ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி!

View previous topic View next topic Go down

நாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி!

Post by ksikkuh on Thu Dec 07, 2017 4:38 pmநம்மூர் மக்களின் உணவுப்பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் அசைவ உணவுப்பொருள் சிக்கன். அதற்காக மக்கள் செய்யும் செலவும் அதன்மூலம் கிடைக்கும் சத்துகளும் மிக அதிகம். அதேநேரத்தில் சிக்கன்மீதும் முட்டையின்மீதும் நமக்கிருக்கும் சந்தேகங்கள் எக்கச்சக்கம்.

நாட்டுக்கோழி சிறந்ததா, பிராய்லர் கோழி சிறந்ததா, போலி முட்டைகளை எப்படிக் கண்டறிவது உள்ளிட்ட ஏகப்பட்ட சந்தேகங்கள் இவற்றைச் சுற்றி உலவுகின்றன. இந்தச் சந்தேகங்கள் அனைத்தையும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இயங்கும், கோழியின ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஆ.வே.ஓம் பிரகாஷிடம் கொண்டு சென்றோம்.

“நாட்டுக்கோழியில் இருக்கும் சத்துகள் மற்றும் பிராய்லர் கோழி வளர்ப்பு முறைகள் போன்றவை பற்றி ஏகப்பட்ட வதந்திகள் உலாவருகின்றன. முதலில் அவற்றிலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும். உணவுக்கான கோழிகளை நாட்டுக்கோழிகள், பிராய்லர் கோழிகள், முட்டைக்கோழிகள் (லேயர் கோழிகள்) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் நாட்டுக்கோழிகளை வீட்டிலேயே வளர்க்க முடியும்.

பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுபவை. அதேபோல லேயர் கோழிகள் பெரும்பாலும் முட்டை களுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. முட்டை உற்பத்தி குறைந்ததும் பின்னர் இறைச்சிக்காகப் பயன்படுத்துவார்கள். இவற்றில் பிராய்லர் கோழி மற்றும் லேயர் கோழி இவை இரண்டுக்கும் இடையேதான் குழப்பங்கள் ஏற்படலாம். சந்தைக்கு வருவதும், நாம் உண்பதும் பிராய்லர் கோழி முட்டைகள் கிடையாது. அவை அனைத்தும் லேயர் கோழிகளின் முட்டைகளே. பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமேதான் வளர்க்கப்படுகின்றது.

நாட்டுக்கோழிகளை 12 வாரங்கள் வளர்த்தப் பின்பே இறைச்சிக்காக அனுப்ப முடியும். முட்டைக்காக வளர்த்தால் 20 வாரங்கள் முதல் 72 வாரங்கள் வரைக்கும் காத்திருக்க வேண்டும். இந்த இடைவெளியில் நாட்டுக்கோழிகள் சுமார் 80 முதல் 150 வரையிலான முட்டைகளைத் தரும். வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கம்பு, சோளம், அரிசி, பூச்சிகள் என்று தனக்குக் கிடைத்த அனைத்தையும் உண்ணும். அதேசமயம் அவற்றுக்குச் சமச்சீர் தீவனங்கள் அளிப்பதன் மூலம்தான் அனைத்துச் சத்துகளும் கிடைக்கும். அப்படி கிடைத்தால்தான் முட்டைகளின் எண்ணிக்கை, கோழியின் உடல் எடை ஆகியவை அதிகரிக்கும். நாட்டுக்கோழிகள் வளர்ப்போர் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதன்மூலம் நல்ல லாபம் அடையலாம்.

பிராய்லர் கோழிகளை 35 முதல் 38 நாள்களிலேயே இறைச்சிகளுக்காக அனுப்பிவிடுவார்கள். அப்போதே ஒன்றரை முதல் இரண்டு கிலோ வரை எடை இருக்கும். முட்டைக்கோழிகளைப் பொறுத்தமட்டில் அதன் 20 முதல் 72-வது வார இடைவெளிகளில் முட்டைகளை இடும். இந்தக் காலகட்டத்தில் மட்டுமே சுமார் 320 முதல் 330 வரையிலான முட்டைகள் கிடைக்கும். 72 வாரங்களுக்கு பின்புதான் இந்த முட்டைக்கோழிகளை இறைச்சிக்காக அனுப்புவார்கள். ஆனால், பிறந்து வெறும் 35 நாள்களே ஆன கோழிக்கும், சுமார் ஒன்றரை வருடம் ஆன கோழிக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்குமல்லவா? அதனால் கறியின் சுவை, தன்மை ஆகியவற்றில் நிறைய மாறுபாடுகள் இருக்கும். இந்தக் காரணத்தால் முட்டைக்கோழிகளின் கறி, பிராய்லர் கோழியின் கறியை விடவும் விலை குறைவாக இருக்கும்.

நாட்டுக்கோழிகளுக்கு இயற்கையோடு இயைந்து வாழும் பண்பு அதிகம். அதனால் பிராய்லர் கோழிகளை விடவும், அதிகமான வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. பிராய்லர் கோழிகளை விடவும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். நாட்டுக்கோழிகளில் எலும்பு அதிகமாகவும், இறைச்சி குறைவாகவும் இருக்கும். பிராய்லர் கோழிகளைவிட கறியின் அளவு குறைவாக இருக்கும். மற்றபடி பிராய்லர் கோழியில் இருக்கும் சத்துகளுக்கும் நாட்டுக்கோழிகளில் இருக்கும் சத்துகளுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடுகள் கிடையாது. இதுதான் உண்மை. பிராய்லர் கோழிகளை விடவும், சிலருக்கு நாட்டுக்கோழிகள் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் தெரியலாம். அது அவர்களின் சுயவிருப்பம் சார்ந்தது. அதேபோல பிராய்லர் கோழிகள் பற்றி உலவும் மற்றொரு வதந்தி ஹார்மோன் ஊசிகள். ஒரு கிலோ சிக்கன் சுமார் 120 – 140 ரூபாய் என்ற அளவில் கிடைக்கிறது.

ஆனால், வதந்திகளில் சொல்லப்படுவது போல ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுமேயானால் இந்த விலையில் சிக்கனைத் தர முடியாது. காரணம், ஹார்மோன் ஊசிகளே நூறு ரூபாய் அளவுக்கு வரும். அதுமட்டுமின்றி ஹார்மோன் ஊசிகள் என்பவை நம் நாட்டில் சட்டவிரோதமானவையும்கூட. வீணாக இப்படி வதந்திகளைப் பரப்பி மக்களை அச்சத்துக்குள்ளாக்குகிறார்கள். அதேபோல சிக்கன் சாப்பிட்டால் சூடு, வெயில் காலத்தில் சிக்கன் சாப்பிடக் கூடாது போன்ற விஷயங்களும் வதந்திகளே. பிராய்லர் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காகத் தடுப்பூசிகள் செலுத்தப்படும். மற்றபடி தீவனங்கள், மூலிகைப்பொருள்கள் போன்றவை மட்டுமே வழங்கப்படும். எனவே, இதுபோன்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.

இந்தியாவில் 1980-களுக்குப் பின்புதான் பிராய்லர் கோழிகளின் வரத்து அதிகரித்தது. அதற்குக் காரணம், சந்தையில் ஏற்பட்ட பற்றாக்குறைதான். கோழிக்கறி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த பிராய்லர் கோழிகளும் ஒரு காரணம். மக்களிடம் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்குத் தீர்வாக இருந்தது நாட்டுக்கோழிகளை விடவும் குறைவான விலையில் கிடைத்த பிராய்லர் கோழிகளே. இப்போதும் நம்மில் நாட்டுக்கோழிகள் உண்பவர்களை விடவும் பிராய்லர் கோழிக்கறி உண்பவர்கள் அதிகம். எனவே சுவைக்காக அல்லது சுயவிருப்பத்தின்பேரில் நாட்டுக்கோழிகளை நீங்கள் விரும்பலாம். ஆனால், அதற்காக பிராய்லர் சிக்கன் உண்பவர்களை வீண் காரணங்களைச் சொல்லி அச்சுறுத்தாதீர்கள்” என்றார்.

நாட்டுக்கோழி முட்டைகள் VS சாதாரண கோழிமுட்டைகள்

முட்டைகள் குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளித்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் சு.எழில்வளவன், “முட்டை உற்பத்தியைப் பொறுத்தவரை இந்தியா, உலகளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த உலகில் மிகவும் மலிவாக அதேநேரம் கலப்படம் இல்லாமல் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவு முட்டைதான். அதில் சந்தேகமே வேண்டாம். ஒரு கோழி முட்டையில் வைட்டமின் சி தவிர, மற்ற அனைத்து சத்துகளுமே இருக்கின்றன. எனவே, முட்டை என்பது நம் மக்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.

‘ஒரு வருடத்துக்கு ஓர் இந்தியர் 180 முட்டைகள் சாப்பிட வேண்டும்’ என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR). வெளிநாடுகளில் முட்டையின் அளவைப் பொறுத்து கிரேடு வாரியாகப் பிரித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். நம்நாட்டில் அந்த முறை இல்லை. நாட்டுக்கோழி முட்டைகளுக்கும், சாதாரண முட்டைகளுக்கும் இடையே சத்துகளில் எவ்வித வேறுபாடும் கிடையாது. உருவத்திலும், தன்மையிலும் மட்டுமே சிறிய அளவில் வேறுபடும். சுயவிருப்பத்தின் பேரிலேயே நாட்டுக்கோழி முட்டைகள் வாங்கலாமே தவிர, அதில்தான் அதிக சத்துகள் இருக்கின்றன என நம்பி வாங்க வேண்டாம். ஏனெனில், சாதாரண கோழி முட்டைகளிலேயே அந்தச் சத்துகள் இருக்கின்றன” என்றார்.

இயற்கைக்கு எதிரானவை பிராய்லர் கோழிகள்!

பிராய்லர் கோழிகள் தொடர்பான சர்ச்சைகள் குறித்து சித்த மருத்துவர் காசிபிச்சையிடம் கேட்டபோது, “பிராய்லர் கோழிகள் வளர்வதற்கு ஊசி போடுகிறார்கள், ரசாயனம் செலுத்துகிறார்கள் என்பதெல்லாம் உண்மைக்கு மாறான ஒன்றுதான். காரணம், அத்தனை கோழிகளுக்கும் ரசாயனம் செலுத்துவது என்பது இயலாத காரியம். ஆனால், பிராய்லர் கோழிகளில் இருக்கும் பிரச்னையே, அவை இயற்கைக்கு எதிராக இருப்பதுதான். அதாவது அதன் மரபணுக்களிலேயே விரைவாக வளரவும், அதிக சதைப்பகுதிகளைக் கொண்டிருக்கவும் ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுகிறது. இந்த மரபணு மாற்றம்தான் இங்கே பிரச்னை. இதனால் இயற்கையான கோழிகளில் இருக்கும் குணங்கள் எதுவும் இவற்றில் இருப்பதில்லை. சத்துகள் எனப் பார்த்தால் நாட்டுக்கோழி முட்டையில் இருக்கும் அனைத்துச் சத்துகளும் பிராய்லர் முட்டையிலும் இருக்கும். நாட்டுக்கோழியில் இருக்கும் அனைத்து சத்துகளும் பிராய்லர் கோழியிலும் இருக்கும்.

காலை சரியான நேரத்துக்குக் கூவுவது, முட்டைகளைக் கவனமாக அடைகாப்பது, குஞ்சுகளைக் கழுகுகளிடமிருந்து தாய்மை உணர்வோடு பாதுகாப்பது எனப் பல குணங்கள் நாட்டுக்கோழிகளின் மரபணுக்களிலேயே இருக்கின்றன. ஆனால், பிராய்லர் கோழியில் இதில் ஏதாவது ஒன்றாவது இருக்கிறதா? இயற்கையில் ஒவ்வோர் உயிருக்கும் பருவ முதிர்ச்சியடையும் காலம் என ஒன்று இருக்கும். ஆனால், இது பிராய்லர் கோழிகளுக்கு மனிதர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. 60 நாள்களில் வளர்க்கப்பட வேண்டிய பிராய்லர் கோழிகளை, அதற்கும் குறைவான நாள்களிலேயே வளர்க்க முடிகிறதென்றால், அது எப்படி நம் உடல்நலனுக்கு ஏற்றதாக இருக்க முடியும்? பிறகு எப்படி, இயற்கையோடு இணைந்த ஓர் உணவாக இருக்கும்? இயற்கைக்கு எதிராக இருக்கும் எந்த விஷயமுமே, இந்தப் பூமியில் வாழும் உயிர்களுக்கு எதிரானது.

அப்படித்தான் பிராய்லர் கோழிகளும், முட்டைகளும். அதிக உற்பத்திக்காகவும், ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் பிராய்லர் இறைச்சி மாற்று என்கிறார்கள். ஆம், உண்மைதான். இவற்றால் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் குறைந்திருக்கின்றன.

ஆனால், அதற்குப் பதிலாகப் புதிதாக பல்வேறு நோய்களும் மக்களுக்கு உருவாகிவிட்டதே? முன்னர் எப்போதாவது ஒருமுறை கோழி இறைச்சியை உண்டவர்கள்கூட, இன்று தினமும் உண்ணும் அளவுக்கு மாறிவிட்டார்கள். இது வணிகம் என்பதையும் தாண்டி, நம் ஆரோக்கியத்துக்கே கேடான ஒரு விஷயம். இதனால்தான் விரைவில் பூப்பெய்வது, விந்தணுக்கள் குறைவது உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள்” என்றார்.
avatar
ksikkuh
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 171
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum