ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 கோபால்ஜி

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 kram

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 krishnaamma

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
 ayyasamy ram

பலவித முருகன் உருவங்கள்
 ayyasamy ram

காவலனா அன்றிக் காலனா ?
 T.N.Balasubramanian

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 T.N.Balasubramanian

உலகின் முதல் உறவு
 T.N.Balasubramanian

கண்மணி 30மே2018
 krishnaamma

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 krishnaamma

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 krishnaamma

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 krishnaamma

அரேபியாவின் பங்களிப்பு
 ayyasamy ram

உலக தைராய்டு தினம்
 ayyasamy ram

இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
 ayyasamy ram

பி.வி. சிந்துவும் இறக்கையும்!
 ayyasamy ram

அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
 ayyasamy ram

தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
 ayyasamy ram

தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
 ayyasamy ram

சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
 ayyasamy ram

ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
 ayyasamy ram

``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
 T.N.Balasubramanian

இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
 SK

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ
 ayyasamy ram

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை)

View previous topic View next topic Go down

ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 09, 2017 6:08 pm

ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை)

சென்னையிலுள்ள தோல் ஆராய்ச்சி நிறுவனம் அது. அங்கு முனைவர் பட்ட மேலாய்வு செய்யும் மாணவி பூங்கொடி. அங்கே எழுத்தராகப் பணிபுரிந்தவன் குமரன். எனது நண்பர் ஒருநாள், “தெரியுமா சார்?  நம்ம குமார் மொட்டை மாடியில் நின்றுகொண்டு தேம்பித் தேம்பி அழுகிறான் சார்! சின்னப் பிள்ளை மாதிரி அழுகிறான் சார்!”  என்றார்.

“ஏன்? என்னவாம் ?”

” குமரன் , பூங்கொடியோடு நெருங்கிப் பழகினான் சார் !”

“தெரியுமே!”

“இப்போ என்னடான்னா , பூங்கொடிக்கு வேற இடத்தில நிச்சயமாயிடுச்சாம் !”

“ஏன்? ஏன் பூங்கொடி ஏமாற்றணும் ?”

“இல்லை சார்! பூங்கொடி குமரனிடம் தன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லித்தான் சொன்னது! ஆனால் குமரன்தான் இப்போ வேண்டாம், இப்போ வேண்டாம்னு தள்ளிப்போட்டுக்கிட்டே வந்திருக்கான் ! அதிலே பூங்கொடிக்குச் சந்தேகம் வந்துடுச்சு! சரி, இனி இவனை நம்பக் கூடாதுன்னு அது வழியை அது பாத்துக்கிடுச்சு! ”

“சரிதானேப்பா! குமரன் ஏன் தள்ளிப்போடணும் ?”

“தெரியலை சார்!”

இது நடந்து பத்து நட்கள்தான் ஆயின!

பூங்கொடிக்கு நிச்சயமான மாப்பிள்ளை முகவரியைக் கண்டுபிடிச்சு சில மொட்டைக் கடிதங்களைத் தள்ளிவிட்டான் குமரன்!அதில் தானும் பூங்கொடியும் காதலித்த சமாச்சாரங்களை விலாவாரியாக எழுதியிருந்தான் !

திருமணம் நின்றுவிட்டது !

பூங்கொடியின் சினேகிதிப் பெண்ணான கஸ்தூரி – நல்ல வாயாடி – நேரே குமரனிடம் வந்தாள்! “ஏம்பா! பூங்கொடி கல்யாணத்தை நிறுத்திட்டே! சரி! இப்பவாவது நீ பூங்கொடியைக் கல்யாணம் பண்ணிக்குவியா மாட்டியா? ”

“ம்ஹூம்! அதெப்படி? பூங்கொடியும் அவளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையும் எங்கெங்கே சுத்தினாங்களோ? என்னென்ன செஞ்சாங்களோ? …எத்தனை இருந்தாலும் என்னை வேணாம்னுதானே இன்னொருத்தனோடு வாழத் துணிஞ்சா அவ?”- உறுதியாக மறுத்துவிட்டான் குமரன் !

பழகிக்  காதலித்துக் கைவிட்டு ,வேறொன்றைப் பார்க்க முடிவெடுத்தவன் மாதிரி இருந்தது அவன் பேச்சு!

கஸ்தூரி லேசுப்பட்டவளா?

அந்த வட்டாரத்தில் தனக்குத் தெரிந்த ஒரு போலீஸ் காரரின் உதவியை நாடினாள் ! ஓரிடத்திற்குக் குமரனை  வரவழைத்தாள்!

கஸ்தூரி , பூங்கொடி, அந்தப் போஸ்காரர், கஸ்தூரியின் நண்பர் முத்து ஆகியோர் அந்த இடத்தில் இருந்தனர். கஸ்தூரிதான் பேசினாள் _ “ஏம்பா! இப்ப என்ன நெலைன்னு தெரியுமா? பூங்கொடி வயிற்றில் ஒருமாதம்! உன் குழந்தை! நீங்க எந்த லாட்ஜில் தங்கினீங்க, எவ்வளவு நேரம் இருந்தீங்க …எல்லா விவரத்தையும் வெட்கத்தை விட்டுப் பூங்கொடி சொல்லீருச்சு ! மரியாதையா கல்யாணத்துக்குச் சம்மதிச்சுடு!”

“ஆங்! அதெப்படி? நாங்க ஒண்ணாத் தங்குனது வாஸ்தவம்தான் ! ஆனா பூங்கொடி சொல்றமாதிரியெல்லாம் எதுவும் நடக்கலையே?... பின்ன எப்படி என் குழந்தை அவள் வயிற்றில்?” – அடித்துப் பேசினான் குமரன் !

போலீஸ்காரர் , “அப்பா! பூங்கொடி கம்ளெயிண்ட் இந்தாருக்கு! இதிலே எல்லாம் எழுதிக் கொடுத்திருக்கு; நீ மாட்டேன்னு உலுப்பினாய் என்றால் கற்பழிப்புக் குற்றம் உன் மேல வரும்! நீ உள்ள போகவேண்டி வரும் !வேலையும் போயிடும் ! என்ன சொல்றே?” என்று சற்றுக் கடுமையாக மிரட்டினார்!

கூடவே கஸ்தூரியும் சேர்ந்து பேசி, ஒருவழியாககச் சம்மதம் வாங்கி , குமரன் மனம் மாறிவிடக்கூடாதுன்னு , நான்கைந்து பேராக வடபழனி முருகன் கோயிலுக்குச் சென்று, தேவையான பதிவுகளைச் செய்து , திருமணத்தை முடித்துவிட்டார்கள்! பிறகுதான் இரு வீட்டாருக்கும் நடந்த கதையைச் சொன்னார்கள்!

குமரனுக்கு மனதுக்குள் உதைப்பு !

“நாம் நெருங்கிப் பழகியது உண்மைதான் ! ஆனால் குழந்தை உண்டாகும்படி அவ்வளவு நெருங்கவில்லையே? நிச்சயமான அந்தப் புதியவனிடம் ஏமாந்திருப்பாளோ?..” –

குழம்பினான்!தவித்தான் ! யாரிடமும் சொல்லி ஆலோசனை கேட்கவும் அவனால் முடியவில்லை!

பூங்கொடியுடன் இல்லறம் நடத்திக்கொண்டே இருந்தாலும் இந்தக் குழப்பம் மட்டும் அவனை அரித்தது!

குழந்தை பிறந்தது !

பார்த்தவர்கள் அனைவரும் “குழந்தை அசல் அப்படியே குமார் மாதிரியே இருக்குறான் !”என்று வாயாரப் புகழ்ந்தார்கள் !

அப்போதுதான் குமரனின் சந்தேகம் தீர்ந்தது!

இதைப் பூங்கொடிக்குத் தெரிவித்தான்! இத்தனை நாள் மனதுக்குள் குமைந்ததையும் சொன்னான்!

“நாங்கள் முன்னே சொன்னது மாதிரி நம் திருமணத்துக்கு முன்னே என் வயிற்றில் குழந்தை எதுவும் வளரவில்லை! எல்லாம் கஸ்தூரியின் ப்ளான் ! கரு உண்டானது திருமணத்திற்குப் பின்னேதான்!” – பூங்கொடி தெளிவுபடுத்தினாள்!

குமரன் முகம் மலர்ந்தது!
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4545
மதிப்பீடுகள் : 2410

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை)

Post by T.N.Balasubramanian on Sun Sep 10, 2017 8:59 am

குமரனுக்கு வடபழனியில் திருமணம் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21960
மதிப்பீடுகள் : 8237

View user profile

Back to top Go down

Re: ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 10, 2017 11:25 am

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4545
மதிப்பீடுகள் : 2410

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum