்கைகளில் முதன்
முதல் செய்தி தொகுப்பாளர் எனும் பெருமையைப் பெற்ற பத்மினி
பிரகாஷின் கஷ்டம்; திருநங்கைகளின் பிரச்சினைகளை முற்றிலும்
வேறோரு பரிமாணத்துக்கு இட்டுச் செல்கிறது. ஒரு செய்தித்
தொலைக்காட்சியின் தொகுப்பாளராகத் தேர்வான பின், தனது
ஆடைகளைத் தைக்க தகுந்த டெயிலர்களை பத்மினி தேடிய போது;
அவருக்குக் கிடைத்தது ஏமாற்றம்.
-
திருநங்கை எனும் ஒரே காரணத்துக்காக அவர் அணுகிய ஒரு
டெயிலர் பத்மினியின் பிளவுஸ்களை தைத்துக் கொடுக்க
மறுத்திருக்கிறார்.

“ஒரு திருநங்கையாக எனக்கிருக்கும் மனப்பிர்ச்சினைகளைத்
தாண்டி எந்த நொடியிலும் இந்த சமூகம் எங்களுக்கு அள்ளி வழங்கத்
தாயாராக இருக்கும் எதிர்பாராத அவமானங்கள், புறக்கணிப்புகள்,
பாரபட்சங்களை ஒவ்வொரு நொடியிலும் எதிர்பார்த்துக் கொண்டு
அதனோடு போராடிக் கொண்டே வாழ்வதென்பது மிகப் பெரும் சவால்.

அதைத்தான் ஒவ்வொரு திருநங்கையும் தனது வாழ்நாள் முழுவதும் எ
திர்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தச் சூழலில் மகளிர் தினம் பற்றி
என்ன சொல்ல?” என்று முடிக்கிறார் பத்மினி.

கல்வி கற்கும் உரிமை பறிக்கப்படுதல், குடும்பத்துடன் சேர்ந்து வாழும்
உரிமைகள் மறுக்கப் படுதல், சமூகப் புறக்கணிப்பு, பொது வெளி
பாரபட்சங்கள், பால் பேத ஏற்றத்தாழ்வுகள், சக மனிதர்களின்
அசூயையான முகச் சுளிப்புகள் இவை அனைத்தையும் கடந்து வந்து
இந்த சமூகத்தில் தங்களுக்கான வெற்றியையும், வாழ்தலுக்கான
உரிமையையும் நிலை நாட்டிய திருநங்கைகள் நம்மிடையே பலர்
உள்ளனர்.
-
----------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: மகளிர் தினம் பெண்களுக்கு மட்டுமல்ல, திருநங்கைகளுக்கும் உரித்தானதே ஒப்புக் கொள்கிறீர்களா?

Post by ayyasamy ram on Fri Mar 03, 2017 5:06 am


-


மகளிர் தினம் திருநங்கைகளுக்கும் உரித்தானதே, ஒப்புக் கொள்கிறீர்களா?
-

அவர்களின் நர்த்தகி நட்ராஜ் குறிப்பிடத் தக்கவர். அவர் மகளிர் தினம்
பற்றியும், அதில் திருநங்கைகள் நிலைப்பாடு குறித்தும் என்ன சொல்கிறார்
எனில்;
-
மகளிர் தினத்தில் அனைத்து மகளிருக்கும் எனது வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்வதில் ஒரு பெண்ணாகப் பெருமை கொள்கிறேன்.
சர்வ தேச மகளிர் தினம் என்பது இந்த உலகில் தங்களது
உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பெண்களின்
விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த உலகில் பெண்கள்
எதையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறதோ அதே
விதமான போராட்டங்கள் அனைத்தையும் திருநங்கைகளும் எதிர்
கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த மகளிர் தின நன்நாளில் பெண்களோடு சேர்ந்து திருநங்கைகளும்
ஒன்றிணைந்து நமது உரிமைகளை மீட்டெடுக்கப் போராடுவோம்
என உறுதி ஏற்போம். என்றார்.

இறுதியாக நர்த்தகி நட்ராஜ் திருநங்கைகள் பிரச்சினைகளாகப் பகிர்ந்து
கொண்ட ஒரு விசயம் நம்மை யோசனையில் ஆழ்த்துகிறது.

“திருநங்கைகள் என்பதால் எங்களது காதலிக்கும் உரிமை பறி போக
வேண்டுமா? அல்லது திருநங்கைகளுக்கு காதல் உணர்வு வராதா?
திருநங்கை எனும் ஒரெ காரணத்திற்காக எங்களது காதல் உதாசீனத்துக்கு
உள்ளாக்கப்படுகையில் அதை திருநங்கைகளுக்கு இழைக்கப்படும்
அநீதியென இந்த சமூகம் ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்?”

நர்த்தகி கேட்கும் கேள்வியினூடே, கி.ராஜநாராயணின் ‘கோமதி’
சிறுகதையில் வரும் கோமதி எனும் திருநங்கையின் அழுகையும்,
விசும்பலும் இப்போதும் காதில் ஒலிக்கிறது. கோமதி நாயகம் எனும்
கோமதிக்கு தனது எஜமானன் மீது காதல். அவனுக்காக கோமதி
தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள், அவனுக்காகவே மிகுந்த
சுவையுடன் பதார்த்தங்களை சமைக்கிறாள். அவனது கவனத்தை
ஈர்க்கவே அவள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்கிறாள்.

ஆனால் கதையின் இறுதியில் காதலை வெளிப்படுத்தி அது
உதாசீனத்துக்கு உள்ளாகும் போது காரணமற்ற ஆத்திரத்திலும்,
இயலாமையிலும் கோமதி உடைந்து அழும் போது ‘ எல்லாம் தானொரு
திருநங்கை என்பதற்காக மட்டும் தானே!?’ எனும் பரிதாப உணர்வு
மிதமிஞ்சி வாசிப்பவர்கள் மனதை முள்ளாகத் தைக்கிறது.

எப்போதுமே திருநங்கைகளின் உணர்வுகளை எழுத்தில் வடிக்கவோ,
திரையில் படைக்கவோ எளிதாகத் தான் இருக்கிறது. ஆனால்
அவர்களுக்கும் காதல் உணர்வுகள் இருக்கும் பட்சத்தில் அதைக் கிள்ளி
எறியவோ, உதாசீனப் படுத்தி, அவமானப் படுத்தவோ இந்தச் சமூகம்
எள்ளளவும் தயங்குவதே இல்லை. இந்தப் பிரச்சினைகளில் இருந்தெல்லாம்
அவர்களுக்கு விடுதலையும், நியாயமும் கிடைக்க வேண்டுமெனில்
அதற்கு இந்த சமூகத்தின் கண்ணோட்டம் மாற வேண்டுமே! மாறுமா?


முதலில் இந்த சமுதாயத்தில் பெண்களின் நிலை மாறட்டும். பெண்கள்,
குழந்தைகள், திருநங்கைகள் அனைவரும் பாதுகாப்பும் உறுதிப்
படுத்தப்படட்டும். அதன் பின்னல்லவா இப்படியான கொண்டாட்டங்களில்
அர்த்தமிருக்க முடியும்!
-
-----------------------------------------

Article concept courtsy: Roshne B, New indian express.
நன்றி-தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: மகளிர் தினம் பெண்களுக்கு மட்டுமல்ல, திருநங்கைகளுக்கும் உரித்தானதே ஒப்புக் கொள்கிறீர்களா?

Post by krishnaamma on Sun Mar 05, 2017 9:48 am

//முதலில் இந்த சமுதாயத்தில் பெண்களின் நிலை மாறட்டும். பெண்கள்,
குழந்தைகள், திருநங்கைகள் அனைவரும் பாதுகாப்பும் உறுதிப்
படுத்தப்படட்டும். அதன் பின்னல்லவா இப்படியான கொண்டாட்டங்களில்
அர்த்தமிருக்க முடியும்!//


நிஜம் தான், இந்த நீளமான கட்டுரையை படித்ததும் மனம் கனக்கிறது .............அவர்கள் அப்படிப் பிறந்தது அவர்கள் குற்றம் இல்லையே? சோகம்...... அவங்களை கொண்டாடவேண்டாம், குறைந்த பட்க்ஷம் திண்டாட விடாமல் இருக்கலாம் அல்லவா? புன்னகை
.
.
.
நல்ல பகிர்வு ராம் அண்ணா ! சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: மகளிர் தினம் பெண்களுக்கு மட்டுமல்ல, திருநங்கைகளுக்கும் உரித்தானதே ஒப்புக் கொள்கிறீர்களா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum