ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெரிஞ்சதும் தெரியாததும்

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down


best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Jan 29, 2018 11:42 pm

29.01.2018

ஓஹோன்னு ஓடிய படம்.  

படத்தின் பேரை வைக்கும்போது எட்டு எழுத்து வராம பாத்துக்குவாங்களாம்.  இலக்கணப்படி 'தங்கச் சுரங்கம்' னு வரணும்.  ஒன்பது எழுத்து வரும்.  

ஆனா இந்தப் படத்துக்கு எட்டு எழுத்து வருது, 'தங்கசுரங்கம்'னு. ஒற்றெழுத்து மிஸ்ஸிங்.  எல்லாப் படங்களின் பேரையும் இலக்கணப்படிதான் வைக்கிறாங்களா? 

ராமண்ணாவுக்கு பாடல் காட்சிகளைப் படமாக்க சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நயாகரா நீர்வீழ்ச்சி எல்லாம் தேவையில்லியாம். பத்தடிக்குப் பத்தடீல ஒரு இடத்தைக் கொடுத்துட்டா போதுமாம். அட்............டகா..........சமா படமாக்கி தந்துடுவாராம்.

குமரிப்பெண்ணில் ஒரு ரயில் பெட்டி, ['வருஷத்தைப்பாரு அறுபத்தியாறு'], 
நான் படத்தில் சின்னஞ்சிறு ஃபியட் கார், ['போதுமோ இந்த இடம்'], 
மூன்றெழுத்தில் சின்ன பொட்டி ['பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி'] பாட்டுக்களை சூப்பரா தந்த இயக்குனர் ராமண்ணா, 

தங்கசுரங்கம் படத்திலும் இப்படி சேட்டை செஞ்சிருக்கார்.
ஆமாங்க. 

"சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது"
பாடல் முழுசுமா கிணத்துக்குள்ளேயே எடுத்திருப்பாராம். 

இன்னொரு விஷயமாம். பாரதி, சிவாஜிக்கு ஹீரோயினாவும், வில்லனுக்கு OAK தேவரும் சூட் ஆகலேன்னு ஜனங்க பேசிக்கிட்டாங்களாம்.  பாரதிக்குப் பதிலா ஜெயலலிதாவும், வில்லனுக்கு நம்பியாரும் போட்டிருந்தா படத்தின் ரேஞ்சே ................................. வேறேன்னு பேசிக்கிட்டாங்களாம்.  

அந்தக் காலத்தில சென்னை, மலேசியா, சிங்கப்பூர் இந்த ஊருங்களுக்கு இடையே 'ஸ்டேட் ஆப் மெட்ராஸ்' னு பேசஞ்சர் கப்பல் ஒண்ணு போயிட்டு வந்துட்டு இருந்துச்சாம்.  அது சென்னை துறைமுகத்திலே நிக்கும்போது தான் இந்தப் படத்தின் fight ஸீனை எடுத்தாங்களாம். 

இந்தப் படத்தில்தான் சிவாஜி CBI அதிகாரியா நடிச்சார். ஹீரோயிஸமாக, சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை, முதல் முதலாக வந்தது இந்தப் படத்தில்தானாம். 

MGR ஃபார்முலால்லாம் சிவாஜிக்கு சரிப்பட்டு வராதூன்னு நெனச்சாங்களாம். அந்த நெனப்பு தப்புன்னு, சிவாஜி அசா..............ல்ட்டா  சாதிச்ச படம். 


Heezulia  மீண்டும் சந்திப்போம்  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Jan 30, 2018 12:04 am

29.01.2018
 
சிவாஜியும், பாலாஜியும் சேர்ந்து நடிச்ச படங்களிலே இந்தப் படமும் ஒண்ணு.  இந்தப் படத்தில "இனிமே திருட மாட்டேன்"னு கேண்டில் நெருப்பு மேலே கைய வச்சு சிவாஜி சத்தியம் செய்ற மாதிரி ஒரு ஸீன் வருமாம். டைரக்டர் திருலோகசந்தர். என்ன படம், என்................ன படம்? திருடன் 1969.

டைரக்டர் : கையில நெருப்பு படாமேயே சீன் எடுத்துரலாமே சார்.

சிவாஜி : சேச்சே, அப்டீல்லாம் வேண்டாம்.  நெருப்பில கைய வச்சு நடிச்சாத்தான் தத்ரூபமா இருக்கும்.

டைரக்டர் : சரி சார், பாத்துரலாம்.

கேமரா ஓட ஆரம்பிச்சுருச்சாம்.   சிவாஜியும் நெருப்பின் மேலே கையை வச்சாராம். 

சிவாஜி : ஆ....................  ச்சே.................................ச்சு ச்சு
அலறிட்டாராம் சிவாஜி.  

உடனே என்ன நடந்சுன்னு நெனக்கிறீங்க. 
 
டைரக்டர் : Pack up.

சிவாஜி : அதெல்லாம் வேண்டாம். இதோ பாருங்க சின்ன காயம்தான்.

டைரடக்கர் பேக்கப்பே செஞ்சுட்டாராம்.  அதுமட்டுமாங்க.  எல்லாரும் பதறி போய்ட்டாங்களாம்.  சிவாஜியின் குடும்ப டாக்டர், பாலகிருஷ்ணன். அவரே தகவலரிஞ்சு வந்துட்டார்னா பாத்துக்கோங்களேன்.  அவர் வந்து காயத்துக்கு மருந்து போட்டாராம்.  புண் ஆற ரெண்...........டு நாளாச்சாம்.  அதுக்கப்புறமா அந்த ஸீன் எடுத்தாங்களாம்.  சரியா ...................... போச்சு போங்க.

Heezulia  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Jan 30, 2018 12:49 am

30.01.2018

சாரதாவுக்கு முதன் முதலா 'ஊர்வசி' தேசிய விருது கெடச்ச படம்.  அவர் தமது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நடிக்க சான்ஸ் கெடச்சது இந்தப் படத்தில் தானாம். ஆனா தமிழ் படமில்ல. அப்போ? மலையாளத்துல. 

இவர்கிட்ட  சில ப்ளஸ்கள் இருந்துச்சாம்.  அதுல ரெண்டு - ஓவர் ஆக்டிங் இல்ல, ஹோம்லி லுக். இந்த ரெண்டும்தானாம். அவர் என்னவோ தெலுங்கு பெண்ணாம்.  ஆனா ...................... பிரபலமடஞ்சது மலையாள படங்களிலே தானாம்.  மலையாளத்தில 1968ல  ஒரு படம் அவருக்கு 'ஊர்வசி' பட்டம் வாங்கி கொடுத்துச்சாம், துலாபாரம்.  

அந்தக் காலத்தில கிளாமரா நடிக்கிற நடிகைங்களுக்குத்தான் சான்ஸ் கெடைக்குமாம்.  அந்த நேரத்தில் மூணு பிள்ளைங்களுக்கு அம்மாவா, அதுவும் வறுமையில வாடும் பெண்ணாக நடிச்சிருந்தாராம்.  

டைரக்டர் வின்சென்ட் சாரதாட்ட வந்து "நீங்க மூணு பிள்ளைங்களுக்குத் தாய்,  ஏழ்மைல  இருக்கிற ஒரு பெண்.  சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம வறுமைல வாடும் ஒரு குடும்பம்.  அதுக்கேத்த மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கோங்க"ன்னு சொல்லிட்டுப் போயிட்டாராம்.  

அதைப் புரிஞ்சு, உணர்ச்சி பூர்வமா நடிச்சு, எல்லார்கிட்டேயும் பாராட்டைப் பெற்றாராம்.  இந்த மலையாளப் படத்தை அவரது 22 வயசுல நடிச்சிருந்தாராம். 
 
சாரதா சொன்னாராம், "நான் எத்தனையோ படங்கள் நடிச்சிருந்தாலும் என்னால் மறக்க முடியாத படம் துலாபாரம்தான்". 

இந்தப் படத்த தமிழில எடுக்க ராமண்ணா யோசிச்சாராம்.  சாரதாவைத் தவிர வேற யாரையும் அந்தப் படத்தில நடிக்க வைக்க அவருக்கு இஷடமில்லியாம்.  மலையாளம் படத்தை இயக்கிய வின்சென்ட் ஒரு ஒளிப்பதிவாளராம்.  அவரும் சாரதாவையே தமிழில நடிக்க வைக்க ஒத்துக்கிட்டாராம்.  'துலாபாரம்' னே பேர் வச்சாங்களாம்.  

தெலுங்கில 'மனசுலு மாறாலி' பேர்லயும், இந்தியில 'சமாஜ் கோ பதல் டாலோ' [समाज को बदल डालो] பேர்லயும்  உருவாச்சாம்.  இந்திப் படத்தை வாசன் தயாரிச்சாராம்.  

இதுல முக்கியமான விஷயம் என்னான்னா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எல்லா மொழிலேயும் சாரதாவே................. நடிச்சிருந்தாராம். நா....................லு மொழிகளிலேயும் வெற்றிகரமா ஓடிய படமாம். ஹீஸுலை  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Jan 30, 2018 1:54 am

30.01.2018

ஆஸ்கார் விருதுக்கு முதல் முதலா செலெக்ட் செய்யப்பட்ட தமிழ் திரைப்படமாம்.

இந்தப் படத்தில சிவாஜி அவலட்சணமான முகம் இருப்பதாக நடிச்சிருப்பார்ல?  அதுக்கு முகத்தில முட்டை, அரக்கு போன்ற ஏதேதோ பொருள்களை யூஸ் செஞ்சு அவருக்கு மேக்கப் போட்டாங்களாம்.  மேக்கப் போட்ட பின்னால,  முகத்தை இறுக்கும் அளவுக்கு வலி இருந்துச்சாம்.  அந்த வலியையும் பொறுத்துகிட்டு சிவாஜி நடிச்சார்னு திருலோகச்சந்தர் சொன்னாராம்.  அந்தச் சமயத்தில டைரக்டரே சிவாஜிகிட்டே பேச பயப்படுவாராம்.  இப்படி கஷ்டப்பட்டு நடிச்ச படம் நூறு நாட்களுக்கு மேலேயே ஒடுச்சாம்ல.  அதுதாங்க, தெய்வமகன் 1969.

இதுல சிவாஜிக்கு ஒரு பெருமையான விஷயம் ஒண்ணு இருக்கே.  

ஆஸ்கார் விருதுக்காக இந்தப் படம் செலெக்ட் ஆச்சுல்ல?  

அப்படீன்னா இது வெளிநாடுகளிலே திரையிடுவாங்கல்ல ?  

அதை வெளிநாட்டவங்க பாப்பாங்கல்ல?  

அப்படி பாத்தப்போ, அதுல சிவாஜி நடிச்ச மூணு வேஷங்களையும், தனித்தனியா மூணு பேரு நடிச்சிருக்காங்கன்னு நெனச்சுட்டாங்களாம்.  மூணு பேரும் ஒரே ஆள்தான்னு சொன்னப்போ நம்ப மறுத்துட்டாங்களாம்.  எப்படி இருக்கு பாருங்க.  அந்த அளவுக்கு சிவாஜியின் நடிப்பு இருந்திருக்குல்ல!!


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Jan 30, 2018 2:17 am

30.01.2018

இந்தப் படம் ஒரு வங்கத் திரைப் படத்தின் தழுவலாம்.  வங்கத்திலே இருந்து இந்திக்குப் போயி, அங்கே இருந்து தமிழுக்கு வந்சுச்சாம்.  அந்த சமயத்திலே இந்தியிலே இருந்து தமிழுக்கு படங்கள் வந்தா, இந்திப் படங்களிலே கவாலி மாதிரி பாட்டு இருக்கும்ல, அது தமிழிலும் இருக்குமாம்.  

(உ-ம்) வந்தவர்கள் வாழ்க - எங்கிருந்தோ வந்தாள், மாப்பிள்ளையைப் பாத்துக்கோடி மைனாக்குட்டி - நீதி.  

ஜெமினிக்கு இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது தமிழ்நாட்டிலே இருந்து கெடச்சுதாமே. 


டைரக்டர்கள் இருக்காங்களே, அவங்க ஹீரோவோடுதான் ஒரு ஒப்பந்தம் வச்சுக்குவாங்களாம்.  ஆனா, பாலச்சந்தர் இருக்காகளே, அவக ஹீரோயின் கூட கூட்டணி வச்சு ஒரு சில படங்களை எடுத்தாராம்.  

எந்த ஹீரோயின்னு கண்டு பிடிச்சிருப்பீங்களே!  

கரீட்டுதான். சௌகார் ஜானகியாம்.  

சௌகார் ஜானகிக்கும் ஒரு ஆசை வந்திருச்சாம்.  அது இன்னாது?  அதுதான் படத்தைத் தயாரிப்பது.  டைரக் ஷனுக்கு யாரைச் செலக்ட் செஞ்சாராம்?  பாலச்சந்தரைத்தான்.   

சௌகார் என்ன செஞ்சார்?  செல்வி பிலிம்ஸ் னு ஒரு படக் கம்பெனியை ஆரம்பிச்சாராம்.  பெங்காலியிலேயும்,  இந்தியிலேயும் உருவான ஒரு படத்தை ரீமேக் செய்ய முடிவு செஞ்சாங்களாம்.  அதுதான் 'காவியத் தலைவி 1970'.  இந்தப் படம் சௌகாரை கைவிட்டுருச்சு.  

இதிலே பேபி டாலி நடிச்சிருக்காங்களே, இவங்க யாராம்?  சுலட்சனாவாமே. பாலச்சந்தர் டைரக் ஷன்ல குட்டியா நடிச்சுட்டு, அப்புறமா அவர் டைரக் ஷன்லயே  சிந்து பைரவி படத்தில நடிச்சார்ல.  

காவியத்தலைவி படத்தில அந்த பேபி டாலி நடிச்ச ஸ்க்ரீன் ஷாட் அனுப்புங்களேன்.  சுலட்சனாவைப் பார்க்கணுமே.  


Heezulia  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Jan 30, 2018 6:33 am

தெய்வமகன்,தங்கசுரங்கம் சிவாஜிக்கு கிரீடம் தரித்த படங்கள் தெய்வமகனில் கடைசியானின் சுட்டிதனம், அந்த இடுப்பை ஒடித்த நடை அபாரம்.

சௌகார்ஜானகி அவர்கள் காவியத்தலைவில் அவரின் மிடுக்கான தோற்றம் நடிப்பு அபாரம்.
அதில் கலெக்டர் தோற்றம் என்று நினைக்கிறேன் அவர் கணவர் ஜெமினி இவரில்
கீழ் பணியாற்றுவார் ஒரே பாசபோராட்டம்.

துலாபாரம் ஏவிஎம் ராஜன் சாரதாவின் காதல் சோகத்தின் உச்சம்
ஒரே அழுகை தான் படம் முழுக்க.

நன்றி பேபி அரிய நல்ல கிடைக்கா பதிவுகள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7665
மதிப்பீடுகள் : 1791

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Jan 30, 2018 11:48 am

30.01.2018 

நன்றி முத்து சார். 

சௌகார் ஜானகியின் அந்த மிடுக்கான கலெக்டர் தோற்றம், காவியத்தலைவில இல்ல சார். இரு கோடுகள். ரெண்டுமே பாலசந்தரோடதுதான். ரெண்டிலேயும் ஜெமினி கணேசன். 

இரு கோடுகள் ரெண்டு பொண்டாட்டி கதை. சௌகார் ஜானகி & ஜெயந்தி.காவியத் தலைவில தப்பான புருஷன்காரன்ட்ட தப்பி, பாடகி & டான்ஸராக  வாழறா.
 

இப்போ ஞாபகத்துக்கு வந்திருக்கணுமே. 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Jan 30, 2018 7:33 pm

@heezulia wrote:30.01.2018 

நன்றி முத்து சார். 

சௌகார் ஜானகியின் அந்த மிடுக்கான கலெக்டர் தோற்றம், காவியத்தலைவில இல்ல சார். இரு கோடுகள். ரெண்டுமே பாலசந்தரோடதுதான். ரெண்டிலேயும் ஜெமினி கணேசன். 

இரு கோடுகள் ரெண்டு பொண்டாட்டி கதை. சௌகார் ஜானகி & ஜெயந்தி.

காவியத் தலைவில தப்பான புருஷன்காரன்ட்ட தப்பி, பாடகி & டான்ஸராக  வாழறா.

இப்போ ஞாபகத்துக்கு வந்திருக்கணுமே. 

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1258315
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி பேபி
இரண்டு படங்களும் குழப்பிக்கொண்டேன்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7665
மதிப்பீடுகள் : 1791

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Feb 06, 2018 1:07 am

06.02.2018

இந்தப் படம் எடுக்கும்போது, கண்ணதாசன் ஒடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரீல இருந்தாராம். இந்தப் படத்துக்கு ஏற்கனவே கவிஞர் ரெண்டு பாட்டு எழுதிட்டாராம். இன்னும் ரெண்டு பாட்டு வேணுமேன்னு நெனச்சு, அவர் எப்போ ஆஸ்பத்திரில இருந்து வருவார்னு எல்லாரும் வெயிட் செஞ்சுட்டு இருந்தாங்களாம். 

ஆனா, கவிஞர் பாட்டு எழுதுற நிலைல இல்லையாம். ஏற்கனவே கம்பெனி சரியா ஓடாம, நஷ்டம் அடைற நிலையில இருந்துச்சாம். பாலசந்தர் வைரமுத்துவை கூப்பிட்டாராம், இந்தப் படத்துக்கு பாட்டெழுத. ஆனா இது MSV க்கு பிடிக்கலியாம். 

பாலசந்தர் வைரமுத்துட்ட இந்தப் பாட்டுக்கான சூழ்நிலையை சொன்னாராம். உள்ளூர் இளைஞர்கள் தண்ணீர் பஞ்சம் உள்ள அவங்க ஊர்ல, மலையிலிருந்து வருகின்ற  மழைத்தண்ணீரை கொண்டு வர்றாங்க. இந்த சமயத்தில ஒரு அசரீரி பாட்டு வரணும். இந்த மூணு நிமிஷ பாட்டுல, வாய்க்கால் வெட்டி முடிக்கணும். அந்த அளவுக்கும், ஸ்பீட்  & feelings வேணும் இந்தப் பாட்டுல. 

"சரி, ஒரு ட்யூன் போட்டு கொடுப்போம், அவர் பாட்டு எழுதுறாரான்னு பார்ப்போம்னு" ன்னு MSV சொன்னாராம். அவர் ட்யூனை கொடுத்துட்டு, வைரமுத்துவை திரும்பி பார்த்தார். ட்யூனை ரசித்தார் வைரமுத்து. "இன்னொரு தடவை வாசிங்க" இது வைரமுத்து. 

MSV care பண்ணலியாம். அரை மணி நேரமா வேற  என்னத்தையோ பேசிட்டு இருந்தார். அப்புறமா, சவால் படத்துக்கு ம்யூசிக் போட வேண்டியதிருக்கு. ஒரு வாரம் கழிச்சு பார்க்கலாம் ன்னு கெளம்பிட்டாராம். 

பாலசந்தர் விடல. "இப்ப எனக்கு பாட்டு வேணுமே. ஷூட்டிங் போகணும்".


MSV : கவிஞர் வந்து பாட்டு எழுதணுமே. 

இப்படி சொல்லிட்டு அவர் ஆர்மோனியத்தை மூடப் போனாராம்.

வைரமுத்து : நான் வேணும்னா பல்லவி சொல்லட்டுமா. உங்களை மாதிரி பாட வராது. நான் பாடறேனே. 

வைரமுத்து பாடி காட்டியிருக்கார். அடுத்தநாள் அந்தப்  பாட்டு ரெகார்ட் ஆகிருச்சு. 

தண்ணீர் தண்ணீர் படத்தில "ஒன்றுபட்ட மக்களுண்டு, இன்று என்ன சிக்கலுண்டு" பாடல்.

 
இதை வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில பேசினதில ஒரு பகுதி. 

இந்தப் படத்தில எனக்கு பிடிச்ச வசனங்கள் :

ரெண்டு பேர் பேசிட்டு போறாங்க. A  & B ன்னு வச்சுக்குவோமே.


A : தண்ணிக்கு இந்த ஊர்ல இவ்ள பஞ்சம்னா, நீங்க அரசாங்கத்துக்கு எழுதி போட்டிருக்கலாமே. 


B : போடாம என்ன, கோவில்பட்டிக்கு போயி மந்திரிய நேரவே பாத்து மகசர் கொடுத்தோம். அவர் அத வாங்கி PAட்ட குடுத்தாஹ. PA, அத கலெக்டர்ட்ட குடுத்தாஹ. கெலெக்டர் அத ப்ளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸருக்கு அனுப்புனாஹ.  ப்ளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸர் அத க்ராம சேவகத்துக்கு அனுப்பினாஹ.

A : க்ராம  சேவக் என்ன செய்தாரு?

B : க்ராம சேவக் இந்த ஊருக்கு வந்து பாத்துபுட்டு, 

"வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு ப்ளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸருக்கு எழுதி போட்டாஹ.

ப்ளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸரும்,  "வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு கலெக்டருக்கு எழுதி போட்டாஹ. 

கலெக்டரும், "வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு PA வுக்கு எழுதி போட்டாஹ. 

PA யும்,  "வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு மந்திரீக்கு நோட்டு எழுதி வச்சாஹ. 

மந்திரீயும்,  "வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு சட்டசபேல ஒத்துக்கிட்டாஹ.

கொஞ்சம் மௌனம். அப்புறமா,  


A : இந்த உண்மய கண்டுபிடிக்க அவுகளுக்கு அஞ்...........சு வருஷமாச்சு. 

B சத்தம் போ.........ட்டு சிரிச்சுட்டு : அந்த கோவத்திலதான் இந்த எலக் ஷன பாய்காட் பண்ணிட்டீங்களா?

A :[தலைய தடவிட்டே] எங்களால முடிஞ்சுது அவ்ளதான். 


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Tue Feb 06, 2018 11:59 am

அணைத்து பதிவுகளும் படித்தேன் ரசித்தேன்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Wed Feb 07, 2018 5:40 pm

07.02.2018 

எல்.....................லாத்தையும் படிச்சிட்டீங்களா SK? சந்தோ.............ஷம்.

இன்னாங்கடா, இப்படி இவங்க விளையாடிட்டு இருந்தா, எனக்கு தெரியாததை நான் எப்ப, எப்படி தெரிஞ்சுக்கிறதுன்னு திட்டினீங்கல்ல? அதுதான் நான் நாக்கை கடிச்சுக்கிட்டேன். யார்றா நம்மளை திட்றதுன்னு யோசிச்சேன். இப்பல்ல தெரியுது, அது நீங்கதான்னு. இனிமே இப்படீல்லாம் திட்டாதீங்க. இதை படீங்க.

'Ten Little Niggers' இப்படி ஒரு நாவலாம்.  1939 ல வெளி வந்ததாம்.  யாருடையது?  அகதா கிறிஸ்டி இருக்கார்ல, அவரோடதாம்.  என்னடா, இத பத்தி எல்லாம் எதுக்கு சொல்றேன்னு கேக்குறீங்களா?  அது ஒண்ணுமில்லீங்க.  இந்த நாவலின் தழுவல்தான் இந்தப் படமாம். 

எந்தப் படம்னு சொல்லலியோ? ஆமாங்க சொல்லல. 

அதாங்க நடு இரவில், 1970.

எஸ்.பாலச்சந்தரே ஒரு முக்கியமான ரோல்ல நடிச்சிருந்தாராம்.  பொதுவா  படத்துக்குப் பின்னணி இசையை  தனியா அமைச்சு படத்தோடு சேர்ப்பாங்களாம்.  இந்தப் படத்தில பாலச்சந்தர் ஒரு புதுமையான முறையை கையாண்டிருந்தாராம்.  இந்தப் படத்துக்கு இசையமைக்கவே இல்லியாம்.  அப்புறம் எப்பூடி? 

அவர்கிட்டே இருந்த ரெகார்ட்களில் இருந்த வேற வேற இசையை எல்லாம் யூஸ் செஞ்சு படத்திலே போட்டுட்டாராமே.  சோகமான சீன், த்ரில்லர் சீன் என அந்தந்த சீனுக்கேத்த இசை அவர்கிட்டே இசைத்தட்டுகள் இருந்துச்சாம்.  அதுங்களை வச்சுதான் இசை போட்டு முடிச்சாராம்.  அதனால இந்தப் படத்துக்கு இசையமைப்பதுக்கான செலவு கொறச்சலாவே இருந்துச்சாம்.  படத்துல வர சீன்களுக்கெல்லாம் அந்த இசை பொருத்தமா இருந்ததால, அவருடைய இந்த முயற்சி பெருசா பேசப்பட்டுச்சாம். 

இம்புட்டு செஞ்சும் என்ன பிரயோஜனம்?  படம் 1965ல முடிஞ்சு, 1966ல தணிக்கையாச்சாம்.  படம் எடுத்து முடிந்து அஞ்..................சு வருஷம் ஆயிருச்சாம்.  ஆனா, யா................ரும் இந்தப் படத்தை வாங்கலியாம்.  

1970 ல அவருக்கு வெளிநாட்டில வீணை கச்சேரி நடத்த சான்ஸ் கெடச்சுதாம்.  பாலச்சந்தர் ஒரு முடிவுக்கு வந்து, கச்சேரியில கெடக்கிற பணத்துல அவரே இந்தப் படத்தை ரிலீஸ் செய்றதுக்கு தைரியம் வந்துருச்சாம்.  அவரோட அதிர்ஷ்டம், கச்சேரிக்குப் போறதுக்கு முன்னாலேயே பணம்  கெடச்சிருச்சாம்.   ஒடனே எல்லா ஏரியாவிலேயும் அவரே படத்தை ரிலீஸ் செஞ்சுட்டார்.  

ரெண்டு வாரந்தானாம் போங்க.  படம், ஆ........................ஹா,  ஓ.....................ஹோ.  ஹௌஸ் ஃபுல்............ ஹௌஸ்ஃபுல்லோ புல்....................தானாம். 

இந்தப் படத்தை வாங்கமாட்டேன்னு ஒத்.............த  கால்ல நின்னவங்கல்லாம், இன்னொரு காலையும் ஊனி படத்தை வாங்க போட்டி போட்டுட்டு ஓடி வந்து நின்னாங்களாம்.   

விநியோக உரிமையை ஏரியா வாரியா பிரிச்சு கொடுத்துட்டு சந்தோ............ஷமா, மன நிறைவோடு, வெளிநாட்டுக்குக் கச்சேரி நடத்த வெளிநாட்டுக்குப் போனாராம்.  படம் முடிஞ்ச உடனே,   ரசிகர்கள் எல்லாரும் எந்திரிச்சு நின்னு கை தட்டினாங்களாம்.  


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Wed Feb 07, 2018 6:42 pm

07.02.2018

"விசிலடிச்சான்  குஞ்சுகளா குஞ்சுகளா" பாட்டு இருக்கே, மாணவன், 1970, படத்தில.  இந்தப் பாட்டின் மெட்டிலேயே, இருவ்..........வது  வருஷம் கழிச்சு ஒரு பாட்டுல வந்திருக்கே.  என்ன பாட்டுன்னு யோசிக்கிறீங்களா?  அதாங்க உலகநாதன், கா..............னா  உலகநாதன் பாடிய பாட்டு ஓஹோன்னு பிரபலமடஞ்சதுல்ல!  "வாள மீனுக்கும் விலங்கு  மீனுக்கும் கல்யாணம்."    


கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்" அப்படீன்னு ஒரு பாட்டுக்கு கே.வி.எம். ட்யூன் போட்டாருல்ல, எங்க வீட்டுப்  பெண் படத்துல? அதுக்கப்புறம் அஞ்..............................சு வருஷத்துக்குப் பின்னால மாட்டுக்கார வேலன் படத்துல அதே ட்யூன்ல "பட்டிக்காடா பட்டணமா"  பாட்டு உருவாச்சு.  அந்த மெலடி பாட்டு ஹிட்டாகலியாம்.  ஆனா இந்த டப்பாங்குத்து பாட்டு, அதுதான் தெரியுமே.

சரி சரி ....................எனக்கு கேக்குது .......................இந்த ரெண்டு பாட்டையும்  நீங்க பாடி பாக்குறது.  ஹா ஹா ஹா ... நானும் இதை நெட்ல படிச்சப்போ, இப்டித்தான். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Wed Feb 07, 2018 8:22 pm

07.02.2018

'சிவாஜி புரொடக் ஷன்ஸ்' தொடங்கப்பட்டு, முதல் தயாரிப்பு, வியட்நாம் வீடு, 1970.  இப்போதும் இந்த நிறுவனத்தாரின் எம்ப்ளம் காட்டும்போது 'வியட்நாம் வீடு' படத்தின் கிளாப் போர்ட் இருக்குதாம். 
 
கே.சுந்தரம் எழுதிய  வியட்நாம் வீடு கதை  மேடை நாடகமாச்சுதாம்.  அதிலேயும்  சிவாஜிதான்  நடிச்சாராம்.  அவருக்கு ஜோடியா ஜி. சகுந்தலா நடிச்சாராம்.  இவர் நடிப்பு, வியட்நாம் வீடு படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடிச்ச  பத்மினி நடிப்பை விட ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு சொல்ற அளவுக்கு ஜி.சகுந்தலா நடிச்சிருந்தாராம்.   அந்த நாடகம் ஜனங்களுக்கு பிடிச்சிருந்துச்சாம்.   அதனால அந்தக் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டுச்சாம். சிவாஜி அதுவரைக்கும் ஏற்று நடிக்கா.............த ஒரு ரோல்ல நடிச்சிருந்தாராம்.  இந்த வருடத்தின் சிறந்த படமென தமிழக அரசின் விருது கெடச்சுது.  

படத்துக்கு ஒரு சோகப் பாட்டு தேவைப்பட்டுச்சாம்.  கே.வி.எம். கண்ணதாசனைக் கூப்பிட்டு அனுப்பினாராம்.  இயக்குனர் கண்ணதாசன் கிட்டே காட்சியின் சிச்சுவேஷனை விவரமா சொன்னாராம்.  ஒடனே கண்ணதாசனுக்கு பாரதியார் பாட்டு ஞாபகம் வந்துச்சாம்.  அதாங்க "உன் கண்ணில் நீர் வழிந்தால்..............."  பாட்டு.  பாரதியாரின் இந்த வரியையே கண்ணதாசன் தனது பாட்டின் முதல் வரியாக்கி,  மத்த வரிகளை தன சொந்த வரிகளைப் போட்டாராம்.  பாட்டு சூப்பர் ஹிட்டாயிருச்சுல்ல!!!  

இந்தப் பாட்டுல ஒரு விசேஷம் என்னான்னா, இந்தப் படத்தின்  பாட்டு  புத்தகத்தில, "உன் கண்ணில் நீர் வழிந்தால்" பாட்டை இயற்றியவர் பாரதீன்னே போடச்சொல்லி கேட்டுகிட்டாராம், கண்ணதாசன்.  எம்புட்டு பெரீ...........................ய மனசு பாருங்க.  

படத்துக்கு நூறு நாள் ஓடிய பெருமை.Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Thu Feb 08, 2018 11:18 am

வியட்நாம் வீடு

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Thu Feb 08, 2018 11:19 am

இந்தப் படத்தை வாங்கமாட்டேன்னு ஒத்.............த கால்ல நின்னவங்கல்லாம், இன்னொரு காலையும் ஊனி படத்தை வாங்க போட்டி போட்டுட்டு ஓடி வந்து நின்னாங்களாம்.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Thu Feb 08, 2018 2:12 pm

08.02.2018 


   

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Thu Feb 08, 2018 3:04 pm

இதான் ஒத்த கால்ல நிக்கறதா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Thu Feb 08, 2018 3:05 pm

இது என்ன இப்படி ஓடுது

நல்ல இருக்கு உங்க விளக்கம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Thu Feb 08, 2018 3:37 pm

08.02.2018  
by SK on Thu Feb 08, 2018 
இது என்ன இப்படி ஓடுது
அதுவும் சும்மாவா ஓடுது. சாக்ஸ் போட்டுட்டுல்ல ஓடுது. சரியா பாருங்க!!!  

உங்க மூ...............ணு பப்பீஸ் மட்டும் என்ன SK, அதுங்களும் ஓடோ................... ஓடுன்னுல்ல ஓடுது. 

Heezulia  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Thu Feb 08, 2018 3:55 pm

அது ஈகரையோட பப்பிஸ் அது பலவருஷம்மா இப்படி தான் ஓடிட்டு இருக்கு


சாக்ஸ் போட்டுட்டுல்ல ஓடுது

இது சாக்ஸ்னு இப்போ நீங்க சொன்னதுக்கு அப்பறம் தான் பாத்தேன் மொதல்ல வாத்தும் கொக்கும் சேர்ந்து செய்த கலவைனு நெனச்சேன்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Feb 12, 2018 5:27 pm

12.02.2018

தமிழ்நாட்ல பெரீ.................ய நடிகர். எல்லாரும் அண்ணா.........................................ந்து பார்க்கிற இடத்ல இருந்த நடிகர். அவர் தன்னுடைய முதல் பட டைரக்டர்ட்ட போய் கையைக் கட்டி நிக்கிறாரு.
“சார்எப்படியா.....வது...................”
என்ன....., அதான் சான்ஸ் கொடுத்துட்டேன்".
“இந்தப் படத்தில் எப்படியாவது எனக்கு ஒரே ஒரு க்ளோஸப்” என்று கெஞ்சுறார். கோவம் வந்துருச்சு அந்த இங்கிலீஷ் டைரக்டருக்கு.
“ஓமுகத்த நீ கண்ணாடியில் பார்த்ததில்லையா மேன்? பல்லு வேற எத்திக்கிட்டிருக்கு. நாடியில் பள்ளம் விழுந்திருக்கு. எப்படி க்ளோஸப் போடமுடியும் போ! போ!” என்று விரட்டினார்.
அந்த முகத்துக்காகத்தான் தமிழகம் இருவது வருஷத்ல ஏங்க ஆரம்பிச்சுது. தீப்பெட்டில, சுவரொட்டீல அந்த முகத்தைப் பார்க்க முடியாதா, எங்யா.................வது  அந்த முகம் தெரிஞ்சுறாதான்னு  முப்பது நாப்பது வருஷமா  ஏங்குச்சு. அந்த முகத்துக்கு சொந்தக்காரர், உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியும். இருந்தாலும் நான் சொல்லணும்ல. எம்.ஜி.ஆர்.
அவரை திட்டின டைரக்டர் எல்லீஸ்.ஆர். டங்கன். அந்தப் படத்தின் பெயர் சதிலீலாவதி.
***********************************************
இயக்குநர் ஸ்ரீதர் பம்பாய்க்குச் போனா, ஹிந்தி சினிமா பிரபலங்கள் எல்லாரும் வந்து வரவேற்பாங்களாம். அவங்களோடு தங்க சொல்வாங்களாம். 
  
காதலிக்க நேரமில்லை. எனக்கா? அது இல்லீங்க. பின்னே ஸ்ரீதருக்கா? அதுவும் இல்ல. அவர் எடுத்த படத்த சொல்றேன். அந்த படத்துக்காக ஹீரோயினை செலெக்ட் செஞ்சாராம். ஒரு பொண்ணு வந்தா. அவ போட்டாவ அவர்ட்ட கொடுத்தா. அவரும் வாங்கி வச்சுட்டு, “சரி போ. நான் சொல்றேன்” னு சொல்லி அனுப்பிட்டார்.   

ஒரு வாரம் ஆச்சு. அந்த பொண்ணு ஸ்ரீதர்ட்ட வந்தா. அவளை ஒரு பார்வை பார்த்தார். என்ன சொல்லிட்டார்? “நீ எத்தன தடவ வந்தாலும், நீ தலைகீழ நின்னாகூட, நீ நடிக்க முடியாதும்மா. போம்மா, போ..............” ன்னு அவளை அனுப்பிட்டாராம்.

அப்புறமா அந்த பொண்ணு தமிழ் படத்தில நடிக்கவே முடியாம போச்சு. ஆனா சினிமாவில கொடி கட்டி பறந்து, ஆம்பளைங்களோட கனவுக்கன்னியாய் இருக்கிற அளவுக்கு வளர்ந்துட்டா அவ. என்ன என்ன, என்ன யோசிக்கிறீங்கன்னு புரியுது.  தமிழ் சினிமாலதானே நடிக்கலேன்னு சொன்னேனா? ஹிந்தி சினிமாவுக்கு போயிட்டா. 
  
சரி, ஒரு டைரக்டர்தான் நம்மள வேணாம்னுட்டாரேன்னு அவள் பேசாம இருந்தாளா? இல்லியே. எப்படியோ சினிமாவுக்கு போயிட்டாள்ல. அந்த பப்லி நடிகை ஹேமமாலினி.

ஒரு நிகழ்ச்சில நம்பிக்கையை பற்றி பேசும்போது வைரமுத்து, இந்த ரெண்டு சமாச்சாரத்தையும் சொன்னார். 
 
Heezulia  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Mon Feb 12, 2018 5:39 pm

இரண்டு தகவல்களும் அருமை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 12, 2018 8:25 pm

எம்ஜிஆர் மற்றும் ஹேமமாலினி ஆகியோர் எவ்வளவு உயரத்திற்கு சென்றார்கள்
என்பதை விட அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை பதிவிட்ட முறை
அருமை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7665
மதிப்பீடுகள் : 1791

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Feb 12, 2018 9:31 pm

12.02.2018 

நன்றி SK & முத்து சார்.

தல, கால்கள், கைகள், கண்கள் போச்சு. யாருக்கு? பாகவதருக்கு. தியாகராஜ பாகவதர்தான்.

என்ன ஆச்சு அவருக்கு? இதெல்லாம் ஒரே.......... சமயத்தில இல்லீங்க. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சமயத்தில போச்சு. எப்பப்ப போச்சு. நவீன சாரங்கதாரா[1936]படத்தில கைகள்போச்சு. அம்பிகாபதி [1937] படத்தில தலையே........ போச்சு. அசோக்குமார் [1941] படத்தில கண்கள் போச்சு.


இப்படீல்லாம் நடிச்ச பாகவதர் சிவகாமி படத்தில நடிச்சிட்டுஇருக்கும்போதே, நிஜமா............வே கண்பார்வை போயிருச்சாம். ஆனா அவர்  1959ல மறைந்த பின்னால  1960லதான்  சிவகாமி படம் ரிலீஸ் ஆச்சாம்.


*******************************************************
ஆரம்ப காலத்ல, ஒரே................... ஒரு ப்ரொஜக்ட்டரை வச்சுதான் சினிமாவை காட்டினாங்களாம். அதனால ஒரு ரீல் முடிஞ்சதும், அடுத்த ரீலை மாத்தறதுக்கு கொஞ்ச நேரம் ஆகுமாம். இது தவிர, ஃபிலிம் சட்டுன்னு தீப்பிடிக்க கூடியது. இதனால கூட ரீலை மாத்த வேண்டிய நிலை. ரீல் ஓடிட்டே இருந்தா ப்ரொஜக்ட்டர் சூடாயிரும்ல. அந்த சமயத்தில படத்தை நிப்பாட்டிட்டு, ரீலை மாத்தினாங்க. அதனால என்னாச்சுன்னா, ஒரு படத்துக்கு அஞ்சாறு இடைவேளை விட்டாங்களாம்.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Feb 12, 2018 10:33 pm

12.02.2018

புதிய பறவை படத்ல மொதல்ல சரோஜாதேவி கேரக்டரில் சௌகார் ஜானகியும், சௌகார் ஜானகி கேரக்டரில் சரோஜாதேவியும் நடிப்பதாக இருந்துச்சு. அதுவரை குடும்பப் பொண்ணாக நடிச்ச சௌகார், கிளப் பாடகியாக, வித்தியாசமாக நடிக்கிறது நல்லா இருக்கும்னு சிவாஜிதான் சொன்னாராம். டைரக்டர் தாதா மிராசிக்கு, சரீன்னு சொல்றதுக்கு மனசே……………. இல்லயாம். இந்தப் படத்தில, முதல்ல படமாக்கப்பட்ட பாட்டு “பார்த்த ஞாபகம் இல்லையோ”. இந்தப் பாட்டில் சௌகாரின் ஸ்டைலை பார்த்து, தாதா அசந்து போயிட்டாராம். சரி, சிவாஜி நெனச்சது, சொல்றது சரிதான்னு, சிவாஜி சொன்னபடியே செஞ்சுட்டாராம்.


Heezulia  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 550
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum