ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பழசிராஜா - திரைவிமர்சனம்

View previous topic View next topic Go down

பழசிராஜா - திரைவிமர்சனம்

Post by VIJAY on Thu Dec 03, 2009 12:49 pm

நடிகர்கள் – மம்முட்டி, சரத்குமார், பத்மப்பிரியா, கனிகா, சுமன், மனோஜ் கே.ஜெயன்.
இசை – இளையராஜா
இயக்கம் – ஹரிஹரன்
தயாரிப்பு – கோகுலம் கோபாலன்

கேரளாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய முதல் மலபார் மன்னன் பழசிராஜா. அவரைப் பற்றிய வரலாற்றுப் படம்தான் இது.


கேரளாவுக்கு மிளகு, ஏலக்காய் வியாபாரம் செய்ய வரும் ஆங்கிலேயர்கள்,
மெல்ல மெல்ல அங்குள்ள குறுநில மன்னர்களை தங்களது பிரித்தாளும் சூழ்ச்சி
மூலம் பகைமூட்டி, தங்களது, நவீன ஆயுதம் தாங்கிய படை, கூலிப்படை இவற்றைக்
கொண்டு நாடு பிடிக்கத் தொடங்குகிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய
மறுத்து எதிர்த்து நிற்கிறார் பழசிராஜா.


இதனால் கோபமுறும் ஆங்கிலேயர்கள் சில புல்லுருவிகளின் துணையுடன்
பழசிராஜா இல்லாத வேளையில் அவரது அரண்மனையை கொள்ளையடிக்கிறார்கள். அரண்மனை
ஆங்கிலேயன் வசமாகிறது.


பழசிராஜா தனது விசுவாசமிக்க தளபதி எடச்சன் குங்கனுடன் தலைமறைவாகிறார்.
மலைவாழ் மக்களை திரட்டி ஆங்கிலேயருடன் யுத்தம் செய்கின்றார். வெள்ளையர்
படை பின்வாங்கும் நிலை. ஒரு கட்டத்தில் பழசிராஜாவுடன் சமரச ஒப்பந்தம்
போட்டு போரை நிறுத்துகின்றனர். பிறகு திடீரென ஒப்பந்தத்தை மீறுகின்றனர்.
இதைக்கண்டு ஆவேசமாகும் பழசிராஜா மீண்டும் போரைத் துவக்குகிறார்.


பதவி ஆசை கொண்ட சில மண்ணின் மைந்தர்களின் உதவியுடன் பழசிராஜாவை
எதிர்க்கிறது ஆங்கிலப்படை. பழசியின் தளபதிகள் ஒவ்வொருவராக மடிகிறார்கள்.
இறுதி சண்டைக்கு ஆயத்தமாகிறார் பழசிராஜா. ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தால்
உயிர் பிழைக்கலாம் என்கிறார்கள் நலம் விரும்பிகள். பழசிராஜா சரணடைந்தாரா?
அல்லது ஆங்கிலேயர்களை வென்றாரா என்பது மீதிக் கதை.


பழசிராஜாவாக வரும் மம்முட்டி ஒவ்வொரு காட்சியிலும் அந்த
கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கைதியாக பிடிப்பட்ட ஆங்கில கலெக்டரை
மனிதாபிமானத்துடன் நடத்துவதும், “ஆயுதங்களை நேசித்த அளவுக்கு, உன்னை
நேசிக்க மறந்துவிட்டேன்” என்று மனைவி கனிகாவிடம் விடைபெறும்போதும் உருக
வைக்கிறார்.


பழசிராஜாவின் தளபதியாக எடச்சன் குங்கன் கதாபாத்திரத்தில் வரும்
சரத்குமார், விசுவாசமிக்க வீரனாக மின்னுவதோடு, பழசிராஜாவுக்கு செஞ்சோற்று
கடன் தீர்க்கும் கர்ணனாக கலங்க வைக்கிறார். துரோகி சுமனை பழி தீர்க்கும்
இடத்திலும் சபாஷ் போட வைக்கிறார்.


கனிகா, பழசிராஜாவின் மனைவியாக வந்து அவர் பிரிவில் அழுதும், உடன்
இருக்கும்போது துடித்தும் உருக வைக்கிறார். மலைவாழ் மக்கள் தலைவனாக வரும்
மனோஜ் கே.ஜெயன் மனதில் நிற்கிறார்.


பெண் போராளி பத்மப்ரியாவின் மெனக்கெடல் ரொம்பவே அசத்தல். வில் அம்பு,
வேல்கம்பு, துப்பாக்கி என்று சகலத்திலும் முனைப்பு காட்டியிருக்கிறார்.
மரத்தின் உச்சியிலிருந்து சரிந்து கொண்டே வந்து சண்டையிடும் அவரது
பேரார்வம் கூர்மையாக ரசிக்கப்பட வேண்டிய ஒன்று.


விடுதலைக்காக, போராடுகிறவர்களை தூக்கிலிடுவதைக் கண்டித்து ஆங்கில
கலெக்டரின் மனைவி அவரை பிரிவதும், கடைசியில் பழசிராஜாவை புரிந்து கொள்ளும்
கலெக்டர் அவர் வீரச்சாவை சந்திக்க வாய்ப்பளிப்பதும், அவருக்கு ஆங்கிலேய
முறைப்படி இறுதி மரியாதை செய்ய வைப்பதும் இயக்குனர் மின்னும் இடங்கள்.


வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்படும் படங்களுக்கு சுவையான சம்பவங்கள்
மற்றும் சரித்திரபூர்வமான நம்பகத் தன்மை இரண்டுமே முக்கியம். இந்த
இரண்டுமே படத்தில் கொஞ்சம் கம்மிதான் என்பதையும் சொல்லியாக வேண்டும்.


மலையாளத்தில் வசனம் எழுதியிருக்கிறார் எம்.டி.வாசுதேவன் நாயர். தமிழில்
மொழி பெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். “பிறந்ததிலிருந்தே ஒரு
நிழல் கூடவே வந்திட்டு இருக்கு. அது என்னைக்காவது திரும்பி எதிர்லே
விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அதுதான் மரணம்…” இப்படி படம் நெடுகிலும்
ஜீவனுள்ள வசனங்கள்.


படத்தின் முக்கிய பலம் இளையராஜாவின் இசை. ஆரம்பக் காட்சிகள் வரலாற்று
நாடகம் போல துண்டுத் துண்டாகத் தெரிய, அதை பெரும்பாடுபட்டு கோர்வையாக்கித்
தருகிறார் தனது பின்னணி இசை மூலம். பாடல்களில் மலையாள வாசம். “ஆதிமுதல்
காலம் பூத்ததிங்கே” என்ற பாடல் சுகமோ சுகம்.


ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி. வாள் காற்றை கிழிப்பதையும், மழைத்துளி
முற்றத்தில் விழுவதையும், அவ்வளவு ஏன்… உட்காருகிற சத்தத்தைக் கூட
துல்லியமாக பதிவு செய்திருக்கிறார்.


ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டியும், ஆர்ட் டைரக்டர் டி.முத்துராஜும் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு தந்திருக்கிறார்கள்.


புகழ்பெற்ற வரலாற்று படங்களின் வரிசையில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்த பழசிராஜாவும் ஒரு பொக்கிஷம்தான் என்றால் மிகையல்ல!
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: பழசிராஜா - திரைவிமர்சனம்

Post by செரின் on Thu Dec 03, 2009 12:55 pm

ஆமாம் விஜய் நானும் படம் பார்தேன் அநேக நிகழ்வுகள் நமது
தேசிய தலைவரின் நிகழவுகளையும் ஒட்டி இருந்தன..அருமையான படம் பாட்டக்கள் அனைத்தும் சூப்பர்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum