ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 pkselva

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐ.நா.வின் தடையை மீறி, ஒரே நாளில் 4 நவீன ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா மிரட்டல்

View previous topic View next topic Go down

ஐ.நா.வின் தடையை மீறி, ஒரே நாளில் 4 நவீன ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா மிரட்டல்

Post by ayyasamy ram on Tue Mar 07, 2017 6:11 am

ஐ.நா.வின் தடையை மீறி வடகொரியா ஒரே நாளில் 4 அதிநவீன ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் செலுத்தி அச்சுறுத்தியது.
மார்ச் 07, 04:45 AM
சியோல்,

ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கடும் கண்டனம் தெரிவித்தார்.
-
தனது அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா ஆயுதங்களை குவித்தும், போர் ஒத்திகையில் ஈடுபட்டும் வருகிறது. இதனால் தென்கொரியாவின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவிக் கரம் நீட்டி உள்ளது.
-
கடந்த வாரம் இரு நாடுகளும் தென்கொரிய கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியை தொடங்கின. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்தது. எனினும் அமெரிக்க, தென்கொரிய ராணுவத்தினர் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

4 ஏவுகணைகள்

-
கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன அணுசக்தி ஏவுகணைகளை செலுத்தியும், சக்தி வாய்ந்த அணுகுண்டு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்தும் வடகொரியா சோதனை நடத்தி வருகிறது. இதனால் ஐ.நா. பல்வேறு தடைகளை வடகொரியா மீது விதித்து உள்ளது.

ஆனால் இதை பொருட்படுத்தாமல் வடகொரியா தனது ஆயுத திறனை வெளிப்படுத்தும் விதமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன அணுசக்தி ஏவுகணைகளை செலுத்தி சோதனை செய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை சீனாவின் வடக்கு எல்லையை ஒட்டி அமைந்துள்ள டோங்க்சாங்–ரி என்னும் பிராந்தியத்தில் இருந்து அடுத்தடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் 4 நவீன ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியை நோக்கி வடகொரியா ஏவியது.

ஜப்பான் கண்டனம்
அந்த ஏவுகணைகள் ஜப்பானின் வடமேற்கு கடலோர பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் கடல் பகுதி அருகே 300 கி.மீட்டர் தொலைவில் கடலுக்குள் விழுந்தன. இந்த ஏவுகணைகள் ஆயிரம் கி.மீட்டர் தூரத்திற்கு 260 கி.மீட்டர் உயரத்தில் பறந்தன.
-
இதனால் பெரிய அளவில் ஜப்பானுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் கூட தனது எல்லைக்குள் அத்துமீறி ஏவுகணைகளை செலுத்திய வடகொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கடும் எச்சரிக்கை விடுத்தார். டோக்கியோ நகரில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், வடகொரியாவின் செயல் ஜப்பானை அச்சுறுத்துவதாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

அவசர ஆலோசனை

-
அதே நேரம், தென்கொரியாவின் பொறுப்பு ஜனாதிபதி ஹவாங் கியோ–ஆன் உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டத்தை சியோல் நகரில் கூட்டி வடகொரியாவின் அச்சுறுத்தல் குறித்து விவாதித்தார்.
-
அப்போது அவர் பேசுகையில், ‘‘தென்கொரியா–அமெரிக்க ராணுவத்தின் கூட்டு போர் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா இந்த ஏவுகணைகளை செலுத்தி இருக்கிறது. எனவே ஏவுகணை தாக்குதலை முறியடிக்க அமெரிக்காவின் அதிகபட்ச வான்பாதுகாப்பு முனையத் திட்டத்தை (தாட்) உடனடியாக தென்கொரிய எல்லைப் பகுதிக்கு வரவழைத்து நிறுத்துவோம்’’ என்று குறிப்பிட்டார்.
-
பதிலடி கொடுக்க தயார்
வடகொரியாவின் நேற்றைய ஏவுகணைகள் சோதனையை அமெரிக்காவும் கடுமையாக கண்டித்தது.
-
இதுபற்றி அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் மார்டின் ஓ டோனல் கூறும்போது, ‘‘இந்த ஏவுகணைகள் வடஅமெரிக்கா வரை பாயும் அளவிற்கு திறன் கொண்டவை அல்ல. இதனால் அமெரிக்காவுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. என்றபோதிலும் இவற்றை உன்னிப்பாக ஆய்வு செய்தோம். தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் பாதுகாப்பை பராமரிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’’ என்றார்.
-
அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறும்போது, ‘‘தொடர்ந்து எங்களுக்கும் எங்களது நட்பு நாடுகளுக்கும் விடுக்கப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்கும் திறன் எங்களிடம் உள்ளது. அதைப் பயன்படுத்தி தக்க பதிலடி கொடுக்க நாங்கள் முற்றிலும் தயார் நிலையில் இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.
-
வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனை மிரட்டல்களால் தென்கொரிய–ஜப்பான் கடல் பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
-
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31554
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஐ.நா.வின் தடையை மீறி, ஒரே நாளில் 4 நவீன ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா மிரட்டல்

Post by T.N.Balasubramanian on Tue Mar 07, 2017 9:31 am

மாநிலங்கள் அந்த தேசத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பது இல்லை.
நாடுகள் UN சொல்லுவதையோ உலக நீதிமன்றம் சொல்லுவதையோ 
கேட்பதில்லை.
வீட்டிலேயே கணவன்/மனைவி சொல்லுவதை மனைவி/கணவன் கேட்பதில்லை.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் 
தங்களுடைய supremacy ஐ வெளிப்படுத்தவே முனைந்துள்ளார்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20576
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: ஐ.நா.வின் தடையை மீறி, ஒரே நாளில் 4 நவீன ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா மிரட்டல்

Post by ராஜா on Tue Mar 07, 2017 7:17 pm

T.N.Balasubramanian wrote:மாநிலங்கள் அந்த தேசத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பது இல்லை.
நாடுகள் UN சொல்லுவதையோ உலக நீதிமன்றம் சொல்லுவதையோ 
கேட்பதில்லை.
வீட்டிலேயே கணவன்/மனைவி சொல்லுவதை மனைவி/கணவன் கேட்பதில்லை.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் 
தங்களுடைய supremacy ஐ வெளிப்படுத்தவே முனைந்துள்ளார்.

ரமணியன்
உண்மை ஐயா

அமரர் எழுத்தாளர் சுஜாதா சொல்லியுள்ளது போல மூன்றாம் உலகப்போர் ஆரம்பித்தால் முதலில் (அணு)ஆயுதம் எடுப்பவன் கடைசியாக சாவான். அதுவரைக்கும் இந்த மூடர்கள் திருந்தமாட்டார்கள்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum