ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 ayyasamy ram

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 ayyasamy ram

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 ayyasamy ram

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகமெங்கும் 99 நாடுகளில் இணைய தாக்குதல்; கணினிகள் முடக்கத்தால் பெரும் பரபரப்பு

View previous topic View next topic Go down

உலகமெங்கும் 99 நாடுகளில் இணைய தாக்குதல்; கணினிகள் முடக்கத்தால் பெரும் பரபரப்பு

Post by ayyasamy ram on Sun May 14, 2017 5:20 pm


-
உலகமெங்கும் 99 நாடுகளில் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் கணினிகள் முடங்கின. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மே 14, 2017, 05:15 AM
சியாட்டில்,

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய,
இணையவழி தாக்குதல்களை நடத்துகிற ஆற்றல் வாய்ந்த டூல்களை
(கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 99 நாடுகளில் உள்ள நிறுவனங்கள்
மற்றும் பல்வேறு அமைப்புகளில் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கணினிகளில் சட்டவிரோதமாகவும், திருட்டுத்தனமாகவும் புகுந்து
தாக்குதல் நடத்துகிற ‘தி ஷேடோ புரோக்கர்ஸ்’ என்று அழைக்கப்படுகிற
ஹேக்கர்கள்தான் கடந்த ஏப்ரல் மாதம் தேசிய பாதுகாப்பு முகமை
உருவாக்கிய ‘டூல்’களை (கருவிகளை) திருடியதாகவும், அவற்றை
இணையதளத்தில் ஏலம் மூலம் விற்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

‘பாஸ்வேர்டு’
ஆனால் பின்னர் அந்த கருவிகள் இலவசமாக கிடைத்ததாகவும்,
அவற்றை பயன்படுத்துவதற்கான ‘பாஸ்வேர்டு’ கடந்த மாதம் 8–ந்
தேதி வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கிற
வகையில்தான் அந்த டூல்களை பயன்படுத்துவதற்கான பாஸ்வேர்டுகளை
வெளியிட்டதாகவும் ஹேக்கர்கள் கூறி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில், அந்த ‘டூல்’களை
பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களால் ரஷியா, சீனா, உக்ரைன்,
தைவான் ஆகிய நாடுகளில் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளின்
கணினிகள் முடங்கின. இந்தியாவிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக
தகவல்கள் கூறுகின்றன.

இங்கிலாந்தில் சுகாதார சேவை பாதிப்பு
-
இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் தேசிய சுகாதார சேவை
முடங்கிப்போய் விட்டது. 40 தேசிய சுகாதார சேவை அமைப்புகளும்,
சில மருத்துவ தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தான்
உணர்ந்துள்ளதாக பி.பி.சி. கூறுகிறது.

இதன் காரணமாக அறுவை சிகிச்சைகள், நோயாளிகளுக்கு
டாக்டர்கள் அளித்த அப்பாயிண்மெண்டுகள் ரத்தாகி உள்ளன.

ஸ்பெயின், ஜெர்மனி
-
ஸ்பெயின் நாட்டில் பிரசித்தி பெற்ற தொலை தொடர்பு நிறுவனம்
டெலிபோனிகா, மின் நிறுவனம் இபெர்ட்ரோலா, கியாஸ் நேச்சுரல்
நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்
பட்டுள்ளதாகவும், கணினிகளை மூடி விடுமாறு ஊழியர்களை
அந்த நிறுவனங்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.

ஜெர்மனியில் உள்ளூர் ரெயில் பயணத்துக்கான
டிக்கெட்டுகளை வழங்கும் எந்திரங்கள், இத்தாலியில்
பல்கலைக்கழக கணினி ஆய்வுக்கூடம் ஆகியவையும்
பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

ரஷியாவுக்கு மோசமான பாதிப்பு

பிற எந்த நாடுகளையும் விட ரஷியாதான் மிக மோசமாக
பாதிக்கப்பட்டுள்ளதாம். இதை ரஷிய உள்துறை அமைச்சகம்
உறுதி செய்தது.

தனது நாட்டில் கணினிகள் இணைய தாக்குதலுக்கு ஆளானது
குறித்து சீனா முறைப்படி எதுவும் கூறாவிட்டாலும், அதுவும்
பாதிப்புக்குள்ளாகி இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.
அங்கு பல்கலைக்கழக கணினி ஆய்வுக்கூடம் ஒன்றின்
கணினிகள் முடக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள்
தெரிவித்தன.

இப்படி உலகமெங்கும் 75 ஆயிரம் புகார்கள் எழுந்துள்ளனவாம்.

ஆனால் வைரஸ் தடுப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான
காஸ்பர்ஸ்கை, 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டு தாக்குதல்கள்
நடந்திருப்பதை பதிவு செய்துள்ளதாக கூறுகிறது.

மீண்டும் செயல்பட வைக்க பணம்
-
இணைய தாக்குதல் நடத்தி முடக்கிய ஒவ்வொரு கணினியையும்
மீண்டும் செயல்பட வைப்பதற்கு 300 டாலர் முதல் 600 டாலர் வரையில்
(சுமார் ரூ.19 ஆயிரத்து 500 முதல் ரூ.39 ஆயிரம் வரையில்)
பிட்காயின்களை (இணையவழி பணம்) செலுத்துமாறு கணினி
திரையில் தோன்றிய ‘வானாகிரை புரோகிராம்’ கூறியதாக
தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மேல்வேர் டெக் பிளாக்’
என்னும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், இணையவழி தாக்குதல்
வைரஸ் பரவுவதை தான் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வழிமுறையை
கண்டறிந்ததாக தெரிவித்தார்.

கணினிகளை முடக்கும் வைரஸ்களில் இருந்து காக்கும் வழிமுறைகளை
தனது என்ஜினீயர்கள் உருவாக்கி இருப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்கு
உதவி வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் உலகம் முழுவதும் இந்த பிரச்சினை பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
-
--------------------------------------------
தினத்தந்தி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32943
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum