ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

View previous topic View next topic Go down

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 13, 2017 8:47 pm

ராமர் பாலம் இருந்தது உண்மை தான்-அமெரிக்க ஆராய்ச்சி முடிவுகள்- வீடியோ

வாஷிங்டன்: இந்தியா மற்றும் இலங்கை நடுவே ராமேஸ்வரம் பகுதியில் கடலுக்கு அடியில் பாலம் இருப்பது உண்மையா, பொய்யா என்ற விவாதத்திற்கு அமெரிக்க டிவி சேனல் விடையளித்துள்ளது. 'சயின்ஸ் சேனல்' இதுகுறித்த ஆய்வு ப்ரமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ராமர் சேது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ராமாயண இதிகாசத்தின்படி, இந்தியா-இலங்கை நடுவே கற்களால் பாலம் கட்டப்பட்டதாகவும், ராமர், தனது பரிவாரங்கள், வானர படையின் உதவியோடு பாலம் கட்டி இலங்கைக்கு போர் தொடுத்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டம்

அதேநேரம், இது இயற்கையாக அமைந்த மணல் திட்டுதான் என்றும், ராமாணயத்தில் கூறப்படுவது கற்பனை என்றும் வாதிடுவோரும் உண்டு. இந்த நிலையில்தான் சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு கடல் வழி திட்டம் கொண்டுவந்தது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நடுவேயான ராமர் பாலம் பகுதியிலுள்ள மணல் திட்டுகளை இடித்துவிட்டு அந்த வழியாக கப்பல் போக்குவரத்து நடத்த திட்டமிடப்பட்டது.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5976
மதிப்பீடுகள் : 1442

View user profile

Back to top Go down

Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 13, 2017 8:51 pmசேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆனால், சேது சமுத்திர திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த எதிர்ப்பாக மட்டுமின்றி, சுற்றுச்சூழலியளாளர்கள் சிலரும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கடல் பிராந்தியத்தின் சுற்றுச்சூழலை இத்திட்டம் கெடுத்துவிடும் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும், ராமாயணம் தொடர்பான வாத விவாதங்களே இந்த திட்டத்தில் அதிகம் எதிரொலித்தது.அமெரிக்க சேனல்

இந்த நிலையில், அமெரிக்காவின் சயின்ஸ் சேனல் வெளியிட்ட வீடியோவில், ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம், மனிதர்களால்தான் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை அந்த வீடியயோ 10 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அந்த வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.


avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5976
மதிப்பீடுகள் : 1442

View user profile

Back to top Go down

Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 13, 2017 9:43 pm

7000 ஆண்டுகள் பழமையானது

அந்த வீடியோவில் கூறப்பட்ட தகவல் இதுதான்: இந்தியா-இலங்கை நடுவேயான இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை. இந்த பாலம் 30 மைல்கள் நீளமானவை. அங்கு மணல் திட்டுங்கள் உருவாகியுள்ளது உண்மைதான். ஆனால் அவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியுள்ளன. மணல் திட்டுக்களின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா ஆய்வு

"மணல் திட்டுக்கு முன்பே அங்கு கற்களை கொண்டு மனிதர்கள் பாலம் அமைத்துள்ளனர். எனவே இதில் பல கதைகள் ஒழிந்துள்ளன" என்கிறார் தெற்கு ஒரேகான் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ். இதனிடையே அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளதை பல நெட்டிசன்கள் வரவேற்றாலு சிலரோ, இதை இந்திய அரசே ஆய்வு செய்திருக்க வேண்டும். அமெரிக்க சேனல் கூறிதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமா என ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளதையும் பார்க்க முடிகிறது.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்Last edited by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 13, 2017 9:54 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5976
மதிப்பீடுகள் : 1442

View user profile

Back to top Go down

Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 13, 2017 9:48 pm

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5976
மதிப்பீடுகள் : 1442

View user profile

Back to top Go down

Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 13, 2017 9:52 pm

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5976
மதிப்பீடுகள் : 1442

View user profile

Back to top Go down

ராமர் பாலம் உண்மைதானா?'- அறிவியல் சேனலின் முன்னோட்டம்; நன்றி தெரிவித்த ஸ்மிருதி இராணி

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 14, 2017 6:52 am

வானரங்கள் கூடி கட்டி முடித்ததாக ராமாயணத்தில் கூறப்படும், இந்தியா - இலங்கையை இணைக்கும் ராமர் பாலம் உண்மையா? இல்லையா? அதை அழித்துவிட்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாமா? கூடாதா?- இது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நீண்ட கால வழக்கு. நாம் அதைப்பற்றி விவாதிக்கப்போவதில்லை.

நமது கோணம் வேறு. அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி குழுமமான டிஸ்கவரி சேனல் குழுமத்தினுடைய சயின்ஸ் சேனல் (Science Channel) ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பானது இந்தச் செய்தி.

பழம்பெரும் இந்துப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியா - இலங்கை இடையேயான கடற்பாலம் உண்மையானதா? அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆம் என்கின்றன." (Are the ancient Hindu myths of a land bridge connecting India and Sri Lanka true? Scientific analysis suggests they are.”) என சயின்ஸ் சேனல் ட்வீட் செய்துள்ளது.

நன்றி
தி இந்து
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5976
மதிப்பீடுகள் : 1442

View user profile

Back to top Go down

Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 14, 2017 6:55 amஅந்த ட்வீட்டுடன் ஒரு முன்னோட்ட வீடியோவை சயின்ஸ் சேனல் வெளியிட்டது அதில், "செயற்கைக்கோள் ஒன்று இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆழமற்ற கடல்பரப்பின்மீது தன் பார்வையை குவிக்கிறது. அந்த செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படத்திலிருந்து இந்தியா - இலங்கை இடையே இந்தியப் பெருங்கடலில் தொடர் சங்கிலிபோல் தோற்றமளிக்கும் சில படிமங்கள் இருப்பதைக் காண முடிகிறது" என்று அறிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சில ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர். அவர்களில் ஓர் ஆராய்ச்சியாளர், "இந்தியா - இலங்கை இடையே அமைந்துள்ள மணல் திட்டின் மேற்பரப்பில் ஆங்காங்கே சில பாறைகள் உள்ளன. மணல் பரப்பின் தன்மைக்கும் அந்த பாறைகளின் தன்மைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது" என்கிறார்.

மற்றுமொரு ஆராய்ச்சியாளர், "இதைத்தான்.. மந்திரப் பாலம் என இந்து புராணப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். கடவுள் ராமர் அமைத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்" எனக் கூறுகிறார்.

செல்ஸீ ரோஸ் என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர், "அந்த மணல்திட்டின் மேல்பரப்பில் இருக்கும் பாறைகள் மணல்திட்டைவிட முந்தைய காலத்தில் உருவாகியிருக்கிறது. மணல் திட்டு வெறும் 4,000 ஆண்டுகளுக்கு முந்தையதே ஆனால் அந்தப் பாறைகள் 7000 ஆண்டுகளுக்கு முந்தையது" எனப் பேசுகிறார்.

இந்த செய்தி பதிவிடப்பட்ட நேரத்தில் இந்த முன்னோட்ட வீடியோவை சுமார் 2,92,000 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

சயின்ஸ் சேனல் பகிர்ந்த ட்வீட்டை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது ட்விட்டர் பக்கத்தில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று வணங்கி ரீட்வீட் செய்திருக்கிறார்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5976
மதிப்பீடுகள் : 1442

View user profile

Back to top Go down

அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவால் ராமர் பாலம் குறித்த பாஜ.வின் நிலைப்பாடு உறுதியாகியுள்ளது

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 14, 2017 7:48 am


புதுடெல்லி : ராமர் பாலம் தொடர்பான அமெரிக்காவின் ஆய்வு, பாஜ.வின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் அருகே கடலுக்கடியில் அமைந்துள்ள ராமர் பாலம் ராமாயண காலத்தில் சீதையை மீட்க சென்றபோது கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால், இது இயற்கையாக எழுந்த மணல் திட்டுக்களே என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்று கண்டறிந்துள்ளனர். டெல்லியில் பாஜ தலைமையகத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அளித்த பேட்டியில், ‘‘இந்து மதம் குறித்த கேள்விகள் வரும்போது காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் மன்னிப்பு கோரும் நிலைக்கு தள்ளப்படுவது துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வை அடுத்து ராமர் பாலம் குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்துள்ளன. ராமர் பாலத்திற்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்.

அதற்கு எந்த சேதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய மதம் குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்’’ என்றார். முன்னதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் பாஜ.வின் நீண்டகால நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘ராமர் பாலம் இயற்கையான மணல் திட்டுக்கள் அல்ல. அது மனிதர்களால் கட்டப்பட்டதுதான் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் தற்பொழுது கண்டறிந்துள்ளனர். நமது நம்பிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. இந்த ஆய்வு முடிவுக்கு அந்த கூட்டணி தற்பொழுது என்ன பதில் சொல்லப் போகிறது? ராமர் பாலம் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் சின்னமாகும்” என்று கூறியுள்ளார்.
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5976
மதிப்பீடுகள் : 1442

View user profile

Back to top Go down

Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by T.N.Balasubramanian on Thu Dec 14, 2017 3:12 pm

நன்றி பழ முத்துராமலிங்கம் அவர்களே.

வெவ்வேறு தலைப்பில்/ பகுதியில் நீங்கள் வெளியிட்டு இருந்த ராமர் பாலம் பற்றிய செய்திகள்
வாசகர்கள் ஒரே பகுதியில் படிக்கும் படியாக அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20872
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 14, 2017 9:41 pm

@T.N.Balasubramanian wrote:நன்றி பழ முத்துராமலிங்கம் அவர்களே.

வெவ்வேறு தலைப்பில்/ பகுதியில் நீங்கள் வெளியிட்டு இருந்த ராமர் பாலம் பற்றிய செய்திகள்
வாசகர்கள் ஒரே பகுதியில் படிக்கும் படியாக அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1253286
அனைத்தையும் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா

ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5976
மதிப்பீடுகள் : 1442

View user profile

Back to top Go down

Re: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum