ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 ராஜா

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 M.Jagadeesan

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ்நாட்டில் கூகுள்?

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டில் கூகுள்?

Post by T.N.Balasubramanian on Mon Jun 26, 2017 10:21 pm

தமிழ்நாட்டில் கூகுள்?

சர்வதேச அளவில் பணி புரிவதற்கு ஏற்ற மிகச் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும்
நிறுவனம் கூகுள். வழியைக் கண்டுபிடிப்பதற்கு கூகுள் மேப் உதவும். பிற தகவல்களை விரல் நுனியில்
பெறுவதற்கு அனைவரும் நாடும் ஒரே இணையதளம் கூகுள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கூகுள் மையம்
தமிழ்நாட்டில் தனது மையத்தைத் திறந்தால்...
கடந்த வாரம் சட்டப் பேரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தமிழகத்தில் கூகுள் மையம் அமைப்பதற்கான
நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியது பலருக்கு இனிப்பான செய்தி. சென்னையிலோ அல்லது மதுரையிலோ
மிகப் பெரிய மையத்தை அமைப்பது தொடர்பாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன்
பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாக கூறினார். இந்த பேச்சு வார்த்தை சாத்தியமானால் தமிழக தகவல் தொழில்நுட்பத்
துறையில் மிகப் பெரிய சாதனையாகத்தான் இருக்கும்.
கலிபோர்னியா மாகாணம் மவுன்டன் வியூவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள கூகுள் நிறுவனம் உலக அளவில் பணி
புரிவதற்கு ஏற்ற நிறுவனமாகத் திகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முக்கியமானது நிறுவன
ஊழியர்களது சம்பளம். அதேபோல பணியாளர்களுக்கு வேலை மீதான திருப்தி, பணி புரிவதை அர்த்தமுள்ளதாக்குவது
ஆகியன பிரதானமாக உள்ளன. இங்குள்ள பணியாளர்களில் 86 சதவீதம் பேர் அதிக மகிழ்ச்சி அல்லது ஓரளவு மகிழ்ச்சியுடன்
பணி புரிவதாகக் கூறுகின்றனர்.
பணியாளர்களுக்கு பணி புரிவதற்கேற்ற சூழலை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறது இந்நிறுவனம். வேலையை
மகிழ்ச்சியாக, சுலபமாக செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது.
இங்குள்ள 64 ஆயிரம் பணியாளர்களுக்கும் இலவச மருத்துவக்காப்பீடு, லாண்டரி வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம்,
பெற்றோரைக் கவனிக்க போதிய விடுப்பு, குழந்தைகளைப் பாதுகாக்க மிகச் சிறந்த காப்பகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்
இந்நிறுவனத்தில் உளளன.
ஊழியர்களின் முழுத் திறனை வெளிக் கொணர அவர்களுக்கு வசதியான நேரத்தில் பணி புரிய வாய்ப்பு ஆகியன இதில்
சிறப்பம்சமாகும்.
ஊழியர்கள் ஒவ்வொருவரும் தாங்களும் தொழிலைக் கற்று சக பணியாளர்களுக்குக் கற்றுத் தரும் பயிற்சியாளராக மாறுகின்றனர்.
இதனால் பணிபுரியும் சூழல் மிகச் சிறப்பாக உள்ளது. போட்டி நிறுவனங்களை விட இங்கு ஊதியம் அதிகம். இரண்டாண்டு பணி புரிந்த
ஊழியரின் ஆண்டுசம்பளம் 1.4 லட்சம் டாலராகும். ஆரம்ப நிலை பணியாளரின் ஆண்டு சம்பளம் 93 ஆயிரம் டாலராகும்.
உலக அளவில் 50 நாடுகளில் 70 அலுவலகங்களை கூகுள் அமைத்துள்ளது.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்த மையம்
அமைந்தால், அது மேலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்கும். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல்
அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சுந்தர் பிச்சை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமிழகத்தின் மீது கூடுதல் அக்கறை இருக்க வாய்ப்புண்டு.
அரசியல் ஆதாயத்துக்காக இல்லாவிட்டாலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த அத்தியாயம் தொடங்க கூகுளை தமிழகத்துக்கு
அழைத்து வருவதன் மூலம், ஐடி துறையில் தமிழகம் பெங்களூருக்கு இணையாக வளர வழியேற்படுத்தும். அதிமுக அரசு செய்யுமா?


நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Jun 26, 2017 10:36 pm; edited 1 time in total


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20607
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் கூகுள்?

Post by T.N.Balasubramanian on Mon Jun 26, 2017 10:34 pm

US இல் வேலை நிரந்தரம் கிடையாது .
வெள்ளிக்கிழமை மாலை ,இனி வேலை கிடையாது என்று சம்பள செக்க்குடன் தகவல் வந்தால் வாயை மூடிக்கொண்டு வெளியே வரவேண்டியதுதான். தலைமை நடத்துனருக்கும் இது பொருந்தும்.
இந்தியாவில் இது முடியுமா ? கொடி பிடிப்பார்களே ! கூகுள் தாங்குமா இதை .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20607
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் கூகுள்?

Post by M.Jagadeesan on Mon Jun 26, 2017 10:48 pm

ஒவ்வொரு தொழிற்சாலையாக தமிழ்நாட்டைவிட்டுப் போகும்போது கூகுளை மட்டும் இங்கு வரவிடுவார்களா என்ன ? இவர்கள் கேட்கும் கட்டிங் தொகை கோடிக்கணக்கில் இருக்கும் .அதெல்லாம் பிச்சையால் கொடுக்கமுடியுமா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4777
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் கூகுள்?

Post by T.N.Balasubramanian on Tue Jun 27, 2017 1:44 am

பிச்சை கேட்கும்போது
பிச்சை போடாதிருத்தல்
பிச்சைக்கு இழிவன்றோ.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20607
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் கூகுள்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum