ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 ayyasamy ram

புதிய சமயங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

View previous topic View next topic Go down

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun 12 Nov 2017 - 21:38

கடந்த வாரத்துக் கட்டுரை பற்றி இரு விளக்கங்கள். ஒன்று, மதம் குறித்து நான் பேசியது. அதற்கு நாலாபக்கமும் விவாதங்கள். என் பேச்சில் கடினத் தொனி இருப்பதாக வடநாட்டு ஊடகங்கள் எடுத்து வைக்கின்றன. நான் தீவிரவாதம் என்றால் அவர்கள் ‘டெரர்’ என்று அடிக்கிறார்கள். முன்புதான் நாம் `சதக் சதக்’, `ரத்தம் சொட்டச் சொட்ட’, `கத்தி குத்தக் குத்த...’ என்று செய்திகளைப் பரபரப்பாக்கி எழுதுகிறோம் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்போது நாம் அதிலிருந்து மாறிக் காலங்கள் பல ஆகின்றன. ஆனால் அந்த ‘சதக்’கை இப்போது அவர்கள் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். அவர்களின் டி.ஆர்.பி பரபரப்பிலும் எனக்கு ஒன்றே ஒன்று பிடித்திருந்தது. தமிழ் ஊடகங்கள் அனைத்தும் ‘ஒரு வார இதழில் வந்த...’ என்று இழுத்தபோது, அவர்கள் ‘ஆனந்த விகடனில் வந்த’ என்று வெளிப்படையாகச் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. அது ஒரு முன்னேற்றம். ரஜினி என் பெயரைச் சொல்வதோ, அவரைப்பற்றி நான் சொல்வதோ தவறில்லையே. அதேபோல்தான் இதுவும்....
நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7033
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun 12 Nov 2017 - 21:39

விஷயத்துக்கு வருகிறேன். நான் எல்லாத் தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன். எம்மதமாக இருந்தாலும் அதன்பேரில் தீவிரவாதம் வரும்பட்சத்தில் எனக்குச் சம்மதம் இல்லை. மதங்கள் எதிலும் போர் தொடுக்கச் சொல்லவேயில்லை. கிறிஸ்து பிறந்த யூதேயாவில் புரட்சி ஏற்பட்டது. அதில் பொந்தி பிலாத்துவினுடைய ஆட்சியை எப்படியாவது ஆட்டிவிடவேண்டும் என்கிற ஆர்வம் யூதர்களுக்கு இருந்தபோதுகூட இயேசுவின் நல் சீடர்களாக இருந்தவர்கள் அந்த வன்முறை வேண்டாம் என்று தடுத்ததாகத்தான் நமக்குச் செய்திகள் வருகின்றன. பைபிளைத் திருத்தம் செய்ய எத்தனை முறை முற்பட்டாலும் அதில் இருக்கும் உண்மை இன்னும் பிரகாசமாகத்தான் இருக்கிறது. இப்படி எல்லா மதங்களும் அன்பையும், அமைதியையும்தான் போதிக்கின்றன.

அடுத்து இன்னொரு விளக்கம். எண்ணூர்க் கழிமுகத்தின் ஆக்கிரமிப்புகள் குறித்துப் பேசியபோது நித்தியானந்த் ஜெயராமன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்துவிட்டு என்னை அழைத்தார். ‘ஐயய்யோ சார், என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டது உங்கள் பெருந்தன்மை. ஆனால் ‘இது நான் மட்டும் செய்யும் சாகசம்’ என்ற தொனியில் அமைந்துள்ளது. இதன் பின்னால் பலர் இருக்கிறார்கள் என்பதே உண்மை’ என்று பதறினார். ‘ஏன் எங்களின் பெயர்களை விட்டீர்கள்’ என்று மற்ற சூழலியலாளர்கள் கேட்காததும், தன் பெயர் மட்டும் வந்ததை நினைத்து நித்தியானந்தம் பதறுவதும்தான் அவர்களின் குணம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7033
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun 12 Nov 2017 - 21:39

ஆனால், அந்தக் குணத்தை உணராது, நமக்காக வீதியில் நின்று குரல் கொடுப்பதற்கென்றே பிறந்தவர்கள் என்று நினைத்து, அவர்களைக் கடந்துபோய்க்கொண்டே இருக்கிறோம். ‘அவர்கள் நம்மவர்கள்’ என்ற எண்ணம் நமக்கு இல்லாததால்தான் அரசு அவர்கள்மீது தைரியமாக வழக்குத் தொடுக்கிறது, கைது செய்து உள்ளே தள்ளுகிறது. ஆனால், அவர்கள்தாம் நாம் கரையேற, நம்மைக் கரைசேர்க்க உதவும் கலங்கரை விளக்கங்கள். ஆமாம், அந்தக் கலங்கரை விளக்கங் களோடுதான் இன்று நான் கைகோத்துள்ளேன். இந்தச் சமூகம் மேம்பட அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனையெத்தனை திட்டங்களை வைத்துள்ளார்கள் என்று நினைக்கையில் அவர்கள் எனக்கு ஆதர்சமாக மாறிப்போகிறார்கள்.

இந்தச் சமூகச் செயற்பாட்டாளர்களின் குரல்களைப் பெருங்குரலாக மாற்ற வேண்டும் என்ற என் பேராசையின் வெளிப்பாடே நான் அறிமுகப்படுத்தும் இந்தச் செயலி. (Mobile App) ஆம், கல்லா கட்டும் கறைபடிந்த ஆட்சியாளர்களை வெளுத்து, துவைத்து, தூய்மைப்படுத்தி மக்களுக்குச் செயல்பட வைப்பதே இந்தச் செயலியின் நோக்கம். இதில் சமூகச் செயற்பாட்டாளர்களும் என் லட்சக்கணக்கான நற்பணி இயக்கத்தாரும் இணைந்து இருப்பார்கள். லஞ்ச லாவண்யங்களை, அரசின் பாராமுகங்களை... இதில் நீங்கள் பட்டியலிடலாம். இந்தச் செயலி வழி இணைந்திருப்பவர்கள் உங்களின் குறைகளைக் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் எடுத்துவைத்து நீதிபெற உதவி செய்வார்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7033
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun 12 Nov 2017 - 21:40

‘அந்தச் சமூகச் செயற்பாட்டாளர்களை உங்கள் இயக்கத்துடன் இணைக்கப்போகிறீர்களா’ என்று சிலருக்கு மட்டும் சில கேள்விகள் எழும். அவர்கள் என் ரசிகர்கள் அல்லர், நான் அழைத்ததும் வந்து என்னுடன் இணைந்துகொள்ள. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் புரிந்துவைத்துள்ளதால் இயல்பாக இணக்கமாக எங்களால் இயங்க முடிகிறது. அந்தவகையில் நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் இணைந்துள்ளோம். அதனால் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், நீர்நிலைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் முதற்கட்டமாக எங்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அருண் கிருஷ்ணமூர்த்தி ஆறு, ஏரி, வாய்க்கால், குளம்... என நம் பாரம்பர்ய நீர்நிலைகள் குறித்த விழிப்பு உணர்வை என் நற்பணி இயக்கத்தாருக்குத் தருவார். அதை எங்கள் இயக்கத்தார் நம் தமிழக மக்களுக்கு மடைமாற்றுவார்கள். மக்களும் இயக்கத்தாரும் தங்கள் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை அரசின் ஒப்புதலுடன் மேற்கொள்வார்கள். ஓராண்டுக்குள், ஈராண்டுக்குள், மூன்றாண்டுக்குள்... சீரமைக்கும் நீர்நிலைகளைப் பொறுத்து இப்படி டார்கெட் ஃபிக்ஸ் செய்துகொள்வோம். இதற்கு, கோடிகளில் பணம், பொக்லைன் போன்ற முரட்டு இயந்திரங்கள் தேவை என்று எண்ணம் வேண்டாம். சாதாரண மண்வெட்டிகளும் சாமானிய மக்கள் செல்வங்களுமே போதுமானவை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7033
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun 12 Nov 2017 - 21:40

இப்படிச் செய்வதன்மூலம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சென்னை மக்கள் மழை வந்தால் மகிழலாம். ஆம், அந்த மழை மக்களை வதைக்காமல் பொருளாதாரத்தை வீணாக்காமல் நீரும் வீணாகாமல் அந்தந்த நீர்நிலைகளில் சேகரிக்கப்படும். இப்படி எளிய வார்த்தைகளைக் கோத்துச் சொல்வதால் இது ஏதோ இன்று தொடங்கி நாளை முழுமையடையும் திட்டம் என்று எண்ணிவிடாதீர்கள். ‘இன்னைக்கு விதைபோட்டுட்டு நாளைக்கே பழம் சாப்பிடணும்னு நினைச்சா முடியுமோ’ என்ற என் பட வசனத்தையே துணைக்கு அழைக்கிறேன். இது எங்களின் நீண்டகாலக் கனவு. ஆனால் சாத்தியமாகக்கூடியது.

அடுத்து, அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன். `மை சன் இஸ் எ சாஃப்ட்வேர் இன்ஜினீயர் இன் அமெரிக்கா’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வதுபோல், ‘என் மகன் கிராமத்துல விவசாயம் பண்றான்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் காலத்தை நோக்கி விவசாயத்தை நகர்த்தும் முனைப்பில் இருக்கும் போராளி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7033
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun 12 Nov 2017 - 21:41

சம்பா, குருவை என்று காலம் பிரித்துச் சாகுபடி செய்துகொண்டிருந்த விவசாயிகளை, சாகும்படி செய்தது யார் குற்றம்? காலங்காலமாகக் கொடுக்கும் இடத்தில் இருந்த இவர்களைக் கையேந்தும் இடத்துக்குத் தள்ளியது யார்? இனி வருங்காலம் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாகவும், இவர்களை மீண்டும் கொடுக்கும் இடத்தில் அமரவைப்பதாகவும் இருக்கும். அதற்கான முனைப்புதான் எங்களின் இந்த இணைப்பு.

அடுத்து, ‘அறப்போர்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பார் ஜெயராமன். இவருடைய அணியின் பணிகள், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு நிகரானவை. இந்த ‘அறப்போர்’ இயக்கத்தை 2015-ல் ஊழலை எதிர்க்கக்கூடிய 25 முதல் 30 பேர் சேர்ந்து கட்டமைத்திருக்கிறார்கள். மக்கள் பங்கெடுக்கும் உண்மையான ஜனநாயகமாக, தொடர்ந்து கேள்விகள் கேட்கக்கூடிய ஜனநாயகமாக மாறும்போதுதான் இது உண்மையான மக்களாட்சியாக மாறும். அதைநோக்கி, இவர்கள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கிறார்கள்; மக்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் பற்றி மிகப்பெரிய அளவில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்கிறார்கள். நீதியும் சமத்துவமும் உள்ள சமுதாயத்தை அமைக்கவேண்டும் என்பதே இவர்களின் முக்கிய நோக்கம். என் நோக்கமும் அதுதான் என்பதால் இவர்களுடன் இணைந்து பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7033
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun 12 Nov 2017 - 21:42

இவர்களின் முக்கியமான கருவி, தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தைப் பாமரர்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்கிறார்கள். ஆம், நமக்குக் கிடைத்த முதல் சுதந்திரத்தை நாம் யார் யாரிடமோ அடகு வைத்துவிட்டோம். அடகு வைத்த அந்தச் சுதந்திரத்தை மீட்க இந்தச் சட்டம் ஒரு மிகப்பெரிய ஆயுதமாகப் பயன்படும். இந்தச் சட்டத்தைக் கடும் நெருக்கடிக்கு மத்தியில் இயற்றிய அரசு, அதைச் செயல்படுத்தத் தயங்குவதுதான் வேதனை. ‘அரசு வெளிப்படைத் தன்மையுடன் இயங்க வேண்டும்’ என்பதே இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம். ஆனால், இருட்டில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அரசு நடைமுறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டமே இருட்டில்தான் கிடக்கிறது என்பதே நிதர்சனம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7033
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun 12 Nov 2017 - 21:42

அரசு, அரசு உதவி பெறும் அனைத்து அமைப்புகளும் இந்தச் சட்டத்தின் கீழ் வருகின்றன. இவற்றிலிருந்து உங்களுக்கு ஒரு தகவல் தேவை என்றால், நீங்கள் மனு செய்த குறிப்பிட்ட நாள்களுக்குள் அந்தத் தகவல் உங்களுக்குத் தரப்படவேண்டும். இல்லையென்றால் மேல்முறையீடு செய்யலாம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் தகவல் ஆணையத்துக்குச் சென்று தகவல் பெறலாம். இதுதான் நடைமுறை. ‘எப்படித் தகவல் பெறலாம், எப்படித் தகவல் தரலாம்’ என்ற இந்த நடைமுறையை மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், ‘எந்தெந்தச் சட்ட நுணுக்கங்களை மேற்கோள்காட்டி எப்படியெல்லாம் தகவல்களைத் தராமல் இருக்கலாம்’ என்ற அடிப்படையில் அரசு அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக அறிகிறேன்.

மேலும், ஒரு நீதிமன்றத்தைப்போல் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கவேண்டிய தகவல் ஆணையமும் பூட்டிய அறைகளுக்குள் இருந்துகொண்டு தன்னை வெளிப்படுத்தத் தயங்குகிறது. இப்படி வெளிப் படைத்தன்மைக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தையே இவர்கள் பூட்டிவைத்துள்ள அவலம் இங்கு மட்டுமே சாத்தியம். அந்தப் பூட்டை அறப்போர் இயக்கத்தார் போன்ற சிலர் முட்டி மோதி உடைக்கத் தொடங்கி அவலங்களை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7033
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun 12 Nov 2017 - 21:43

அப்படி இந்தச் சட்டம் பற்றியும், அதன்மூலம் மேற்கொள்ள வேண்டிய நற்பணிகள் குறித்தும் என் இயக்கத்தாருக்கு இவர்கள் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவார்கள். இதன்மூலம் எளிய மக்களின் கரங்கள் வலுப்படும். ஊழல்கள் அம்பலப்படும். நாளடைவில் உண்மையான மக்களாட்சி மலரும்.

`இப்படி அரசைக் கேள்விகேட்டுக்கொண்டே இருக்கிறாயே... உன் நோக்கம்தான் என்ன?’ என்று சிலர் கேட்கலாம். அவர்களைப் பதில் சொல்லும் இடத்தை நோக்கி நகர்த்துவது. அதன் மூலம் அவர்களைச் செயல்பட வைப்பது. இதுதான் எங்களின் நோக்கம். ‘இல்லையில்லை... இதன்மூலம் பதிலளிக்கும் இடத்தை நோக்கி நீ நகர முயற்சி செய்கிறாய்’ என்ற சிலரின் சந்தேகப்பார்வையையும் புரிந்துகொள்ள முடிகிறது. முடிந்தால் செய்யுங்கள்; இல்லையேல் எங்களையாவது செய்ய விடுங்கள். ஆம் ‘செய் அல்லது செய்ய விடு’ என்கிறேன். இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?

- உங்கள் கரையை நோக்கி!
நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7033
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum