ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 ayyasamy ram

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 ayyasamy ram

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 ayyasamy ram

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 M.Jagadeesan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!

View previous topic View next topic Go down

சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!

Post by ayyasamy ram on Thu Mar 16, 2017 4:39 pm---
-மை. பாரதிராஜா
---------------------

அடி வாடி திமிரா..
புலி ஓட்டும் முறமா..
நம்ம வாழ்க்கை பயமா?
வரமா? ஒரு கோடி சிறகா
நம்ம பார்வை விரிஞ்சா
இந்த பூமி தகுமா… தகுமா?
-
ஜிப்ரானின் இசைக்கு உமாதேவியின் வரிகளில் ஓபனிங்
பாடல் பரபரக்கிறது. ஆக்ராவின் சாலைகளில் ஜோதிகா
ஜம்மென புல்லட் ஓட்டிக்கொண்டிருக்க.. ஜோதிகாவுக்கு
பின்னால் கம்பீரமாக பயணிக்கிறார் ஊர்வசி.

‘குற்றம் கடிதல்’ அடுத்து பிரம்மா இயக்கி வரும்
‘மகளிர் மட்டும்’ படத்தில்தான் இப்படி ஒரு காட்சி.

‘‘‘மகளிர் மட்டும்’காக திண்டிவனம் பக்கம் ஷூட்டிங்.
ஒரு ஸ்கூல் டீச்சர். அவங்களுக்கு ஐம்பது வயசு இருக்கும்.
‘‘குற்றம் கடிதல்’ படம் இல்ல தம்பி… என் வாழ்க்கைல
நடந்த விஷயம்…’னு தேம்பித் தேம்பி அழுதாங்க.

போன வாரம் எங்க ஆபீஸுக்கு நூறு ரூபாய் மணியார்டர்
வந்திருந்தது. ‘‘குற்றம் கடிதல்’
திருட்டு டிவிடில பார்த்தேன். ஒரு நல்ல படத்தை அப்படி
பார்த்தது உறுத்தலா இருந்துச்சு.
-
அதான் அதுக்கான பணத்தை அனுப்பினேன்’னு எழுதியிருந்தார்
முகம் தெரியாத ஒருத்தர். நேஷனல் அவார்டு கிடைச்சதும் ரஜினி
சார்கிட்ட இருந்துதான் முதல் வாழ்த்து வந்துச்சு.

இப்படி மறக்கமுடியாத தருணங்கள் நிறைய இருக்கு.
அது ஒரு intensive film. ஆனா, ‘மகளிர் மட்டும்’
எமோஷனலானது. அதிலும் ஒவ்வொரு ஃபிரேம்லேயும்
நீங்க சிரிச்ச முகமாகவே பார்த்து ரசிப்பீங்க…’’ திருப்தியாக
பேசுகிறார் பிரம்மா.
-
--------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33625
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!

Post by ayyasamy ram on Thu Mar 16, 2017 4:42 pm


-
சூர்யா தயாரிப்பு. ஜோதிகா லீட் ரோல். காம்பினேஷனே களைகட்டுதே..?
-
‘மகளிர் மட்டும்’ கதை ரெடியானதும் ஜோதிகாவுக்கு பொருத்தமான கதையா இருந்துச்சு. அவங்ககிட்ட கதை சொல்லும் போது, சில இடங்கள்ல சீரியஸா கேட்டாங்க. நிறைய இடங்கள்ல சிரிச்சாங்க. அப்பவே எனக்கு கான்பிடன்ட் வந்திடுச்சு. அடுத்து சூர்யா சார்கிட்ட கதையை சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. ‘2டி’லேயே பண்ணிடலாம்’னு உற்சாகப்படுத்தினார்.

ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன்னு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. ‘மகளிர்மட்டும்’ டைட்டில் கிடைச்சா ரீச் அதிகமா இருக்கும்னு நினைச்சேன். சூர்யா சார் உடனே கமல் சார்கிட்ட பேசி, இந்த டைட்டிலை வாங்கிக் கொடுத்தார். இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாசர் சார், லிவிங்ஸ்டன், பாவல், கோகுல்நாத் தவிர நிறைய புதுமுகங்கள் இருக்காங்க.
-
ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி நடிகர்க-ளுக்கு
ரிகர்சல் வைக்கிறது உங்க ஸ்டைல் ஆச்சே..?

-

-

முதல் படத்துல ரிகர்சல் சாத்தியமாச்சு. இந்தப் படத்துலேயே
ஒரு மாசம் workshop வச்சிருந்தேன். இந்த மாதிரி பயிற்சிப்
பட்டறை வைக்கறது அவங்களுக்கு நடிப்பு சொல்லிக்
கொடுக்கறதுக்கு இல்ல. இது ஆக்டிங் ப்ராக்டீஸ் கிடையாது.
கேரக்டரோட ஆழத்தை உணர்ந்து உள்வாங்கிக்கற
முயற்சியாகத்தான் இந்த ஒர்க்‌ஷாப்.

ஜோதிகா, ஊர்வசி, சரண்யா எல்லாருமே பிஸியானவங்க.
அதனால அவங்களத் தவிர மத்தவங்க பயிற்சி எடுத்தாங்க.
ஊர்வசியும், நாசரும் ஏற்கனவே பழைய ‘மகளிர் மட்டும்’ல
நடிச்சிருந்தவங்க. மறுபடியும் அதே டைட்டில்ல நடிச்சிருக்கறது
சந்தோஷமா இருக்குதுனு சொன்னாங்க.


Last edited by ayyasamy ram on Thu Mar 16, 2017 4:47 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33625
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!

Post by ayyasamy ram on Thu Mar 16, 2017 4:46 pm


-
பானுப்ரியாவுக்கு இந்தப்படம் செகண்ட் இன்னிங்ஸ்தானே?
-
ஆமா. இந்தப் படத்துல அவங்களை நடிக்க வைக்கலாம்னு
தேடினா வெளிநாடு போயிருந்தாங்க. அவங்க வர்ற வரை
காத்திருந்தோம். அதே மாதிரி ஊர்வசி மேம் ஒரு தகவல்
களஞ்சியம். அவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருக்காங்க.

ஆக்ரா ரோட்டுல ஜோதிகா புல்லட் ஓட்டுற சீன்ல பைக்ல
பின்னாடி உட்காரச் சொன்னதும் ஊர்வசி மேம் மிரண்டுட்டாங்க.
‘எனக்கும் பைக்குக்கும் ராசியே கிடையாது’னு தயங்கினாங்க.
யாருக்கும் தெரியாமல் கேமரா வச்சு, லைவ் ஷூட் பண்ணினோம்.

செட்டுல சரண்யா மேம்ல இருந்து எல்லாருமே ஒண்ணு சேர்ந்தா
பிக்னிக் மாதிரி பேசி, சிரிச்சு, ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டு…னு
செம ஃப்ரெண்ட்லியா பழகினாங்க.

தயாரிப்பாளர் சூர்யா என்ன சொல்றார்?
-
படத்தோட பூஜை அன்னிக்கு அவரால வர முடியல.
முதல் நாள் ஷூட்டிங் அன்னிக்கு ‘அழகான படத்தை எடுத்துக்
கொடுங்க. வாழ்த்துகள்’னு மெசேஜ் அனுப்பியிருந்தார்.

அதன்பிறகு நிறைய முறை ஸ்பாட்டுக்கு வருவார். ‘எந்த ஆர்ட்டிஸ்ட்
தேவைனாலும் சொல்லுங்க’னு கேட்பார். ஒரே ஒரு படம் பண்ணின
இயக்குநர்னு நினைக்காம எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.


என்னோட குறும்படங்கள்ல இருந்து கூடவே இருக்கும்
எஸ்.மணிகண்டன், ‘குற்றம் கடிதலு’க்கு அடுத்து இதற்கும்
ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். இடையே தெலுங்கில்
ரெண்டு படங்கள் அவர் பண்ணிட்டார்.

படத்துக்கு இசை ஜிப்ரான். ‘வாகை சூடவா’ல இருந்து அவரோட
இசையை கவனிச்சிட்டிருக்கேன். இதுல அவர் நாலு பாடல்கள்,
ஒரு தீம் மியூசிக், ஒரு ஃபோக்னு வெரைட்டி கொடுத்திருக்கார்.

படத்துல ஜோதிகா யார்?

பிரபாவதி. ஆவணப்பட இயக்குநரா நடிச்சிருக்காங்க.
வழக்கமான ஜோதிகால இருந்து கொஞ்சம் மாறியிருக்கற
ஜோதிகாவா இருக்கணும். ரெகுலர் ஆடியன்ஸ் விரும்பற
ஜோதிகாவாகவும் தெரியணும்னு கேரக்டரை உருவாக்கினேன்.

புல்லட் தவிர, வேற ஒரு வாகனமும் அவங்க ட்ரைவ் பண்ணுவாங்க.
நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டு வந்தாங்க.

அவங்க பஞ்சாபி பெண்.
ஆனா, தமிழை உணர்ந்து பேசி நடிக்கறாங்க.
தங்லீஷ்லதான் ஸ்கிரிப்ட் கொடுத்திருந்தேன்.

டயலாக்கைக் கூட முதல்நாளே வாங்கிட்டுபோய் மறுநாள்
வரும்போது மனப்பாடமா பேசினாங்க. ‘மாயாவி’ல
சொந்தக்குரல்ல டப்பிங் பேசியிருப்பாங்க.

அதுக்குப் பிறகு இதுலதான் அவங்களே டப்பிங் பேசியிருக்காங்க.
காலையில ஆறு மணிக்கு ஷூட்டிங்னா ஷார்ப்பா அந்த டைமுக்கு
செட்ல இருப்பாங்க. டெடிகேட்டட் ஆர்ட்டிஸ்ட்.

Behind the scenes

* சட்டீஸ்கர், ஆக்ரா, உத்தரப்பிரதேசம், திண்டிவனம் ஆகிய
இடங்களில் ஷூட்டிங் நடந்திருக்கிறது. படத்தின் லொகேஷன்
தேடுதலுக்காக 2 ஆயிரம் கிலோமீட்டர் சுற்றி வந்திருக்கிறார்கள்.
-
* ‘கபாலி’ உமாதேவி, விவேக் தவிர தாமரையும், இயக்குநர்
பிரம்மாவும் பாடல்கள் எழுதியுள்ளனர்-.
-
* கேரளா படப்பிடிப்பில் இரண்டு மலைகளுக்கிடையே
கயிற்றில் தொங்கிய படி ஜோதிகாவும், ஊர்வசியும்
கடப்பது போல் காட்சி. டூப் போடாமல் இருவரும் நிஜமாகவே
ரிஸ்க் எடுத்து கடந்துள்ளனர்.

-நன்றி – குங்குமம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33625
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!

Post by krishnaamma on Thu Mar 16, 2017 10:27 pm

ம்ம்...படம் பார்க்க ஆவலாக உள்ளேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!

Post by rajirani on Fri Mar 17, 2017 2:27 pmRe: சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!

படம் பார்க்க வேண்டும். ஐயா நிறைய தகவல்கள் அணைத்து துறையிலும் அனுப்புகிறீகள். வாழ்த்துக்கள்

ராஜி
avatar
rajirani
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 72
மதிப்பீடுகள் : 68

View user profile

Back to top Go down

Re: சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum