ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 மூர்த்தி

மின்மினியின் ஆசைகள்...!
 sandhiya m

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 ayyasamy ram

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 பழ.முத்துராமலிங்கம்

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

புதியவர் --சந்தியா M .
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை: 80 கோடி மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

துப்பாக்கிகளின் காலம்
 Meeran

பதினைந்தே நாள்களில் அறுவடை செய்யக்கூடிய அசோலாவை உற்பத்தி செய்வது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இந்து கலாச்சாரம்
 Meeran

ஏழாம் உலகம் ????ஜெயமோகன்
 Meeran

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
 பழ.முத்துராமலிங்கம்

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
 ayyasamy ram

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அசத்தும் நெதர்லாந்து விவசாயம்!

View previous topic View next topic Go down

அசத்தும் நெதர்லாந்து விவசாயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 12, 2017 8:26 pm

ஐரோப்பாவில் இருக்கும் ஒரு சிறிய நாடு அது. அங்கிருக்கும் ஒரு சின்னக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அவர். மெட்ரோ ரயில் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் க்ரேன் கேபினில் அமர்ந்திருபவரைப் போல அந்த விவசாயியும் அமர்ந்திருக்கிறார். அவர் முன்னால் பரந்துவிரிந்த அவரது வயல். அந்த வயலில் ஆளில்லா டிராக்டர் ஒன்று உழுதுகொண்டிருக்கிறது. வயலின் மேல் இரண்டு ட்ரோன்கள் பறந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று மண்ணின் தன்மை, நீரின் அளவு, இன்னும் ஏராளமான தரவுகளை அந்த விவசாயிக்கு அனுப்புகிறது. அவர் அனைத்தையும் கவனமாகக் குறிப்பெடுத்துக்கொண்டிருக்கிறார். உருளைக்கிழங்கு சாகுபடி செய்திருக்கும் அந்த விவசாயி ஏக்கருக்கு 20 டன் மகசூல் எடுக்கிறார். உலக அளவில் உருளையின் சராசரி மகசூல் எவ்வளவு தெரியுமா? ஏக்கருக்கு 9 டன்தான். நெதர்லாந்தின் ஸ்கோர்கார்டைப் பார்த்தால் அவர்களை “விவசாயத்தில் கோலி” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.


நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4680
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: அசத்தும் நெதர்லாந்து விவசாயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 12, 2017 8:27 pm

நெதர்லாந்தைப் பற்றிச் சில விஷயங்களைப் பார்த்துவிடுவோம். நெதர்லாந்து, ஐரோப்பியக் கண்டத்தில் இருக்கும் குட்டி நாடு. ஆனால், ஒரு சதுர மைலுக்கு 1300 மக்கள் வாழக்கூடிய மக்கள் நெருக்கடி அதிகமான நாடு. மொத்த நிலப்பரப்பில் 60 சதவிகிதம் விவசாயம்தான்.

மேலோட்டமாகப் பார்த்தால் நெதர்லாந்தின் எந்த உணவுத் தயாரிப்பாளரும் பெரிய உற்பத்தியை எடுக்காததுபோலத் தெரியும். ஆனால், உலகின் பெரிய உணவு உற்பத்தி நாடு இது. ரூபாய் மதிப்பில், அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் உலகின் இரண்டாவது விவசாய ஏற்றுமதி செய்யும் நாடு. (அமெரிக்கா நெதர்லாந்தைவிட 270 மடங்கு அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடு). உலகின் தக்காளி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் நாடும் நெதர்லாந்துதான். இந்நாட்டில் மனிதர்கள் வசிக்கும் வீடுகளைவிடப் பசுமை வீடுகளின் எண்ணிக்கை அதிகம். நெதர்லாந்து விவசாயிகள் பின்பற்றப்படும் முக்கிய விவசாயக் கொள்கை ‘குறைந்த இடம், குறைவான செலவு, அதிக உணவு மற்றும் வருமானம்’ என்பதே. உலகில் 2050-ம் ஆண்டு மக்கள் தொகை 10 பில்லியினை எட்டிவிடும் என்பதை நெதர்லாந்து விவசாயிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.அதற்குத் தங்களைத் தயார் செய்துகொண்டு வருகிறார்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4680
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: அசத்தும் நெதர்லாந்து விவசாயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 12, 2017 8:28 pm

..
இங்கு அதிகபட்சமாக 175 ஏக்கர் வரைக்கும்கூடப் பசுமைக்குடில் அமைக்கப்படுகிறது. தக்காளி, உருளையில் மட்டுமல்ல; மற்ற காய்கறிகள் மகசூலிலும் மெர்சல் காட்டுகிறார்கள். ஒரு சதுர மைல் அளவில் உலகிலேயே அதிகமாகப் பச்சை மிளகாயும், மிளகுப் பொருள்களையும் விளைவித்து அதிக மகசூலை எடுக்கிறார்கள். அதற்கு இவர்களின் தொழில்நுட்பம் முக்கியக் காரணம்.

நெதர்லாந்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர்தான் தொழில்நுட்பம் வளர ஆரம்பித்தது. அதன் பின்னர், தொழில்நுட்பங்கள் நிலையானதா எனச் சரிபார்த்தே விவசாயிகள் பயன்படுத்த ஆரம்பித்தனர். மண்ணின் காரத் தன்மை, நீரின் உப்புத் தன்மை ஆகியவற்றைச் சரிபார்த்தல், பயிருக்குக் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்துகள், பயிரின் வளர்ச்சியைச் சரிபார்த்தல் எனப் பல வேலைகளையும் விவசாயியே பார்த்துவிடுகிறார். ஒருமுறை உபயோகிக்கப்பட்ட தொழில்நுட்பம் நிலையான விவசாயத்திற்கு உதவுமா எனச் சரிபார்த்த பின்னரே ஒரு விவசாயி அதைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்.

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4680
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: அசத்தும் நெதர்லாந்து விவசாயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 12, 2017 8:32 pm


நெதர்லாந்துப் பண்ணைகளில் வெர்ட்டிகல் கார்டன் முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. இதன்மூலம் விவசாயம் செய்யும்போது தண்ணீர் செலவு 90 சதவிகிதம் குறைய வாய்ப்புண்டு. பசுமைக் குடில்களில் ரசாயன உரங்களை உபயோகிப்பதையும் பெருமளவில் குறைத்துக் கொண்டார்கள்.

எல்.இ.டி விளக்கைப் பயன்படுத்தித் தக்காளி விளைவிக்கும் தொழில்நுட்பம் ஒன்றை அவர்கள் பின்பற்றுகிறார்கள். அது ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது என்றாலும், நல்ல மகசூல் தருகிறது. மேலும், குடில்களைச் சுற்றிலும் தேனீப்பெட்டிகள் வைக்கப்பட்டு மகரந்தச் சேர்க்கையை அதிகப்படுத்தி மகசூல் அதிகமாகப் பெறும் தொழில்நுட்பமும் பின்பற்றப்பட்டு வருகிறது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4680
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: அசத்தும் நெதர்லாந்து விவசாயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 12, 2017 8:33 pm

ஒவ்வொரு பண்ணைக்கும் தேவையான உரம் மற்றும் மின்சாரம் ஆகியவை உள்ளேயே இருக்கும். அதேபோல, உற்பத்தி செய்யும் பொருள்களை அவர்களே நேரடியாக விற்பனையும் செய்து வருகிறார்கள். பசுமைக்குடில் அமைத்து விவசாயம் செய்யும்போது, குடிலுக்கு உள்ளே ஒரே சீரான வெப்பநிலையைத் தக்கவைக்க முடியும். இதன்மூலம் விவசாயத்தை லாபகரமானதாகச் செய்யலாம்.

2016-ம் ஆண்டு நிலவரப்படி, விதை உற்பத்தியிலும் நெதர்லாந்துதான் முன்னிலை வகிக்கிறது. அதேபோல இங்கு விற்கப்படும் விதைகள் அனைத்தும் இயல்பாகவே நோய் எதிர்ப்புத்தன்மையைத் தாங்கி நிற்கின்றன.

விவசாயத்தையே நம்பியிருக்கும் இந்தியா, நெதர்லாந்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்திருக்கிறார்கள். விவசாயத்தில் நெதர்லாந்து செய்திருக்கும் சாதனைகள் ஏராளம்தான். ஆனால், இந்தச் சாதனையை அவர்களால் எப்போதும் முறியடிக்க முடியாது. அதற்கு நெதர்லாந்து அரசு உதவியும் செய்யாது.
நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4680
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: அசத்தும் நெதர்லாந்து விவசாயம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum