ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மாற்றம் என்பது...
 ayyasamy ram

ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
 ayyasamy ram

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
 ayyasamy ram

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
 ayyasamy ram

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
 ayyasamy ram

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
 ayyasamy ram

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03
 shruthi

Youtube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

மே 25 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
 vighneshbalaji

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 sudhagaran

Ideas on changing Government rules and regulations for easing lives of citizens
 aeroboy2000

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 T.N.Balasubramanian

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
 ayyasamy ram

பலவித முருகன் உருவங்கள்
 ayyasamy ram

காவலனா அன்றிக் காலனா ?
 T.N.Balasubramanian

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 T.N.Balasubramanian

உலகின் முதல் உறவு
 T.N.Balasubramanian

கண்மணி 30மே2018
 krishnaamma

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 krishnaamma

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 krishnaamma

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கும்கி யானைகள் பற்றிய நூற்றாண்டைத் தாண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!

View previous topic View next topic Go down

கும்கி யானைகள் பற்றிய நூற்றாண்டைத் தாண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!

Post by ayyasamy ram on Sat Aug 12, 2017 8:51 am

-


"விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அட்டகாசம்
செய்த காட்டு யானைகள், கும்கி யானைகளின் உதவியுடன்
வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.." 

இதுபோன்ற செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில்
பார்க்கலாம். அது என்ன கும்கி யானை? காட்டு
யானைகளை விரட்டத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்
பட்ட யானையின் பெயர் தான் 'கும்கி'.
அவ்வளவுதானா கும்கியின் அடையாளம்? நிச்சயமில்லை.

கும்கியின் வரலாறு மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியான
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து துவங்குகிறது.
1910 ஆம் ஆண்டு ஊட்டியில், யானைகள் வளர்ப்பு மற்றும்
பயிற்சி முகாம் ஒன்று வனத்துறையால் தொடங்கப்பட்டது.

இந்தியாவில், யானைகளுக்கு என்று முதன் முதலாக
துவங்கப்பட்ட முகாம் இதுதான். சுமார் 107 ஆண்டுகளுக்கு
முன் இங்கு தொடங்கப்பட்ட முகாமிலிருக்கும்
யானைகளுக்கு, காட்டில் வெட்டப்பட்ட மரங்களை இழுக்க,
மரங்களை லாரிகளில் ஏற்ற மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.

இதைத்தவிர, காட்டு யானைகளைப் பிடிக்கும்
முயற்சியிலும் வளர்ப்பு யானைகள் ஈடுபடுத்தப்பட்டன.
பிடிக்கப்பட்ட காட்டு யானைகளும் நேராக பயிற்சி
முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு
மரம் தூக்க அனுப்பிவைக்கப்படும்.
ஒரு புறம் பயிற்சியும், மறுபுறம் வேலையும் நடந்துகொண்டே
இருக்கும். 

காட்டு யானைகளைப் பிடிக்க அந்தக்காலத்தில் ஓர் எளிய
வழியைக் கடைபிடித்தார்கள். பருவத்துக்கு வந்த பெண்
யானையைக் காட்டுக்குள் இருக்கும் ஒரு பெரிய மரத்தில்
கட்டி வைப்பார்களாம்.

அந்தப் பெண் யானையின் உடலிலிருந்து வெளிப்படும்
ஒருவகையான வாசனையால் ஈர்க்கப்பட்டு, காட்டுக்குள்
சுற்றித்திரியும் ஆண் யானைகள் அந்தப் பெண் யானையைச்
சுற்றி வட்டமடிக்கும்.

காதல் மயக்கத்தில் சுற்றிவரும் அதை அதிகம் சிரமம்
இல்லாமல் பிடித்துவிடுவார்கள். இப்படி ஆண் யானைகளைப்
பிடிக்க உதவும் பெண் யானைகளைத்தான் ஆரம்ப காலத்தில்
'கும்கி' என அழைத்தனர்.

கும்கி என்ற வார்த்தைக்கான விளக்கம் கொடுக்கும்
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியும் இதைத்தான் சொல்கிறது.
ஆனால் இப்போது காட்டு யானைகளை மடக்கிப்பிடிக்கும்
ஆண் யானைகளையே 'கும்கி' என்று அழைக்கிறார்கள்.
இதை யார் எப்போது மாற்றினார்கள் என்ற விவரம்
தெரியவில்லை. 
-
-----------------------------


Last edited by ayyasamy ram on Sat Aug 12, 2017 8:58 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36772
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: கும்கி யானைகள் பற்றிய நூற்றாண்டைத் தாண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!

Post by ayyasamy ram on Sat Aug 12, 2017 8:51 am
பிடிபட்ட காட்டு யானைகளுக்கான பயிற்சிகள் மிகக்
கடுமையாக இருக்கும். யானைகளுக்கான முதல் பயிற்சியாக
அதன் துதிக்கையில் ஒரு குச்சியைக் கொடுத்து பாகனுடன்
நடந்து வர பழக்குவார்கள்.

பின்னர், காலை மடக்குவது, முட்டி போடுவது போன்ற
பயிற்சிகள் இருக்கும். காதை தும்பிக்கையால் பிடித்துக்
கொண்டு இடது, வலது என சுற்ற வைக்கும் பயிற்சியும்
உண்டு.

யானை சின்னதோ, பெரியதோ, குட்டியோ, வயதானதோ,
வா, போ, முட்டி போடு, இதைத் தூக்கு என்று ஒருமையில்
மட்டுமே பாகன்கள் அதை அழைப்பார்கள்.

வயதான பெண் யானையாக இருந்தால் அடிப்படை
பயிற்சியோடு சில கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும்.
காரணம் பெண் யானைகளுக்குப் புத்திக்கூர்மையும்,
நுண் உணர்வுகளும் அதிகம். பாகன்களுடன் நெருங்கிப்
பழகும் குணம் அவற்றுக்குண்டு.

பிடிபட்டது ஆண் யானை என்றால், அது பருவமடைந்த
பிறகுதான் பயிற்சிக்கு அனுப்பப்படும். அப்போதுதான்
வேகமும், மூர்க்க குணமும் நிறைந்ததாக விளங்கும். 
-
------------------------------
-


Last edited by ayyasamy ram on Sat Aug 12, 2017 8:59 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36772
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: கும்கி யானைகள் பற்றிய நூற்றாண்டைத் தாண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!

Post by ayyasamy ram on Sat Aug 12, 2017 8:51 am


பயிற்சி கொடுக்கும் பாகனின் உத்தரவுதான் யானையைச்
செயல்படத்தூண்டும். மற்ற நேரங்களில் அமைதியாகவே
இருக்கும். குரல் கட்டளைகளின் முதல் பாடம், 'ஜமத்'.

தன் காலில் கட்டியிருக்கும் இரும்புச்சங்கிலியை இறுக்கமாக
பிடித்துக்கொள்ளும் கட்டளையே இது. பாகனிடமிருந்து
இந்தக் குரல் வந்ததும் உடனே சங்கிலியை இறுக்கமாக
பிடித்துக்கொள்ளும். மரங்களை இரும்புச்சங்கிலியால்
கட்டி இழுத்துவரும்போது சங்கிலிக்குக் கொடுக்கும்
இறுக்கம்தான் மரங்கள் தவறி கீழே விழாமல் காக்கும்.

அதற்காகத்தான் இந்தப் பயிற்சி. அடுத்ததாக வெட்டப்
பட்ட மரங்களை கீழே சாய்ப்பதும், அதைத் தூக்குவதும்,
நகர்த்துவதும், இழுத்துவருவதுமாகவே இருக்கும்.

அதற்கான கட்டளைகளைப் பாகன்கள் சொல்லிக்
கொடுப்பார்கள். இப்படிக் கொடுக்கப்படும் அனைத்து
அடிப்படியான பயிற்சிகளுமே பாகனுக்குக் கீழ் படிதல்
மற்றும் மரங்களுடன் தொடர்பு படுத்துவதாகவே இருக்கும். 

காட்டுயானைகளைப் பிடிக்கும் பயிற்சி வேறு விதமாக
இருக்கும். அவை இன்னும் கடுமையானவை.
இந்தப் பயிற்சியில் பாகனின் பங்கு அதிகம். ஒவ்வொரு
கட்டளையும் யானையை உற்சாகப்படுத்தி வேகமாக
செயல்படவைப்பதாக இருக்கும்.

குறிப்பாக, 'நிர்கே' என்ற கட்டளை. காட்டு யானைகளை
மடக்கிப் பிடிக்கும்போது அவை அதிக மூர்க்கமாக
இருந்தலோ அல்லது பிடிபடாமல் தப்பிச்செல்ல
முயன்றாலோ, பாகன் நிர்கே என்று சொல்வார்.

அதைக் கேட்டதும், கொஞ்சமும் யோசிக்காமல் எதிரே
நிற்கும் காட்டு யானையை முட்டித் தள்ளி கீழே சாய்த்து
விடும். 
 
'கும்கி' என்ற வார்த்தை இந்தி மொழியிலிருந்து
உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஒரு சில
முரட்டு காட்டு யானைகள் சிறிதும் அச்சமின்றி கும்கி
யானைகளை தனது தந்தத்தால் குத்த ஆக்ரோஷத்துடன்
ஓடி வரும். அப்படி வரும் யானைகளை இரும்புச் சங்கிலி
மற்றும் மரக்கட்டையால் திருப்பித் தாக்கும் டெரர்
பயிற்சியும் கும்கிகளுக்கு உண்டு.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36772
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: கும்கி யானைகள் பற்றிய நூற்றாண்டைத் தாண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!

Post by ayyasamy ram on Sat Aug 12, 2017 8:51 am


கும்கி பயிற்சி, தினமும் இருவேளை என்று 15 முதல்
30 தினங்கள் வரை கொடுக்கப்படும். பயிற்சி முடிந்ததும்
யானையை முகாமில் வைத்து ஒத்திகை நடக்கும்.

தமிழகத்தில் முதுமலை மற்றும் டாப்சிலிப் பகுதிகளில் மட்டுமே
கும்கிகள் உள்ளன. நமது நாட்டில் மிகச் சிறந்த கும்கி யானைகள்
கர்நாடக மாநிலத்தில் உள்ளன. அபிமன்யூ, அர்ஜூனன்,
கஜேந்திரன் போன்ற கும்கி யானைகள் இந்திய அளவில்
பிரபலமானவை. வேட்டைக்கு புறப்பட்டுவிட்டால் வெற்றி மட்டுமே
முடிவாக இருக்கும்.

தென் இந்தியாவில் இருந்து வட மாநில காட்டு யானைகளையும்
அடக்க இவை அழைக்கப்படுமாம். இப்படி வெற்றி டேட்டாக்களுக்கு
இடையில், களத்துக்குச் சென்ற கும்கி யானையும், அதன் பாகனும்
காட்டு யானைகளால் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறன. 
-
---------------------------------

ஒரு காலத்தில் காடுகளில் வெட்டப்படும் மரங்களைத் 
தூக்குவதற்காவும், அற்காக தேவைப்படும் யானைகளைப்
பிடிக்கவுமே பயன்பட்ட கும்கி யானைகள், இன்று ஊருக்குள்
நுழையும் காட்டு யானைகளை விரட்ட பயன்படுவது
வரலாற்றுப் பிழையல்ல
-
மனிதர்களான நாம் செய்த பிழையின் வெளிப்பாடுதான்.
நகரீயம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு யானைகளின்
வாழிடத்தையும், வழித்தடத்தையும்  ஆக்கிரமித்து யானைகள்
மீதான மறைமுகப்போரைத் தொடுத்திருக்கும் நாம்
இனியாவது, காடுகளைக் காத்து கும்கிகளை சுதந்திரமாக
விடுவோம்.
-
------------------------------
எம்.கணேஷ்
நன்றி- விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36772
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: கும்கி யானைகள் பற்றிய நூற்றாண்டைத் தாண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 12, 2017 6:13 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4545
மதிப்பீடுகள் : 2410

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: கும்கி யானைகள் பற்றிய நூற்றாண்டைத் தாண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum