ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 ayyasamy ram

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 ayyasamy ram

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 ayyasamy ram

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 ayyasamy ram

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 ayyasamy ram

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 ayyasamy ram

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 ayyasamy ram

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

முதல் பார்வை: காற்று வெளியிடை - வழக்கமான மணிரத்னம் சினிமா!

View previous topic View next topic Go down

முதல் பார்வை: காற்று வெளியிடை - வழக்கமான மணிரத்னம் சினிமா!

Post by ayyasamy ram on Sat Apr 08, 2017 5:56 am


-
போர்க் கைதியாக இருக்கும் இந்திய விமானப் படை
பைலட்டின் காதலும், காதல் சார்ந்த தேடலுமே
'காற்று வெளியிடை'.

காஷ்மீரில் விமானப் படையில் பைலட்டாக பணிபுரிகிறார்
கார்த்தி. அவர் தன் தோழியுடன் ஜீப்பில் பயணம் செய்யும்
போது விபத்து நிகழ்கிறது. ரத்த காயங்களுடன்
அனுமதிக்கப்படும் கார்த்தியை டாக்டர் அதிதி ராவ் ஹைதரி
சிகிச்சை மூலம் குணப்படுத்துகிறார்.

அதற்குப் பிறகான இருவரது சந்திப்பில் காதல் மலர்கிறது.
சின்ன சின்ன சண்டைகள், ஈகோ, கருத்து வேறுபாடுகள் என
பெரிதாக வளர புரிதல் இன்றிப் பிரிகிறார்கள்.

அதற்குப் பிறகு கார்த்தி எப்படி போர்க் கைதி ஆகிறார்,
அங்கிருந்து எப்படி மீள்கிறார், காதலி என்ன ஆகிறார் என்பது
மீதிக் கதை.

காதல் எனும் அஸ்திரத்தை மீண்டும் ஆயுதமாகப் பயன்படுத்தி
இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். ஆனால், அது வழக்கமும்
பழக்கமுமான பாதையிலேயே பயணிப்பதால் புத்தம் புதுசா
என்று சொல்லும்படி எதுவும் இல்லை.

லந்து செய்யும் கார்த்தி காற்று வெளியிடை படத்தில் பார்க்க
முடியவில்லை என்பது மாற்றம்தான். ஆனால், மீசை இல்லாமல்
மழித்த முகம், ஒட்டாத முக பாவனை, இயல்பு மீறிய புன்னகை
என்று கதாபாத்திரத்துக்கு அந்நியப்பட்டே நிற்கிறார்.

மணிரத்னம் படத்தின் முந்தைய கதாநாயகர்களை நினைவு
படுத்துவதாகவே கார்த்தியின் நடிப்பு அமைந்துவிடுவதால்
சவாலாகவோ, சபாஷ் சொல்லும் அளவுக்கோ இல்லை.

காதல் காட்சிகளில் கொஞ்சும் போதும், பாவனைகளிலும்
செயற்கைத்தனம் அதிகம் தெரிகிறது.

அதிதி ராவ் ஹைதரியின் நடிப்பு அபாரம். மகிழ்ச்சி, கோபம்,
அழுகை, கெஞ்சல் என்று உணர்வுகளை கண்களின் வழியே
மிகச் சரியாக வெளிப்படுத்துகிறார். உள்ளச் சிக்கலை மிகச்
சரியாக கையாண்டுள்ளார்.

இந்தப் படத்தில் எதற்கு ஆர்.ஜே.பாலாஜி என்ற கேள்வி
எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. குணச்சித்ர நடிப்புக்கான
களம் என்று நினைத்தாலும், அதற்கான முயற்சி எடுபடவில்லை.

ருக்மிணி விஜயகுமார், டெல்லி கணேஷ், ஷ்ரதா ஸ்ரீநாத்,
விபின் ஷர்மா ஆகியோர் பொருத்தமான தேர்வு.

ரவிவர்மன் காஷ்மீர் அழகையும், பனிப் பகுதிகளையும், மலைத்
தொடரையும் கேமராவுக்குள் அள்ளி வந்து கண்களுக்குள்
கடத்துகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வான் வருவான், சாரட்டு வண்டியில
பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை படத்துடன்
ஒன்றிப் போகிறது. ஸ்ரீகர் பிரசாத் சில இடங்களில் கத்தரி
போட்டிருக்கலாம்.

மணிரத்னம் முந்தைய படங்களுக்கான அதே டெம்ப்ளேட்டில்
படம் இயக்கியிருப்பது ரசிகர்களுக்கு சோதனையாக அமைந்து
விடுகிறது. கிளிஷே காட்சிகள் பொறுமை இழக்க வைக்கின்றன.

கதாபாத்திரங்களுக்கான ஆட்டிட்யூட் சரியாக காட்சிப்
படுத்தப்படவில்லை. இதனால் வரும் மோதல், கசப்புகள் பெரிய
அளவில் ரசிகனை பாதிக்கவில்லை. திரைக்கதை எந்த வித
அழுத்தமும் இல்லாமல் வெறுமனே கடந்து போகிறது.

கார்கில் போர், கைதி, சிறைவாசம் என்பவை வெறும்
சடங்குகளாகவே நிறுவப்பட்டுள்ளன. 1999 காலகட்டம் என்று
இயக்குநர் புத்திசாலித்தனமாக தப்பிக்க நினைத்தாலும் அவை
நம்பும்படியாகவோ, ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவோ இல்லை.
கார்த்தியின் பெற்றோர் தொடர்புடைய காட்சிகளில் நாடகத்
தன்மையே மேலோங்கி நிற்கிறது.

மொத்தத்தில் 'காற்று வெளியிடை' வழக்கமான மணிரத்னம்
சினிமாவாக அமைந்துவிட்டது.
-
---------------------------------
தி இந்து

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35999
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: காற்று வெளியிடை - வழக்கமான மணிரத்னம் சினிமா!

Post by krishnaamma on Sun Apr 09, 2017 10:42 am

அதிதி ராவ் ஹைதரியின் நடிப்பு அபாரம். மகிழ்ச்சி, கோபம்,
அழுகை, கெஞ்சல் என்று உணர்வுகளை கண்களின் வழியே
மிகச் சரியாக வெளிப்படுத்துகிறார். உள்ளச் சிக்கலை மிகச்
சரியாக கையாண்டுள்ளார்.


இவங்க மட்டுமே படத்துக்கு பலம்......கார்த்தி நடிக்கவே இல்லை........உதட்டை கோணிக்கொண்டு இருக்கிறார் அவ்வளவுதான் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு முதல் நாள் இருபத்து நாலு மணிநேரம் அப்சர்வேஷன் இல் இருந்த ஆள், மறுநாள் தலைக்கு கட்டுகளைக் காணும், தலை முழுக்க முடி இருக்கு, முகத்தில் இருந்த பிளாஸ்டர்களைக் காணும், அப்படியே எழுந்து போய் பிளைன் ஓட்டுகிறார்............மஹா அபத்தம்.......... .இதுபோல பல 'ஓட்டைகள்' இருக்கு படத்தில்...........சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum