ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

கா(த)ல் பந்து – கவிதை
 ayyasamy ram

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

Introduction
 chandram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 T.N.Balasubramanian

நான் விட்டுவிடமாட்டேன் !
 ayyasamy ram

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 Dr.S.Soundarapandian

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பீலிபெய் சாகாடு---(விவாதம்)

View previous topic View next topic Go down

பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by ayyasamy ram on Mon May 08, 2017 12:52 pm

ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியர் பெ.சிதம்பரநாதன்
பீலிபெய் சாகாடும் என்ற குறட்பாவில் ‘பீலி’ என்றே
மீண்டும் குறிப்பிடாமல் அப்பண்டம் எனத் திருவள்ளுவர்
குறிப்பிட்டது ஏன் என வினவியிருந்தார்.

இதோ அதற்குப் பதில் கூறுகிறார்கள் (அமுதசுரபி)
நம் வாசகர்கள் - ஆசிரியர்
-
---------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30924
மதிப்பீடுகள் : 9508

View user profile

Back to top Go down

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by ayyasamy ram on Mon May 08, 2017 12:55 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30924
மதிப்பீடுகள் : 9508

View user profile

Back to top Go down

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by ayyasamy ram on Mon May 08, 2017 12:55 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30924
மதிப்பீடுகள் : 9508

View user profile

Back to top Go down

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by ayyasamy ram on Mon May 08, 2017 12:57 pm


-
மிக மிக மென்மைத்தன்மை கொண்டது என நாம்
அறியமுடிகிறது. அது போல பீலியை விட இலேசான
பண்டம் (பொருள்) இருந்து விட்டால்‘அப்பீலி’
பொருந்தாது.

நமக்குத் தெரிந்திராத ஒன்றை ‘இல்லை’ எனக்
கூறமுடியாது. இது அறிவியல் கண்ணோட்டம்.
இக்காரணங்க்கொண்டு ‘அப்பண்டம்’ பொருத்தமானதே!
-
இரெ.இராம்மூர்த்தி, சிதம்பரம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30924
மதிப்பீடுகள் : 9508

View user profile

Back to top Go down

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by M.Jagadeesan on Mon May 08, 2017 5:31 pm

இந்த ஐயம் எனக்கும் இருந்தது . மிகவும் லேசான பொருள் மயிற்பீலி மட்டும்தானா ? வேறு பொருள் இல்லையா ? ஏன் வள்ளுவர் இக்குறளில் மயிற்பீலியைப் பயன்படுத்தவேண்டும் ?

"வைக்கோல் " மிகவும் லேசான பொருள்தானே ! அதை ஏன் வள்ளுவர் பயன்படுத்தவில்லை ?

வைக்கோலை " வைத்தூறு " என்று வள்ளுவர் குறிப்பிடுவார் .

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக்  கெடும் .( குற்றம்கடிதல் -435 )

வண்டியில் அதிகப்படியான வைக்கோல் ஏற்றினால் , அச்சு முறியாது ; அதற்கு முன்பாக வண்டி குடை சாய்ந்துவிடும் என்பது அறிவியல் உண்மை . ஏனென்றால் வண்டியின் புவிஈர்ப்புதானம் சக்கரங்களுக்கு வெளியே விழுமானால் வண்டி குடைசாய்ந்து விடும் . ஆனால் மயிற்பீலி அப்படியல்ல ! எவ்வளவு ஏற்றினாலும் புவிஈர்ப்பு மையம் வெளியில் விழாது . ஆனால் அதிகப்படியான எடையின் காரணமாக அச்சு முறியும் அபாயம் உள்ளது .
எனவேதான் வள்ளுவர் மயிற்பீலியைப் பயன்படுத்தினார் என்று நினைக்க இடம் உண்டு .

மயிற்பீலியைவிட லேசான பொருள் என்று எடுத்துக்கொண்டால் " பஞ்சு " உள்ளது . அதுவும் வைக்கோல்போர் போல இடத்தை அடைத்துக்கொள்ளும் .வண்டி குடைசாயக் காரணமாகிவிடும் . எந்த இடத்திலும் வள்ளுவர் " பஞ்சு அல்லது பருத்தி " என்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்றே எண்ணுகிறேன் .

அடுத்து லேசான பொருள் " தெர்மோகோல் " உள்ளது . அது வள்ளுவர் காலத்தில் இல்லை . எனவே வள்ளுவர் மயிற்பீலியைப் பயன்படுத்தியதில் தவறில்லை !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4743
மதிப்பீடுகள் : 2312

View user profile

Back to top Go down

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by krishnaamma on Mon May 08, 2017 5:45 pm

அருமையான விவாதம், அருமையான விளக்கங்கள் ! மிக நன்றாக இருக்கிறது படிக்க புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by krishnaamma on Mon May 08, 2017 5:46 pm

விவாதம் என்று தலைப்பு கொடுத்துள்ளதால், இங்கு மாற்றிவிட்டேன் ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by M.Jagadeesan on Mon May 08, 2017 7:35 pm

200 வது குறளை இங்கு குறிப்பிட்டதால் இந்த விளக்கத்தை அளிக்கின்றேன் .

சொல்லுக சொல்லில் பயனுடைய  சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் . ( பயனில சொல்லாமை )

இக்குறள் சற்று ஆராயத்தக்கது .

பொருள் :   பயனுள்ள சொற்களைப் பேசுக .  பயனற்ற சொற்களைப் பேசாதே .

" சொல்லுக சொல்லில் பயனுடைய " என்று எழுதிய பிறகு " சொல்லற்க பயனிலாச்  சொல் " என்று ஏன் மறுபடியும் எழுதவேண்டும் ? இரண்டும் ஒரே பொருள்தானே ! ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் சொல்வது " கூறியது கூறல் " என்ற குற்றத்தின்பாற் படாதா ? என்று கேட்பாரும் உண்டு .

எப்போதும் உண்மை பேசு ! என்று சொன்ன பிறகு எப்போதும் போய் பேசாதே ! என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே !

அப்படியென்றால் வள்ளுவர் தவறிழைத்தாரா ? என்று கேட்கத் தோன்றும் . நிச்சயமாக இல்லை . மேன்மக்களுக்கு ஒருமுறை சொன்னால் போதும் . ஆனால் கீழ்மக்கள் அவ்வாறு ஒருமுறை சொன்னால் திருந்த மாட்டார்கள் .திரும்பத் திரும்பச் சொன்னால்தான் கேட்பார்கள் . எனவேதான் " உண்மை பேசு " என்று உடன்பாடாகவும் , " பொய் பேசாதே "   என்று எதிர்மறையாகவும் சொல்ல நேரிட்டது .

' ஊருக்குப் போய் சேர்ந்தவுடன் போன் போடு "

" போன் போடாமல் இருந்துவிடாதே "

என்று நாம் சொல்வதில்லையா ! அதுபோலத்தான் இதுவும் .


Last edited by M.Jagadeesan on Mon May 08, 2017 8:03 pm; edited 1 time in total
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4743
மதிப்பீடுகள் : 2312

View user profile

Back to top Go down

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by ayyasamy ram on Mon May 08, 2017 7:46 pm

M.ஜெகதீசன்
-
குறள்களை மேற்கோள் காட்டி விளக்கியது...
-
---------------------------

ஒரே பொருளை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் கூறியது
அதை வலியுறுத்தற்காதலின் , கூறியது கூறலன்று.
-
ஒரே சொல் பொருள் மாறாது திரும்பத் திரும்ப வந்தது
'சொற்பொருட் பின்வருநிலை' யணியாம்.
-
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30924
மதிப்பீடுகள் : 9508

View user profile

Back to top Go down

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by விமந்தனி on Mon May 08, 2017 8:58 pmavatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by Dr.S.Soundarapandian on Sun May 14, 2017 8:47 am

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3825
மதிப்பீடுகள் : 2003

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by SRINIVASAN GOVINDASWAMY on Sun May 14, 2017 9:25 pm

"சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்"

இக்குறளுக்கு  மேலோட்டமான பொருளுரையை பார்ப்பதைவிட "பயனில சொல்லாமை" அதிகாரத்தின் தீர்க்கமான முடிவுரையாக  கொள்ளலாம்.அதிகாரத்தின் தலைப்பை கருதி , பயனுள்ள சொற்களை பேசுவதால் ஏற்படும் நன்மையை விட பயனில்லாதவற்றை பேசுவதால் ஏற்படும் தீமை மற்றும்  இகழ்ச்சி போன்றவைகளுக்கு வலுசேர்த்து,  அறவே கூடாது என அரிதிட்டு விளக்குகிறார்.  

ஒரு சொல்லுக்கு இது  இப்படித்தான்  பொருள்  என்று  அரிதிட்டு வரையறுக்க முடியாது.  சொல் ஒரு கருவி , காரணம் கிடையாது. மேலும்  ஒரே  சொல்லுக்கு பல பொருள் உண்டு ,  இடத்திற்கு இடம்  அதே சொல்லின் பயன் (அ) விளைவுகள் மாறுபடலாம்.

எனவே இக்குறளில்,  பயனின் தன்மையை உணர்ந்து சொற்களை பயன்படுத்தும் படி   அறிவுறுத்துகிறார்.  அப்படி பயன்படுபடியான சொற்களை கூறாவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் மறந்தும் கூட  பயனில்லாத சொற்களை இடம் , பொருள் , ஏவல் அறியாமல் தான் தோன்றி தனமாக பயன்படுத்ததே என எச்சரிக்கை செய்கிறார்.  ஏன்னெனில் பயனில்லாதவற்றை பேசுவதால் ஏற்படும் இடர்பாடுகளை மற்ற ஒன்பது குறளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

உதாரணம் :  மேனேஜ்மென்ட் மீட்டிங்கில் பயனுள்ளவற்றை கூறாதவர்களுக்கு கூட பாதகமில்லை. ஆனால் பயனில்லாதவற்றை  பேசுவதால்  மீட்டிங்கின் திசைமாறி   முடிவும் எட்டப்படாது  அடுத்த மீட்டிங்கிற்கு அழைக்கவும் மாட்டார்கள்.

"பயனில சொல்லமை"  பத்துக்கு குறளின் வாழ்வியல் கருத்துரை    

விரும்புவோர் மற்றும்  விரும்பாதோர் என  கேட்போர் அனைவரும்  வெறுக்கும்படியான பயனற்ற விஷயங்களை  விரிவாகச் பேசுபவன்,   நண்பன் பகைவன் என பாகுபாடின்றி  அனைவராலும் இகழப்படுவான்.அப்படி  பலகாலம் விரித்துரைக்கும் அவனது  வெற்றுரையால்  அவன்  பெற்ற  புகழ்,பெருமைகள் அனைத்தும் படிப்படியாக  நீங்கி  மனிதனாக  மதிக்கப்படாமல் மனிதருள் பதர் என்றே உணர்த்தப்படுவான்.  

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய  சான்றோர்கள் , நயமாக பேசா வாய்ப்பில்லாத நிலையில் கூட , மறந்தும் பொருளற்ற  சொற்களை  கூறமாட்டார்கள், ஆகவே யாருக்கும் பயன் படாத  இவ்வெற்றுறை  நண்பர்களுக்கு  செய்யும்  தீமையை  காட்டிலும்  கொடியது என்ற வள்ளுவனின் பயனுள்ள அறிவுரையை மனதில் கொண்டு, பயனுள்ள சொற்களை பகுத்தாய்ந்து பலரும் பாராட்டும்படி பண்புடன் பகிர்வோம், வாழ்வில்  பயனுறுவோம்
avatar
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by M.Jagadeesan on Sun May 14, 2017 10:55 pm

பயனற்ற சொற்களைப் பேசுபவன் , தன்னுடைய நேரத்தை மட்டுமின்றி , கேட்பவனின் நேரத்தையும் வீணடிக்கிறான் . ஆகவே பயனற்ற சொற்களை  ஒருவன் பேசக்கூடாது என்ற கருத்தும் , இக்குறளின் மூலமாகப் பெறப்படுகிறது .

ஆனாலும்கூட , வள்ளுவப் பெருந்தகை , ஒரே கருத்தை உடன்பாடாகவும் , எதிர்மறையாகவும் சொல்லும் மற்றொரு   குறளையும் பார்க்கலாம் .

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். ( 26 )

என்பது அக்குறள் . இக்குறளும் கூறியது கூறல் என்ற குற்றத்தின் பாற்படுமோ  என்று எண்ணத்தகுவது .

பெரியவர்கள் பிறரால் செய்தற்கு அரிய காரியங்களைச் செய்வார்கள்.சிறியவர்கள் அத்தகைய அரிய காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்பது இதன் பொருள்.

செய்வதற்கு அருமையான காரியங்களைச் செய்பவர்களே பெரியவர்கள் என்று கூறிவிட்டபொழுதே சிறியவர்கள் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் என்ற கருத்து தானாகவே பெறப்படுகிறது அல்லவா ! அப்படியிருக்க  ஒரே கருத்தை ஏன் இரண்டுமுறை கூறவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா ?

திருவள்ளுவர் தவறு செய்திருக்கமாட்டார் . " எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்" என்ற பழமொழிக்கு ஏற்ப திருக்குறளை பிரதி எடுத்தவர்கள் செய்த தவறு இக்குறளில் உள்ளது என்பார் டாக்டர் கி . ஆ .பெ . விஸ்வநாதம் அவர்கள் .
 

எனவே ஈற்றடியில் உள்ள 'க'-வை "கு' என்று திருத்தினால் சரியாகக் காணப்படும். அப்போது -

"பெரியவர்கள் பிறரால் செய்தற்கு முடியாத அரும்பெரும் காரியங்களைச் செய்வார்கள் ஆனால் சிறியவர்களோ எளிதில் செய்யக்கூடிய சிறிய காரியங்களைக்கூடச் செய்யமாட்டார்க ள்" என்பதாகும்.

ஆகவே குறள்,

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்குரிய செய்கலா தார்.

என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பார் டாக்டர் கி . ஆ . பெ அவர்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4743
மதிப்பீடுகள் : 2312

View user profile

Back to top Go down

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)

Post by M.Jagadeesan on Sun May 14, 2017 11:15 pm

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் .

என்ற குறளில் அப்பண்டம் என்பதற்குப் பதிலாக " அப்பீலி " என்று குறிப்பிட்டிருக்கலாமே என்பது ஓம்சக்தி இதழின் பொறுப்பாசிரியர் பெ . சிதம்பரநாதன் அவர்களின் வாதம் .

அப்பண்டம் என்றாலும் அப்பீலி என்றாலும் வெண்பா இலக்கணம் தலை தட்டவில்லை என்பது காண்க . இதில் பெரிய குற்றம் ஏதும் இருப்பதாக எனக்குப் படவில்லை .

கீழ்வரும் எடுத்துக்காட்டைக் கவனிக்க .

அப்பாவுடன் கடைத்தெருவுக்குச் சென்றேன் ; அவர் எனக்கு சட்டை எடுத்துக்கொடுத்தார் .

அப்பாவுடன் கடைத்தெருவுக்குச் சென்றேன் ; அப்பா எனக்கு சட்டை எடுத்துக் கொடுத்தார் .

இந்த இரு வாக்கியங்களில் " அவர் " என்றாலும் " அப்பா " என்றாலும் ஒன்றுதான் .

அதுபோல " அப்பண்டம் " என்றாலும் " அப்பீலி " என்றாலும் ஒன்றுதான் . இதில் என்ன பெரிய தவறு நிகழ்ந்துவிட்டது ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4743
மதிப்பீடுகள் : 2312

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum