ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜமுத்திரை -சாண்டில்யன்
 sukumaran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாடகமே உலகம்

View previous topic View next topic Go down

நாடகமே உலகம்

Post by T.N.Balasubramanian on Tue Jul 04, 2017 4:14 am

நாடகமே உலகம்

கூத்து என்னும் சொல் முதலில் நடனத்தையும், பின்பு கதை, தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது.
இயற்றமிழைப் புலவரும், இசைத் தமிழைப் பாணரும் பேணி வளர்த்தாற் போலவே, நடனத்தையும் நாடகத்தையும் கூத்தர்
என்போர் பேணி வளர்த்தனர். நடனம் ஆடும் மகளிர் விறலியர் எனப்பட்டனர். உள்ளக் குறிப்புப்புறத்தில் தோன்றும்படி திறம்பட
நடிப்பவள் விறலி (திருச்சிரப்பள்ளிக்கு அண்மையில் உள்ள விறலி மலை என்பது இன்று தவறாக 'விறாலிமலை' என வழங்குகிறது)
எனப்பட்டாள்.கூத்தி, கூத்தர் ஆகிய இவர்கள் கதை தழுவி வரும் கூத்துக்களை ஆடினர். அங்ஙனம் ஆடிய ஆண்மகன் பொருநன் என்றும்
பெயர் பெற்றான்.தமிழ் தொன்றுதொட்டு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகளைப் பெற்றிருந்தது. சிலப்பதிகாரம் ஒன்றே
இன்று நாடகக் காப்பியமாக இருந்து வருகிறது. சிலப்பதிகார காலத்தில் வடமொழியாளர் கூட்டுறவு தமிழகத்தில் மிகுதியாக இருந்தது.
அக்காலத்தில் நாடகம் என்னும் சொல், கூத்து என்னும் சொல் போன்றே நடனத்தையும், கதை தழுவி வரும் கூத்தையும் குறித்தது.
கோவில் விழாக்களிலேயே நாடகம் தோற்றம் எடுத்தது என்பது அறிஞர் கருத்து. ஆடல், பாடல் என்னும் இரண்டின் சேர்க்கையாக
முதலில் நாடகம் அமைந்திருந்தது. பின்பு, பாட்டாலமைந்த உரைநடை இடையிடையே கலந்தது. அதன் பிறகு பேச்சு நடையிலமைந்த
உரைநடை சேர்ந்தது. எனவே, ஆடல், பாடல் வடிவில் அமைந்த உரைநடை, பேச்சு உரைநடை என்பன சேர்ந்து நாடகத்தை அழகு செய்தன.
இங்ஙனம் வளரத் தலைப்பட்ட நாடகம், அரசருக்கு என்றும், பொதுமக்களுக்கு என்றும் இருவகையாகப் பிரிந்தது.
அவை, 'வேத்தியல்,' 'பொதுவியல்' எனப்பட்டன.நாடகம் நன்முறையில் வளர்ந்து வந்த பொழுது,
இந்நாட்டில் வந்து தங்கிச் செல்வாக்குப் பெற்ற ஆரியரும், சமணரும் நாடகம் காமத்தை மிகுதிப்படுத்துவதென்று தவறாக எண்ணினர்;
அதனால், நுால்களில் நாடகத்தின் மதிப்பைக் குறைத்தனர். அவர்கள் செல்வாக்கு மிகுதிப் பட்டிருந்த காலத்தில்,
நாடகத் தமிழை வளர விடாமல் தடுத்தனர். எனவே, நாடக வளர்ச்சி படிப்படியாகக் குறைந்தது.பல்லவர் காலத்தில்
கி.பி. 7ம் நுாற்றாண்டில் பல்லவ மகேந்திரவர்மன், 'மத்த விலாசப் பிரகசனம்' என்னும் வேடிக்கை நாடகத்தை வடமொழியில் எழுதினான்.
வடமொழியில் சிறு நாடகங்கள் சில இராசசிம்ம பல்லவன் காலத்தில் செய்யப்பட்டன. பக்தி இயக்கம் பரவத் தொடங்கிய
அக்காலத்தில் சமயம் தொடர்பான நாடகங்கள் தலைதுாக்கின என்பது தெரிகிறது. கி.பி. 8ம் நுாற்றாண்டில் செய்யப்பெற்ற
உதயணன் வரலாற்றைக் கூறும் 'பெருங்கதை'யிலும் நாடகத்தைப் பற்றிய செய்திகள் சில காணப் படுகின்றன.சோழர் காலத்தில்
கி.பி. 10ம் நுாற்றாண்டில் தோன்றிய சீவக சிந்தாமணி, நாடகம் காமத்தை மிகுவிக்கின்றது என்று கூறியுள்ளது.
“இளைமையங் கழனிச் சாயம்
ஏறுழு தெரிபொன் வேலி
வளைமுயங் குருவ மென்றோள்
வரம்புபோய் வனப்பு வித்திக்
கிளைநரம்(பு) இசையும் கூத்தும்
கேழ்ததெழுந் தீன்ற காம
விளைபயன் இனிதின் துய்த்து
வீணைவேந்(து) உறையு மாதோ.”
“நாடகத்தை விரும்பிக் காண்பவர் கண்களைத் தோண்டியும்.......
இவ்வாறு பிறரை ஐம்பொறியால் நுகராமல் தடுத்து யாமும் நுகர்ச்சியைக் கைவிட்டேம்” என வரும் தொடர்,
சமணர் நாடகத்தை எந்த அளவு வெறுத்தனர் என்பதை நன்கு காட்ட வல்லது.”
“நாடகம் நயந்து காண்பார் நலங்கிளர் கண்கள் சூன்றும்”

-முத்தி இலம்பகம்

இவற்றால், சிந்தாமணி எழுதப்பெற்ற கி.பி. 10ம் நுாற்றாண்டில் நாடகங்கள் தமிழ்நாட்டில் நடிக்கப்பெற்றன
என்னும் உண்மையை உணரலாம்.

சோழருக்குப் பின்

கி.பி.14ம் நுாற்றாண்டில், மாலிக்-கபூர் படையெடுப்புக்குப் பிறகு சேர, சோழ, பாண்டிய அரசுகள் நிலை தளர்ந்தன.
விஜயநகர வேந்தர் ஆட்சி சிறிதுகாலம் சமயத்தைப் பாதுகாத்தது.
அப்பொழுது இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் புத்துயிர் பெற்றன. தென்னாட்டில் நாயக்கராட்சி மறையும்
வரை இக்கலைகள் ஓரளவு உயிர்பெற்று வாழ்ந்தன. 17ம் நுாற்றாண்டுக்குப் பிறகு நாடு பல துறைகளிலும் அல்லற்பட்ட
காரணத்தால் நாடகம் முதலிய கலைகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன.
கி.பி.19ம் நுாற்றாண்டின் முற்பாதியில் கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் தஞ்சையை ஆண்ட சரபோஜிமன்னர்
மீது பாடிய குறவஞ்சி நாடகம் குறிப்பிடத்தக்கது.
அந்நாடகம் தஞ்சைப் பெரிய கோவிலில் நடிக்கப்பட்டு வந்தது. அதே நுாற்றாண்டின் கடைப் பகுதியில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
பாடிய மனோன்மணிய நாடகமும் போற்றத்தக்கதுவே.

இருபதாம் நுாற்றாண்டில்


இருபதாம் நுாற்றாண்டின் முற்பாதியில் நாடகக்கலை நன்கு வளர்ந்தது. பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் எழுதியுள்ள
பல நாடகங்கள் நாடெங்கும் நடிக்கப்பட்டன. சிறந்த நாடக ஆசிரியரான சங்கரதாஸ் சுவாமிகள் எழுதியுள்ள நாடகங்கள் பல.
அவற்றுள், அபிமன்யு சுந்தரி, பார்வதி கல்யாணம், பிரபுலிங்க லீலை, வள்ளி திருமணம், பாதுகா பட்டாபிஷேகம், இலங்கா தகனம்,
அல்லியர்ச்சுனா, சிறுத்தொண்டர், சதி அனுசூயா, பவளக்கொடி, மணிமேகலை, மிருச்சகடி, சீமந்தனி, சாவித்திரி, கோவலன்,
பிரகலாதன் என்பன குறிக்கத்தக்கவை.
கண்ணைய நாயுடு நாடகக் குழுவினர் நடித்து வந்த கிருஷ்ணலீலை, தசாவதாரம், ஆண்டாள் முதலிய நாடகங்கள்
முப்பது ஆண்டுகளுக்கு முன் நாட்டில் சிறந்து விளங்கின.
நவாப் இராசமாணிக்கத்தின் குழுவினர் வள்ளி திருமணம், சம்பூர்ண ராமாயணம் முதலிய நாடகங்களை நடித்து வந்தனர்.
காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களைக் கொண்டு நாடகங்கள் பல இப்பொழுது பலரால் நடிக்கப்பட்டு வருகின்றன.
என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினர், எம்.ஜி.ராமச்சந்திரன் குழுவினர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் குழுவினர், கே.ஆர்.ராமசாமி குழுவினர்,
சிவாஜி கணேசன் குழுவினர், எம்.ஆர்.ராதா குழுவினர், சகஸ்ரநாமம் குழுவினர், கே.ஏ.தங்கவேலு குழுவினர் முதலியோர்
பயன்தரத்தக்க நாடகங்களை நடத்தி வந்தனர்.


நன்றி.
தினமலர்.


ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: நாடகமே உலகம்

Post by ayyasamy ram on Tue Jul 04, 2017 9:03 am


-
ஆர்.எஸ்.மனோகர்
-------------------------------------
* பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
ஆனாலும், நாடகத்தின் மீதான காதலால்
'நேஷனல் தியேட்டர்ஸ்' நாடக நிறுவனத்தை 1954-ல்
தொடங்கினார்.

'இன்ப நாள்', 'உலகம் சிரிக்கிறது' ஆகிய சமூக நாடகங்களை
அரங்கேற்றினார்.

பின்னர் பிரம்மாண்ட இதிகாச, வரலாற்று நாடகங்களை
அரங்கேற்றினார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10757

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum