ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 ayyasamy ram

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 ayyasamy ram

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 ayyasamy ram

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

வெறுப்பா இருக்கு!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு

View previous topic View next topic Go down

வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு

Post by ராஜா on Sun Apr 09, 2017 5:28 pm

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எதற்கும் அஞ்சாமல் தனியாளாக கொடிய பாம்புகளை பிடித்து வந்தவர், பூனம்சந்த் வயது 45. கடலூர் மக்களால் ‘பாம்பு பிடி மன்னன்’ என்று அழைக்கப்பட்டவர். எந்த வகை பாம்பு என்றாலும், எவ்வளவு பெரிதாக இருந்தாலும் துணிச்சலாக கையாலே பிடித்துவிடுவார். அதனால் நள்ளிரவு நேரத்திலும் இவரது செல்போனுக்கு அழைப்பு வரும், தங்கள் வீட்டில் பாம்பு புகுந்திருக்கிறது என்று!

இவர் ஓடி ஓடிப்போய் பாம்புகளை பிடித்ததற்கு, அவைகள் மீது இவர் வைத்திருந்த பாசம்தான் காரணம். பெரும்பாலானவர்கள் பாம்பை பார்த்தால் பயந்து போய் அடித்துக்கொன்றுவிடுவதால், அவைகளை பிடித்து பாதுகாத்து, காட்டுக்குள் கொண்டுபோய்விடும் பொறுப்பான சேவையை பூனம்சந்த் செய்துகொண்டிருந்தார். ஆனால் ஏராளமான பாம்புகளை வாழவைத்த அவரது வாழ்க்கையை ஒரு நாகப்பாம்பு முடித்துவிட்டது. அவரது மனைவியையும், அவர்களது பிஞ்சுக்குழந்தைகள் மூவரையும் அனாதையாக்கி அழவைத்திருக்கிறது. பாம்புகள் மீது வைத்திருந்த பாசம் பரிதாபமாய் முடிந்திருக்கிறது.

எப்படி நடந்தது இந்த சோகம்?

முதலில் பூனம்சந்த்தின் பூர்வீகம். இவரது மூதாதையர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். ஆனால் பூனம்சந்த் வெகுகாலமாக கடலூரிலேயே வசித்து வந்தார். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விதிஷ்டா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். அவர்களுக்கு கோவர்தனி, கோமுகி என்ற இரண்டரை வயது இரட்டைக் குழந்தைகளும், தனுஸ்ரீ என்ற 7 மாத கைக்குழந்தையும் உள்ளது.பாம்பு பிடி வீரரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பரிதாப முடிவு அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்த நாம் அவரது வீடு தேடி சென்றோம். வசிக்கும் வாடகை வீட்டிலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதால், குழந்தைகளோடு மரத்தடியில் அமர்ந்துகொண்டு விதிஷ்டா கண்ணீர் மல்க நம்மிடம் பேசினார்.

“நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குமாரமங்கலம் என்ற ஊரில் பிறந்தேன். ஆறு பெண்களில் நான் மூன்றாவதாக பிறந்தேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு பூனம்சந்த் கடலூரில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு பிடிக்க சென்றார். அப்போது அவரை அங்கிருந்த கருநாகம் கடித்தது. அங்கிருந்தவர் களிடம் 10 நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்தால் மட்டுமே நான் உயிர் பிழைப்பேன் என்று கூறியிருக்கிறார். உடனடியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஒன்றரை மாதத்திற்கு மேல் சிகிச்சை பெறவேண்டியதிருந்தது. அந்த காலகட்டத்தில் நான் அவரது அண்ணனின் கடையில் தையல் வேலை செய்துவந்தேன்.

அவரை மருத்துவமனையில் கவனிக்க ஆள் இல்லாத நிலையில் நான், அவ்வப்போது அங்கு சென்று அவரை பார்த்தேன். அதுவே காதலானது. அவரை காதலித்ததற்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். அவரது நண்பர்கள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் காதலுக்கு பாம்புதான் காரணம். அவர் இரவு-பகல் பாராது பாம்பு பிடித்து மக்களுக்கு உதவியதால் அவர் மீது ஈடுபாடுகொண்டு கல்யாணத்திற்கு சம்மதித்தேன். அப்படிப்பார்த்தால் எங்கள் திருமணத்திற்கும் பாம்புதான் காரணம்.

எங்கள் திருமணத்திற்கு பின்பும் அவர் பாம்புகள் மீதான காதலை விடவில்லை. எந்த நேரத்தில் யார் அழைத்தாலும் உடனடியாக சென்று பாம்புகளை பிடித்து வருவார். அவர் நான்காம் வகுப்பு படித்தபோது, அவரது வீட்டிற்குள் புகுந்த பாம்பை பயமின்றி பிடித்திருக்கிறார். அதை பார்த்த குடும்பத்தினர் வியப்பாக பேச, பின்பு அதுவே அவர் வாழ்க்கையாகிப்போனது. ‘பாம்புகளை பாதுகாக்க தனி அமைப்புகள் இல்லை. மக்கள் பாம்புகள் மீது உள்ள அச்சத்தின் காரணமாக அதை கண்டதும் அடித்து கொன்று விடுகின்றனர். அவைகளை காப்பாற்றவேண்டும்’ என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. பாம்புகளின் பாதுகாவலனாகவே வாழ்ந்து வந்தார். ஆனால் அதுவே அவருக்கு எமனாகி விட்டது” என்றார்.

பூனம்சந்த் தான் பிடித்த பாம்புகளை அரசு அனுமதியோடு சில நாட்கள் தன் வீட்டில் வைத்து பாதுகாத்து, 2 வாரத்திற்கு ஒருமுறை வேப்பூரில் உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டு வந்திருக்கிறார். இதற்காக கடலூர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்றவர்கள் முன்பு வாகனங்கள் கொடுத்து உதவி யிருக்கிறார்கள். பின்பு சேவை மனம்கொண்ட நண்பர்களின் வாகனங்களை அதற்காக பயன்படுத்தி வந்திருக்கிறார்.

இவ்வாறாக பாம்புகளை நேசித்து வந்த இவர், தனது குடும்பத்தையும் நேசிக்க தவறியதில்லை. வீட்டில் இருந்தபோது தனது குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்திருக்கிறார். மரணமடைவதற்கு ஒரு நாளுக்கு முன்பு வரை அந்த மகிழ்ச்சி நீடித்திருக் கிறது.

பூனம்சந்த் மரணமடைந்தது மார்ச் 15-ந் தேதி. அன்று என்ன நடந்தது என்று விதிஷ்டா சொல்கிறார்!

“அவர் பாம்பு பிடிக்க செல்வதற்கு நான் ஒருபோதும் தடைபோட்டதில்லை. அதற்கு யாரிடமும் பணம் வாங்க மாட்டார். அதை மக்கள் மற்றும் பாம்புகளுக்கான சேவையாக செய்துவந்தார். நான் முதலில் பாம்புகளை பார்த்து பயந்தேன். காலப்போக்கில் அந்த பயம் போய்விட்டது. என் குழந்தைகளும் பாம்புக்கு பயப்பட மாட்டார்கள்.

அவரை 19 முறை பாம்புகள் கடித்திருக்கின்றன. 18 முறை காப்பாற்றிவிட்டோம். இந்த முறை விதி ஜெயித்துவிட்டது. நான் அவருக்கு ஆபத்தை பற்றி உணர்த்தியபோதெல்லாம், ‘கடவுள் எனக்கு பாம்பை பிடிக்கும் தைரியத்தையும், ஆற்றலையும் கொடுத்து இருக்கிறார். எனவே எனது உயிரை மட்டும் பார்க்க கூடாது’ என்று கூறி என்னை வாயடைக்கவைத்துவிடுவார்.

வேலை எதுவும் இல்லாமல் சேவை செய்துகொண்டிருந்த அவருக்கு, கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் ஆமை முட்டைகளை சேகரிக்க வனத்துறையில் இருந்து தற்காலிகமாக வேலை வழங்கினர். அதற்கு மாத ஊதியமாக ரூ.5,500 வழங்கினர். இரவு மட்டும் தான் அந்த வேலை. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது. அதனால் வேலைக்கு போக முடியாமல் 3 நாட்கள் வீட்டில் எங்களுடன்தான் இருந்தார்.

15-ந் தேதி காலையிலும் வழக்கம்போல் சிலர் பாம்பு பிடிக்க செல்போனில் அழைத்தனர். நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கிச் சென்று, 3 இடங்களில் பாம்பு பிடித்து விட்டு மதியம் 1 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது கைக்குழந்தை தனுஸ்ரீயை எடுத்து கொஞ்சிக்கொண்டு இருந்தவர் திடீரென சோர்ந்து காணப்பட்டார். ஏன் சோர்வாக இருக் கிறீர்கள் என்று கேட்ட போது உடல்நிலை சரியில்லை என்று கூறியபடி மயங்கி விட்டார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். அவரை அன்று பாம்பு கடித்தது எங்களுக்கு முதலில் தெரியாது. டாக்டர்கள்தான் அவரது முதுகு பகுதியில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருப்பதாக சொன்னார்கள். விஷம் நிறைந்த நாகப்பாம்பு அவர் உயிரை எடுத்துவிட்டது. வசிக்க வீடுகூட இல்லாத நாங்கள் அனாதையாகிவிட்டோம். எந்த உதவியும் இல்லாமல் நிர்கதியாக நிற்கிறோம்” என்று அழுகிறார். அம்மா ஏன் அழுகிறார் என்ற காரணம் தெரியாமல் குழந்தைகளும் அழுகின்றன.
-தினத்தந்தி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு

Post by ராஜா on Sun Apr 09, 2017 5:29 pm

இந்த பிஞ்சு குழந்தைகளின் முகத்தை பார்க்கும்போது மனம் கனக்கிறது அழுகை அழுகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு

Post by M.Jagadeesan on Sun Apr 09, 2017 5:40 pm

" பாம்போடு பழகேல் " என்பது ஒளவையின் ஆத்திசூடி !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5086
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு

Post by Dr.S.Soundarapandian on Sun Apr 09, 2017 6:37 pm

சோகம் சோகம் சோகம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4497
மதிப்பீடுகள் : 2387

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு

Post by krishnaamma on Mon Apr 10, 2017 12:59 am

ரொம்ப பாவம் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum