ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மிரளவைக்கும் லைஃப் ஸ்டைல்! – அத்துமீறும் ஆடம்பரம்…

View previous topic View next topic Go down

மிரளவைக்கும் லைஃப் ஸ்டைல்! – அத்துமீறும் ஆடம்பரம்…

Post by ksikkuh on Thu Dec 07, 2017 11:46 am“படிக்க வேண்டிய வயசுல பல்சர் கேக்குறாங்க. பைக் ரேஸ், மது, புகை, காஸ்ட்லீ மொபைல் எனச் சுத்துறாங்க. முகத்தைப் பார்த்துப் பேசுறதைவிட முகநூலில்தான் அதிகமா இருக்காங்க. சுருக்கமாச் சொல்லணும்னா… நல்ல வாழ்க்கையைவிட, ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் இன்றைய தலைமுறை பசங்க எதிர்பார்க்குறாங்க.

‘என் வாழ்க்கை… என் உரிமை’ என்ற வசனத்தைப் பெரும்பாலான வீடுகளில் கேட்க முடியுது. தான் பட்ட கஷ்டத்தைத் தன் பிள்ளைகள்படக் கூடாதுன்னு நினைச்சு பசங்களுக்குத் தகுதிக்கு மீறிப் பெத்தவங்க செஞ்சுடுறாங்க. அதோட விளைவு என்ன தெரியுமா? சின்ன வயசுலயே பசங்களோட வாழ்க்கைத் தடம் மாறிப் போயிடுது.

பைக் விலை ரூ.1.5 லட்சம்!

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மருத்துவர் சரத்பாபு. மகன் மதன், மகள் மாலினி. மதன் ப்ளஸ் 2 முடிச்சுட்டு காலேஜ் சேர்ந்தான். காலேஜ் காட்டாங் கொளத்தூரில் இருக்கு. ரயில் வசதி, பஸ் வசதி எல்லாம் இருக்கு. ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஒரு பைக் வாங்கிக்கொடுங்கன்னு கேட்டான். அப்பாவும் வாங்கிக் கொடுத்திட்டார். முதல் நாள் காலேஜ் போயிட்டுத் திரும்பியபோதே ஆக்சிடென்ட். ஒரே வாரத்துல இன்னொரு ஆக்சிடென்ட். ஏன்னா, இவன் சாதாரணமாவே 100 கி.மீ வேகத்துக்கு மேலதான் போவானாம். மூணாவது ஆக்சிடென்ட்டில் பலத்த அடிபட்டு ஒரு மாதம் பெட்ல படுத்துட்டான். இதுல பையன் மேல தப்பு இல்ல… ஆசையாய் கேட்குறானேன்னு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு பைக் வாங்கிக்கொடுத்த அப்பா மேலதான் தப்பு.

தூக்கி அடிச்சது 15 ஆயிரம்!

பசங்கதான் இப்படி, பொண்ணுங்க அப்படி இல்லைனு நினைக்காதீங்க. அவங்க ‘சைலன்ட் கில்லர்ஸ்’.

மதுரையில் பிரபல பள்ளி ஒன்றில் ப்ளஸ் 2 படித்தாள் சங்கரி. நல்ல மார்க் வாங்கினா டேப் (Tab) வாங்கித் தர்றேன்னு அப்பா சொல்லியிருக்கார். 1,150-க்கு மேல் மார்க் பெற்றாள். சொன்ன மாதிரியே அப்பாவும் டேப் (Tab) வாங்கிக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்ததும் கோபத்தில் வீசியடித்தாள் சங்கரி. ஏனென்றால், இவள் கேட்ட டேப் விலை 35,000 ரூபாய். தந்தை வாங்கித் தந்த டேப் விலை 15,000 ரூபாய்.

பெத்தவங்களே காரணம்…

மதன், சங்கரி மட்டுமல்ல… இன்றைய தலைமுறைப் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்காங்க. இதற்குப் பல காரணங்கள் இருக்கு. பெற்றோர்கள் ரெண்டு பேருமே வேலைக்குப் போறாங்க. கைநிறையச் சம்பாதிக்கிறாங்க. எல்லாமே நம்ம பிள்ளைங்களுக்குத்தானே… அப்டீன்னு நினைக்கிறாங்க. நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போயிடுறோம்… அதனால நம்ம பிள்ளைங்களைச் சரியாகக் கவனிக்காம இருக்கோமோ என்ற குற்ற உணர்ச்சியும் அவங்களுக்கு இருக்கு. அதனால, பிள்ளைங்களுக்கு அதிகப்படியான செல்லம் கொடுக்குறாங்க. பிள்ளைங்க லேசா அழுதாலே பெற்றோர்களால தாங்கிக்க முடியலை. அதனால, என்ன கேட்டாலும் எப்பக் கேட்டாலும் தகுதிக்கு மீறி வாங்கிக் கொடுக்குறாங்க. குழந்தைகள் வளரவளர ஏமாற்றத்தைத் தாங்கிக்க முடியாமப் போயிடுறாங்க. முறையாக வளர்க்கப்படாத பிள்ளைங்களுக்கு, பிடிவாதக் குணம் அதிகமாகுது. கேட்பதைச் செய்து கொடுக்கலைன்னா எதிர்த்துப் பேச ஆரம்பிச்சிடுறாங்க” என பொரிந்து தள்ளினார், ஒரு சமூக ஆர்வலர்.‘நோ’-வை ஏற்க முடியலை!

இந்தக் காலத்துப் பசங்களின் வளர்ப்புப் பற்றித் ‘தோழமை’ என்கிற குழந்தை உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயனிடம் கேட்டோம்.

“என் நண்பரின் கதையையே சொல்றேன். அவருக்கு ஒரே மகன். அவன் பெரிய ஆளா வரணும்னு ஒரு பெரிய ஸ்கூலில் சேர்த்தாங்க. அங்கு படிக்கிற எல்லாரும் ரொம்ப பணக்காரப் பசங்க. இவர் ஒரு லோயர் மிடில் கிளாஸ். மத்த பசங்க வெச்சிருக்கிற பொருட்களைப் பார்த்துட்டு வந்து, அது எல்லாம் தனக்கும் வேணும்னு அந்தப் பையன் கேட்பான். அந்த நண்பரும் வாங்கிக்கொடுப்பார். அவன் கொஞ்சம் பெரியவனா ஆனப்புறம், இப்போ ஏதாவது ஒரு பொருளை அவன் கேட்டு இவர்கள் வாங்கிக்கொடுக்கலைன்னா அவனால அதைத் தாங்கிக்க முடியாது. ‘நோ’ என்கிற வார்த்தையைக்கூட அவனால் ஏத்துக்க முடியலை.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே உள்ள பிரச்னையைக்கூட சில பிள்ளைகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கிறாங்க. அம்மாவிடம் ஏதாவது ஆகணும்னா, அப்பாவைப் பற்றித் தவறாகப் பேசுறது. உடனே, மகன் தனக்காகப் பேசுறான்னு அவன் கேட்டதை வாங்கித் தந்துடறாங்க. அதே மாதிரிதான் அப்பாவிடமும். இதற்கு முக்கியக் காரணம் கூட்டுக் குடும்பம் உடைந்ததுதான். தாத்தா, பாட்டிகூடவே இருந்தால் குழந்தைகள் வளர்ப்பு சரியான திசையில், சரியான குணத்தில் அமையும். அந்தச் சூழல் தகர்ந்துபோய்விட்டது” என்று கவலையுடன் சொன்னார் தேவநேயன்.

‘பயங்கர’ செல்லம்!

பிரபல உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமனிடம் பேசினோம்.

“11-வது படிக்குற ஒரு பையன் என்கிட்ட கவுன்சலிங்க்காக வந்தான். எடுத்தவுடனே, ‘எங்க அம்மா அப்பா என்னை உங்கக்கிட்ட கவுன்சலிங் போகச் சொன்னாங்க. முதல்ல நான் மாட்டேன்னு சொன்னேன். உடனே, கவுன்சலிங் போனா எனக்கு மோட்டார் பைக் வாங்கித்தரேன்னு சொன்னாங்க. அதனால வந்தேன்’ என்று சொன்னான். பெத்தவங்களோட வார்த்தைகளைவிட, அவங்க வாங்கிக்கொடுக்குற பொருளுக்குத்தான் பசங்க மரியாதை தராங்க.

நான் ஒரு ஸ்கூலில் கவுன்சலிங் கொடுக்கப் போனேன். அங்க எல்.கே.ஜி படிக்கிற ஒரு குழந்தை அடிக்கடி லீவ் போடுமாம். இன்னைக்கு ஸ்கூலுக்கு போகவேணாம்னு அந்தக் குழந்தை முடிவு பண்ணிட்டா யாராலயும் தடுக்க முடியாதாம். ரொம்ப வருஷம் கழிச்சுப் பிறந்ததால அவங்க குடும்பத்துல எல்லோரும் ‘பயங்கர’ செல்லமாம். இப்படிக் குழந்தைகளை வளர்த்தால் எப்படி இருக்கும்? இந்தக் குழந்தைகள் முதலில் பெற்றோர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். சொந்தங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள். அடுத்து யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள்” என்றார் பிருந்தா ஜெயராமன்.

முன்பு ஒரு காலம் இருந்தது, பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றோரே வாங்கிக் கொடுப்பது, அவர்களிடம் எதுவும் கேட்பது இல்லை. அதன்பிறகு பிள்ளைகளிடம் விருப்பத்தைக் கேட்டு வாங்குவதாகக் காலம் மாறியது. பிறகு, பிள்ளைகளை அழைத்துச் சென்று வாங்கிக் கொடுத்தார்கள். இப்போது பிள்ளைகள், பெற்றோர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு போய் தங்களுக்குப் பிடித்ததை வாங்கிக்கொள்கிறார்கள். இப்படியே போனால், பெற்றோர் சம்மதம் இல்லாமல் தனக்கு வேண்டிய பணத்தை வீட்டில் இருந்தே எடுத்துப்போய் வாங்கிக்கொள்ளவும் செய்வார்கள். அப்படி ஒரு கட்டம் உருவாகிவிடாமல் தடுக்க வேண்டியது பெற்றோர் கையில்தான் உள்ளது.

குழந்தைகளை ஐந்து வயதிலேயே வளைக்காவிட்டால், அவர்களின் போக்குக்கு எல்லாம் வளைந்துகொடுப்பவர்களாகப் பெற்றோர்கள் மாற வேண்டியிருக்கும். அது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல… இந்தச் சமுதாயத்துக்கே நல்லதல்ல!பெற்றோர்களுக்கான டிப்ஸ்…

குழந்தைகள் வளர்ப்பில் என்ன செய்ய வேண்டும்? அவர்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பது குறித்து உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன் தரும் டிப்ஸ்…

* பிள்ளைகளைச் செல்லமாக வளர்ப்பது சரிதான். ஆனால், அதற்கும் ஒரு வரையறை இருக்கிறது. அவர்களிடம் சில விஷயங்களில் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும்.

* பண வசதிகளை மறைமுகமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

* ஒரு வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் பாக்கெட் மணி கொடுங்கள். இனி, ‘அடுத்த திங்கட்கிழமைதான் பாக்கெட் மணி’ என்று தெளிவாகச் சொல்லிவிடுங்கள். அப்போதுதான், வாரக் கடைசியில் ஊர் சுற்றுவது குறையும். ஒருவேளை, நண்பர்களிடம் வாங்கினால், அதையும் இந்தப் பாக்கெட் மணியில் இருந்துதான் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் சொல்லிவிடுங்கள்.

* இரவு தாமதமாக வந்தால் ‘கதவைத் திறக்க மாட்டோம்… நீ கோபித்துக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்குப் போனால், அப்படியே மறுநாளும் அங்கேயே இரு’ என்று சொல்லுங்கள். நீண்ட நாட்கள் நண்பர்களின் வீடுகளில் இருக்க முடியாது என்று அவர்களுக்கும் தெரியும்.
உங்கள் பிள்ளைகள் செய்யும் செயல்களுக்கான விளைவுகளைச் சந்திக்கவிடுங்கள். பிரச்னையாகிவிடக் கூடாது என்று அவர்களைத் தப்பிக்கவைத்தால், அது உங்களுக்குத்தான் வினை.

* சேமிக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்து பழக்குங்கள். அந்தச் சேமிப்பில் இருந்து தனது அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என உடன்பிறந்தவர்களுக்கு அன்பளிப்பு வாங்கித்தரச் சொல்லுங்கள். அதனால் பகிர்ந்துகொடுத்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற நல்ல உணர்வுகள் அவர்களிடம் உருவாகும்.

* குழந்தைகள் வளரவளர பிறந்தநாளை ஒரு பெரிய பார்ட்டிபோல ஆடம்பரமாக கொண்டாடாதீர்கள். ஆதரவற்றக் குழந்தைங்களுடன் உங்கள் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள். அப்போதுதான், நாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் என்பதும், அப்பா அம்மாவுடைய அருமையும் அவர்களுக்குப் புரியும்.

* பிள்ளைகளுக்கு 13, 14 வயது வரும்போது, நீங்கள் குடும்ப பட்ஜெட் போடும் நேரத்தில் அவர்களையும் உட்காரவையுங்கள். அப்போதுதான், ஒவ்வொரு காசுக்கும் அப்பாவும் அம்மாவும் எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்பது புரியும்.

* ‘வீட்டைவிட்டு ஓடிப் போய்டுேவன்’னு குழந்தைகள் அடிக்கடி சென்டிமென்ட்டா மிரட்டுவார்கள். ‘போனா போ’ என்று சொல்லாமல், ‘நீ போனா நாங்க எவ்ளோ வருத்தப் படுவோம் தெரியுமா?’ என்று நீங்களும் அதே சென்டிமென்டால் அடிங்க.

* பிள்ளைகள் உங்களிடம் பேசவரும்போது அவர்கள் சொல்வதில் கவனம் செலுத்துங்கள். அந்த நேரத்தில் மொபைலில் பேசுவது, டி.வி பார்ப்பது போன்றவற்றைத் தவிருங்கள். முக்கியமான வேலையில் இருந்தால், வேலை முடிந்தபிறகு அவர்களிடம் பேசுங்கள்.

* உங்கள் குழந்தையுடன் தினமும் முடிந்த அளவு நேரத்தைச் செலவழியுங்கள். பிறர் மீதான கோபத்தைக் குழந்தைகள் மீது காட்டாதீர்கள்.

* கணவன், மனைவி சண்டையை ஒருபோதும் குழந்தைகளிடம் எடுத்துச் செல்லாதீர்கள்.

* ஸ்கூல், காலேஜில் நடக்கும் பெற்றோர் – ஆசிரியர் மீட்டிங் என்றால் தவறாமல் செல்லுங்கள். அப்போதுதான், உங்கள் குழந்தையின் நடவடிக்கைகள் பற்றித் தெரியவரும்.

* உங்கள் குழந்தைகளின் நண்பர்கள் யார் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களைப் பற்றியும் அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் தொடர்பு எண்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
avatar
ksikkuh
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 171
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum