ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

30 வயதினிலே… நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்டங்கள்!

View previous topic View next topic Go down

30 வயதினிலே… நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்டங்கள்!

Post by ksikkuh on Thu Dec 07, 2017 1:22 pmகாலத்தே பயிர் செய் என்பது நம் முன்னோர்கள் அனுபவித்து சொன்ன பொன்மொழி. எந்த வயதில் எந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டுமோ, அந்த வயதில் அந்த வேலையை முடித்துவிட்டால், பிற்பாடு அதுகுறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம். முப்பது வயதைக் கடப்பதற்குமுன் எதிர்கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ, சில விஷயங்களைக் கட்டாயம் செய்திருக்க வேண்டும். அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல், இன்றைய பொழுதுகளை ஜாலியாக ஓட்டினால், ஐம்பது வயதுக்குப்பிறகு எல்லாவற்றுக்கும் அல்லாட வேண்டியிருக்கும். கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்றில்லாமல், இனிமையான எதிர்காலத்துக்கு 30 வயதினிலேயே அவசியம் தொடங்கி இருக்க வேண்டிய நிதித் திட்டங்கள் என்னென்ன என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் நிதி ஆலோசகர் ஆர்.ராதாகிருஷ்ணன்.‘நில்’ பேலன்ஸ்!

“பெற்றோர்கள் பணி ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத்தைவிட இருமடங்கு, ஆரம்ப சம்பளமாகப் பெறும் தலைமுறை இது. ஆனாலும், பெற்றோர்கள் அளவுக்கு அவர்களால் குடும்பப் பொருளாதாரத்தை சாமர்த்தியமாக நிர்வகிக்க முடிவதில்லை. பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், இளம்தலைமுறையினரில் பலருக்கு மாதத்தின் இறுதியில் அக்கவுன்ட் பேலன்ஸ் ‘நில்’ (Nil) என்கிற நிலையை அடைந்துவிடுகிறது. காரணம் சிக்கனம், சேமிப்பு பழக்கங்களில் இருந்து அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டதே!

பெரும்பாலான இளைஞர்கள் திட்டமிட்டு வாழவேண்டும் என்றில்லாமல், இன்றைக்கு மகிழ்ச்சியாக இருந்தால்போதும் என்று நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான விஷயம். இதன் விளைவு, வாழ்வின் இறுதிவரை சந்தோஷத்தை அருகில்கூட வர அனுமதிக்காமல் செய்துவிடும். அதனால் ஒருவர் முப்பது வயதை கடப்பதற்குமுன் கட்டாயம் கீழே குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான நிதித் திட்டங்களைத் தொடங்கி இருக்க வேண்டியது அவசியம்.

கொஞ்சம் ஜாலி!

கல்வி என்பது இன்றைய நிலையில் எல்லோருக்கும் அவசியம்தான். அதற்காக குறிப்பிட்ட வயதைத் தாண்டியும் தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கையில் செட்டில் ஆவதில் பல பிரச்னைகள் ஏற்படு்ம். எனவே, படித்து முடித்துவிட்டு, 25 வயதுக்குள் நல்ல சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையில் சேர்ந்துவிடுவது அவசியம். வேலை அனுபவம் கிடைக்க இது உதவும் என்பதுடன், ஒரு வேலை பிடிக்கவில்லை என்றால் இன்னொரு வேலையைத் தேடி சேருவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சொந்த சம்பாத்தியம் வரும் இந்த சமயத்தில் இளைஞர்கள் கொஞ்சம் ஜாலியாக இருக்க நினைப்பதில் தவறில்லை. குடும்பப் பொறுப்புகள் பெரிய அளவில் இல்லாத இந்த நேரத்தில் மனதுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வதை பெரிய குறையாக சொல்ல முடியாது. என்றாலும் இந்த நேரத்திலேயே சேமிப்பைத் தொடங்குவது அவசியம் என்பதை இளைஞர்கள் உணர்வதில்லை. அடுத்த சில ஆண்டுகளில் திருமணம் என்பதால், அந்தத் திருமணத்தையொட்டி தன் எதிர்கால மனைவிக்கு பரிசளிக்க, நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க என நிறையச் செலவுகள் வரும். இதற்கான பணத்தை பெற்றோர்களிடம் கேட்டு வாங்குவதைவிட, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவைப்பது புத்திசாலித்தனம்.

என்னிடம் நிதி ஆலோசனை கேட்டு அதை ஒழுங்காக கடைப் பிடிக்கிறவர்களில் ரமேஷை எனக்கு மிகவும் பிடிக்கும். 25 வயதில் வேலைக்கு சேர்ந்தவுடனே கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்க்க ஆரம்பித்தார் ரமேஷ். 28 வயதில் அவருக்கு திருமணம் முடிகிறபோது கையில் கணிசமாக பணம் வைத்திருந்தார். திருமணம் முடிந்தபிறகும் அவர் சேமிப்பை நிறுத்தவில்லை. இன்றைக்கு அவருக்கு 32 வயது. எல்லா முதலீடுகளையும் பக்காவாக செய்து விட்டு, எதிர்காலம் குறித்த பயமே இல்லாமல் இருக்கிறார்.

காலாகாலத்துக்கு கல்யாணம்!

வேலைக்குச் சேர்ந்ததும் சில ஆண்டுகளில் அலுவலகப் பொறுப்பு அதிகரித்துவரும் சமயத்தில், திருமணம் என்கிற குடும்பப் பொறுப்பையும் சுமக்க வேண்டிய மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். அதிகபட்சம் 28 வயதுக்குள் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிடுவது உத்தமம். அப்போதுதான் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் திருமணம் முடிக்க சரியாக இருக்கும்.ஆனால், இன்றைய இளைஞர்களின் மனநிலை, திருமணத்துக்குமுன்பு குறிப்பிட்ட அளவு பணம் சேர்க்கவேண்டும்; நிரந்தரமான வேலையாக இருக்கவேண்டும் என்று நினைத்து திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். இதனால் திருமண வயதைக் கடந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. முப்பது வயதுக்குப்பிறகு திருமணம் செய்துகொள்வதில் லேசான சலிப்பு தட்ட, கல்யாணம் ஆகாமலே பிரமச்சாரியாக வாழவேண்டிய கட்டாயத்துக்கு பலரும் தள்ளப்படுகிறார்கள்.

என் நண்பர் ஒருவர் 5 லட்ச ரூபாய் சேர்த்தபின் திருமணம் என்று உறுதி எடுத்துக்கொண்டார். கடைசியில் அந்தத் தொகையையும் சேர்க்க முடியாத நிலையில் 35 வயதுக்குபின் திருமணம் செய்துகொண்டார். நான்கு ஆண்டுகள் கழித்து குழந்தை பிறக்க அவரின் தேவைக்காகவும், குழந்தையின் எதிர்காலத்துக்காகவும் தொடர்ந்து உழைக்க வேண்டியதாகிவிட்டது. பள்ளிக்குச் செல்லும் மகன், அவனின் மேல்படிப்பு, திருமணம் என்ற வகையில் செலவுகளும் ஓய்வுபெறும் வரையில் நீளும் என்கிற நிலை. தாத்தாவாக இருக்கவேண்டிய நிலையில், தந்தையாக இருப்பது தர்மசங்கடத்தை தந்துகொண்டிருக்கிறது அவருக்கு. ஆனால் 25-30 வயதுக்குள் திருமணம் செய்திருந்தால், உடல் மற்றும் மனது ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சிக்கல் எதுவும் இல்லாமல் வாழ்க்கையைக் கடந்திருக்கலாம்.

காலம் தாழ்த்தி திருமணம் செய்துகொள்ளும்போது ஏற்படும் பெரிய சிக்கல் என்னவென்றால், நமது எதிர்காலத்துக்கான ஒருங்கிணைந்த நிதித் திட்டமிடலை சரியாகச் செய்ய முடியாது. திருமணத்துக்குப்பின் துணைவி வேலைக்குச் செல்பவராக இருந்தால், அவரது சம்பாத்தியத்தையும் சேர்த்து நிதித் திட்டமிடல் செய்யலாம். ஒரு குடும்பத்திலிருந்து ஓரிரு வருமானம் வரும்போது அதைக்கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

வசிக்க ஒரு வீடு!

25 – 30 வயதுக்குள் திருமணம் என்பது எவ்வளவு கட்டாயமோ, அந்த அளவுக்கு கட்டாயம் சொந்தமாக ஒரு வீடு அல்லது ஃப்ளாட்டை வாங்குவது. ஒரு சிலருக்கு ஏற்கெனவே சொந்தமாக வீடு இருந்தால் நல்லதுதான். என்றாலும் கூட்டுக் குடும்பமாக இருப்பவர்கள் தங்களின் எதிர்காலத்துக்கென தனியாக ஒரு வீட்டை அல்லது ஃப்ளாட்டை வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை. இந்த வீட்டை வாங்க தந்தை வழியிலோ அல்லது வேறு வழியிலோ பணம் கிடைக்கும் எனில் அதை வைத்து சொந்தமாக வீட்டை வாங்கிவிடலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் முழுப் பணத்தைச் செலுத்தி சொந்தமாக வீடு வாங்க முடியாது என்பவர்களே அதிகம். அப்படிப்பட்டவர்கள் வீட்டுக் கடன் வாங்கியாவது 30 வயதுக்குள் வீட்டை வாங்கிவிடுவது நல்லது.காரணம், 30 வயதுக்குள் வீட்டுக் கடனை வாங்கும்போது, அதை திருப்பிச் செலுத்துவதற்காக காலஅவகாசம் அதிகம் இருக்கும். 30 வயதை கடந்து 40 வயதில் வீட்டுக் கடன் வாங்கினால், அன்றைய நிலையில் வீட்டின் மதிப்பும் அதிகமாக இருக்கும். திருப்பிச் செலுத்தும் காலம் குறைவு என்பதால், ஒவ்வொரு மாதமும் வங்கிக்கு கொடுக்கும் இஎம்ஐ தொகையும் அதிகமாக இருக்கும். இதனால் குடும்ப பட்ஜெட் பெரிதாக பாதிப்படைந்து, குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி இல்லாத நிலை ஏற்படும். வீடு அல்லது ஃப்ளாட் வாங்கும் விஷயத்தில், விரலுக்கு ஏற்ற வீக்கமாக நம் பட்ஜெட்டுக்கு தகுந்தபடி வீடு வாங்க வேண்டும். பெரிய வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டு மாதாமாதம் இஎம்ஐ கட்டும்போது கஷ்டப்படக் கூடாது. தவிர, வீட்டுக் கடனுக்காக கட்டும் இஎம்ஐ-க்கு வரிச் சலுகை உண்டு என்பதால், வீட்டுக் கடன் முடிகிற வரை வரிப் பணமும் மிச்சமாகும்!

பாதுகாப்புக்கு முக்கியத்துவம்!

சம்பாதிக்கும் ஒருவருக்கு எது இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்கிற இரண்டும் இருந்தேயாக வேண்டும். 30 வயதை எட்டியவர்கள் இதில் சமரசம் செய்துகொள்ளவே கூடாது. இளம் வயதில் இந்த இரண்டு இன்ஷூரன்ஸையும் எடுத்துக் கொள்ளும்போது பிரீமியம் மிக மிக குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு, 25 வயதில் (குடி மற்றும் புகைபழக்கம் இல்லாதவர்கள்) ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளும்போது ஆண்டுக்கு சுமார் 10,000 ரூபாய் பிரீமியம் என அடுத்த 40 ஆண்டுகளுக்கு கட்டினால் போதும்.

அதேபோல, தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியிலும் குறைந்த வயதில் எடுத்துக்கொள்ளும்போது குறைந்த அளவிலேயே பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. தவிர, காத்திருப்புக் காலம் என்கிற பிரச்னையும் எதிர்காலத்தில் இல்லாமல் இருக்கும். அதனால் 30 வயதுக்குள் டேர்ம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது அவசியமாகும். திருமணமானவுடன் மனைவியின் பெயரையும், குழந்தை பிறந்தவுடன் அதன் பெயரையும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் சேர்த்துவிடுவது அவசியம்.

தேவையில்லாத கடன் வேண்டாமே!

நம்மில் பலர் வேலைக்குச் சேர்ந்தவுடன் கார் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக கார் லோன் வாங்கி, முன்தொகைக்காக தனிநபர் கடன் எடுத்து ஒவ்வொரு மாதமும் அதிக இஎம்ஐ கட்டுகிறார்கள். இந்த விஷயத்தில் நமது தேவை என்ன, நமது பட்ஜெட் என்ன என்பதை அறிந்து முடிவெடுப்பது அவசியம். கார் கடனோ, தனிநபர் கடனோ கூப்பிட்டுக் கொடுக்கிறார்கள் என்பதற்காக அதை வாங்கி, நம் தலையிலே நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, ஏற்கெனவே கல்விக் கடன், கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன் வாங்கியிருந்தால், அவற்றை 30 வயதுக்குள் திரும்பச் செலுத்திவிடுவதுடன், 30 வயதுக்கு மேல் இதுமாதிரியான கடன்களில் சிக்காமல் இருப்பது அவசியம்.

முதலீட்டுக்கு அடித்தளமிடுங்கள்!அடிப்படையான இந்த விஷயங்களை செய்து முடித்தபின், குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்துக்கான செலவு மற்றும் ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டையும் தொடங்குவது அவசியம். குழந்தைகளின் படிப்புக்கு 18 ஆண்டுகளும், திருமணத்துக்கு 24 ஆண்டுகளும், ஓய்வு காலத்துக்கு 30 ஆண்டுகளும் இருக்கும் என்பதால் குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக வருமானத்தை திரும்பப் பெற முடியும்.

உதாரணமாக, 25 வயதுள்ள ஒருவர் ஓய்வுக்காலத்துக்காக மாதம் 2,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்வதாகக் கொண்டால், அவரது ஓய்வுக்காலத்தில் அதாவது அவரின் 60-வது வயதில் 2.93 கோடி ரூபாய் கிடைக்கும். இவ்வளவு பெரிய தொகை கிடைப்பதற்கு காரணம், முதலீட்டுக்கான காலம் அதிகமாக இருப்பதுதான். அவரே ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை 10 ஆண்டுகள் கழித்து, அதாவது தன்னுடைய 35-வது வயதில் மாதம் 5,000 ரூபாயாக அதிகரித்து முதலீடு செய்தாலும் ஓய்வின்போது கிடைக்கும் தொகை வெறும் 1.62 கோடி ரூபாயாகத்தான் இருக்கும்.

மேலே சொன்ன நிதித் திட்டங்கள் அனைத்தையும் 30 வயதுக்குள் ஒருவர் ஆரம்பித்திருந்தால்தான் 50 வயதுக்குப் பிறகு எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தைரியத்துடன் இருக்கலாம். உங்களில் 30 வயது நிரம்பியவர்களில் எத்தனை பேர் இந்த முதலீடுகளை செய்து முடித்திருக்கிறீர்கள்?
avatar
ksikkuh
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 171
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum