ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை

View previous topic View next topic Go down

தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை

Post by ayyasamy ram on Fri Apr 07, 2017 5:57 am


-
ஒரு தகப்பனார் இருக்கிறார். தம் பெண்ணுக்கு நல்ல வரனாகப்
பார்த்துக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அலைகிறார்.
வரன் கிடைக்கிறான். கல்யாணம் நிச்சயமாகிறது.

கல்யாணமானவுடன் பெண்ணை மாப்பிள்ளை அழைத்துக்
கொண்டுபோய்விடப் போகிறான். கன்னிகாதானம் செய்கிறபோது
தகப்பனாரின் மனசு எப்படி இருக்கும்?

பெண்ணுக்கு நல்ல வரன் கிடைத்ததே என்ற சந்தோஷம்
ஒரு பக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை அமுக்கி
விடுகிறமாதிரி, இத்தனை காலம் வளர்த்த பெண் நம்மை
விட்டுப் போகிறாளே என்ற துக்கம்தான் அதிகமாக இருக்கும்.

இவரேதான் வரன் பார்த்தார். தேடித்தேடிப் பார்த்தார்; கடன் கிடன்
வாங்கி மனசாரச் செலவழித்துக் கல்யாணமும் செய்கிறார்.
ஆனாலும் கன்னிகாதான சமயத்தில் அவருடைய மனசை
முறுக்கிப் பிழிகிற மாதிரி இருக்கிறது. கண்ணில் ஜலம்கூட வந்து
விடும்போல் இருக்கிறது.

முக்தி நிலையை அடைய அருகதை பெற்ற சாதனைகளை
முமுக்ஷு என்பார்கள். இடையறாத பக்தி செலுத்திச் செலுத்தி
ஒருவன் இந்த அருகதையைப் பெற்றுவிடுகிறான்.

அவனுக்கு முக்தி கிடைக்கிற சமயம் கைக்கு எட்டினாற்போல்
வந்துவிடுகிறது. அப்போது அவன் ஒரு தர்ம சங்கடமான
நிலையில் இருக்கிறான். கன்னிகாதானம் செய்து தருகிற
தகப்பனாரின் மனநிலை மாதிரிதான் இவனுக்கும் இருக்கிறது.

தகப்பனாரே வரன் தேடி அலைந்த மாதிரி இவனேதான்
முக்திக்காகப் பெரிய பிரயாசை செய்து பக்தி மார்க்கத்தில்
எல்லா அநுஷ்டானமும் செய்தான். அதனால் மனசு பூரணமாகச்
சுத்தமாகி பரமாத்மாவில் இரண்டறக் கரைகிற நிலை வந்து
விட்டது.

கரைந்தபின் பகவானும் இல்லை, பக்தியும் இல்லை.
மணப்பெண்ணை வரனுக்குக் கொடுக்கிற தகப்பனாருக்கு அழுகை
வருகிற மாதிரி ஆத்மாவை பரமாத்மாவுக்குத் தத்தம் செய்கிற
முமுக்ஷுவுக்கும் பெரிய துக்கம் உண்டாகிறது.

இந்தத் துக்கத்தை சுலோகத்தில் வெளியிடுகிறார் ஒரு கவி.
‘பஸ்மோத்தூளன பத்ரமஸ்து பவதே’ என்று ஆரம்பமாகும்
சுலோகம் அது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32524
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை

Post by ayyasamy ram on Fri Apr 07, 2017 5:58 am

“ஏ விபூதியே! போய் வா! உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும்.
சுபமான ருத்ராக்ஷ மாலையே, உனக்கும் பிரியா விடை
கொடுக்கிறேன்; ஹா, பக்தி மார்க்கப் படிக்கட்டுகளே,
உங்களையும் விட்டுப் பிரிகிறேன். எனக்கு பக்தி, பகவத்
குணாநுபவம் என்கிற ஆனந்த பிரபஞ்சத்தையே தந்த உங்களை
எல்லாம் சிதைத்துப் போடுகிற மோக்ஷம் என்கிற மகாமோகத்தில்
தோய்ந்து போகிறேன்” என்கிறார்.

மோகத்தைப் போக்குவதுதான் மோக்ஷம். ஆனால் பக்தி
இன்பத்தையும், அதற்கான சாமக்கிரியைகளையும் கைவிட்டுவிட்டு
மோக்ஷம் பெற வேண்டும் என்கிறபோது, இந்தப் பரம பக்தருக்கு
மோக்ஷமே மோகமாகத் தோன்றுகிறது!

இதேபோல் 'கிருஷ்ண கர்ணாமிருத'த்திலும் ஒரு சுலோகம்
இருக்கிறது. பக்தி முற்ற முற்றக் கருமம் நசிக்கிறதைப் பற்றியது
இந்த சுலோகம். 'ஸந்த்யாவந்தன பத்ரமஸ்து பவதே, என்று
ஆரம்பிக்கும் அது, கிருஷ்ண பக்தி அதிகமாக ஆக லீலாசுகரால்
ஸந்தியா வந்தனம், பித்ரு தர்ப்பணம் ஆகிய
கர்மாநுஷ்டானங்களைக்கூடச் செய்ய முடியவில்லை.
அவற்றிடமிருந்து பிரியா விடை பெறுகிறார்.

முதல் நிலையில் அவரவருக்கான கர்மத்தை சாஸ்திரப் பிரகாரம்,
'இது வேண்டுமா, வேண்டாமா?' என்று எதிர்க்கேள்வி கேட்காமல்
அநுஷ்டிக்க வேண்டும். இதனால் மனத்தில் விருப்பு வெறுப்பு
குறைகிறது; சித்தசுத்தி ஏற்படுகிறது. அழுக்கு நீங்க நீங்க மனசு
ஈசுவரனிடம் அதிகமாக ஈடுபட்டு ஒருமுகமாகத் தொடங்குகிறது.

இதுதான் பக்தி. இரண்டாம் நிலை. பக்தி முற்றும்போது ஞானம்
சித்திக்கிறது. இது இறுதி நிலை.

கர்மத்தையோ பக்தியையோ நாமாக விட வேண்டியதில்லை.
பழுத்த பழம் தானாகக் காம்பிலிருந்து விடுபடுகிற மாதிரி கர்மம்,
பக்தி எல்லாம் அததுவும் பூரணமடைந்தவுடன் தாமாகவே
நழுவிப்போகும்.

பக்தியை விட்டு நேராக முக்திக்கு நாம் முயற்சி பண்ண வேண்டும்
என்பதே இல்லை. பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும்.
தானே அதுவாக முக்திக்கு அழைத்துப் போகும்.

எனவே முக்தி
வேண்டும் என்று பிரார்த்திக்காமல் பக்தி வேண்டும் என்று
வேண்டிக்கொண்டேயிருந்தால் போதும். கோபால கிருஷ்ண
பாரதியார் சொன்னபடி ‘பக்தி பண்ணிக்கொண்டிருந்தால் முக்தி
பெறலாமே!'
-
---------------------------------

- தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
நன்றி- தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32524
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை

Post by krishnaamma on Fri Apr 07, 2017 3:52 pmஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum