ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

கோவாவின் 'மாநில பானம்'
 ayyasamy ram

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 ayyasamy ram

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 ayyasamy ram

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 ayyasamy ram

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 ayyasamy ram

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 ayyasamy ram

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு

View previous topic View next topic Go down

அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 27, 2017 7:21 am

புதுடெல்லி, 
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் ‘மன் கீ பாத்’ (மனதில் குரல்) என்னும் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அவர் பேசும்போது, மும்பையில் 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட தினம் ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். மேலும் பத்மாவதி இந்தி திரைப்படம் தொடர்பாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை பிரதமர் மறைமுகமாக சுட்டிக்காண்பித்து கண்டித்தார்.
அவர் கூறியதாவது:–
1950–ம் ஆண்டு ஜனவரி மாதம் 26–ந்தேதி முதல், இந்திய அரசியல் சாசனத்தை நடைமுறைக்கு கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்ட தினம் 1949–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி ஆகும். நமது அரசியல் சாசனத்தை மதித்து அதற்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்வது நமது அனைவரின் கடமை ஆகும்.
நாட்டு மக்களும், அரசு நிர்வாகமும் அரசியல் சாசன உணர்வோடு செயல்படவேண்டியது அவசியம். யாருக்கும் எந்த பங்கமும், ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் குறிக்கோள் ஆகும்.
மேலும் இந்தியாவின் அரசியல் சாசனம் நமது ஜனநாயக உணர்வை வெளிப்படுத்துகிறது. நமது அரசியல் சாசன சட்டத்தை அமைப்பதில் வரைவு குழு தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கரின் செயல் திறன்மிக்க தலைமையின் அழியாத முத்திரை பதிக்கப்பட்டு இருக்கிறது. டிசம்பர் 6–ந்தேதி மறைந்த அவரை நாம் எப்போதும் போல நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.
நன்றி 
தினத்தந்தி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4828
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 27, 2017 7:22 am

[size=38]நவம்பர் மாதம் 26–ந்தேதி என்றதும் நமது நினைவுக்கு வரும் இன்னொரு மறக்க முடியாத தினம் 2008–ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். வீரம் நிறைந்த குடிமக்கள், காவல்துறையினர், பாதுகாப்பு படையினர் என அன்று உயிர் துறந்த அனைவரையும் இந்த தேசம் நினைவு கூர்கிறது.[/size]
[size=38]பயங்கரவாதம் இன்று உலகின் அன்றாட நிகழ்வாகிவிட்டது. அது ஒரு அதிபயங்கர வடிவத்தில் நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் பயங்கரவாதத்தை பற்றி பேசியபோது உலகின் பல நாடுகள் அது குறித்து விவாதிக்க தயாராக இல்லை. ஆனால் இன்று அவர்கள் நாட்டின் கதவையும் பயங்கரவாதம் தட்டுகிறது. அதனால் பயங்கரவாதத்தை மிகப்பெரிய சவாலாக பார்க்கின்றனர்.[/size]
[size=38]பயங்கரவாதம் மனிதகுலத்துக்கே சவால் விடுகிறது. மனிதநேயத்தை அழிப்பதிலேயே குறியாக உள்ளது. எனவே இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து மனிதநேய சக்திகளும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும்.[/size]
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4828
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 27, 2017 7:23 am

[size=38]டிசம்பர் 4–ந்தேதி நாம் இந்திய கடற்படை தினத்தை கொண்டாட இருக்கிறோம். வரலாற்றின் ஏடுகளை புரட்டிப் பார்த்தோம் என்றால் 800, 900 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்களின் கடற்படை மிகச் சக்திவாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாக கருதப்பட்டது. சோழ சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்தில் அதை பொருளாதார பெரும் சக்தியாக மாற்றுவதில் அவர்களின் கடற்படையின் பெரும் பங்கு இருந்தது. மிகப்பெரும் எண்ணிக்கையில் பெண்களும் முக்கிய பங்களிப்பை தந்து இருக்கிறார்கள். போரிலும் பெண்கள் ஈடுபட்டன.[/size]
[size=38]சோழர்கள் காலத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்பான தொழில் நுணுக்கம் இருந்தது. இதேபோல் சத்ரபதி சிவாஜியின் கடற்படையின் திறன் பற்றியும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவருடைய மராட்டிய கடற்படையில் பெரிய பெரிய கப்பல்களும், சிறிய கப்பல்களும் இருந்தன. அவரது கடற்படையினர் எந்தவொரு எதிரி மீதும் தாக்குதல் தொடுக்கவோ, தற்காத்துக் கொள்ளவோ திறமை கொண்டவர்களாக இருந்தனர். இன்று நமது கடற்படை வெறும் யுத்தத்தில் மட்டும் இடம்பெறாமல் மனித நேய உதவிகளிலும் ஈடுபடுகிறது.[/size]
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4828
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 27, 2017 7:24 am

[size=38]டிசம்பர் மாதம் 5–ந்தேதி உலக மண்வள நாள். மண்வள பரிசோதனை வழியாக விவசாயிகள் மிகுந்த பயன் அடையலாம். மகசூல்பற்றி கவனம் செலுத்தப்படவேண்டும் என்றால் முதலில் நாம் பூமித்தாய் மீது அக்கறை கொள்ளவேண்டும். 2022–ம் ஆண்டுக்குள் யூரியாவை பாதியளவாக குறைப்போம் என்று விவசாயிகள் உறுதி எடுத்துக்கொண்டால் பூமித் தாயின் உடல்நலம் மேம்பாடு காணும். உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்.[/size]
[size=38]இன்னும் சில நாட்களில் மிலாடி நபி திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இப்பெருநாள் அனைவருக்கும், உத்வேகம் அளிக்கட்டும். புதிய சக்தியை வழங்கட்டும். புதிய மனஉறுதிக்கான திறனை அளிக்கட்டும்.[/size]
[size=38]இவ்வாறு அவர் பேசினார்.[/size]
[size=38]பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரையாற்றிய நேரத்தில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது. எனினும் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர்கள் மோடியின் பேச்சை கேட்பதற்காக தங்களுடைய பிரசாரத்தை அரைமணி நேரம் தள்ளி வைத்தனர்.[/size]
[size=38]பா.ஜனதாவின் தேசிய தலைவரான அமித்ஷா ஆமதாபாத் நகரில் தரியாபூர் பகுதியில் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே பிரதமரின் உரையை கேட்டு ரசித்தார்.[/size]
[size=38]மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி சூரத் நகரில் உள்ள அடாஜன் பகுதியில் ஒரு சாவடி அருகே பிரதமரின் வானொலி பேச்சை கேட்டார். மாநில முதல்–மந்திரி விஜய்பாய் ருபானி, பஞ்ச்மால் மாவட்டத்தில் உள்ள மோரா என்ற கிராமத்தில் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே மோடியின் உரையை கேட்டு மகிழ்ந்தார்.[/size]
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4828
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum