ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 ayyasamy ram

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 ayyasamy ram

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 ayyasamy ram

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 SK

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 SK

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 SK

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

வீரக்குமார். ப
 kuloththungan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கடவுள் இருக்கிறாரா?

View previous topic View next topic Go down

கடவுள் இருக்கிறாரா?

Post by T.N.Balasubramanian on Fri Sep 08, 2017 9:03 pm

கடவுள் இருக்கிறாரா? இது ஒரு உண்மைச் சம்பவம்!.
.

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார்.
கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிய பேசிய அவர். ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.
நீ கடவுள் இருப்பதாக நம்புகிறாயா?
'நிச்சயமாக ஐயா' மாணவன் சொன்னான்.
'கடவள் நல்லவராஃ'
'ஆம் ஐயா'
'கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?
'ஆம்'
'என்னுடைய சகோதரர் புற்றுநோய் காராணமாக இறந்துவிட்டார். தன்னைக்காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை
செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய் வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம்.
ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பின் எப்படிச் சொல்கிறாய்?
(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)
'உன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சுரி.........நாம் மீண்டும் ஆரம்பிப்போம், கடவுள் நல்லவரா'?
'ஆம் ஐயா'
'சாத்தான் நல்லவரா?'
'இல்லை'
'எல்லாரும் கடவுள் படைப்புதான் என்றால சாத்தான் எங்கிருந்து வந்தார்'?
கடவுளிடமிருந்துதான்'
'சரி இந்த உலகத்தில் கெட்டவை இருக்கின்றனவா'?
'ஆம்'
'அப்படியனெ;றால் அவற்றை உருவாக்கியது யார்'?
(மாணவர் பதில் சொல்லவில்லை)
'இவ்வுலகதில் பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தனஃ'
(மாணவர் மௌனமாய் நிற்கிறார்)
விஷமங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன என்று அறிவியல் சொல்கிறது. இப்போது சொல்,
கடவுளை கண்hல் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேள்வி பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது கடவுளின்
வாசனையை நுகர்ந்திருக்கிறாயா? வேறு எப்படித்தான் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?'
................................(மௌனம்)
'ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய். அப்படித்தானே?'
'ஆம் ஐயா'
'நம் நடைமுறை வாழ்க்கiயிலும் சரி. பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி. ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி.
எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது. கடவுள் இல்லை என்று இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?'
'ஒன்றுமேயில்லை, எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது'
'ஹம்ம்......நம்பிக்கை..........அதுதான் இப்போது பிரச்சனையே...'
ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.
(இப்போது மாணவர் தன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)
'ஐயா............வெப்பம் அல்லது சூடு என்ற ஒன்று உள்ளதா?'
'நிச்சயமாக உள்ளது.'
'அதே போல் குளிர் என்ற ஒன்றும் உள்ளதா?'
'நிச்சயமாக.'
'இல்லை ஐயா, நிச்சயமாக குளிர் என்ற ஒன்று இல்லை.'
(வகுப்பறையில் நிசப்தத்தில் ஆழ்கிறது)
'ஐயா................வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு
ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்ப நிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் இருக்கின்றன.
ஆனால் இதுபோல குளிரை அளக்க முடியுமா? வேப்பம் என்பது ஓர் ஆற்றல். குளிர் என்பது வெப்பத்திற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் எனும்
ஆற்றலின் இல்லாமையே குளிர் என்பது
வெப்பம் இல்லை என்பதைத்தான் குளிர் என்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தான். பூஜ்யத்திற்குக் கீழே – 240 டிகிரியும் குளிர்தான்.
இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.
(குண்டூசி விழும் சப்தம்கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)
'சரி, இருட்டென்றால் என்னவென்று சொல்லுங்கள் ஐயா, அப்படி ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?' 'ஆமாம் தம்பி, இரவில் இருட்டாகத்தானே
இருக்கிறது.'
'நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா, இருட்டு என்பதே வெளிச்சத்தின் இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும்.
குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணை கூச்ச செய்யும் ஒளி என பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்க முடியும். அளக்கவும் முடியும்.
ஆனால் ஒளி என்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தான் இருட்டு. அதை அளக்க முடியாது, இல்லையா?'
'சரி தம்பி, நீ என்னதான் கூற வருகிறாய்?'
'ஐயா........நான் கூறுகிறேன், கடவுளைப்பற்றிய உங்கள் கருத்து பிழையானது.'
'பிழையா? ஏப்படி என்று விளக்கிக் கூற முடியுமா?'
'ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருக்கிறது என்பது
உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள் கெட்ட கடவுள், இருட்டு – வெளிச்சம், வெப்பம் - குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு
அல்லது எல்லை என்ற ஒன்று உண்டு என்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள். அறிவியல்
மூலம் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்க முடியாது. எண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மின் மற்றும்
காந்தத் தூண்டல்களினால்தான். மின்சாரத்தை அளக்க முடிந்த உங்களால் காந்தத் தன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களின்
தோற்றத்தை அளக்க முடியவில்லை. இறப்பு என்பதை வாழ்வதின் எதிர்பதமாகக் கருதுகிரீர்கள் உண்மையில் 'வாழ்வு இனி இல்லை' என்ற
தன்மையே இறப்பு என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. சரி, இப்பொழுது சொல்லுங்கள் ஐயா, குரங்கிலிருந்து மனிதன் உருவானான்
என்கிறீர்களா?' – கேட்டான் மாணவன்.
'இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமோனால், ஆம் அதுதான் உண்மை, குரங்கிலிருந்து மனிதன் உருவானான்' பேராசிரியர் பதிலுரைத்தார். 'உங்கள் கண்களால் மனிதப்பரிமான வளர்ச்சியை கண்டிருக்கிறீர்களா– மடக்கினான் மாணவன்.
(பேராசிரியர் தன் தலையை இல்லை என அசைத்தவாறே, புன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்)
மாணவன் தொடர்ந்தான், 'அப்படியென்றால். யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ஒரு
வகையான அனுமானம்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது உங்கள் கருத்து. அதை
நிரூபிப்பதற்கு உங்களிடம் ஆதாரம் ஏதுமில்லை என்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப்படும் ஒன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள்
இல்லையா? அப்படியானால், நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?'
(மாணவர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)
'இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?'
(வகுப்பறை கொல்லெனச் சிரிப்பொலியால் அதிர்கிறது)
'மாணவர்களே யாரவாத நமது பேராசிரியரின் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா? அதன்
வாசனையாவது நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் நமது பேராசிரியரின் மூளையை தொட்டதோ, பார்த்ததோ, நுகர்ந்ததோ இல்லை
அல்லவா, அப்படியென்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய
வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை! என்று. மூளையே இல்லாத நீங்கள் நடத்தும்
பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?
(மாணவரின் சரமாரிக் கேள்விகளால் வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரின் முகமோ வெளிறிப்போகிறது)
'நீ எனக்கு மூளை இருக்கிறதென நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி' என்றார் பேராசிரியர்.
'அதுதான் ஐயா........ இவ்வளவு நேரம் நான் சொல்ல வந்தது. பார்க்க முடியவில்லை என்றாலும், தொடமுடியவில்லை என்றாலும் உணர முடிந்த
கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும். மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை என்பது. இதுதான் உலகத்தில்
சகலமானவற்றையும் இயங்கிக்கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை'
இவ்வாறாக விவாதம் நிறைவுற்றது. இது ஒரு உண்மைச் சம்பவம்!
இறுதி வரை பின்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்,
வேறு யாருமல்ல.

ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் -நமது முன்னாள் குடியரசுத்தலைவர்.

நன்றி புலனம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20886
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா?

Post by M.Jagadeesan on Sat Sep 09, 2017 6:25 am

கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்பது விடை தெரியாத கேள்வி . முற்றுப் பெறாத வாதம் .ஆத்திகரும் நாத்திகரும் ஆயிரம் காரணங்களை அடுக்குவார்கள் .

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும் .

என்பது ஐயனின் வாக்கு .

அதாவது இந்த உலகத்தில் இருக்கின்ற ஒன்றை , ஒருவன் இல்லையென்று சொன்னால் அவனை பேயனாகக் கருதவேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார் .ஐயன் வள்ளுவனும்

கடவுளை , கை , கால்கள் உடைய மனித உருவத்தில் சித்தரிக்கவில்லை என்பது நோக்கத்தக்கது .

மனித ஆற்றலுக்கு மீறிய சக்தி உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .

ஆத்திகன் அதைக் கடவுள் என்கிறான் ; நாத்திகனோ அதை இயற்கை என்கிறான் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4827
மதிப்பீடுகள் : 2337

View user profile

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா?

Post by T.N.Balasubramanian on Sat Sep 09, 2017 6:35 am

கடவுள் செயற்கை என்கிறான் நாத்திகன்
நாத்திகன் இவ்வாறு கூறுவது இயற்கைதான் என்கிறான் ஆத்திகன்.
கைதான் பிழைப்பை தருகிறது.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20886
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா?

Post by M.Jagadeesan on Sat Sep 09, 2017 6:48 am

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுவையான வாதம் நடந்தது . பெரியார் தீவிரமாக நாத்திகவாதம் செய்துகொண்டிருந்த காலம் அது . அப்போது கவியோகி சுத்தானந்த பாரதியார்

இல்லை என்பான் யாரடா - என் அப்பனை
தில்லையிலே வந்து பாரடா !

என்று ஒரு கீர்த்தனை இயற்றினார் . அதைக் கண்ணுற்ற பாவேந்தர் பாரதிதாசன்

இல்லை என்பான் நானடா - உன் அப்பனை
தில்லையிலே வந்து காட்டடா !

என்று பதிலுக்குப் பாடினார் .


avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4827
மதிப்பீடுகள் : 2337

View user profile

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா?

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 09, 2017 12:06 pm

ஆறுதல்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4408
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: கடவுள் இருக்கிறாரா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum