ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 ரா.ரமேஷ்குமார்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 SK

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 ரா.ரமேஷ்குமார்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 ரா.ரமேஷ்குமார்

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 M.Jagadeesan

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 மூர்த்தி

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 ayyasamy ram

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 ayyasamy ram

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

விஜய்யும் ரஜினியும் படைத்த சாதனைகள்; வேறெவரும் இடம்பெறவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு மனு
 SK

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
 ரா.ரமேஷ்குமார்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
 ரா.ரமேஷ்குமார்

அரிசியில இருக்கற கல்லை நல்லா பொறுக்கினா என்ன?
 krishnaamma

ஒரு பக்கக் கதை - தலைவர்
 krishnaamma

நான் மலரோடு தனியாக...
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு

View previous topic View next topic Go down

ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு

Post by T.N.Balasubramanian on Sat Sep 02, 2017 4:16 am

ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவுசென்னை: வாகனம் ஓட்டும்போது அந்த வாகனத்தை ஓட்டுபவர்கள் ஒரிஜினல் லைசென்சை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை
அமல்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் வண்டியில்
செல்லும்போது தங்கள் கையில் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல்
அந்த உத்தரவு அமலுக்கு வந்தது.   ஆனால், வாகன ஓட்டிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. மனுவில்,  ‘’வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருப்பது இயலாத காரியம். அது லாரி உரிமையாளர்கள்
கையில் இருக்கும் பட்சத்தில் டிரைவர்கள் எப்படி கையில் வைத்திருக்க முடியும். மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. எனவே தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி
முன்னிலையில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், மோட்டார் வாகன சட்டத்தில் வாகன
ஓட்டுனர்கள் தங்களிடம் ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருக்க வேண்டியது இல்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒரிஜினல்
லைசென்ஸ்சுக்கு மாற்றாக சான்று பெற்றிருந்தாலே போதும் என்றும் வாதிட்டார். இதை கேட்ட நீதிபதி, வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ்
வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பல்வேறு குழப்பம் ஏற்படுத்தும் என்று கூறினார். இதையடுத்து சிறப்பு அரசு வக்கீல் திவாகர்
ஆஜராகி விசாரணையை பிற்பகல் தள்ளி வைக்க வேண்டும். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளார் என்றார்.

வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவது
அரசின் கடமை. ஏராளமான போலி லைசென்சுகள் உள்ளன. மேலும் ரத்து செய்யப்பட்ட லைசென்சின் நகலை வைத்துக்கொண்டு பலர்
வாகனங்களை ஓட்டுகிறார்கள். இதை கட்டுப்படுத்தவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று வாதிட்டார். நீதிபதி: இரு சக்கர வாகனங்களில்
செல்பவர்கள் தங்களிடம் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருப்பது கஷ்டம். அந்த லைசென்ஸ் தொலைந்துவிட்டால் வேறு லைசென்ஸ் வாங்கும்வரை
அவர்கள் வாகனங்களை இயக்க முடியாதே? அட்வகேட் ஜெனரல்: புதிய லைசென்சுக்கு விண்ணப்பித்தால் விரைவில் கிடைக்கும். நீதிபதி: அரசின்
இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். அட்வகேட் ஜெனரல்: மத்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 130ல்
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி கேட்டால் காட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது..

நீதிபதி: மோட்டார் வாகன விதி 139ல் ஒரிஜினல் லைசென்ஸ் இல்லையென்றால், அல்லது வேறு அதிகாரியின் கட்டுப்பாட்டில் அது இருந்தால்
அந்த லைசென்ஸ் தொடர்பான விபரங்கள் அடங்கிய சான்று சம்மந்தப்பட்ட அதிகாரியின் சான்றாவணத்துடன் ஓட்டுனரிடம் இருந்தால் போதும்
என்று கூறப்பட்டுள்ளது. அட்வகேட் ஜெனரல்: ஒரிஜினல் எது போலி எது என்று கண்டுபிடிப்பதும், ஏற்கனவே ரத்தானதா என்று கண்டுபிடிப்பதும்
அரசின் இந்த நடவடிக்கை மூலம் சாத்தியமாகும்.
நீதிபதி: இந்த நவீன உலகத்தில் ஒரு லைசென்ஸ் உண்மையானதா, போலியானதா என்று கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். அதற்கான
தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இருசக்கர வாகங்களில் செல்பவர்களின் ஒரிஜினல் லைசென்ஸ் மழை போன்ற காலங்களில் சிதைந்துபோகலாம்.
அப்போது, அந்த ஓட்டுநரால் போலீசாரிடம் எப்படி ஒரிஜினல் லைசென்சை காட்ட முடியும்.
அட்வகேட் ஜெனரல்: பல திட்டங்களுக்கான ஆவணங்களை ஸ்மார்ட் கார்டாக மாற்ற ரூ.300 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டருக்கு
உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த திட்டத்தில் லைசென்சும் அடங்கும். எனவே, இந்த விஷயத்தில் இப்போது எந்த இடைக்கால உத்தரவையும்
பிறப்பிக்கக் கூடாது. வரும் திங்கள் கிழமை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்கிறோம்.
நீதிபதி: இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் மனுதாரர் சங்கத்திற்கு மட்டுமே அந்த உத்தரவு பொருந்தும். ஆனால், பொதுவான உத்தரவை
வழங்க இந்த நீதிமன்றம் விரும்புகிறது. உங்களின் இந்த திடீர் முடிவு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்த வழக்கில்
இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவா? அல்லது வழக்கு முடியும்வரை அறிவிப்பை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிடவா? அதுவரை அறிவிப்பை
அமல்படுத்த மாட்டோம் என்று உத்தரவாதம் தரமுடியுமா?

அட்வகேட் ஜெனரல்: விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவையுங்கள். அதுவரை இந்த அறிவிப்பை அமல்படுத்த மாட்டோம்.இவ்வாறு
வாதம் நடந்தது.
அப்போது, வக்கீல் புருஷோத்தமன் தானும் இந்த வழக்கில் இணைவதாக மனுத் தாக்கல் செய்துள்ளேன். அதில் லைசென்ஸ் கொடுக்கும்போதே 3
ஒரிஜினல்களைக் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன் என்றார். மேலும், சில வக்கீல்கள் ஸ்மார்ட் கார்டு, நவீன தொழில் நுட்பம் மூலம்
லைசென்ஸ் ஒரிஜினல்தானா என்று கண்டுபிடிப்பது போன்ற பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும்
கேட்ட நீதிபதி, “ இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது. எனவே,
இந்த வழக்கையும் தலைமை நீதிபதி பெஞ்சுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. வரும் செவ்வாய்கிழமைவரை (செப்டம்பர்-5) வாகன ஒட்டிகள் ஒரிஜினல்
லைசென்சை வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை செயல்படுத்தக்கூடாது. விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்கப்படுகிறது”
என்று உத்தரவிட்டார்.
நன்றி தினகரன்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21454
மதிப்பீடுகள் : 8148

View user profile

Back to top Go down

Re: ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு

Post by M.Jagadeesan on Sat Sep 02, 2017 6:15 am

என்னுடைய Two Wheeler உரிமம் காலாவதி ஆகிவிட்டது . அதைப் புதுப்பிக்க Original Licence வேண்டும் என்று சொன்னார்கள் . ஒருவாரம் கழித்தே எனக்குப் புது Licence வந்தது .செலவு ரூ 2500 ஆயிற்று .ஒரே அலைச்சல் .
Original Licence எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்கமுடியாது . காணாமல் போனாலோ அல்லது மழையில் நனைந்தாலோ கஷ்டம்தான் .

இனி ஆதார் கார்டு , பான்கார்டு எல்லாம் Original ஆக சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாலும் கொண்டுவருவார்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4984
மதிப்பீடுகள் : 2352

View user profile

Back to top Go down

Re: ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு

Post by T.N.Balasubramanian on Sat Sep 02, 2017 7:14 am

புதுப்பிக்க வேண்டி இருந்தது RC யா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21454
மதிப்பீடுகள் : 8148

View user profile

Back to top Go down

Re: ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு

Post by M.Jagadeesan on Sat Sep 02, 2017 9:38 am

@T.N.Balasubramanian wrote:புதுப்பிக்க வேண்டி இருந்தது RC யா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247333

Driving Licence ஐயா !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4984
மதிப்பீடுகள் : 2352

View user profile

Back to top Go down

Re: ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 02, 2017 8:01 pm

:நல்வரவு:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு

Post by T.N.Balasubramanian on Sat Sep 02, 2017 9:25 pm

@M.Jagadeesan wrote:என்னுடைய Two Wheeler உரிமம் காலாவதி ஆகிவிட்டது . அதைப் புதுப்பிக்க Original Licence வேண்டும் என்று சொன்னார்கள் . ஒருவாரம் கழித்தே எனக்குப் புது Licence வந்தது .செலவு ரூ 2500 ஆயிற்று .ஒரே அலைச்சல் .
Original Licence எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்கமுடியாது . காணாமல் போனாலோ அல்லது மழையில் நனைந்தாலோ கஷ்டம்தான் .

இனி ஆதார் கார்டு , பான்கார்டு எல்லாம் Original ஆக சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாலும் கொண்டுவருவார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1247329

2500 ரூபாய் ! ஏன்? ஏஜென்ட் மூலம் சென்றீரோ?
எங்களுக்கு RTO கே கே நகர்.
5 ரூபாய் கொடுத்து விண்ணப்ப படிவம் .
25 ரூபாய் ,வாசலில் உட்கார்ந்திருக்கும் மருத்துவர் எனப்படுபவருக்கு .
ஆபீசில் ,RTO விதிப்படி ,போர்டில் உள்ள தொகைக்கு ( 300 ) கவுண்டரில் பணம் செலுத்த ,
வேண்டியதுதான். அவர்களே போட்டோ எடுத்து அன்று மாலையே உங்களுக்கு லைசென்ஸ்.
நேர்மைக்கு பெயர் பெற்றது kknagar RTO ஆபீஸ்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21454
மதிப்பீடுகள் : 8148

View user profile

Back to top Go down

Re: ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு

Post by M.Jagadeesan on Sat Sep 02, 2017 9:54 pm

ஆமாம் ! Ajent மூலம்தான் சென்றேன் .வயதான காலத்தில் அங்கே Q வில் நின்று கஷ்டப்படமுடியாது என்பதால் . நீங்கள் சொல்கின்ற தொகை மிகவும் குறைவாக உள்ளது . நம்முடைய அவசரத்திற்கு பணத்தைப் பார்த்தால் முடியாது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4984
மதிப்பீடுகள் : 2352

View user profile

Back to top Go down

Re: ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum