புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
60 Posts - 48%
heezulia
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
17 Posts - 2%
prajai
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
5 Posts - 1%
Guna.D
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_m10குந்தியும் நிஷாத பெண்களும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குந்தியும் நிஷாத பெண்களும்


   
   
vashnithejas
vashnithejas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 26/09/2016

Postvashnithejas Sat Sep 16, 2017 3:56 pm


விளிம்புநிலை மக்களைத் தங்களின் சுயநலத்துக்காகக் காவு கொடுக்கும் அதிகார வர்க்கத்துக்கு ஒரு சாட்டையடியாக அமைந்திருப்பது வங்கமொழி இலக்கியத்தின் புகழ் மிக்க படைப்பாளியும்,சமூகப் போராளியுமான மகாஸ்வேதா தேவியின் ’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’என்னும் மீட்டுருவாக்கச் சிறுகதை. இன்றைய சமூகத் தளத்திலும் -கூடங்குளம் முதல் முல்லைப் பெரியாறு வரை...பல வகையான அர்த்தப் பரிமாணங்களிலும் வைத்து வாசிக்க இடம் தரும் அந்தக் கதை குறித்துச் சில பகிர்வுகள்...


பாரதப் போர் முடிந்த பின்பு வானப் பிரஸ்தவனவாசம் மேற்கொள்ளும் திருதிராஷ்டிரனுக்கும்,காந்தாரிக்கும் உதவியாகத் தானும் உடன் சென்று காட்டில் - பர்ணசாலையில் அவர்களோடு தங்கிப் பணிவிடை செய்கிறாள் குந்தி.தன் மகன்களால் காந்தாரியின் பிள்ளைகள் ஒட்டு மொத்தமாகக் கொன்றழிக்கப்பட்ட குற்ற உணர்வின் உறுத்தலும் அவளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது.காந்தாரியோ வருவதை ஏற்பகும் பக்குவம் கொண்டவளாக...குந்திக்கும் கூட ஆறுதல் சொல்லித் தேற்றுபவளாக-வரப் போகும் மரணத்தை அமைதியோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நிதானத்தோடு இருக்கிறாள்.குந்திக்கு.. எப்போதுமே ஒரு பதற்றம்...தான் செய்த தவறுகளை யாருமற்ற அந்தத் தனிமைச் சூழலில் நினைத்துப் பார்க்கும்போது அவள் நெஞ்சே அவளைத் தீயாகச் சுடுகிறது.



அன்றாடச் சமையலுக்கும் பூசைக்கும் தேவையான மரக்குச்சிகள் மற்றும் பிற பொருட்களைச் சேகரிக்க அந்தக் காட்டுக்குள் செல்லும் வேளைகளில் அங்கு நடமாடும் ’நிஷாத’ப் பெண்கள் பலரைக் காண்கிறாள் குந்தி.அந்த மலைக் காட்டையே தங்கள் வாழிடமாகக் கொண்டிருக்கும் காட்டுவாசிப் பெண்களான அவர்களை நகர நாகரிகங்கள் அதிகம் தீண்டியிருக்கவில்லை. மலையில் விறகு பொறுக்கித் தலைச் சுமையாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போகும் பல நடுத்தர வயது நிஷாதப் பெண்களின் உறுதியான உடல்வாகு, பேச்சு சிரிப்பு,இயற்கையின் மக்களாய் இயைந்து போகும் லாவகம்-இதெல்லாம் அரண்மனைக் கிளியாக மட்டுமே வாழ்ந்து ஆரண்ய வாழ்வை ஒரு சுமையாக-தண்டனை போலவே முன்பு எதிர்கொண்டிருந்த குந்தியை மலைக்க வைத்து வியப்பூட்டுகின்றன. ஆனாலும் அவர்களோடு அவள் எதுவும் பேசுவதில்லை.அவர்கள் பேசும் மொழியைத் தெரிந்து கொள்ள விரும்பியதுமில்லை.அரண்மனையில் பணி விடைசெய்த பெண்களிடமிருந்தே சற்று விலகியிருந்து பழகிய அரச குடியல்லவா அவளுடையது? அவர்களோடு உரையாடுவதில் அவளுக்கே உரித்தான ஓர் உயர்குடித் தயக்கம்..

மலைக் காட்டின் தனிமையில் வெறுமையில் பிரபஞ்சத்திடம்...இயற்கை அன்னையிடம் தான் செய்த குற்றங்களைச் சொல்லிப் புலம்பிக் கழுவாய் தேடிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது குந்திக்கு..தன் குற்றங்களிலேயே பூதாகாரமாக அவளுக்கு உறைப்பது கர்ணனுக்கு அவள் செய்த துரோகம்தான்..தானே விரும்பி வரவழைத்த சூரிய மணாளன் மூலம் பெற்ற கர்ணனை ஒரு முறை கூட மகனாக அங்கீகரிக்காமல்,அவன் கொண்ட சோகத்தைப் பற்றி ஒரு கணம் கூட சிந்தித்துப் பார்க்காத தன் மனத்தை அவளே குற்றம் சாட்டுகிறாள்.அரச வாழ்வுக்கே உரிய தருமத்தில் காவு கொடுக்க வேண்டியவைதான் எத்தனை எத்தனை...?பஞ்ச பாண்டவர்களும் கூட அவளுக்கும் மாத்ரிக்கும் வெவ்வேறு தேவர்கள் மூலம் ஜனித்தவர்கள்தான்..ஆனாலும் அது நிகழ்ந்தது பாண்டுவின் ஒப்புதலோடு.ராஜ குடும்பத்தின் சம்மதத்தோடு.கர்ணனைச் சுமந்தது இவளாய் விரும்பி ஏற்றது;அவனைத் துறந்ததும் அந்த ராஜ தருமம் கருதியதுதான்…

தன் குழந்தையாக ஒரு பொழுதும் சீராட்டியிருக்காத கர்ணனைப் பாண்டவர் உயிர் காப்பதற்காக மட்டும் சந்திப்பதற்கும்,தாய் என்ற உரிமை பாராட்டிக் கொண்டு அவனிடம் அதை ஒரு கோரிக்கையாக வைப்பதற்கும் அவளுக்குத் தார்மீக உரிமை என்ன இருக்கிறது..?
இதையெல்லாம் வாய் விட்டு அவள் புலம்பிக் கொண்டிருக்கும் அந்தத் தருணத்தில் சற்றுத் தள்ளியிருந்து நிஷாத இனப் பெண்கள் அவளைப் பார்த்துத் தஙளுக்குள் ஏதோ பேசிச் சிரித்துக் கொள்கிறார்கள்.அவளைப் பொறுத்தவரை அந்த மலைப் பாறைகளுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் அதிகமில்லை..எவருக்கும் எதுவும் புரியப் போவதில்லை.குந்தியின் புலம்பல் வடிகால் நாளும் தொடர்ந்து கொண்டே போகிறது.இப்போது சற்று வயதான ஒரு நிஷாத இனப் பெண் மட்டும் குந்தியைக் கொஞ்சம் நெருங்கி வரத் தொடங்கியிருக்கிறாள்.ஆனால்..குந்தி அவளைப் பெரிதாகப் பொருட்படுத்தியிருக்கவில்லை.




ஒரு நாள் காடு வழக்கத்துக்கு மாறாகச் சலசலப்புக் கூடியதாக இருக்கிறது.பறவைகள் கூட்டைக் காலி செய்து விட்டு எங்கோ செல்கின்றன; நிஷாத இனப் பெண்களும் மூட்டை முடிச்சுக்களோடு வேறு இடம் பெயர்ந்து செல்ல முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது குந்தியின் முன்வந்து நிற்கிறாள் அந்த வயதில் மூத்த நிஷாத இனப் பெண்.
‘’என்ன குந்தி ..உன் பாவங்களையெல்லாம் சொல்லி முடித்து விட்டாயா இன்று சொல்ல எதுவும் மீதம் இல்லையா’’ என்கிறாள்.
குந்திக்கு வியப்பு.
‘’எங்களுக்கும் உங்கள் மொழி புரியும்,பேசவும் தெரியும்….ஆனால் அதைப் பற்றியெல்லாம் உனக்கென்ன கவலை..நாங்களெல்லாம் இதோ இங்கிருக்கும் மரங்களையும் கற்களையும் போலத்தானே உங்களுக்கு’’ என்கிறாள் அந்தப் பெண்.
‘’என் பெயர் அது எப்படி..’’-இது குந்தி.
‘’ஓ அரச வம்சத்துப் பெண்ணின் பெயரைச் சொல்லி விட்டேனென்று அதிர்ச்சியாகிறாயோ..அத உன்னைக் காயப்படுத்துகிறது அப்படித்தானே…எனக்கு உன் பெயர் தெரியும் குந்தி..அதை என் நினைவில் முடிந்து வைத்திருக்கிறேன்…உனக்காகவே இத்தனை ஆண்டுகள் காத்துக் கொண்டும் இருக்கிறேன்.நாங்கள் நகரங்களுக்குள் அதிகம் பிரவேசிப்பதில்லை.என்றாவது ஒரு நாள் நீ இங்கே இந்தக் காட்டுக்கு வந்தே தீருவாய் என நான் காத்திருந்தேன்.அது உன் விதி.நான் காத்திருந்த அந்த நாள் இன்று வந்தே விட்டது.’’



அவள் எதை நோக்கிக் காய் நகர்த்துகிறாள் என்பது குந்திக்கு இன்னும் விளங்கவில்லை.
‘’இங்கே நீ நிராயுதபாணியாக நிற்கிறாய் குந்தி.உன் புதல்வர்கள் யாரும் இங்கில்லை.எங்களைத் தண்டிக்க அவர்கள் தங்கள் படைகளைக் கூட இங்கே அனுப்ப முடியாது.’’
‘’நீ யார்..உனக்கு என்னதான் வேண்டும்’’என்கிறாள் குந்தி.
‘’உன்னுடைய மிகப் பெரிய பாவம் ஒன்றை நீ இன்னும் ஒப்புக் கொண்டாகவில்லை’’என்கிறாள் அந்தப் பெண்.
‘’இல்லை நான் அதைச் சொல்லி விட்டேன்…உனக்குத்தான் அந்த மொழி புரியவில்லை’’
‘’கர்ணனைப் பற்றிச் சொன்னதுதானே…உங்களைப் போன்ற அரச குடும்பத்தவர்களுக்கு வேண்டுமானால் அது ஒரு பாவச் செயலாக இருக்கலாம்....மனம் விரும்பிய காதலனோடு மகிழ்வதும் அவன் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதும் எங்களைப் பொறுத்தவரை ஒரு கொண்டாட்டம்.நாங்கள் இயற்கையின் நியதியை மதிப்பவர்கள்;அதன் ஒழுங்குக்கேற்ப வாழ்பவர்கள்.அதெல்லாம் உனக்குப் புரியாது’’
‘’என் ஒப்புதல் வாக்குமூலத்துக்குச் சற்றும் மதிப்பில்லை என்று எதை வைத்துச் சொல்கிறாய்..’’
‘’உன்னைப் பொறுத்தவரை உங்கள் ராஜநீதிகளைப் பொறுத்தவரை அது சரியானதாக இருக்கலாம்.எங்களைப் பொறுத்தவரை-தங்களது சுயநலத்துக்காக அப்பாவி மக்களைப் பலியிடுவதுதான் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்.நீ அந்தப் பாவத்தைச் செய்திருக்கிறாய்’’



குந்தி இன்னும் அவள் சொல்வதைப் புரிந்து கொள்ளவில்லை.அப்போது வாரணாவதத்தையும் அரக்கு மாளிகையையும் அந்த மாளிகை எரியூட்டப்பட்டபோது மடிந்து போன ஒரு அப்பாவித் தாய் மற்றும் அவளது ஐந்து புதல்வர்களையும் அவளுக்கு நினைவூடுகிறாள் அந்த முதியவள்.
‘’எங்கள் இனத்தைச் சேர்ந்த அவர்கள் அந்தத் தீயில் மடிந்து போனது வேண்டுமென்றே உங்கள் ராஜநீதி வகுத்த திட்டம்;பாண்டவர்களும் நீயும் அந்தத் தீயில் கருகி விட்டீர்கள் என்று வெளியுலகுக்குக் காட்டுவதற்காகப் போடப்பட்ட ஒரு நாடகம்.அதில் இறந்து போனது என் மாமியாரும் கணவர் மற்றும் அவரது சகோதரர்களும்..’’
’’ஆனால்..’’என்று ஏதோ சொல்ல வாயெடுக்கிறாள் குந்தி.அந்தப் பெண் அவளைப் பேச விடவில்லை.
‘’பாவப்பட்ட எங்கள் இனத்துப் பெண்கள் அரக்கு மாளிகைக்குத் தேவையான அன்றாடப் பொருட்களைச் சுமந்து கொண்டு அங்கே வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.காட்டுக்குப் பக்கத்தில் அந்த மாளிகை இருந்ததால்
அவர்களை வேண்டுமென்றே வரவழைத்து விருந்தில் கலந்து கொள்ளச் செய்தாய் நீ..இதற்கு முன்பும் எத்தனையோ முறை அந்தணர்களுக்கு விருந்து படைத்ததுண்டு நீ.அப்போதெல்லாம் எங்களைப் போன்ற மலை சாதிப் பழங்குடிப் பெண்களை..தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களை ஒரு முறையாவது நீ அழைத்ததுண்டா…அந்த ஒரு முறை மட்டும் வருந்தி வருந்தி வேண்டுமென்றே அவர்களை அழைத்தாய்..எக்கச்சக்கமான மது அந்த விருந்தில் வெள்ளமாகப் பெருக்கெடுக்கப் போகிறது என்று சொல்லிச் சொல்லியே அவர்களுக்கு வலை வீசினாய்…’’

‘’ஆனால் உங்களைப் பார்த்தால் விதவைகளைப் போலத் தெரியவில்லையே..’’
அந்தப் பெண் சத்தமாகச் சிரிக்கிறாள்.
‘’இங்கும் உங்கள் அரச நியதிகள் எங்களுக்குப் பொருந்துவதில்லை.விருப்பம் போல மறுமணம் புரிந்து கொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு.அதோ சற்றுத் தள்ளி நின்று கொண்டிருக்கிறார்களே..அவர்களும் என் கணவருடன் மாண்டு போன சகோதரர்களின் மனைவியர்தான்…நாங்களெல்லாம் வேறு திருமணம் செய்து கொண்டு பிள்ளைகுட்டிகளோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..’’



பேச்சு நீண்டுகொண்டே போகிறதே ஒழிய அவளது எதிர்பார்ப்பு இன்னதுதான் என்று குந்திக்குத் தெரியவில்லை.
‘’உனக்கு என்னதான் வேண்டும்..?நீ இப்போது என்னை என்ன செய்யப் போகிறாய்.’’
‘’இல்லை…கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பதெல்லாம் உங்கள் ராஜ நீதி சொல்வது.…குருட்சேத்திரப் போரே அதன் விளைவுதானே..எங்கள் வழிகளே வேறு..’’
‘’சரி...சொல் நான் என்ன செய்ய வேண்டும்..’’
‘’ நீ செய்தது ஒரு பாவம் என்பது கூட உனக்குத் தோன்றவில்லை.உங்கள் சுயநலத்துக்காக ஆறு அப்பாவிக் காட்டுவாசிகளைப் பொசுக்கியது ஒரு பாவம் என்று உங்கள் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கவில்லை..உன் ஞாபகத்திலும் கூட அது இல்லை.ஆனால் எங்களின் தருமப்படி…இயற்கைஅன்னையின் சட்டப்படி நீ,உன் மைந்தர்கள் அவர்களது கூட்டாளிகள் என்று எல்லோருமே குற்றவாளிகள்தான்…’’



அந்த முதியவள் குந்தியை நெருங்கி வருகிறாள்..
‘’இப்போது இந்தக் காட்டைப் பார்த்தாயா….வெகு சீக்கிரத்தில் இங்கே காட்டுத் தீ வரப் போகிறது.காட்டிலுள்ள பிற ஜீவராசிகளைப் போலக் காற்றின் வாசத்தை வைத்தே அதை எங்களால் சொல்லி விட முடியும்..அதனால்தான் நாங்கள் இங்கிருந்து போய்க் கொண்டிருக்கிறோம்…காட்டுதீ தீண்ட முடியாத தொலைதூர மலைகளுக்கு…ஏரிகளும் நதிகளும் நிறைந்த இடத்துக்கு..’’
‘’என்ன காட்டுத்தீ வரப் போகிறதா..’’
’’ஆமாம்…ஆனால் இங்குள்ள மூன்று குருடர்களால் எங்களைப் போல இங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது.ஒருவன் குருடனாகவே பிறந்தவன்.இன்னொருத்தி வேண்டுமென்றே தன்னை அவ்வாறு ஆக்கிக் கொண்டவள்.நீ…ஆமாம் நீயோ மூவரிலும் மிக மோசமான ஒரு குருடி..அப்பாவிகளைக் கொன்று விட்டு அதைப் பற்றி மிகச் சுலபமாக மறந்து விட முடிபவள் நீ..’’
‘’நிஷாதப் பெண்ணே என்னை மன்னிப்பதென்பது உன்னால் அத்தனை சாத்தியமில்லாததா என்ன?…’’
‘’மன்னிப்புக்காக இறைஞ்சுவதென்பது ராஜவம்சத்துக்கே உரிய ஒரு பலவீனம்.நாங்கள் ஐந்து பேரும் இங்கே வந்தபோது மற்றவர்களும் எங்களோடு வந்து விட்டார்கள்.வருடக் கணக்காக இந்தக் காடுதான் எங்களுக்கு எல்லாமே..’’
‘’ஆனால்..இப்போது காட்டுத் தீ வரப் போகிறதே..’’
‘’ஆமாம்..அதற்கென்ன..அது பாட்டுக்கு வந்து தன் வேலையைப் பார்த்து விட்டுப் போகும்;பிறகு மழை பெய்து தீயை அணைக்கும்;கருகிப் போன செடிகளில் மீண்டும் பச்சைநிறம் துளிர்க்கும்’’-



அந்தப் பெண் பேசிக் கொண்டே பறந்து போய்விட குந்தி உறைந்து போய் நிற்கிறாள்.அவள் மனம் வெறுமை மண்டிக் கிடக்கிறது.ஆசைகளோ விருப்பங்களோ எண்ணங்களோ உணர்ச்சிகளோ எதற்குமே அதில் இடமில்லை.தான் இருந்த இடத்தை விட்டு ஆசிரமத்துக்குச் சென்றபடி காட்டுத் தீயின் வரவுக்காகக் காத்திருக்க ஆரம்பிக்கிறாள் அவள்.தங்கள் நூறு பிள்ளைகளைப் பறி கொடுத்த திருதிராஷ்டிரனும்,காந்தாரியும்அங்கேதான் தங்கள் சாவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.



குந்தியும் இப்போது மரணத்தை வரவேற்கும் மனநிலைக்கு வந்து விட்டிருக்கிறாள்.காட்டுத் தீயில் வெந்து பொசுங்கும் வேளையில் அதே போன்ற கோரத் தீயில் கருகிப் போன முகம் மறந்து போன ஒரு நிஷாதப் பெண்ணிடம் அவள் மன்னிப்பைக் கோர முற்படப் போகிறாளா..?
அரச வம்சத்தில் பிறந்தவர்கள் அப்பாவிகளைக் கொன்றழித்த குற்றத்துக்கு மன்னிப்புக் கோருவதும் உண்டா..?
குந்திக்குத் தெரியவில்லை

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 16, 2017 4:36 pm

குந்தியும் நிஷாத பெண்களும் 103459460 மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 16, 2017 6:33 pm

நல்ல கதை.
மகா ஸ்வேதா தேவிக்கு ஒரு நன்றி கூறி இருக்கலாமே!
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 21, 2017 9:18 pm

குந்தியும் நிஷாத பெண்களும் 103459460 குந்தியும் நிஷாத பெண்களும் 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 21, 2017 9:31 pm

எம்.ஏ.சுசீலா என்பவரது வலைப்பூவில் இந்த கதை
பதிவாகியுள்ளது
-
அவரது பதிவின் பின்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்:
-

பி.கு;
கிட்டத்தட்ட இதே போக்கிலமைந்த வங்க மொழி நாடகம்
ஒன்றும் உண்டு;அதில் சொர்க்க லோகத்தை நோக்கிச்
செல்லும் தரும்னை வழி மறித்து அங்கே செல்லும் தகுதி 
அவனுக்கு உண்மையில் இருக்கிறதா என வினத்
தொடுக்கிறான் ஒருவன்.தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து
தன் தாய் மற்றும் சகோதரர்களோடு பாண்டவர்களுக்காக 
இதே அரக்கு மாளிகை சம்பவத்தில் களபலியானவன் அவன்.

அந்த நாடகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு
பரீக்‌ஷா ஞாநியால் மேடை நாடகமாக்கப்பட்டிருக்கிறது
[இப்போது பெயர்,ஆசிரியர் நினைவில்லை.
எவரேனும் நினைவிருந்தால் தெரிவித்தால் நல்லது]

குருட்சேத்திரப் போருக்குப் பின்.[After Kurukshethra-ஸ்வேதா தேவி
கதைகளின் ஆங்கில மொழியாக்கம்]என்னும் அவரது சிறுகதைத்
தொகுப்பில் இப் படைப்பு இடம் பெற்றிருக்கிறது.
---




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக