ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

ஏர்செல் நிறுவனம் திவால்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 T.N.Balasubramanian

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மேரி க்யூரி தன் நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன செய்வார் தெரியுமா?

View previous topic View next topic Go down

மேரி க்யூரி தன் நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன செய்வார் தெரியுமா?

Post by ayyasamy ram on Fri Mar 03, 2017 6:46 pm


-
ஒரு துறையில் பெண்கள் சாதிப்பது என்பது நாகரிகம்
வளார்ந்த இன்றைக்கும் எளிதாக முடிவதில்லை.
பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

ஆனால், அவற்றை தகர்த்துவிட்டு சாதித்தப் பெண்கள்
அபூர்வம்தான். அதிலும் அறிவியல் துறையில் வென்று
காட்டியவர்கள் மிகச் சொற்பம். அதில் தன் தனித்துவத்தால்
இரண்டு நோபல் பரிசுகளை வென்றவர்தான் மேரி க்யூரி.

போலந்து நாட்டில் பிறந்த மேரி க்யூரி சிறுவயதாக இருக்கும்
போதே பெண்களை அடக்கி வைக்கும் பொதுப் புத்திக்கு
எதிராக யோசிப்பவராக இருந்தார். மேரி க்யூரிக்கும் அவரது
அக்காவுக்கும் மருத்துவம் படிக்க ஆசை.

குடும்பச் சூழலால், அக்கா வேலைக்குச் செல்ல மேரி க்யூரி
படிக்க பாரிஸூக்குச் சென்றார். மருத்துவம் படிக்காமல்
இயற்பியல், வேதியியல் துறைச் சார்ந்து படிக்க நேர்ந்தாலும்
முழு ஈடுபாடோடும் அர்ப்பணிப்போடும் படித்து, இயற்பியலில்
முனைவர் பட்டம் பெற்றார்.
ஃப்ரான்ஸ் நாட்டின் முதல் பெண் முனைவர் எனும் பெருமையைப்
பதித்தார்.

அறிவியலே தன் வாழ்க்கை என மாற்றிக்கொண்ட
மேரி க்யூரிக்கு தன்னுடன் பணியாற்றிய ப்யாரி க்யூரியுடன்
நட்பு கிடைத்தது. நட்பு காதலாகி மாறியது. இருவரும் திருமணம்
செய்துகொண்டனர். இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்
கொண்டனர்.

கதிரியக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆபத்தானவை
என்பதால் பலரும் அதில் ஈடுபடாமல் இருந்த சூழலில் மேரி க்யூரி
தம்பதியினர் துணிவோடு மேற்கொண்டனர்.
கதிரியக்கம் தொடர்பான ஆய்வுக்கே நோபல் பரிசுகள் கிடைத்தன.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34401
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: மேரி க்யூரி தன் நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன செய்வார் தெரியுமா?

Post by ayyasamy ram on Fri Mar 03, 2017 6:47 pm



-
எல்லாமே நல்லபடியாக சென்றுகொண்டிருந்த சூழலில்
மேரி க்யூரியின் வாழ்வில் பெரும் இடி விழுந்தது. தன்
வாழ்க்கைக்கும் ஆய்வுக்கும் இணையாக இருந்த தன் கணவர்
ப்யாரி ஒரு சாலை விபத்தில் இறந்தார். அந்த இழப்பை மேரி
க்யூரியால் தாங்கிகொள்ளவே முடியவில்லை. எவராலும்
சமாதானப் படுத்த முடியாத அளவுக்கு சோர்ந்துபோய்விட்டார்.

ஆனால், தொடர வேண்டிய ஆய்வுகளே அவரை மீண்டும்
இயல்புக்குத் திரும்ப அழைத்தன. தானே தன்னைச் சரி செய்து
கொண்டு பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார்.

கணவர் இல்லாமல் ஆய்வுகளைத் தொடர்ந்த மேரி க்யூரிக்கு
சுற்றியிருந்தவர்களின் வார்த்தைகள் ஈட்டியாக குத்தின.
மேரி க்யூரியுடன் பணியாற்றும் இன்னொரு நபருடன் அவரை
இணைத்துப் பேசி வார்த்தையால் காயப்படுத்தினர்.

கணவர் இறந்துபோனதைச் சுட்டிக்காட்டி இதைப் பேசியபோது,
மனதளவில் மீண்டும் சோர்ந்துபோனார். இந்தச் சோர்விலிருந்து
மீண்டு வர மேரி க்யூரி செய்தது என்ன தெரியுமா?

தனது மனச் சோர்வைச் சரி செய்யும் மருந்து, தன் கிராமமே
என்பதாக கண்டுகொண்டார். அப்படியான மனக்காயம்
ஏற்படும் நேரங்களில் தனது கிராமத்துக்குச் சென்று தன்
பால்யத்தில் பார்த்து பழகிய மனிதர்களை, இடங்களைப்
பார்த்தார். அங்கே நேரங்களைச் செலவழித்தார்.

மனம் முழுக்க தன்னம்பிக்கையை நிரப்பிக்கொள்வார்.
அந்தப் புத்துணர்ச்சியோடு ஆய்வகத்துக்கு வருவார். தனது
சோர்வைத் தூரத்தில் எறிந்து முழு வேகத்தில் பணிகளைப்
பார்த்தார்.

தன் மகளையும் இந்தத் துறையில் ஈடுபடுத்தினார்.
கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிரயோகிக்கும்
ரேடியத்தைக் கண்டறிந்து இந்த உலகிற்கு பெரும் கொடையாக
கொடுத்தார். இந்த ஆய்வின்போது தன் உடலில் பாயும் கதிர்
வீச்சால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதை அவர் நன்கு
உணர்ந்திருந்தார்.

ஆனால், இவ்வுலகிற்கு பலருக்கும் வாழ்வளிக்கப் போகிற
ஒன்றிற்காக நாம் பணியாற்றுகிறோம் என்ற எண்ணமே தன்
உடலைப் பற்றி கவலைப்படாமல் ஆய்வைத் தொடர வைத்தது.

தன் சோர்வைப் போக்குவது எது என்று தெளிவாக கண்டறிந்த
மேரி க்யூரியைப் போல, நம் வாழ்வின் சோர்வுகளைக் கலையும்
விஷயங்களைத் தேடி கண்டறிவோம்.

———————————-
– வி.எஸ். சரவணன்.
நன்றி-விகடன்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34401
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: மேரி க்யூரி தன் நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன செய்வார் தெரியுமா?

Post by ayyasamy ram on Fri Mar 03, 2017 6:49 pm

மாணவப்பருவத்திலே…
-

எனக்கு 11 வயதாகும்போது என் அம்மா காசநோயால்
இறந்துவிட்டார்.
பின்னர் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்தாலும்,
கல்லூரியில் சேர முடிாத நிலை.

காரணம் போலந்தின் தலைநகரில் இருந்த வார்ஸா
பல்கலைக்கழகத்தில் ஆண்களுக்கு மட்டடும்தான்
அனுமதி. என்றாலும அதன் ஒரு பிரிவு ரகசியமாக
இயங்கி வந்தது.
அதில் பெண்களுக்கும் அனுமதி உண்டு.
அதில் சேர்ந்து படித்தேன்

————————————
-இருமுறை நோபல் பரிசு பெற்ற மேரி க்யூரி
மங்கையர் மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34401
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: மேரி க்யூரி தன் நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன செய்வார் தெரியுமா?

Post by krishnaamma on Sun Mar 05, 2017 10:15 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா ! ........... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: மேரி க்யூரி தன் நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன செய்வார் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum