ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காய்ந்து போகாத கவிதை மை
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10
 M.Jagadeesan

பெய்யும் மழையின் அழகு…!!
 ayyasamy ram

பாமினி மற்றும் லதா எழுத்துருவில் இருந்து ஐஸ்வர்யா எழுத்துருவிற்கு மாற்ற எளிமையான வழிமுறைகள் இருந்தால் உதவுங்கள்
 மூர்த்தி

தோழி
 T.N.Balasubramanian

மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
 T.N.Balasubramanian

ரூ.1500 மின்கட்டணமா.. ரேஷன் சலுகை ரத்து: கேரள அரசு அதிரடி
 T.N.Balasubramanian

தாயே−கட்டுரை
 Shivasakthi Danadjeane

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை..
 mdseeni

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 ayyasamy ram

குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
 ayyasamy ram

பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
 ayyasamy ram

வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
 ayyasamy ram

கோபுரமான குளம்…!
 ayyasamy ram

ஞாபக மறதி
 ayyasamy ram

பெருமை!
 ayyasamy ram

பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
 ayyasamy ram

அமுதம்!
 ayyasamy ram

கலாம் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
 ayyasamy ram

சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
 ayyasamy ram

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா: ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என புகார்!!
 M.Jagadeesan

அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
 mdseeni

இந்தியா 2017
 Shivasakthi Danadjeane

இந்த தைரியம் உங்களுக்கு இருக்குமா?-வீடியோ
 T.N.Balasubramanian

பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
 மூர்த்தி

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை
 மூர்த்தி

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 abr272008

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 abr272008

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 rajesh2017

சின்ன கண்ணன் அழைக்கிறான்
 T.N.Balasubramanian

மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!!
 T.N.Balasubramanian

காலை முதல் மாலை வரை
 T.N.Balasubramanian

கடவுளின் கையெழுத்து….! – கவிதை
 Dr.S.Soundarapandian

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 Dr.S.Soundarapandian

நீ யாராகி
 Dr.S.Soundarapandian

அடிபணிந்து கிடக்காதே
 Dr.S.Soundarapandian

அறிமுகம் நாகராஜன்
 Dr.S.Soundarapandian

தண்ணீர்
 Dr.S.Soundarapandian

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
 Dr.S.Soundarapandian

வணக்கம்
 Dr.S.Soundarapandian

'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு
 Dr.S.Soundarapandian

சதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி!!
 Dr.S.Soundarapandian

6174 புத்தகம் தேவை
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

மின்நூல்
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 ajaydreams

எந்தன் அறிமுகம் --சதீஷ்
 M.Jagadeesan

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

விவசாயம் வீழ்ந்து போச்சு
 Shivasakthi Danadjeane

அமெரிக்காவில் இந்த வாரம் - 11
 மூர்த்தி

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

வேலன்:-இணைய பைல்களை பிடிஎப் ஆக மாற்றிட
 velang

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 T.N.Balasubramanian

ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார்
 T.N.Balasubramanian

அவள் பதில் கூறும் நேரம்
 Shivasakthi Danadjeane

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!
 T.N.Balasubramanian

உருமாற்றம்
 krishnanramadurai

கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
 ayyasamy ram

வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

செயல்பாடு -செயற்பாடு எது சரி?

View previous topic View next topic Go down

செயல்பாடு -செயற்பாடு எது சரி?

Post by குழலோன் on Mon Jul 17, 2017 9:04 am

அண்மையில் பலரும் இந்தச் சொல்லாட்சியை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால், பலரும் 'செயல்பாடு' என்றே எழுதுகிறார்கள்.  'செயற்பாடு' என்றல்லவா இருக்க வேண்டும்.  பிரபல அகராதியும் 'செயல்பாடு' என்றே குறித்துள்ளது. இரண்டு விதமாகவும் எழுதலாம் என்று சிலர் சொல்லிச் சமாளிக்கின்றனர்.  மொழி இலக்கணம் என்ன கூறுகிறது என்னும் தெளிவு அவசியம்.  

தமிழ் அறிந்தோர் விளக்கம் தந்து வழிகாட்டுமாறு விழைகிறேன்.
avatar
குழலோன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 57
மதிப்பீடுகள் : 37

View user profile

Back to top Go down

Re: செயல்பாடு -செயற்பாடு எது சரி?

Post by மூர்த்தி on Mon Jul 17, 2017 12:05 pm

செய்+அல்+பாடு என பிரிக்கிறார்கள்.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 
வினைக்கரிய யாவுள காப்பு.

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் 
நல்லவாம் செல்வம் செயற்கு.
.....................
செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செயியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.

இயற்கைய வாகும் செயற்கைய என்ப 
ஒற்றுமிகத்   தோன்றும்   குற்றியலுகர  மொழிகள்  உருபொடு
புணருமாறு கூறுகின்றது.

பொருள்: மேலே   ஒற்றுமிகத்   தோன்றும்   அப்பால்   மொழிகள்
எனப்பட்டவைதாம்,  இயல்பாகப் புணரும் இலக்கணத்தை உடையன என்று
கூறுவர் புலவர். இயற்கை = இலக்கணம்; செயற்கை = செய்கை-செயற்பாடு.
.....................
இணையத்தில் கிடைத்த தகவல்கள் இவை.உங்களைப் போல் நானும் அறிய ஆவலாயுள்ளேன்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 660
மதிப்பீடுகள் : 356

View user profile

Back to top Go down

Re: செயல்பாடு -செயற்பாடு எது சரி?

Post by M.Jagadeesan on Mon Jul 17, 2017 12:19 pm

நிலைமொழி ஈற்றில் " ல் " இருந்து வருமொழி முதலில் க , ச , ட , த , ப , ற ஆகிய வல்லெழுத்துக்கள் மற்றும் அவற்றின் இனமான எழுத்துக்கள் வருமானால் ' ற் " என்ற ஒற்று மிகும் .

கல் + கண்டு = கற்கண்டு
பல் + சக்கரம் = பற்சக்கரம்
கல் + தூண் = கற்றூண்
பல் + பொடி = பற்பொடி  

க , ச , ட , த , ப ,ற ஆகிய எழுத்துக்களில் ட , ற ஆகிய இரண்டுஎழுத்துக்கள் மொழிமுதலில் வாரா என்பதால் அவற்றின் புணர்ச்சி இங்கு தரப்படவில்லை .

செயல் + பாடு = செயற்பாடு என்பது சரி .
செயல் + பாடு = செயல்பாடு  என்ற இயல்பு புணர்ச்சி சரி என்று ஏன் சொல்லப்படுகிறது ?

செயல்தலைவர் ஸ்டாலின் என்று சொல்கிறோம். ஆனால் செயற்றலைவர் என்பதுதான் சரி.. ஆனால் பாமர மக்களுக்கு செயற்றலைவர் என்றால் புரியாது .

மக்களுக்கு மயிற்றோகை என்றால் புரியாது ; மயில்தோகை என்றால்தான் புரியும் . கால ஓட்டத்தில் எல்லா துறைகளிலும்  மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது . மொழிமட்டும் அதற்கு விதிவிலக்கல்ல !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4544
மதிப்பீடுகள் : 2079

View user profile

Back to top Go down

Re: செயல்பாடு -செயற்பாடு எது சரி?

Post by T.N.Balasubramanian on Mon Jul 17, 2017 10:40 pm

செயற்பாடு மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல்

எனக்கு உடன்பாடு

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Jul 18, 2017 12:43 am; edited 1 time in total (Reason for editing : addition)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20137
மதிப்பீடுகள் : 7302

View user profile

Back to top Go down

Re: செயல்பாடு -செயற்பாடு எது சரி?

Post by குழலோன் on Wed Jul 19, 2017 12:49 pm

அடிப்படையில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தொல்காப்பியம் என்பது எழுத்திலக்கணத்திற்கு உருவாக்கப்பட்ட இலக்கணம். அதில் வரையறுக்கப்படும் இலக்கண வரம்புகள் எழுத்து வழக்கை நெறிப்படுத்துவதற்கே. உலக வழக்கான, பேச்சுத்தமிழை இலக்கண வழக்கோடு பொருத்திப்பார்க்கக்கூடாது. எழுத்தில் உள்ள 'காற்று' என்பது, பேச்சில் 'காத்து' ஆகிறது. அது முயற்சிச் சிக்கனத்தால் ஏற்பட்டது. இலக்கண வரம்பு மீறல் பேச்சு வழக்கில் இயல்பானதொன்று. வந்துகொண்டிருந்தான் என்று எழுதும் நாம், பேசும்போது, 'வந்துகிட்டிருக்கான்' என்கிறோம். அதை வழுவமைதி என்று சொல்லக்கூடாது. அறியாமையால் நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லையே இல்லை! புற்றரை என்பதை புற்தரை என்றும் , முட்செடியை முள்செடி என்றும் எழுதி அதற்கு அமைதி சொல்லத் தொடங்கிவிட்டோம். பிழைநீக்கி நல்ல தமிழில் எழுதப் பெருமுயற்சி தேவையில்லை. இலக்கணத்தை முறையாகப் பயின்றாலே போதும். தமிழ் அறிந்த நல்லோர் அதற்கு வழிகாட்டி உதவுதல் நன்று. அன்புடன்.
avatar
குழலோன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 57
மதிப்பீடுகள் : 37

View user profile

Back to top Go down

Re: செயல்பாடு -செயற்பாடு எது சரி?

Post by T.N.Balasubramanian on Wed Jul 19, 2017 5:53 pm

@குழலோன் wrote:அதில் வரையறுக்கப்படும் இலக்கண வரம்புகள் எழுத்து வழக்கை நெறிப்படுத்துவதற்கே. உலக வழக்கான, பேச்சுத்தமிழை இலக்கண வழக்கோடு பொருத்திப்பார்க்கக்கூடாது

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20137
மதிப்பீடுகள் : 7302

View user profile

Back to top Go down

Re: செயல்பாடு -செயற்பாடு எது சரி?

Post by ayyasamy ram on Wed Jul 19, 2017 7:22 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30277
மதிப்பீடுகள் : 8528

View user profile

Back to top Go down

Re: செயல்பாடு -செயற்பாடு எது சரி?

Post by M.Jagadeesan on Wed Jul 19, 2017 7:51 pm

புல் + தரை = புற்றரை
புற்று + அரை = புற்றரை ( பாதிப்புற்று )

இங்கு புற்றரை என்பது இதைக் குறிக்கிறது ?

கரையான் புற்றையா அல்லது புல் தரையையா ? குழப்பம் வருகிறதல்லவா ?

எனவே புல் + தரை =  புல்தரை  என்று எழுதுவதில் தவறில்லையே ! இவ்வாறு நிலை மொழியும் , வருமொழியும் எந்த மாற்றம் இல்லாமல் புணருவது இயல்பு புணர்ச்சியாகும் .

நாள் + கள் = நாட்கள்
நாள் + கள் = நாள்கள்

இவற்றில் எது சரி ?

நாட்கள் என்றால் பழமையான கள்ளைக் ( பானம் ) குறிக்கும் .
நாள்கள் என்றால் நாள் என்ற சொல்லின் பன்மையாகும் .

எனவே புணர்ச்சி விதியை சற்றே  மறந்துவிட்டு  " நாள்கள் " என்று எழுதுவதே சரியாகும் .

முள் + தீது = முட்டீது
முள் +தீது = முள் தீது

முட்டீது என்றால் யாருக்குப் புரியும் ? எனவே முள் தீது என்று எழுதுவதே நன்று .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4544
மதிப்பீடுகள் : 2079

View user profile

Back to top Go down

Re: செயல்பாடு -செயற்பாடு எது சரி?

Post by குழலோன் on Wed Jul 19, 2017 8:48 pm

நாள் + கள்  என்பது நாள்கள் என்றே எழுதுதல் வேண்டும்.  நாட்கள் என்று எழுதுவது தவறாகும். அதற்கு நாட்பட்ட கள் என்னும் பொருள் வரும் என்று கருதுதல் கூடாது.  தோள், கோள், வாள், தேள் என்னும் சொற்கள் யாவையுமே 'கள்' விகுதி பெறும்போது இயல்பாகவே புணரும்.  மாறாக, தனிக்குறிலை அடுத்து வரும் சொற்களே 'கள்' விகுதியில் திரிந்து புணரும். (எ-டு) பல், சொல், வில் என்பவை பற்கள், சொற்கள், விற்கள் எனப் புணரும்.
புற்றரை முதலான தொடர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருண்மை நிலைகள் வருவது மொழியில் இயல்பாக இடம்பெறக்கூடியதே.  சிலேடைப் பாடல்களில் பலவற்றுள் இவ்வழக்காறுகளைக் காணலாம்.  இக்காரணத்திற்காகச் சந்தி விதிகளையே பின்பற்றக் கூடாது என்பது ஏற்புடையதா?  மொழி பயில்வோருக்கு எளிதில் புரிய வேண்டும் என்று கருதி இலக்கண விதிகளுக்கு மாறாக எழுதுவது  என்பது வேறு சில இடர்ப்பாடுகளை உண்டு பண்ணும்.  சான்றுக்கு,
'தெய்வந் தொழாஅள்  கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை'  என்னும் குறட்பாவைச் சீர்பிரித்து எளிமைப்படுத்தும் முயற்சியில், சிலர் அதை, 'தெய்வம் தொழாஅள்' என்று பிரித்தபோது சிக்கல் எழவில்லை. ஆனால், 'கொழுநன் தொழுதெழுவாள்' என்று பிரித்தபோது பொருளே மாறிவிட்டது!  கொழுநன் தொழுதபிறகு எழுவாள் என்று பொருளாகிவிட்டது!  சந்திவிதிகள் எவ்வளவு இன்றியமையாதவை என்பதற்கு இதை நினைவிற்கொள்ளலாம்.  மொழியை எளிமைப்படுத்த வேண்டும் என்பதில் கருத்து முரண்பாடில்லை.  ஆனால், பொருண்மைநிலை மாறாதவாறு அதை அமைத்தல் வேண்டும்.
avatar
குழலோன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 57
மதிப்பீடுகள் : 37

View user profile

Back to top Go down

Re: செயல்பாடு -செயற்பாடு எது சரி?

Post by M.Jagadeesan on Wed Jul 19, 2017 10:28 pm

கொழுநன் தொழுதெழுவாள் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை .

கொழுநனைத் தொழுது எழுவாள் என்பது இதன் பொருளாகும் . " ஐ " இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கியுள்ளது .

இங்கு பொருள்மயக்கம் ஏற்பட வழியே இல்லை .. கணவனை மனைவி வணங்குவது என்பது தமிழர் மரபு. கொழுநன் தொழுதபிறகு எழுவாள் என்பது தமிழர் மரபல்ல.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4544
மதிப்பீடுகள் : 2079

View user profile

Back to top Go down

Re: செயல்பாடு -செயற்பாடு எது சரி?

Post by T.N.Balasubramanian on Thu Jul 20, 2017 12:52 am

உங்கள் இருவர் உரையாடலில் ,நான் கற்ற
பல பழைய விஷயங்கள்,அமிழ்ந்து கிடக்கின்றன .
அவை மேல்நோக்கி இப்போது வருகிறது .
இரு கற்(பிக்கும்) தூண்கள் புன்னகை புன்னகை
நன்றி இருவருக்கும். தொடருங்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20137
மதிப்பீடுகள் : 7302

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum