ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 M.Jagadeesan

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 T.N.Balasubramanian

சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
 pon.sakthivel

அறிமுகம்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 மகேந்திரன்

என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
 M.Jagadeesan

ஜாக்கியின் காதல் பரிசு..!
 vashnithejas

பூவே இளைய பூவே
 ayyasamy ram

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
 anikuttan

iசென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்
 ayyasamy ram

நீ நடக்குமிடமெல்லாம் அழகு ! (ஸ்வீடன் மொழிப்பாடல்)
 sinjanthu

தொடத் தொடத் தொல்காப்பியம்(459)
 Dr.S.Soundarapandian

வீழ்வதற்கல்ல! - கவிதை
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு எது அலர்ஜி?
 Dr.S.Soundarapandian

முரண்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
 Dr.S.Soundarapandian

அழகுத் தேவதை ! (இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா இலக்கு 282 ரன்கள்
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
 ayyasamy ram

கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
 ayyasamy ram

ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
 ayyasamy ram

அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
 M.Jagadeesan

இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
 M.Jagadeesan

வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
 ayyasamy ram

குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
 ayyasamy ram

‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
 ayyasamy ram

பலகோடி ரூபாய் குளிர்பான விளம்பரம் விராட் கோலி வேண்டாம் என கூறியது ஏன்?
 ராஜா

எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
 ayyasamy ram

விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
 ayyasamy ram

சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
 ayyasamy ram

காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
 ayyasamy ram

ரஷ்ய நாட்டுப்புறப் பாடல்!
 Dr.S.Soundarapandian

தூங்கு என் கண்ணே! (ஸ்பெயின் தாலாட்டு)
 Dr.S.Soundarapandian

என்னருமைக் கழுதை ! (ஸ்பெயின் பாடல்)
 Dr.S.Soundarapandian

குந்தியும் நிஷாத பெண்களும்
 T.N.Balasubramanian

தூரமாகிய மனது
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

டூ வீலர்! (செம டிராப்பிக்)

View previous topic View next topic Go down

டூ வீலர்! (செம டிராப்பிக்)

Post by Pranav Jain on Mon Sep 11, 2017 3:34 pm

வாகன ஓட்டுனர்கள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவைக் கேள்விப்பட்டதும் இந்தக் கதை நினைவுக்கு வந்தது. அதன் காரணமாக இதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்....

டூ வீலர்! (செம டிராப்பிக்)

இரண்டு வாலிபர்கள் டூவீலரில் வருகின்றனர். அப்போது ஓட்டுபவருக்கு போன் கால் வருகிறது. அவர் அந்தப் போனை எடுத்து பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுகிறார். அதோடு அவர்கள் ஹெல்மெட்டும் அணியவில்லை. அப்போது இதைக் கவனித்த ஒரு டிராபிக் போலீஸ் அவர்களை துரத்திச் சென்று மறிக்கின்றார்.

"ஏய்! ட்ரைவிங்-ல போன் பேசக்கூடாதுன்னு விதிமுறை இருக்குதில்ல... அதையும் மீறி ஏண்டா போன் பேசிகிட்டு வண்டி ஓட்டுறே?" என்று கேட்க,

"இல்லை சார் ஒரு அவசரமான Call... அதான் பேசவேண்டியதா போச்சி. சாரி சார்". -என்று அந்த வாலிபர் கூறுகிறார்.

"சரி, ஏன் ஹெல்மெட் இல்லாம வண்டி ஓட்டுறே?" என்று கேட்க,

"அதான் சொன்னேனே சார்... அவசரமா போயிகிட்டு இருக்கேன்... இந்த நேரத்துல 'கேள்'மெட்டெல்லாம் கூட்டிகிட்டா போக முடியும்" என்று அந்த வாலிபர் கூறுகிறார்.

"ஏண்டா இப்படி பொறுப்பில்லாம நடந்துக்கறீங்க?... நாங்க என்ன எங்களுக்காகவா இதை கடைபிடிக்க சொல்லுறோம்.... உங்க உயிரைப் பாதுகாக்க தானேடா இப்படி சொல்லுறோம்... அதை ஏண்டா புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க." -என்று போலீஸ் சொன்னதும், அந்த வாலிபர் வண்டியை விட்டு இறங்கிக் கொண்டே...
"என்ன சொன்னீங்க சார்? இ..ன்..னொ..ரு..... மு..றை... சொல்...லுங்.க...!" என்று பாடுவது போல கேட்கிறார்.

அதற்கு அந்த போலீஸ், "என்னடா கிண்டல் பண்ணுறியா? பக்கத்துல நின்னுதானே சொன்னேன்... இது கேக்கலையா உனக்கு."

"சத்தியமா கேக்கல சார். பக்கத்துல ஒருத்தர் ஹெல்மெட் போட்டுக்கிட்டு வண்டி ஓட்டிட்டு போனாரா... அதான் சரியா கேக்கலை. இப்ப சொல்லுங்க..." என்றார்.

"ஏண்டா.... பக்கத்துல போறவன் ஹெல்மெட் போட்டா உனக்கு காது கேக்காதா?... நீங்க எல்லாம் சினிமா பாத்து ரொம்ப கெட்டுப் போயிடீங்கடா. முதல்ல பெயினைக் கட்டு!.. அப்பத்தான் உனக்கெல்லாம் புத்தி வரும்." என்று சொல்ல,

"பெயினைக் கட்டுறேன்... ஆனா, இப்ப ஏதோ சொன்னீங்களே அதை திரும்ப சொல்லுங்க...."

"உங்க உயிருக்கு எதுவும் ஆகக் கூடாதுன்னு தானேடா கவர்மெண்டு இதையெல்லாம் சட்டமா போட்டு வச்சி கடைபிடிக்க சொல்லுது. அதை ஏண்டா புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க." என்று மீண்டும் அந்த போலீஸ் சொல்கிறார்.

"So, மக்கள் உயிர் மேல உங்க கவர்மெண்டுக்கு ரொம்ப அக்கறை... இல்லையா? ஆமா... இதை உங்க கவர்மென்ட் சொல்லுதா? இல்ல நீங்க சொல்றீங்களா?"

"கவர்மெண்டு வேற, நாங்க வேற இல்லை. நாங்களும் கவர்மெண்டுல ஒரு பகுதிதான்"

"பகுதியா இருந்தாலும் சரி, விகுதியா இருந்தாலும் சரி... ஆனா, விகாரமா ஆகிடாமப் பாத்துக்கோங்க."

"சரி, லைசென்ஸ் எடு!"

"லைசென்சுன்னா?"

"லைசென்சுன்னா என்னன்னே தெரியாமத்தான் டபுள்ஸ் ஒட்டுரியா?"

"முதல்ல லைசென்சுன்னா என்னன்னு சொல்லிட்டு... அப்புறம் அடுத்த கேள்வியைக் கேளுங்க!"

"லைசென்சுன்னா..., உனக்கு இந்த டூ-வீலரை ஓட்டத்தெரியும்னு R.T.O ஆபீசருங்க ஒரு சர்டிபிகேட் கொடுப்பாங்க. அதுதான் லைசென்சு!"

"எனக்கு டூ-வீலர் ஓட்டத்தெரியுமா, தெரியாதான்னு R.T.O ஆபீசருங்களுக்கு எப்படி சார் தெரியும்?"

"ஆங்... நீ அவங்ககிட்ட ஒட்டிக்காட்டினா... அவங்களுக்குத் தெரியும்!"

"ஏன் சார்? ஓட்டத் தெரியாமத்தான் இவ்வளவு தூரம் டபுல்ஸ்ல வந்தேனா? அதான் நீங்க பார்த்தீங்களே... போன் பேசிக்கிட்டே எவ்வளவு சூப்பரா வந்தேன்? நீங்களே ஒரு சர்டிபிகேட் போட்டுக் கொடுத்துடுங்க..."

"நான் கொடுக்க முடியாதுப்பா.... அதை அவங்கதான் கொடுக்கணும்."

"என்ன சார் நீங்க?... எங்கேயோ இருக்குற R.T.O ஆபீசருங்க சொல்லுறதை நம்புறீங்க... உங்களுக்கு உங்க மேலையே நம்பிக்கை இல்லையா? உங்ககிட்ட ஒட்டிக் காட்டுனா பத்தாதா? லைசென்சை வாங்கி வந்து உங்ககிட்ட காட்டுரதுக்குப் பதிலா.... லைவா ஒட்டியே காட்டலாம்னுதான் நான் லைசென்ஸ் எடுக்கல..."

"எல்லாத்துக்கும் ரெடியா ஒரு பதிலோ, கேள்வியோ வச்சிருக்கியே எப்படிடா?"

"எழுத்ததிகாரன்னா சும்மாவா?"

"ஏடாம்பு பேசுறவன் எல்லாம் எழுத்ததிகாரனா ஆகிட முடியுமா?"

"எது சார் ஏடாம்பு?... நான் ஏடாம்பு பேசுறேனா? சரி, இதுக்கு நீங்களே பதில் சொல்லுங்க... இப்போ உதாரணமா 5 வருஷம்-னு லைசென்சு போட்டுக் குடுக்குறீங்க... ஆனா, அஞ்சு வருசத்துக்கு அப்பறம் அதை ரினியூவல் பண்ணாம ஒட்டுனா லபக்குன்னு புடிச்சி பெயின் போடுறீங்களே... அஞ்சு வருஷம் வண்டி ஒட்டுனவனுக்கு டிரைவிங்-ல எக்ஸ்பீரியன்ஸ் வருமா? இல்ல டிரைவிங் மறந்து போயிடுமா? எதுக்காக பெயின் போடுறீங்க?

"............................"

"சொல்லுங்க சார்? எதுக்காக பெயின் போடுறீங்க?... அப்புறம் எதுக்காக ரினியூவல் பண்ணச் சொல்றீங்க?..."

"................................"

"வண்டி ஓட்டத்தெரியும்னு காட்டத்தானே லைசென்சு எடுக்க சொல்றீங்க? அதான் ஓட்டத்தெரியுதுன்னு நீங்க லைசென்சு கொடுத்துட்டீங்களே.... அப்பறம் எதுக்கு அதை ரினியூவல் பண்ணனும்?.... அடிக்கடி மறந்து போறதுக்கு நாங்கல்லாம் என்ன கஜினி சூர்யாவா?... சினிமா பாத்துக் கெட்டுப் போறது நாங்க இல்ல சார், நீங்க தான்!"

"..........................."

"பணத்தை நாங்கல்லாம் உழைச்சு சம்பாதிக்கிறோம் சார்!... நீங்க ஈசியா சம்பாதிக்கிறமாதறியே
எங்களையும் நினைச்சி இப்படிப் புடுங்காதீங்க..."

"............................."

"உங்களுக்கு வேணும்னா பணம்ங்கறது லஞ்சமா இருக்கலாம்... ஆனா, எங்களுக்கு அது ரத்தம் சார்!... நீங்க இப்படி பல வழியிலயும் பணத்தைப் புடுங்குறது எங்களோட ரத்தத்தை உரிஞ்சுறதுக்கு சமம்!"

"............................."

"உயிரோட நிக்க வச்சி ஒருத்தனோட ரத்தத்தை உறிஞ்சா எப்படி வலிக்கும்-னு தெரியுமா?... அந்த நேரத்துல எவ்வளவு ஆத்திரம் வரும்னு தெரியுமா?... ஆனா, நாங்கல்லாம் ஏழைங்க சார்! எங்களுக்கு அதைத் தாங்குறதுக்கு சக்தியும் இல்ல... உங்களை எதிர்க்குறதுக்கு பலமும் இல்ல... எங்களை விட்டுடுங்க சார்!"

"இத பாரு, இப்படி செண்டிமெண்டா பேசியெல்லாம் சட்டத்தை சரிகட்ட முடியாது... நீ முதல்ல பெயினைக் கட்டிட்டு கெளம்பு...!"

"இல்ல... தெரியாமத்தான் கேக்குறேன்... வண்டியில வேகமா போனா பெயின் போடுறீங்க! சும்மா கெடக்குற ரோட்டுல சிக்னல போட்டு வச்சிக்கிட்டு.. அதுல நிக்காம போனா பெயின் கட்ட சொல்லுறீங்க...! இந்த லட்சணத்துல ஹெல்மெட் போடு, ரூம்மேட்டு போடுன்னு டார்ச்சர் வேற!.. மக்கள் உயிர்மேல அக்கறை இருந்தா ஒவ்வொரு டூ-வீலரு வச்சிருக்குரவங்களுக்கும் ப்ரீயா ஹெல்மெட்டைக் குடுக்கவேண்டியது தானே உங்க கவருமெண்டு?"

"டேய்! மக்களோட உயிரைக் காப்பாத்துற சாலை விதிகளை மதிக்காம இப்படி கிண்டல் பண்ணுறது நல்லதுக்கில்ல. மரியாதையாப் பேசு."

"பின்னே என்ன சார்?... மக்களால எதை எல்லாம் மீறாம இருக்க முடியாதோ, அதை எல்லாம் நீங்க சட்டமா போட்டு வச்சிக்கிட்டு பெயின் கட்ட சொல்லுவீங்க... நாங்க கொடுத்துகிட்டு இருக்கனுமா? என்ன சார் நியாயம் இது?"

"சிங்கப்பூர் மாதரி நாட்டுல எல்லாம் மக்கள் கட்டுப்பாட்டோட நடந்துக்கராங்கன்னா. அதுக்குக் காரணம் பெயின் போடுறதுதான்! நடு ரோட்டுல சாதத்தை கொட்டி சாப்பிடுற அளவுக்கு அவ்வளவு சுத்தமா இருக்கும், தெரியுமா உனக்கு?"

"உங்களுக்கெல்லாம் தொப்பை எப்படி வளருதுன்னு இப்பதான் புரியுது. சிங்கப்பூரு ரோட்டுலயும் சோத்தைத்தான் கொட்டி சாப்பிடத் தோனுதா உங்களுக்கு? ஆனா, சிங்கப்பூரை எல்லாம் உங்களுக்கு உதாரணமா சொல்லாதீங்க. அவங்கல்லாம் அஞ்சுக்கும் பத்துக்கும் பல்லிழிக்க மாட்டாங்க! அதுமட்டுமில்லாம, அவங்க அவ்வளவு அழகா ரோடு வச்சிருக்காங்க, அதனால பெயின் போடுறாங்க. ஆனா, இங்கே ரோடே இல்லாம பெயின் கட்டச் சொன்னா எப்...பூ...டி...?"

"......................"

"சரி..., இப்ப உங்ககிட்ட பெயினை கட்டிட்டு போனா மட்டும், நான் ஹெல்மெட்டுப் போட்டுகிட்டா போகப் போறேன்? இப்படியேதானே ஓட்டிகிட்டுப் போவேன்? மறுபடியும் போன் வந்தா பேசிக்கிட்டுதான் போவேன்.... அப்பல்லாம் எங்க உயிருக்கு ஆபத்து வராதா சார்??!!

"......................."

"அடுத்த சிக்னல்ல இன்னொரு டிராபிக் போலீஸ் மறிப்பாரு. ஆனா, இங்க பெயின் கட்டின ரசீதைக் காட்டின உடனே மறுபேச்சு பேசாம விட்டுடுறாங்க.... அப்படின்னா, நீங்க போடுற சட்டம் மக்கள் உயிரைக் காப்பாத்துறதுக்கா? இல்லை மக்கள்கிட்ட பணத்தைப் பறிக்கனுங்கறதுக்கா? பெயின் போடுறதுக்குப் பதிலா லைசென்ஸ் இல்லாம வந்தாலோ, ஹெல்மெட்டு போடாம வந்தாலோ அந்த வண்டியை அக்கக்கா பிரிச்சி காயலாங்கடையில போடச்சொல்ல வேண்டியது தானே? அதுக்கு அப்புறம் எவனாவது இந்தத் தப்பை எல்லாம் செய்வானா?"

"இதப்பாருடா, பேசத் தெரியும்ங்கறதுக்காக இப்படி எதை வேணாலும் பேசலாம்னு நினைக்காதே... முதல்ல நடைமுறைக்கு தகுந்த மாதரி புரிஞ்சு பேசு"

"சரி சார்! சரக்கு அடிக்கிறது மனுஷனுக்கு நல்லதா, கெட்டதா சார்?

"என்னது?..."

"சரக்கு...! சரக்கு...! சாயங்காலம் ஆனவுடனே "PETROL" போடப் போவீங்களே... அந்த சரக்கு!"

"ஏன்டா!... படிச்சிருக்கியா நீ? அதான் பாட்டில்லையே பிரின்ட் பன்னிருக்கேடா 'மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்குக் கேடு'ன்னு அப்பறம் ஏன் என்கிட்ட வேற கேட்டுகிட்டு இருக்கே."

"இப்ப கெட்ட வார்த்தை யூஸ் பண்ணிப் பேசிக்கவா சார்?"

"டேய்!... நீ ரொம்பப் பேசுறே..."

"பின்னே என்ன சார்?... சரக்கு அடிச்சா மனுஷன் செத்துப் போவான்னு தெரிஞ்சே... அதை தெருவுக்கு தெரு வச்சி விக்கிற உங்க கவர்மெண்டு.... மக்களோட உயிரைப் பத்தி கவலைப்படுதா?... யாரு காதுல பூ சுத்துறீங்க? இந்த லட்சனத்துல பாட்டில்'லயே பிரின்ட் பன்னிருக்குன்னு வெக்கமே இல்லாம விளக்கம் வேற சொல்லுறீங்க... அப்புறம் குடிச்சுட்டு வண்டி ஓட்டுறான்னு அதுக்கும் ஒரு பெயினைக் கட்டச்சொல்ல வேண்டியது!" மைன்ட் வாய்ஸ்: "கொய்யால குடிக்கிறதுக்கும் காசு வாங்குராய்ங்க... அப்பறம் ஏண்டா குடிச்சீங்கன்னும் காசு வாங்குராய்ங்க..."

"........................."

"நீங்க வசனம் பேசி மக்களை ஏமாத்துன காலம் எல்லாம் மலை ஏறிப்போச்சி. இப்போ மக்களே கதை, திரைக்கதை எல்லாம் எழுதி டைரக்ஷனும் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க... இது மக்கள் ஆட்சி இல்லை! மக்கள் நடத்த வச்சிக்கிட்டு இருக்குற ஆட்சி!... தப்பு எங்க நடந்தாலும் அதை தட்டிக் கேக்குறது மட்டுமில்ல, ...ங்..த்தா தீ வச்சி கொளுத்தவும் தயங்க மாட்டாங்க!... முடிச்சூர்ல பஸ்ஸைக் கொளுத்துன மாதரி, கொளுத்துனாத்தான் அடங்குவீங்களா?"

"இத பார்! நீ மக்கள் மனசுல தீவிரவாதத்தை தூண்டுரே... இதுக்கே உன்னைக் கைது செய்யலாம்..."

"அப்படியா...? இந்தாங்க... கைது செய்ங்க... ஆனா, நீங்க கைது செஞ்ச உடனே பயந்து போயி தப்பு செஞ்சிட்டேன்னு ஒத்துகிட்டு ஜெயிலுக்குப் போயிடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க. அப்படி ஒரு நிலைமை வந்தா... அப்ப என்னமாதரி கேள்வி கேக்கனும்னும் எனக்குத் தெரியும்! பதில் சொல்ல முடியாம சட்டப் புத்தகத்தைத் தேடவேண்டிய அவசியம் உங்களுக்குத்தான் வரும்! ஏன்னா? உங்களுக்கு சட்டத்தை படிக்க மட்டும்தான் தெரியும். ஆனா, எங்களுக்கு.... சட்டத்தை புதுசா எழுதவும் தெரியும்! ஆனா, சட்டங்கறது உங்களை மாதரி சில பேரு மட்டும் இல்லை!"

"காவல்துறையோட பவரு தெரியாம பேசிகிட்டு இருக்கே... வீனா அழிஞ்சி போகப்போறே!"

"எனக்கு காவல்துறையோட பவரு தெரியாதுதான் ஒத்துக்கறேன். ஆனா, காவல்துறை-ன்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?" -என்று கேட்டுக்கொண்டே தனது நண்பனுக்கு ஜாடை காட்ட... அவன் டுவீலரை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறான்.

"என்கிட்டேயே காவல்துறையைப் பத்தித் தெரியுமான்னு கேக்குறியா?.. டிராபிக்ல நிக்கிறேன்னு சாதாரணமா நினைச்சுடாதே... என்னோட சர்வீஸ்ல எத்தனை என்கவுண்டர் பண்ணிருக்கேன்னு உனக்குத் தெரியுமா? எத்தனை குற்றவாளிகளை கண்டுபிடிச்சிக் கொடுத்திருக்கேன்னு தெரியுமா?"

"குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறதை எல்லாம் பெருமையா சொல்லிக்காதீங்க சார்! ஏன்னா, உங்களைவிட சிறப்பா அதை ஒரு நாய் கண்டுபிடிச்சுக் கொடுத்துடும்! ஆனா, காவல்துறைங்கறது குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறதுக்காக இல்ல.... குற்றங்கள் நடக்காம தடுக்குறதுக்குத்தான் காவல்துறை!"

இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்,

"சட்டம் பேசுறியா? உனக்கெல்லாம் பெயின் போட்டாதான் புத்தி வரும். முதல்ல உன் வண்டி நம்பரை சொல்லு. நீ கோர்ட்டுல போயி சட்டம் பேசி, உன்னோட வண்டிய திரும்ப வாங்கிக்க. நம்பர் சொல்லு... நம்பர் சொல்லு..." என்று போலீஸ் கேஸ் எழுத தொடங்கினார்...

"........................."

"என்கிட்டயே சட்டம் பேசுறியா? ஏண்டா இப்படி பேசினோம்னு நெனெச்சி நெனச்சி நீ வேதனைப் படனும். வண்டி நம்பர் சொல்லு? உன் பேர் என்ன? வீட்டு அட்ரஸ் சொல்லு"

"..........................."

"என்னடா முழிக்கிற? வண்டி நம்பர் சொல்லு!" என்று மிரட்ட,

அவன் சொல்லச் சொல்ல போலீசும் திரும்ப சொல்லிக்கொண்டே எழுதத் தொடங்கினார்..

"TN 22..."

"T...N... 22...?"

"J..."

"J...?"

"8..."

"என்னடா இழுக்குறே... மொத்தமா சொல்லு...!"

"TN 22 J-8615."

"டி என் டபுள்டூ... எய்ட்...சிக்ஸ்... ஒன்... பைவ்... என்னது 8615-யா?.... டேய்!.. இது என்னோட வண்டி நம்பருடா!"

"ஆமா... நீங்க தானே வண்டி நம்பர் சொல்லு, வண்டி நம்பர் சொல்லுன்னு கேட்டீங்க?... அதான் சொன்னேன்!

"டேய்! நான் கேட்டது உன்னோட வண்டி நம்பர்!"

"நான் எப்போ வண்டியில வந்தேன்?"

"என்னது? வண்டியில வரலையா? அப்பா இது யாரோட வண்டி?" என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்க்கின்றார்.... அங்கே டூ வீலரைக் காணவில்லை...!

"எந்த வண்டியை சார் தேடுறீங்க?"

"ஓஹோ... உன் பிரண்டு வண்டியை எடுத்துகிட்டு ஓடிட்டானா? செம்மையா மாட்டிகிடீங்கடா... சும்மா மிரட்டிட்டு ஐம்பதோ, நூறோ வாங்கிட்டு விடலாம்னு தான் நினைச்சேன்... ஆனா, இனிமே உங்களை சும்மா விடமாட்டேன்..."

"சும்மா விடாம?... ஜீன்ஸ், டி-சர்ட் போட்டுவிடப் போறீங்களா?..."

"நக்கலா?... நீ முதல்ல வண்டி நம்பரை சொல்லு..."

"லூசா சார் நீங்க? நான் வண்டியிலேயே வரலைன்னு சொல்லிக்கிட்டு இருக்கே... நீங்க என்னடான்னா வண்டி நம்பர் சொல்லு, வண்டி நம்பர் சொல்லுன்னு, தேஞ்ச ரெக்கார்டு மாதரி அதையே கேட்டுகிட்டு இருக்கீங்க..."

"அப்படியா... சரி வா கோர்ட்டுக்கு போகலாம்? அங்க வந்து வண்டில வரலேன்னு சொல்லு பார்ப்போம்..."

"அய்யய்யோ கோர்ட்டுக்கா? வேண்டாம் சார்... அப்பறம் பெரிய பிரச்சினையா போயிடும்..."

"பயமா இருக்குதில்ல....? அப்ப மரியாதையா வண்டி நம்பரை சொல்லிட்டு.... பெயினைக் கட்டிட்டு ஓடிப் போயிடு..."

"ஹலோ... நான் கோர்ட்டுக்குப் போக வேண்டாம்னு சொன்னது பயந்துகிட்டு இல்லை. உங்க நல்லதுக்காகத்தான் சொன்னேன்..."

"என்னடா சொல்றே?"

"அதாவது சார்,... நீங்க என்னை கோர்டுக்கு அழைச்சிகிட்டுப் போவீங்களா?... `நீதிபதி என்ன பிரச்சினைன்னு கேப்பாரா?... நீங்க என்ன சொல்லுவீங்க...? நான் போன் பேசிகிட்டே டிரைவிங் பண்ணினேன், லைசென்ஸ் இல்லாம வண்டி ஓட்டுனேன், ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுனேன், அப்படின்னு அடிக்கிகிட்டே போவீங்க...

ஆனா நான் என்ன சொல்லுவேன்...? நான் டூ-வீலரிலேயே வரலைன்னு ஒரே வார்த்தையில பல்டி அடிச்சிடுவேன்....

டூவீலர் எங்க? டூவீலர் நம்பர் என்ன?-ன்னு நீதிபதி உங்ககிட்ட கேப்பாரு.... நீங்க என்ன சொல்லுவீங்க?...

"................."

"சொல்லுங்க சார் என்னனு சொல்லுவீங்க?... தெரியாதுன்னு சொல்லுவீங்க...!

"........................."

"ஏன்யா?... ஒரு டூவீலரோட நம்பரைக் கூட நோட் பண்ணத்தெரியாத நீயெல்லாம் ஒரு..........' அப்படின்னு கேவலமா திட்டுவாரு. இதெல்லாம் உங்களுக்குத் தேவையா? அதுக்காகத்தான் வேண்டாம்னு சொன்னேன். நீங்க விருப்பப்பட்டா எனக்கும் OK சார். போலாமா?"

"பேசியே ஜெயிக்கலாம்னு பாக்குறீயா?"

"சட்டம்ங்கறது பேசி ஜெயிக்கறதுதானே சார்!... நம்மகிட்டயெல்லாம் தொடர்ந்து பேசவே முடியாது. இந்த லட்சனத்துல எங்கே ஜெயிக்கிறது?... எந்த நேரத்துல எப்படி பேசுவேன்னு எனக்கே தெரியாது சார். ஏன்னா?..."

"நீதான் எழுத்ததிகாரனாச்சே-ன்னு சொல்லுவே... அதானே...?"

"பரவாயில்லையே... என்னோடப் பேசிப்பேசி நீங்களும் நல்லாப் பேச ஆரம்பிச்சிடீங்களே..?"

"நீ இன்னொரு தடவை என்கிட்டே மாட்டாமலா போயிடுவே... அப்ப கவனிச்சுக்கறேன்..."

"நீங்க எப்ப வேணாலும் கவனிச்சுக்கோங்க சார்... ஆனா, அங்க பாருங்க! எல்லா வண்டிகளும் எந்தப் பக்கமும் போகமுடியாம திணறிப் போயி நிக்குது. செம டிராபிக்! முதல்ல அந்த டிராபிக்கைக் கவனிச்சு கிளியர் பண்ணுங்க! செய்ய வேண்டிய வேலையை விட்டுட்டு மத்த எல்லாத்தையும் செஞ்சுகிட்டு இருக்குறதே வேலையாப்போச்சி! ம்ம்... வ்..வட்டாஹ்...?"

எழுத்ததிகாரனுக்காக...
-அந்தப்பார்வை!
on 19th September 2012, 4:44 pm
avatar
Pranav Jain
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: டூ வீலர்! (செம டிராப்பிக்)

Post by Dr.S.Soundarapandian on Mon Sep 11, 2017 6:11 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: டூ வீலர்! (செம டிராப்பிக்)

Post by T.N.Balasubramanian on Mon Sep 11, 2017 6:34 pm

செம கிண்டல் Pranav .
என்ன ரொம்ப நாளாக காணவில்லை? நலமா?
Profile நன்றாக உள்ளது. நடமாட்டம் அதிகமோ?புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20480
மதிப்பீடுகள் : 7842

View user profile

Back to top Go down

Re: டூ வீலர்! (செம டிராப்பிக்)

Post by Pranav Jain on Mon Sep 11, 2017 8:03 pm

T.N.Balasubramanian wrote:செம கிண்டல் Pranav .
என்ன ரொம்ப நாளாக காணவில்லை? நலமா?
Profile நன்றாக உள்ளது. நடமாட்டம் அதிகமோ?புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247665

நான் நலம் ரமணியன் அவர்களே...
நடமாட்டம் கம்மிதான். கண்ணடி புதிதாக கட்சி ஆரம்பிக்க இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சேமித்து வருகிறோம்.
உள்ளாட்சி தேர்தல்ல போட்டி போடலாம்னு பார்த்தா... பயபுள்ளைங்க அதையும் நிப்பாட்டி வச்சுருக்குதுங்க... என்ன பண்ணுறதுன்னு ஒன்னும் புரியல....
அதுக்குள்ளே முழுசா அரசியல் கத்துக்கிடலாம்னு பாக்குறோம். அடுத்து ஒரு பதிவு போடுறேன் அதுல அரசியல் பற்றிய உங்களுக்கு தெரிஞ்ச ஆலோசனைகளை வழங்குங்கள்...
நன்றி.
avatar
Pranav Jain
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: டூ வீலர்! (செம டிராப்பிக்)

Post by Pranav Jain on Thu Sep 14, 2017 11:44 pm

லைசென்ஸ் இருக்கா?குறும்படம் எடுக்குறதுக்கு முன்னாடி இங்க போனீங்கன்னா முழுமையா எடுக்க உதவியா இருக்கும்....
பட் லைசென்ஸ் வாங்கணும்!! (ஒட்டுமொத்த இந்தியாவையும் நாங்க கலாய்ச்சுகிட்டு இருக்கோம். பயபுள்ளைங்க நம்மளையே கலாய்க்குதுங்க...)சுருங்க சொல்லி விளங்க வைத்ததற்கு நன்றி... Chelli Sreenivasan

avatar
Pranav Jain
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum