புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
30 Posts - 54%
heezulia
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
21 Posts - 38%
Manimegala
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
1 Post - 2%
jairam
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
1 Post - 2%
சிவா
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
12 Posts - 4%
prajai
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
9 Posts - 3%
Jenila
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
3 Posts - 1%
jairam
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_m10வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாதாபி விநாயகர் எங்கேதான் உள்ளது ?

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Aug 25, 2017 1:32 pm

வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? DW2TBDnpS8KQwG4cKb9w+00

கலிங்கப்போரில் நடைபெற்ற மிகப்பெரிய மனிதஇனத்தின் அழிவைப்பார்த்து மனம் வருந்தி சமண மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறியமாமன்னர் அசோகரை வரலாறில் விரிவாக அனைவரும் படித்திருக்கிறோம் .
ஆனால் அதற்க்கு சில நூற்றாண்டுகள் கழித்து தமிழ் நாட்டில் நடைபெற்ற அத்தகைய நிகழ்வை வரலாறு அழுத்தமாக கூற மறந்துவிட்டது .
ஆனால் மனம் மாறிய அவர் மன்னரல்ல ,போரைவென்ற ,வெற்றிக்கு காரணமான தளபதி .அவர் பெயர் பரஞ்சோதி அவரே இந்த வாதாபி போருக்குப் பிறகு மனம் மாறி சிறுத்தொண்டர் என்று பெயர் பெற்று சிவனடியார் ஆனார் .
கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுப்பு நடந்தது .இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும் ,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும் ,பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகிறது .இத்தகைய பெரும் போர் படை ஏன் தேவைப்பட்டது என்றால் , நாம் சாளுக்கிய புலிகேசி பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டும் .
இரண்டாம் புலிகேசி ஆட்சியில் இந்தியாவில் அப்போது பெரும் மன்னர்களாக இருந்தவர்கள் இருவர்கள்தான்
வடக்கில் இருந்த ஹர்ஷவர்மர் ,தெற்க்கே பல்லவர்கள் .
இருவரையும் ஒரு முறை வென்றவர் இரண்டாம் புலிகேசி.
இந்து அரசராக இருந்தபோதிலும், நூறு புத்தவிகாரைகள் இவரது ஆட்சியிலிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

பல்லவ நாட்டில் கிபி 630 வாக்கில் நரசிம்மவர்மர் ஆட்சிக்கு வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் புலிகேசி படை எடுக்கிறார். ஆனால் இம்முறை பல்லவர்கள் மணிமங்கலத்தில் நடந்த போரில் வெற்றி பெறுகிறார்கள். சாளுக்கியர் படை தோற்று ஓடவும், விடாத நரசிம்மவர்மர் அவர்களை வாதாபி வரை துரத்திச்செல்கிறார். கிபி 642 வாக்கில் நடந்த கோர யுத்தத்தில் வாதாபி வீழ்கிறது. புலிகேசி மன்னர் போரில் இறக்கிறார். பல்லவர்கள் வாதாபியில் நிகழ்த்திய அழிவால் அந்த நகர் அதன்பின் சாளுக்கியர் தலைநகர் ஆகவே இல்லை.
அமரர் கல்கி தனது புகழ்ப்பெற்ற சிவகாமியின் சபதம் எனும்நூலில் ‘புலிகேசிஎனநமக்குஅறிமுகப்படுத்தியிருந்தாலும் வரலாற்று நூல்கள்புலகேசி’ என்றே சொல்கின்றன

பல்லவ தளபதி பரஞ்சோதி பின்னர் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார் போர் வெற்றியின் நினைவாக வாதாபியில் இருந்து விநாயகர் சிலை ஒன்றை கொணர்ந்து தனது ஊரான திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்ததாக கர்ணபரம்பரையாக சொல்லப்படுகிறது.
அந்த சிறுத்தொண்டர்வாழ்ந்த மாளிகை தான் இன்று கோயிலாகவுள்ளது எனக்கூறப்படுகிறது .
கல்வெட்டுக்களில் இறைவன், 'செங்காடுடைய நாயனார் ', 'கணபதீச்சரமுடைய மகாதேவர் ', 'கணபதீஸ்வரமுடையார் ' எனவும்; தலத்தின் பெயர் "கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி" என்று குறிப்பிடபடுகிறது
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 142 வது தேவாரத்தலம் ஆகும்.
விநாயகர், கயமுகாசூரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார்.
அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆயினமையின் 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
கணபதி இறைவனை வழிபட்டதால் இக்கோயிலுக்கு "கணபதீச்சரம்" என்று பெயர். ஆலயம் கணபதீச்சுரம் எனவும், ஊர் திருச்செங்காட்டங்குடி எனவும் வங்கி வருகிறது.

தோடுடையான் குழையுடையான் அரக்கன்தன் தோளடர்த்த பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான் சேடுடையான் செங்காட்டங் குடியுடையான் சேர்ந்தாடும் காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே. - ------------ ==திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 79வது தலம்.
ஆனால் இதே கதையை கொஞ்சம் மாற்றி பரஞ்சோதி தான் கொண்டுவந்த விநாயகர் சிலையை திருவாரூர் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்லப்படுகிறது
இதில் எது உண்மை ?
பல்லவ சாளுக்கிய போரை மையப்படுத்தி எழுதப்பட்ட சிவகாமியின் சபதம் நூலில் எழுத்தாளர் கல்கி வாதாபி கணபதி திருச்சங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவே குறிப்பிடுகிறார்.
திருவாரூர் கோவிலை பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்த பிரபல கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் திருவாரூர் கோவிலில் முதல் பிரகாரத்தில் ,தியாகராஜர் சிலைக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரே உண்மையான வாதாபி விநாயகர் என தனது திருவாரூர் திருக்கோவில்எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிற்ப இயல் அடிப்படையில் நோக்கும்போது அது மேலை சாளுக்கியர்களின் வாதாபி நகர கலை பாணி அன்று. மாறாக நமது சோழநாட்டுத் திருமேனியாகத்தான் (சோழர்கள் காலப் பாணி) உள்ளது. ஆனால் திருவாரூரில் உள்ள "வாதாபி விநாயகர்" என்னும் சிற்பம் தமிழகசிற்ப அமைப்பிலிருந்து மாறுபட்டும், தொன்மையானதாகவும் சாளுக்கிய நாட்டு சிற்ப எழிலுடன் உள்ளது சிந்திக்கதக்கதாகும்.

முத்துசுவாமி தீட்சிதர் எழுதி பாடிய "வாதாபி கணபதி பஜேஹம்" என்ற பாடல் ஆரூரில் உள்ள இக்கணபதியாருக்கு முன்பு இயற்றப்பட்டது என்ற பெருமையும் ஆரூரில் உள்ள இக்கணபதியாருக்கு உண்டு

விநாயகர் வழிபாட்டை பற்றி ஆய்வு செய்த டேவிட் பிரவுன் (David Brown) என்ற அமெரிக்க இறையியல் ஆய்வாளர் எழுதிய Ganesh: Studies of an Asian God புத்தகத்தில் திருவாரூரில் உள்ள விநாயகரே வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் என குறிப்பிட்டுள்ளார்
அத்தோடு திருவாரூர் மற்றும் திருச்செங்காட்டங்குடி விநாயகர் சிலைகளின் படத்தை ஒப்பிட்டு ராபர்ட் பிர...
டேவிட் பிரவுன் Ganesh: Studies of an Asian God என்ற தனது புத்தகத்தில் மிக விரிவாக எழுதி உள்ளார் .

விநாயகர் வழிபாடு தமிழகத்துக்கு வந்ததை பற்றி குறிப்பிடும் பொழுது காஞ்சி பெரியவர் வாதாபி கணபதி பற்றிய தனது ஆராய்ச்சியை குறிப்பிடுகிறார். அதில் திருவாரூரில் உள்ள வாதாபி கணபதியின் வடிவமைப்புத்தான் சாளுக்கியர் கால வடிவமைப்பு என்றும் திருச்செங்காட்டாங்குடி வாதாபி கணபதி சாளுக்கியர் பாணியில் அமையவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடு விநாயகர் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மன் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலை நகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.
ஞானசம்பந்தரும், “பொடி நுகரும் சிறுத் தொண்டர்கருள் செய்யும் பொருட்டாக கடி நகராய் வீற்றிருந்தான் கணபதிச் சரத்தானே” என்று பாடுகிறார்.
(டாக்டர் சோ.ந.கந்தசாமி, தமிழ்த்துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் “ஞான விநாயகர்” என்னும் கட்டுரையில்+ பக்கம் 20)
பண்டை இலக்கியத்தில் விநாயகர் இல்லை
நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார்.
(ஏழாம் நூற்றாண்டு )
உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார்.
வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், “தன்னை நினையத் தருகிறான்” என்ற கட்டுரையில் பக்கம் 17)
முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெறவில்லை.
கர்நாடகத்தின் வட மாவட்டங்களில் ஒன்றான பாகல் கோட்டையில் தான் பதாமி அமைந்திருக்கிறது. வதாபியின் இன்றைய பெயர் பதாமி. வதாபி எனும் அரக்கன் அகஸ்திய முனிவரால் கொல்லப்பட்டதால் இந்த இடத்திற்கு வதாபி என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.என்கிறார் .
ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு புதிய கண்டுபிடிப்பு விநாயகர் வழிபாடு கி.பி.5-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்ததை நிறுவுகிறது .

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலகிராமம் கிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில், வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்தில் பிள்ளையார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இதை கண்டறிந்த கல்வெட்டு ஆராய்ச்சி யாளர்களான வீரராகவன், மங்கையற்கரசி தம்பதி, ‘தமிழ கத்தில் உள்ள விநாயகர் சிற்பங்களில் இதுவே காலத்தால் முந்தையது’ என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு முதலாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் தொடங்கியது என்பார்கள். நரசிம்ம பல்லவனின் படைத்தளபதி பரஞ்சோதி, வாதாபி யில் 2-ம் புலிகேசியை வெற்றி கொண்டதால் அதன் நினைவாக வாதாபி கணபதி என அழைக்கப் பட்டு, கி.பி. 7-ம் நூற்றாண்டில் பிள்ளையார் வழிபாட்டுக்கு வழி வகுத்தது என சிலர் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடை வரைகோயிலில் உள்ள கற்பக விநாயகர் சிலை, கி.பி. 6-ம் நூற் றாண்டுக்கு உட்பட்டதாகும். இந்த கோயிலையும், விநாயகரையும் உருவாக்கிய கல்தச்சனின் பெயர் எக்காட்டூரூ க்கோன் பெருந்த(ச்)சன் என்று உள்ளது.

இது, கி.பி. 6-ம் நூற்றாண்டில் காணப்பட்ட எழுத்து வடிவில் இருப் பதால் வாதாபி காலத்துக்கு முன்பே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததை அறிய முடிகிறது.

மேலும், இதே காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்து பொறிக்கப்படாத 2 சிற்பங்கள் உத்திரமேரூரிலும், வேளச்சேரியிலும் வழிபாட்டில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர்.

தற்போது திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் உள்ள எமதண் டீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் பிள்ளை யார், லகுவேஸ்வரர் மற்றும் முருகன் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கோயிலின் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் பிள்ளையார் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பம் 75 செ.மீ உயரம், 40 செ.மீ அகலம் கொண்ட நீண்ட கல்லில் வெட்டப்பட்டுள்ளது.

பிள்ளையார் பீடத்தில் 3 வரி களில் கல்லெழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இவ்வெழுத்தின் வடி வம் பூளாங்குறிச்சி எழுத்து வடி வத்துக்கு பின்னும், பிள்ளையார் பட்டி குடைவரைக்கோயில் கல் லெழுத்து வடிவத்துக்கு முந்தை யதும் ஆகும். அதாவது கி.பி. 4-ம் நூற்றாண்டுக்கும், கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட தாகும்.
ஆலகிராமத்தில் பிள்ளையார் பீடத்தில் உள்ள கல்லெழுத்துகள் கி.பி. 5-ம் நூற் றாண்டைச் சேர்ந்தவை என்று ஐ.மகாதேவன் தெரிவித்தார்.
இச்சிற்பத்தில் “பிரமிறை பன்னூற- சேவிக- மகன்- கிழார்- கோன்- கொடுவித்து” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இது, கல்வெட்டை செதுக்கிய சிற்பியை பற்றி கூறுகிறது.
தமிழ் வட்டெழுத்துகளுடன் காணப்படும் இப்பிள்ளையார் இந் திய வரலாற்றுக்கு புதிய வரவா கும். இதுவே தமிழகத்தில் உள்ள விநாயகர் சிற்பங்களில் காலத் தால் முந்தையதாகும் . ஆலகிராமத்தில் உள்ள எமகண்டீஸ்வரர் கோயிலுக்கு 1943, 1952, 1963, 1969 ஆகிய ஆண்டுகளில் காஞ்சி மகா பெரியவர் வருகை புரிந்துள்ளார்.
எனவே விநாயகர் எனும் நாயகர்களில் முதன்மையான கடவுளின் வழிபாடு தமிழ் நாட்டில் வாதாபி கணபதி வருவதற்கு முன்பேயே இருந்ததை பிள்ளையார் பட்டி மற்றும் சமீபத்திய ஆலகிராமம் கண்டுபிடிப்பின் மூலம் ஐந்தாம் நூற்றாண்டுவரை கொண்டு செல்லலாம் .

பிள்ளையார் சுழி எனும் உகாரம் பிரணவத்தின் பொருளைக் கூறுவதாகும் அவ்வைக்கு விநாயகரும் தொடர்பு படுத்தி பல கதைகள் உண்டு , அவ்வையின் விநாயகர் அகவல் பெரிய ஒரு ஞான நூல் ஆகும் .
அப்பமொடு அவல் பொரியுடன் கூடவே அகவல் பாடி
இன்றைய நாளை கொண்டாடுவோம் .வாழ்த்துக்கள் !
அண்ணாமலை சுகுமாரன்
25/8/17
படம் திருச்செங்காட்டங்குடி (இடது) , திருவாரூர் வாதாபி விநாயகர் (வலது)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 25, 2017 2:04 pm

நல்ல ஆய்வு சுகுமாரன் அவர்களே!
வாதாபியிலிருந்து வந்ததே கணபதி வணக்கம் என்று கல்கிகூட எழுதியுள்ளார்!ஆனால் அது தவறு என்று சில வருடங்களுக்கு முந்தைய எனது ஆய்வுகளில் நான் எழுதியுள்ளேன் ! தாங்களும் அதையே உறுதிப்படுத்தியுள்ளீர்கள் ! இத்துடனாவது ‘வாதாபி’க் கருத்து நீங்கட்டும்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 25, 2017 5:22 pm

சங்க இலக்கியங்களில் விநாயகர் மற்றும் ஐயப்பன் ஆகிய தெய்வங்களைப்பற்றி குறிப்புக்கள் ஏதும் இல்லை .

மனித உடலில் சிங்கத்தின் தலையைப் பொருத்தி நரசிம்மம் என்றும்
மனித உடலில் காளையின் தலையைப் பொருத்தி நந்திதேவர் என்றும்
மனித உடலில் எருமையின் தலையைப் பொருத்தி மகிஷாசுரன் என்றும்
மனித உடலில் குரங்கின் தலையைப் பொருத்தி அனுமான் என்றும்
மனித உடலில் கரடியின் தலையைப் பொருத்தி ஜாம்பவான் என்றும்
மனித உடலில் கிளியின் தலையைப் பொருத்தி சுகர் என்றும்

மக்கள் பலவாறு உருவம் கொடுத்து தெய்வங்களை வழிபட்டார்கள் . ஆனால்

மனித உடலில் யானையின் தலையைப் பொருத்தியவுடன் கிடைத்த விநாயகர் உருவம் மிகவும் கவர்ச்சியாக அமைந்துவிட்டது . மக்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டது . விநாயகர் வழி[பாடும் நிலைத்துவிட்டது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 25, 2017 10:06 pm

வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? L7QbXlnMSLCm6217Mt6q+maha

அநேக கணபதி பேதங்களில் வாதாபி கணபதி என்று ஒருத்தருண்டு. வாதாபி என்ற அசுரனை ஜெயித்துக் கொல்வதற்காக அகத்தியர் உபாசித்த
கணபதி அவர். திருச்செங்கட்டான்குடிக்கு வந்து சேர்ந்தவர் இவரே.
வாதாபி என்ற அசுர வதத்துக்குக் காரணமான அவர் எந்த ஊரிலிருந்து வந்தாரோ அந்த ஊருக்குப் பேர் வாதாபிதான். அசுர வாதாபி வாழ்ந்துவந்த
ஊருக்குப் பிற்காலத்தில் அவன் பெயரே ஏற்பட்டுவிட்டது. அது சாளுக்கிய ராஜ வம்சத்தவர்களின் தலைநகரமாக ஆயிற்று.
சாளுக்கிய ராஜாக்களில் புலிகேசி என்று பெயருள்ளவர்கள் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள். புலிகேசி என்று தப்பாகச் சொல்கிறார்கள்.
புலியுமில்லை. எலியுமில்லை. சாளுக்கிய சாசனங்களில் செப்பேடுகள் சமஸ்கிருதத்தில்தான் இருக்கும். கல்வெட்டுகள் கன்னடத்தில் இருக்கும்.
அப்படிக் கன்னடத்தில் பொலெகேசி என்று சொல்லியிருக்கிறது. அதைப் பல பேர் பல ரூபமாக தினுசு பண்ணி ஒவ்வொரு அர்த்தம் சொல்கிறார்கள்.
பொலே என்பதற்குத் தமிழ் மூலம், தெலுங்கு மூலம், கன்னட மூலம் எல்லாம் சொல்கிறார்கள். ஆனால் அந்த வம்சத்தினர்களில் ராஜாவான பிறகு
எல்லாருமே சமஸ்கிருதப் பெயர்தான் வைத்துக்கொண்டு இருப்பதால் இந்தப் பெயரைப் புலிகேசின், புலிகேசி என்று சமஸ்கிருதமாகவே சரித்திர
ஆசிரியர்கள் தீர்மானம் பண்ணி, இங்கிலீஷில் அப்படித்தான் எழுதுகிறார்கள்.
புலிகேசி என்றால் புல (ள) காங்கிதம் அடைவதென்கிறோமே, அப்படி ஆனந்தத்தில் மயிர்க்கூச்சு எடுத்திருப்பவன் என்று அர்த்தம். 'ரிஷிகேசன்' என்று
தப்பாகச் சொல்லும் ஹ்ருஷீகேசன் என்ற பெயருக்கும் அப்படி ஒரு அர்த்தமுன்டு. ஹ்ருஷீகம் என்றால் இந்திரியங்கள். அவற்றை அடக்கியாளும் ஈசன்
ஹ்ருஷீகேசன் என்று ஆசார்யாள் விஷ்ணு சகஸ்ர நாம பாஷ்யத்தில் ஒரு அர்த்தம் சொன்னாலும், சூர்ய சந்திர ரூபங்களில் பகவான் உள்ளபோது
அவற்றின் கேசம் போன்ற ரச்மி - கதிர்களால் உலகத்தை மகிழ்விப்பதாலும், இப்படிப் பெயர் என்று இன்னொரு அர்த்தமும் கொடுத்திருக்கிறார்.
ஹ்ருஷ் என்கிற தாது மயிர்க்கூச்செடுக்கும் அளவுக்கு மகிழ்ச்சி உண்டாக்குவதைக் குறிக்கும். வீர தீர சாகசங்களை ஒரு ராஜா தானும் மயிர்க்கூச்செரிந்து
செய்வான். அதைப் பார்க்கிற, கேட்கிறவர்களும் புளகமடையச் செய்கிறவனே புலிகேசி. புலம் என்றாலே புளகம்தான். புளகமுற்ற கேசம் உடையவன் புலகேசி.
புலக+ஈச, புகளமடைந்தவனும், ராஜாவாக இருக்கிறவனும் என்று பிரித்துச் சொல்லலாம்.
எனக்கு ஒன்று தோன்றுகிறது. நாம் பார்க்கப்போகும் கதையிலே வரும் இரண்டாவது புலிகேசிக்குப் போட்டியாயிருந்த இரண்டு பெரிய ராஜாக்களில்
ஒருத்தன் மகேந்திரவர்ம பல்லவன். அவனைவிடப் பெரிய போட்டி வட தேசத்தில் சாம்ராஜ்யாதிபதியாயிருந்த ஹர்ஷவர்த்தனன். ஹர்ஷ் என்பதற்கும்
ஆனந்தத்தில் மயிர் கூச்செடுத்திருப்பவன் என்பதுதான் அர்த்தம். அந்த ஹர்ஷனையே புறமுதுகு காட்டும்படி பண்ணினவன் புலிகேசி. அதனாலேயே
அந்தப் பெயரின் அர்த்தத்தைக் கொண்ட புலிகேசிப் பெயரைத் தானும் வைத்துக்கொண்டிருப்பான் போலிருக்கிறது. ராஜாவாவதற்கு முந்தி அவனுக்குப்

பேர் எரெயம்மா என்பது. அது கன்னடப் பேர்.
ராஜாவான பிறகு சமஸ்கிருதப் பேர் வைத்துக்கொண்டபோது, தன் பாட்டனார் பேர் புலிகேசி என்று இருப்பதையும் அது தன்னுடைய arch rival ஆன -
முக்கியமான போட்டியாளனான ஹர்ஷன் என்பதற்கே இன்னொரு வார்த்தையாகவும் இருப்பதைப் பார்த்து அந்தப் பேர் சூட்டிக்கொண்டிருப்பானோ என்று தோன்றுகிறது.
கேசத்துக்கு அளகம் என்று ஒரு பேர். யக்ஷராஜனும், பணத்துக்குத் தேவதையுமான குபேரனுக்கு அளகேசன் என்று பேர். அவனுடைய ராஜதானி அளகாபுரி.
ரோமாஞ்சம் உண்டாக்கும் சிறப்பை அளகேசன், ஹ்ருஷீகேசன், புலிகேசி முதலிய பெயர்கள் காட்டுகின்றன.
இரண்டாவது புலிகேசி சமாச்சாரத்திற்கு வருகிறேன். முதலில் சிற்றப்பாவால் வஞ்சிக்கப்பட்டு ராஜ்யாதிகார உரிமையை இழந்து கஷ்டப்பட்டான். அப்புறம்
புஜ, பல பராக்கிரமத்தால் சிற்றப்பாவை வீழ்த்தி சிம்மாசனம் ஏறினான். சாளுக்கிய ராஜாக்களுக்குள்ளேயே தலைசிறந்த இடம் பெற்றான்.
சத்தியத்திற்குப் புகலிடமாயிருப்பவன் என்ற அர்த்தமுள்ள சத்யாச்ரயன் என்ற பட்டத்தோடு ஆட்சி நடத்தினான். ராஜாதிராஜ ஹர்ஷவர்தனனும் தன்னை
எதிர்த்துப் போராடாதபடி கலங்க அடித்து, அவன் நர்மதைக்கு வடக்கோடு ராஜ்யத்திற்கு எல்லை காட்டிக்கொண்டு திரும்பும்படிப் பண்ணினான்.
அப்போது தமிழ் தேசத்தில் பெரிய ராஜ்யாதிபதியாக இருந்தவன் பல்லவ ராஜாவான மகேந்திர வர்மா. 'மகேந்திர விக்ரம வர்மன்' என்பது அவனே அவன்
எழுதிய மத்த விலாச பாராயணம் என்ற ஹாஸ்ய நாடகத்தில் சொல்லிக்கொள்ளும் பெயர். சில்பக் கலையும், சங்கீதக் கலையும் எந்நாளும்
கொண்டாடத்தக்க பெரிய கலைஞனாகவும், ரசிகனாகவும் இருந்தவன்.
அவன் மேல் புலிகேசி படையெடுத்து, பல்லவ சைன்யம் காஞ்சிபுரம் கோட்டைக்குள்ளேயே முடங்கிப் போகும்படிச் செய்து ஜயித்துவிட்டான். இது
தீர்மானமாக சாசன ஆதாரங்களில் தெரிவதாகச் சரித்திராசிரியர்கள் சொல்கிறார்கள்
மகேந்திர வர்மன் பிள்ளை நரசிம்ம வர்மன். மாமல்லன் என்று பேர் வாங்கிய அந்த வீராதி வீரன் காலத்தில்தான் பழிவாங்க முடிந்தது. அவன் வாதாபி
மேலே படையெடுத்துப் போய் ஹதாஹதம் பண்ணி ஜயித்துவிட்டான். புலகேசி நேரே பல்லவ ராஜதானியான காஞ்சிக்கு உள்ளே போய் அதை ஜயிக்கவில்லை. மகேந்திரனைக் காஞ்சிக் கோட்டையை மூடிக்கொண்டு உள்ளே இருக்கும்படி பண்ணி, வெளியில்தான் ஜெயித்தான். மாமல்லனோ பதிலடி என்று அதைவிட
உக்கிரமாக சளுக்கிய ராஜதானியான வாதாபிக்கு உள்ளேயே போய் அதோடு நகரத்தையே நாசப்படுத்திவிட்டான்.
ராஜாக்கள் ஒரே சத்வமாக, சாதுவாக இருக்க முடியாதுதான். நம்முடைய ராஜ சாஸ்திரங்களின்படி அப்படி இருக்கக் கூடாதும்தான். தர்ம யுத்தம், தங்களை
ஜயித்தவனைத் திரும்பத் தாக்கி ஜயிப்பது எல்லாம் அவர்களுக்கு வீரக் கடமையாகவே சொல்லியிருக்கிறது. ஆனாலும் அதில் கட்டுப்பாடு வேண்டும்.
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Aug 26, 2017 8:39 am

Dr.S.Soundarapandian wrote:நல்ல ஆய்வு சுகுமாரன் அவர்களே!
வாதாபியிலிருந்து வந்ததே கணபதி வணக்கம் என்று கல்கிகூட எழுதியுள்ளார்!ஆனால் அது தவறு என்று சில வருடங்களுக்கு முந்தைய எனது ஆய்வுகளில் நான் எழுதியுள்ளேன் ! தாங்களும் அதையே உறுதிப்படுத்தியுள்ளீர்கள் ! இத்துடனாவது ‘வாதாபி’க் கருத்து நீங்கட்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1247068

நன்றி நண்பரே

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Aug 26, 2017 8:44 am

T.N.Balasubramanian wrote:வாதாபி விநாயகர்  எங்கேதான் உள்ளது  ? L7QbXlnMSLCm6217Mt6q+maha
நன்றிநண்பரே நல்ல தகவல்கள்
இணையத்தில் இப்போது அனைத்து கருத்துக்களும் கிடைக்க்கிறது .
ஆய்வு என்பது அதை தொகுத்து அளிப்பதுவே என ஆகிவிட்டது .
என்னையும் சேர்த்துதான் கூறுகிறேன் .
அப்போது தகவல்கள் தேட புத்தகங்கள் தேடவேண்டும் ,பிறகு படிக்கவேண்டும் .
இப்போது அனைத்தும் விறல் நுனியில் .வந்துவிட்டது .
இருந்தும் நல்ல முறையில் பயன் படுத்துவோர் சொற்பமே
பல ஆயுர்வகள் நிறுவப்பட இதுவே தருணம் .
சுகுமாரன்

அநேக கணபதி பேதங்களில் வாதாபி கணபதி என்று ஒருத்தருண்டு. வாதாபி என்ற அசுரனை ஜெயித்துக் கொல்வதற்காக அகத்தியர் உபாசித்த
கணபதி அவர். திருச்செங்கட்டான்குடிக்கு வந்து சேர்ந்தவர் இவரே.
வாதாபி என்ற அசுர வதத்துக்குக் காரணமான அவர் எந்த ஊரிலிருந்து வந்தாரோ அந்த ஊருக்குப் பேர் வாதாபிதான். அசுர வாதாபி வாழ்ந்துவந்த
ஊருக்குப் பிற்காலத்தில் அவன் பெயரே ஏற்பட்டுவிட்டது. அது சாளுக்கிய ராஜ வம்சத்தவர்களின் தலைநகரமாக ஆயிற்று.
சாளுக்கிய ராஜாக்களில் புலிகேசி என்று பெயருள்ளவர்கள் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள். புலிகேசி என்று தப்பாகச் சொல்கிறார்கள்.
புலியுமில்லை. எலியுமில்லை. சாளுக்கிய சாசனங்களில் செப்பேடுகள் சமஸ்கிருதத்தில்தான் இருக்கும். கல்வெட்டுகள் கன்னடத்தில் இருக்கும்.
அப்படிக் கன்னடத்தில் பொலெகேசி என்று சொல்லியிருக்கிறது. அதைப் பல பேர் பல ரூபமாக தினுசு பண்ணி ஒவ்வொரு அர்த்தம் சொல்கிறார்கள்.
பொலே என்பதற்குத் தமிழ் மூலம், தெலுங்கு மூலம், கன்னட மூலம் எல்லாம் சொல்கிறார்கள். ஆனால் அந்த வம்சத்தினர்களில் ராஜாவான பிறகு
எல்லாருமே சமஸ்கிருதப் பெயர்தான் வைத்துக்கொண்டு இருப்பதால் இந்தப் பெயரைப் புலிகேசின், புலிகேசி என்று சமஸ்கிருதமாகவே சரித்திர
ஆசிரியர்கள் தீர்மானம் பண்ணி, இங்கிலீஷில் அப்படித்தான் எழுதுகிறார்கள்.
புலிகேசி என்றால் புல (ள) காங்கிதம் அடைவதென்கிறோமே, அப்படி ஆனந்தத்தில் மயிர்க்கூச்சு எடுத்திருப்பவன் என்று அர்த்தம். 'ரிஷிகேசன்' என்று
தப்பாகச் சொல்லும் ஹ்ருஷீகேசன் என்ற பெயருக்கும் அப்படி ஒரு அர்த்தமுன்டு. ஹ்ருஷீகம் என்றால் இந்திரியங்கள். அவற்றை அடக்கியாளும் ஈசன்
ஹ்ருஷீகேசன் என்று ஆசார்யாள் விஷ்ணு சகஸ்ர நாம பாஷ்யத்தில் ஒரு அர்த்தம் சொன்னாலும், சூர்ய சந்திர ரூபங்களில் பகவான் உள்ளபோது
அவற்றின் கேசம் போன்ற ரச்மி - கதிர்களால் உலகத்தை மகிழ்விப்பதாலும், இப்படிப் பெயர் என்று இன்னொரு அர்த்தமும் கொடுத்திருக்கிறார்.
ஹ்ருஷ் என்கிற தாது மயிர்க்கூச்செடுக்கும் அளவுக்கு மகிழ்ச்சி உண்டாக்குவதைக் குறிக்கும். வீர தீர சாகசங்களை ஒரு ராஜா தானும் மயிர்க்கூச்செரிந்து
செய்வான். அதைப் பார்க்கிற, கேட்கிறவர்களும் புளகமடையச் செய்கிறவனே புலிகேசி. புலம் என்றாலே புளகம்தான். புளகமுற்ற கேசம் உடையவன் புலகேசி.
புலக+ஈச, புகளமடைந்தவனும், ராஜாவாக இருக்கிறவனும் என்று பிரித்துச் சொல்லலாம்.
எனக்கு ஒன்று தோன்றுகிறது. நாம் பார்க்கப்போகும் கதையிலே வரும் இரண்டாவது புலிகேசிக்குப் போட்டியாயிருந்த இரண்டு பெரிய ராஜாக்களில்
ஒருத்தன் மகேந்திரவர்ம பல்லவன். அவனைவிடப் பெரிய போட்டி வட தேசத்தில் சாம்ராஜ்யாதிபதியாயிருந்த ஹர்ஷவர்த்தனன். ஹர்ஷ் என்பதற்கும்
ஆனந்தத்தில் மயிர் கூச்செடுத்திருப்பவன் என்பதுதான் அர்த்தம். அந்த ஹர்ஷனையே புறமுதுகு காட்டும்படி பண்ணினவன் புலிகேசி. அதனாலேயே
அந்தப் பெயரின் அர்த்தத்தைக் கொண்ட புலிகேசிப் பெயரைத் தானும் வைத்துக்கொண்டிருப்பான் போலிருக்கிறது. ராஜாவாவதற்கு முந்தி அவனுக்குப்

பேர் எரெயம்மா என்பது. அது கன்னடப் பேர்.
ராஜாவான பிறகு சமஸ்கிருதப் பேர் வைத்துக்கொண்டபோது, தன் பாட்டனார் பேர் புலிகேசி என்று இருப்பதையும் அது தன்னுடைய arch rival ஆன -
முக்கியமான போட்டியாளனான ஹர்ஷன் என்பதற்கே இன்னொரு வார்த்தையாகவும் இருப்பதைப் பார்த்து அந்தப் பேர் சூட்டிக்கொண்டிருப்பானோ என்று தோன்றுகிறது.
கேசத்துக்கு அளகம் என்று ஒரு பேர். யக்ஷராஜனும், பணத்துக்குத் தேவதையுமான குபேரனுக்கு அளகேசன் என்று பேர். அவனுடைய ராஜதானி அளகாபுரி.
ரோமாஞ்சம் உண்டாக்கும் சிறப்பை அளகேசன், ஹ்ருஷீகேசன், புலிகேசி முதலிய பெயர்கள் காட்டுகின்றன.
இரண்டாவது புலிகேசி சமாச்சாரத்திற்கு வருகிறேன். முதலில் சிற்றப்பாவால் வஞ்சிக்கப்பட்டு ராஜ்யாதிகார உரிமையை இழந்து கஷ்டப்பட்டான். அப்புறம்
புஜ, பல பராக்கிரமத்தால் சிற்றப்பாவை வீழ்த்தி சிம்மாசனம் ஏறினான். சாளுக்கிய ராஜாக்களுக்குள்ளேயே தலைசிறந்த இடம் பெற்றான்.
சத்தியத்திற்குப் புகலிடமாயிருப்பவன் என்ற அர்த்தமுள்ள சத்யாச்ரயன் என்ற பட்டத்தோடு ஆட்சி நடத்தினான். ராஜாதிராஜ ஹர்ஷவர்தனனும் தன்னை
எதிர்த்துப் போராடாதபடி கலங்க அடித்து, அவன் நர்மதைக்கு வடக்கோடு ராஜ்யத்திற்கு எல்லை காட்டிக்கொண்டு திரும்பும்படிப் பண்ணினான்.
அப்போது தமிழ் தேசத்தில் பெரிய ராஜ்யாதிபதியாக இருந்தவன் பல்லவ ராஜாவான மகேந்திர வர்மா. 'மகேந்திர விக்ரம வர்மன்' என்பது அவனே அவன்
எழுதிய மத்த விலாச பாராயணம் என்ற ஹாஸ்ய நாடகத்தில் சொல்லிக்கொள்ளும் பெயர். சில்பக் கலையும், சங்கீதக் கலையும் எந்நாளும்
கொண்டாடத்தக்க பெரிய கலைஞனாகவும், ரசிகனாகவும் இருந்தவன்.
அவன் மேல் புலிகேசி படையெடுத்து, பல்லவ சைன்யம் காஞ்சிபுரம் கோட்டைக்குள்ளேயே முடங்கிப் போகும்படிச் செய்து ஜயித்துவிட்டான். இது
தீர்மானமாக சாசன ஆதாரங்களில் தெரிவதாகச் சரித்திராசிரியர்கள் சொல்கிறார்கள்
மகேந்திர வர்மன் பிள்ளை நரசிம்ம வர்மன். மாமல்லன் என்று பேர் வாங்கிய அந்த வீராதி வீரன் காலத்தில்தான் பழிவாங்க முடிந்தது. அவன் வாதாபி
மேலே படையெடுத்துப் போய் ஹதாஹதம் பண்ணி ஜயித்துவிட்டான். புலகேசி நேரே பல்லவ ராஜதானியான காஞ்சிக்கு உள்ளே போய் அதை ஜயிக்கவில்லை. மகேந்திரனைக் காஞ்சிக் கோட்டையை மூடிக்கொண்டு உள்ளே இருக்கும்படி பண்ணி, வெளியில்தான் ஜெயித்தான். மாமல்லனோ பதிலடி என்று அதைவிட
உக்கிரமாக சளுக்கிய ராஜதானியான வாதாபிக்கு உள்ளேயே போய் அதோடு நகரத்தையே நாசப்படுத்திவிட்டான்.
ராஜாக்கள் ஒரே சத்வமாக, சாதுவாக இருக்க முடியாதுதான். நம்முடைய ராஜ சாஸ்திரங்களின்படி அப்படி இருக்கக் கூடாதும்தான். தர்ம யுத்தம், தங்களை
ஜயித்தவனைத் திரும்பத் தாக்கி ஜயிப்பது எல்லாம் அவர்களுக்கு வீரக் கடமையாகவே சொல்லியிருக்கிறது. ஆனாலும் அதில் கட்டுப்பாடு வேண்டும்.
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247075

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Aug 26, 2017 8:48 am

[நன்றிநண்பரே நல்ல தகவல்கள் தான்
ஆயினும் இதில் இன்னமும் நுட்பமான பல கருத்துக்கள் உள்ளன
பின்பு தனியே விவாதிக்கலாம்
----------------------------------------------------------------------------
quote="M.Jagadeesan"]சங்க இலக்கியங்களில் விநாயகர் மற்றும் ஐயப்பன் ஆகிய தெய்வங்களைப்பற்றி குறிப்புக்கள் ஏதும் இல்லை .

மனித உடலில் சிங்கத்தின் தலையைப் பொருத்தி நரசிம்மம் என்றும்
மனித உடலில் காளையின் தலையைப் பொருத்தி நந்திதேவர் என்றும்
மனித உடலில் எருமையின் தலையைப் பொருத்தி மகிஷாசுரன் என்றும்
மனித உடலில் குரங்கின் தலையைப் பொருத்தி அனுமான் என்றும்
மனித உடலில் கரடியின் தலையைப் பொருத்தி ஜாம்பவான் என்றும்
மனித உடலில் கிளியின் தலையைப் பொருத்தி சுகர் என்றும்

மக்கள் பலவாறு உருவம் கொடுத்து தெய்வங்களை வழிபட்டார்கள் . ஆனால்

மனித உடலில் யானையின் தலையைப் பொருத்தியவுடன் கிடைத்த விநாயகர் உருவம் மிகவும் கவர்ச்சியாக அமைந்துவிட்டது . மக்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டது . விநாயகர் வழி[பாடும் நிலைத்துவிட்டது . [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1247069

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக