புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
28 Posts - 62%
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
3 Posts - 0%
prajai
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
3 Posts - 0%
M. Priya
திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப் பிரபலங்கள்


   
   

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 9:52 pm

First topic message reminder :

16.12.2017

அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.

Baby Heerajan
 மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 18, 2018 12:54 pm

T.N.Balasubramanian wrote:
heezulia wrote:ஈகரை ஒரு நாலு நாள் ப்ளாக் ஆன உடனே, நான் வராதமாதிரி ஏதோ செஞ்சுட்டாங்கன்னு தப்பா நெனச்சுட்டேன்.

மற்றவர்களை பற்றி தவறாக நினைப்பது இயல்புதான் .நீங்கள் விதிவிலக்கு இல்லை.
ஈகரை என்றுமே அவ்வளவு மோசமாக நடக்காது.
வரைமுறைகள் /விதிமுறைகள் இருக்கிறது/ அதை கடைபிடிப்போம்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என பண்ணமாட்டோம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259843
ஈகரைக்குள் நுழைய முடியாது என்பது
ஒவ்வொருவரையும் என்ன பாடு படுத்தி
விடுகிறது என்பதை கவனியுங்கள் ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 18, 2018 1:31 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
heezulia wrote:ஈகரை ஒரு நாலு நாள் ப்ளாக் ஆன உடனே, நான் வராதமாதிரி ஏதோ செஞ்சுட்டாங்கன்னு தப்பா நெனச்சுட்டேன்.

மற்றவர்களை பற்றி தவறாக நினைப்பது இயல்புதான் .நீங்கள் விதிவிலக்கு இல்லை.
ஈகரை என்றுமே அவ்வளவு மோசமாக நடக்காது.
வரைமுறைகள் /விதிமுறைகள் இருக்கிறது/ அதை கடைபிடிப்போம்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என பண்ணமாட்டோம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259843
ஈகரைக்குள் நுழைய முடியாது என்பது
ஒவ்வொருவரையும் என்ன பாடு படுத்தி
விடுகிறது என்பதை கவனியுங்கள் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1259850

பலராலும் வரமுடியவில்லை. வரமுடிந்தது இருவரால் . அதை சரி செய்ய எடுத்த முயற்சிகளும் பதிவிட்டுள்ளோம்.
உங்களாலும்தான் வரமுடியவில்லை . நீங்கள் உங்களை block செய்துள்ளதாக நினைக்காதது ஈகரையின் மீதும் அதன் விதிமுறைகளின் மீதுள்ள நன்னம்பிக்கை .
தனி ஒருவனை நிந்திக்கலாம் .ஒரு அமைப்பை பற்றி குறை கூறுவது, அதுவும் புதிதாக சேர்ந்தவர்
குறை காணும் போது விதிமுறைகளை எடுத்துரைப்பது நிர்வாக குழுவின் கடமை.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Feb 18, 2018 1:57 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:மற்றவர்களை பற்றி தவறாக நினைப்பது இயல்புதான். நீங்கள் விதிவிலக்கு இல்லை. ஈகரை என்றுமே அவ்வளவு மோசமாக நடக்காது.
வரைமுறைகள் /விதிமுறைகள் இருக்கிறது/ அதை கடைபிடிப்போம்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என பண்ணமாட்டோம்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259843
ஈகரைக்குள் நுழைய முடியாது என்பது
ஒவ்வொருவரையும் என்ன பாடு படுத்தி
விடுகிறது என்பதை கவனியுங்கள் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1259850 

18.02.2018 

சா...........................ர், முத்து சா........................ர், 

செரீ ..........................யா சொன்னீங்க சார். கரீ.................ட்டு சார். கரீட்டு. 

என்ன பாடு படுத்துச்சு மட்டுமில்ல சார், என்னவெல்லாமோ ............ நெனக்க தோணுச்சுல்ல. அந்த நெனப்புலதான் நான் நெனச்சுது ஒண்ணு. மத்தவங்க வேண்ணா அவங்க நெனச்சத சொல்லாம  இருந்திருக்கலாம். நான் வெளிப்படையா சொல்லிட்டேன். அம்புட்டுதான். 

நெஜமாவே பாலு சாருக்கு என்ன பதில் எழுதுறதுன்னு தெணறிட்டு இருந்தேன் முத்து சார். நீங்க ஒரு கோடு போட்டு காட்டிட்டீங்க. நன்றியோ நன்றி சார். 

ஆனா பாலு சார் பயங்கரமான ஸ்ட்ரிக்ட் & சீரியஸ் மனிதர்னு நல்லாவே தெரியுது. விளையாட்டெல்லாம் அவர்ட்ட செல்லவே செல்லாது. 

அச்சச்சோ, இதுக்கு மேல ஒண்.................ணும் பேசக்கூடாதே. 

இன்னொருக்கா நன்றி முத்து சார். 

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 28, 2018 6:37 pm

28.02.2018

ந.மா. முத்துக்கூத்தன்

இப்படி ஒரு பாடலாசிரியர் இருந்தாராம். இவர் MGRஇன் பல  படங்களுக்கு பாட்டு எழுதியிருக்காராம். உதவி இயக்குனராக கூட இருந்தாராமே. துணை நடிகராகவும் நடிச்சாராம். அப்புறம் ஏன் முன்னுக்கு வரல? இவர் மகன் மு.கலைவாணன் பொம்மலாட்டக் கலைஞராம். முத்துக்கூத்தன் NSK மேல வச்சிருந்த மதிப்பால, தாமகனுக்கு இந்தப் பேரை வச்சாராம். 

1942ல இருந்து, நாடகங்களிலும், சினிமாலேயும் தன் கலைப் பணியை தொடங்கினார். KR ராமசாமியின் 'கிருட்டினன் நாடக சபா', 'SSR நாடக மன்றம்', MGR நாடக மன்றம்' இதுலே எல்லாம் நகைச்சுவை வேஷத்தில நடிச்சார். 1952ல சினிமா நடிகரானார். பராசக்தி, ரத்தக்கண்ணீர், இராஜராஜன், நாடோடி மன்னன், நல்லவன் வாழ்வான், புதிய பூமி, தாய் மகளுக்கு கட்டிய தாலி உள்ளிட்ட பல படங்களில பல வேஷங்கள்ல நடிச்சிருக்கார். இந்த கால கட்டத்தில்தான் சினிமாவுக்கு பாட்டும் எழுதினாராம். 

1953ல அம்மையப்பன், நாடோடி மன்னன், அரசிளங்குமரி, இராஜராஜன், கலையரசி, மந்திரவாதி, திருடாதே, அரசகட்டளை, நாகமலை அழகி உள்ளிட்ட நாப்பதுக்கும் மேலான படங்களுக்கு, பாட்டு, வசனம் எழுதியிருக்காராம்.


இவரின் சில பாடல்கள் :

செந்தமிழே வணக்கம் - நாடோடி மன்னன் 
சம்மதமா இப்போ சம்மதமா - நாடோடி மன்னன் 
ஆயிரம் கைகள் மறைத்து - அரச கட்டளை 
எத்தனை காலம் கனவு கண்டேன் - அரசகட்டளை 

முத்துக்கூத்தன் வில்லுப்பாட்டு கலையில் தேர்ந்தவர். NSK ஒரு வில்லை யூஸ் செஞ்சுட்டு இருந்தாராம். அது மதுரம்ட்ட இருந்துச்சாம்.  முத்துக்கூத்தன், அதை வாங்கிட்டு வந்து, வில்லுப்பாட்டு கலைக்கு புத்துயிர் கொடுத்தவர். NSK யின் வாழ்க்கையை வில்லுப்பாட்டாக வடித்தாராம். அதை NSKயின் முதல் நினைவு நாளில், NSKயின் வீட்டிலேயே நடத்தினாராம். 

அண்ணா, பெரியார், பாரதிதாசன் போன்றோரின் வாழ்க்கை வரலாறை, வில்லுப்பாட்டின் மூலமா நடத்தி, புகழ் பெற்றாராம். ரெண்டாயிரத்துக்கும் மேலான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளையும், மூவாயிரத்துக்கும் மேலான பொம்மலாட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கார். இவர் கலைக்கு செஞ்ச சேவைக்காக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 1972ல இவருக்கு 'கலைமாமணி' விருதை கொடுத்து பாராட்டியிருக்கு.


இவர் வாங்கின வேற விருதுகள் :

பாரதிதாசன் விருது 1987 - சென்னை பகுத்தறிவாளர் கழகம் 
நற்றமிழ் கூத்தர் விருது 1998 - தந்தை பெரியார் தமிழிசை மன்றம் தாரா பாரதி விருது 2௦௦2 - இலக்கிய வீதி அமைப்பு 
தமிழ் செம்மல் விருது 2௦௦3 - ஆழ்வார்கள் ஆய்வு மையம் 

கொள்கை வழிபட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். மலர்மகன் அப்டீன்னு சமகால கவிஞர். இவர் முத்துக்கூத்தனை "சாயாத கொடிமரம், சரியாத கொள்கைக் குன்று"ன்னு சொல்லியிருக்காராம். 



- முனைவர் மு.இளங்கோவன்

Heezulia  மீண்டும் சந்திப்போம்  

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 01, 2018 1:44 pm

திரைப் பிரபலங்கள்  - Page 9 3838410834 திரைப் பிரபலங்கள்  - Page 9 3838410834



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Mar 02, 2018 4:38 pm

02.03.2018

திடீர்னு ‘யாரு இவரு கண்டுபுடிங்க’ பகுதியில வைஜெயந்திமாலா எங்கேயிருந்து, ஏன் மொளச்சாங்க?

வைஜெயந்திமாலா

“ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே, ஜெகத்தை மயக்கிடுவேனே”

இது மறக்க கூடிய பாட்டா? மறக்க கூடிய டான்ஸா? அடேங்கப்பா. ஆடலழகி. ஹிந்தி சினிமாவில நம்பர் ஒன் நடிகை. பாரத நாட்டிய கலைஞர். கர்னாடக இசை பாடகர். நடன வடிவமைப்பாளர்.
 
இவரோட அப்பாவும், அம்மாவோட அம்மாவும்தான் இவரை வளத்தாங்க. ஏன்னா, இவர் பிறந்தப்போ, இவங்க அம்மாவுக்கு 16 வயசுதானாம். அதனால புள்ளைய வழக்க தெரியலேன்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்ல.  அப்போ அவர்  சினிமாவில பிஸியா இருந்தாராம், அந்த வயசிலேயே.
 
MV ராமன்னு ஒரு சினிமா டைரக்டர். இவர் சென்னைல வைஜெயந்தியின் பரதநாட்டிய கச்சேரி ஒண்ண பாத்திருக்கார். டைரக்டருக்கு அவரை புடிச்சு போச்சு. AVM வாழ்க்கைன்னு ஒரு படத்தை தயாரிப்பதாக இருந்துச்சு. MVR ரெகமண்டேஷன்ல வைஜெயந்தி வாழ்க்கை [1949] படத்தில ஒப்பந்தமானார். இந்தப் படம் ஓஹோ...............ன்னு ஓடுச்சு. 

ஹிந்திலயும் ரீமேக் செய்யப்பட்டதால, வைஜயந்தியின் நடிப்பும், டான்ஸும் வட இந்தியர்களை கவர்ந்தது. இந்தப் படம் அந்த வருஷத்தில வசூலை அள்...................ளி குடுத்துச்சு. அதனால AVMஇன் அடுத்த இரு மொழி படங்கள்லேயும் வைஜெயந்திக்கு சான்ஸ் கெடச்சுது. வரூ............சயா ஹிந்தி படத்தில நடிக்க போயிட்டார். அப்புறமா மறுபடியும்  வஞ்சிக்கோட்டை வாலிபன் [1958] படத்தின் மூலமா தமிழுக்கு வந்துட்டார். ஹிந்தீலயும், தமிழ்லயும் போயிட்டு வந்தா............ர், வந்துட்டு போனார்.

தமிழ்ல 12, தெலுங்கில 2, வங்காளத்தில 1, ஹிந்தில 19 படங்கள் நடிச்சிருக்கார்.
 
இவர் நடிச்ச 12 தமிழ் படங்கள்ல பாட்டாளியின் சபதம்[1958], வாழ்க்கை[1949], பெண்[1954], அதிசய பெண்[1959], இரும்புத்திரை[1960], தேன் நிலவு[1961] இந்த படங்கள்லாம் சமூக கதை படங்கள்.  
 
மர்மவீரன்[1956], வஞ்சிக்கோட்டை வாலிபன்[1959], ராஜபக்தி[1960], பாக்தாத் திருடன்[1960], பார்த்திபன் கனவு[1960], சித்தூர் ராணி பத்மினி[1963] இந்த படங்கள் ராஜா ராணி கதை படங்கள்.
 
வாழ்க்கை, தேன்நிலவு இந்த ரெண்டு படங்களும் நூறு நாள் ஓடுச்சு. இரும்புத்திரை 175 நாள் ஓடுச்சு. தமிழ்ல, கலர் படத்தில வைஜயந்தி நடிக்கல. அதிசய பெண் படத்தில பாட்டு மட்டும் கலர்ல வந்துச்சாமே.
 
வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில “கண்ணும் கண்ணும் கலந்து” போட்டி பாட்டின் கடேசில, யாராவது ஒருத்தர் தோக்கணும். ஆனா அதுக்கு வைஜயந்தியின் பாட்டியும், பத்மினியின் அம்மாவும் ஒத்துக்கலியாம். அதனால படத்தில யாரும் ஜெயிச்ச மாதிரியும் இல்ல, தோத்த மாதிரியும் இல்லேல்ல. SS வாசன் சாமர்த்தியமா, ரெண்டு பேரும் வருத்தப்படாதபடி முடிச்சிருவார்.
 
வைஜயந்தி நடத்திட்டு இருந்த நடன குழுவில வேதா ஆர்மோனியம் வாசிச்சுட்டு இருந்தாராம். மர்ம வீரன் படத்தில வைஜயந்தி நடிச்சிட்டு இருக்கும்போது, இவர்தான் அந்த படத்துக்கு வேதாவுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தாராம்.
 
வேதாவுக்கு வைஜெயந்தியாலதான் சினிமாவுல முதல் சான்ஸ் கெடச்சுதா? எவ்ளோ................... தகவல் புதுசு புதுசா.................... கெடக்குது!!!
 
இரும்புத்திரை படத்தில வசுந்தராதேவியும், வைஜயந்தியும் அம்மா மகளாக நடிச்சாங்களாம். 
 
இங்கிலாந்து ராணி எலிசபெத், ரஷிய பிரதமர் புல்கானின், யூக்கோ அதிபர் டிட்டோ, கிரீஸ் மன்னர், பெல்ஜியம் மன்னர் இவங்கல்லாம் இந்தியாவுக்கு வந்தப்போ, இந்திய அரசாங்கம் அவங்களுக்கு கொடுத்த வரவேற்பு விழாவில, வைஜெயந்தி டான்ஸ் இருந்துச்சாம்.
 
வைஜெந்தியுடன் நடிச்ச ஹீரோ :

MGR [பாக்தாத் திருடன்], சிவாஜி [சித்தூர் ராணி பத்மினி, இரும்புத்திரை, ராஜபக்தி], ஜெமினி கணேசன் [வஞ்சிக்கோட்டை வாலிபன், பெண், பார்த்திபன் கனவு, தேன்நிலவு], A நாகேஸ்வரராவ் [அதிசயப்பெண்], ஸ்ரீராம் [மர்ம வீரன்], TR ராமச்சந்திரன் [வாழ்க்கை].
 
இவர் வாங்கிய விருதுகள் :

பத்மஸ்ரீ [1968], தமிழக அரசின் கலைமாமணி விருது [1979], பாரத நாட்டியத்தில இவரின் பங்களிப்புக்கு சங்கீத நாடக அகாடமி விருது [1982], தியாகராஜ பாகவதர் விருது [2001], வாழ்நாள் சாதனையாளர் கலாகார் விருது [2002]
 
வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை, 1998ல ப்ரிட்டிஷ் ஏஷியன் திரைப்பட விழாலயும், 2006ல பூனே சர்வதேச திரை விழாலயும், 2012ல பெங்களூர் சர்வதேச திரை விழாலயும் வாங்கினார்.
 
ஃபிலிம்ஃபேர் விருது [ஹிந்தி] : தேவதாஸ் 1956, சாதனா & மதுமதி 1958, கங்கா ஜமுனா & சங்கம் 1961, வாழ்நாள் சாதனையாளர் விருது 1996.

அகினேனி நாகேஸ்வரராவ் தேசிய விருது 2008.

- சினிமா எக்ஸ்ப்ரெஸ்
- இது தமிழ்

Heezulia

avatar
Guest
Guest

PostGuest Fri Mar 02, 2018 9:44 pm

வைஜெயந்திமாலா எங்கிருந்தோ முளைக்கவில்லை. நீங்கள் அங்கே எழுதிய பதிவில் அவர் பற்றி தொடக்கத்தில் எழுதியதன் விளைவே அவர் முளைத்திருக்கிறார் அல்லது மொளச்சாங்க

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Mar 02, 2018 11:59 pm

02.03.2018

Feb 19ல லட்மிசுயை பற்றி எழுதி, யார்னு கேட்டேன். அதுக்கு பாலு சார் வைஜெயந்திமாலாவான்னு கேட்டாரு. அப்புறமா Dewaar ஹிந்தி படத்தில வைஜெயந்தி கமல் / ரஜினி கூட நடிக்க இருந்ததா சொல்லி, அந்த மேட்டர் Feb 20ஆம் தேதியோ............டு முடிஞ்சிருச்சு. இப்ப போயி, இத்தன நாள் கழிச்சி, திடீர்னு அவர் நடிச்ச படங்கள்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம section மாறி வந்திருக்கேன்னு கேட்டேன். 

இதை சொல்றீங்களே, நான் எழுதியது எப்டி இருக்கூன்னு ஒரு வார்த்த, ஒரு வார்த்தயாவது சொன்னீஹளா? இல்லியே.   

உங்க பேச்சு கா மூர்த்தி.

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 13, 2018 1:31 pm

13.03.2018

விந்தன்

நெஜமான பேரு கோவிந்தன். ஆறாங்க்ளாஸ் வரைக்கும்தான் படிச்சார். குடும்பச் சூழல். மேல படிக்க முடியல. அப்பாகூட கூலி வேலைக்கு போனார். இந்த வேலைல்லாம் செய்ய பிடிக்கல கோவிந்தனுக்கு. ஆனாலும் ஒரு கட்டாயம். அவர் அப்பாவுக்கு, மகன் படிக்க ஆசைப்பட்றது தெரிஞ்சுது. சரீன்னுட்டு நைட் ஸ்கூல்ல சேத்து விட்டுட்டார்.

அப்புறமா மகனுக்கு ட்ராயிங்ல இன்ட்ரெஸ்ட் இருக்கிறது தெரிஞ்சுது. சென்னை ஓவியக் கல்லூரில சேர்த்தார். ஆனா அங்கேயும் தொடர்ந்து படிக்க வசதியில்லாம போச்சு. குடும்பத்தை வேற காப்பாத்தணுமே. என்ன செய்யலாம்? தமிழரசு பிரிண்ட்டிங் ப்ரெஸ்ல போய் சேந்துட்டார். அங்க என்ன வேல..............? அச்சு கோக்கிற வேல. கொஞ்ச நாளாச்சு. இங்கிருந்து அவருக்கு transfer.

எங்க.............? ஆனந்த விகடன் ப்ரஸ்ல. இங்கயும் கோக்குற வேலைதான்.

கல்கியின் கையெழுத்து கடவுளுக்கும், கல்கிக்கும் தவிர வேற யா..............ருக்கும் புரியாதுன்னு கல்கியே சொல்லியிருக்காராம். அவர் எழுத்தையே விந்தன் கம்போஸ் செஞ்சுர்வாராம். இது கல்கீக்கு ஆச்சரியமா இருந்துச்சாம். இங்க வேல செஞ்சுட்டே.......... சுதேசமித்திரன் இதழுக்கு கவிதைல்லாம் எழுதினார், கோவிந்தன். ஏன்னு தெரியல, அங்க இருந்து கல்கி பிரஸ்ஸுக்கு போயிட்டார்.

இதென்ன, ப்ரெஸ் ப்ரெஸ்ஸா இப்டி அலைறாரு.

இங்க இருந்துட்டே, கல்கி வார இதழ்ல பாப்பாங்களுக்கான குட்டி குட்டி........ கதைங்க, அறிவுக்களஞ்சிய கட்டுரைங்க எழுதினார். எந்த பேர்ல எழுதினார். பொம்பள பேர்ல. அது யார் பேரோ தெரியல. விஜி. இந்த பேர்லதான் பாப்பா மலர்ல எழுதினார். இதை படிச்சவங்களுக்கு பிடிச்சுபோச்சு. கல்கி ஆசிரியருக்கும். அவர் கோவிந்தனை பாராட்டி, விஜிங்க்ற பேரை, விந்தன்னு மாத்தினதோடு விடாம, கல்கி இதழின் ஆசிரியர்களோட ஆசிரியரா இவரையும் சேத்துகிட்டார், கல்கி கிருஷ்ணமூர்த்தி. துணை ஆசிரியரா கொஞ்ச நாள் இருந்திருக்கார்.

பாட்டாளி மக்களின் கஷ்டங்களை, எளிய தமிழ்ல எழுதினார். சரித்திர நாவல் எழுதலியாம். ஆனா பார்த்திபன் கனவு [1960] படத்துக்கு அட்டகாசமா வசனம் எழுதினார். இந்த படம் கல்கியோடது. அதனால தனக்கு வாழ்வு கொடுத்த கல்கிக்கு மரியாதை கொடுக்கிறதுக்கு விந்தன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதினாராம்.

‘பாலும் பாவையும்’னு இவரோட ஒரு நாவல். இதை படமாக்க விந்தனுக்கு ஆசை. அதனால பத்திரிகைலே இருந்த வெளிய வந்துட்டார். சினிமாவுக்கு போய்ட்டார்.

விந்தன் சினிமாவுக்கு வந்த சமயத்தில, கண்ணதாசன் famous ஆகல. பட்டுக்கோட்டையார் சினிமா ஃபீல்டுக்கே.............. வரலியாம். அந்த சமயத்தில TR ராஜகுமாரி, விந்தனின் எழுத்துக்களுக்கு ரசிகையாம். ராஜகுமாரியின் சகோதரர் TR ராமண்ணா ஒரு படத்தை தயாரிச்சார். அதுதான் 1953 ல வந்த வாழப் பிறந்தவள். இந்த படத்துக்கு திரைக்கதையை விந்தன் எழுதட்டும்னு ராஜகுமாரி ராமண்ணாட்ட சொன்னார். விந்தனும் எழுதினார். 

அன்பு [1953] படத்துக்கு – வசனம்

பாட்டு – “சுத்தாத இடமில்லே கேட்காத பேரில்லே
சோத்துக்கு வழிகாட்ட ஆளில்லே” 

இந்தப் பாட்டு ஒரு ஏழையின் பசியை பற்றி சொல்லுது.

கூண்டுக்கிளி! 1954 – திரைக்கதை & வசனம் எழுதினார்.

இவர் இந்தப் படத்துக்காக எழுதிய மூணு பாட்ல,

“சரியா தப்பா” பாட்டு வரிகளை censor அதிகாரிங்க கொஞ்சம் மாத்தினாங்களாம். 

“கொஞ்சும் கிளியான பெண்ணை
கூட்டுக் கிளியாக்கிவிட்டு
கெட்டிமேளம் கொட்டுவது சரியா தப்பா” – இப்படி மொதல்ல இருந்துச்சு.



அப்புறமா, “கொஞ்சும் கிளியான பெண்ணை 
கூட்டுக் கிளியாய் நினைத்து
காலமெல்லாம் சுற்றியது சரியா தப்பா” – இப்படி மாத்திபுட்டாங்க.



கத்திரிக்கோல் “கட் கட் கட்”னு சொன்ன நாலு வரீங்க :

“மண்ணும் பொன்னும் மாயை என்று மக்களுக்கு சொல்லிவிட்டு
பெண்ணை பார்த்து கண்ணடித்தல் சரியா தப்பா
விண்ணுலக ஆசையின்றி விரும்பும் பெண்ணை நேசத்தோடு
கண்ணியமாய் காதலித்தல் சரியா தப்பா” 

குழந்தைகள் கண்ட குடியரசு [1959] – வசனம்
பார்த்திபன் கனவு [1960] – வசனம், பாட்டுகள் 

“சினிமா, அரசியல், பத்திரிக்கை உலகத்தில, எனக்கிருந்த மாயையை நீக்கிய மகத்தான ஒளிக்கீற்றுக்கு பெயர் விந்தன்” – இப்படி ஜெயகாந்தன் சொல்லியிருந்தார்.

பத்திரிகைலே இருந்து வெளியே வந்துட்ட விந்தனுக்கு, M நடேசனும், மாவன்னா ஆச்சாரியும் க்ளோ..............ஸ் ஃப்ரெண்ட்ஸ். இவங்க ரெண்டு பேரும் PU சின்னப்பா தயாரிச்ச ‘வானவிளக்கு’ என்கிற படத்துக்கு விந்தனை வசனம் எழுத சொன்னாங்க. அவரும் எழுதினார். ஆனா என்ன பிரயோஜனம்? படம் பொட்டிலியே தூங்கிருச்சு.

விந்தன் 7 படங்களுக்கு வசனம், பாட்டூங்க எழுதினார். அப்புறமா ‘மனிதன்’ ங்கற ஒரு பத்திரிகையை ஆரம்பிச்சார். ‘தெருவிளக்கு’ ங்கற தலைப்பில, இந்த பத்திரிகையில தன்னுடைய சினிமா அனுபவங்களை தொடராக எழுதினார்.

அவரோட சினிமா அனுபவங்கள்ல, எத எழுதினாரோ, என்னத்த எழுதினாரோ, ஏதோ உண்மைய எழுதியிருக்கார் போல. இதுக்கு எதிர்ப்பு. தொடர்ந்து எழுத முடியாம போச்சு. இவர் சினிமாவில இருந்தும், எழுதுக்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டதுக்கு காரணம், இதுமாதிரி சினிமா உலகத்தை பற்றி உண்மையை மட்டும் எழுதுனதுதானாம். ஆனா இலக்கியத்துக்கு செஞ்ச வேலை எல்லாராலும் பேசப்பட்டுச்சாம்.



- ஹிந்து

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 13, 2018 2:12 pm

விந்தன்

திரைப் பிரபலங்கள்  - Page 9 3838410834 திரைப் பிரபலங்கள்  - Page 9 3838410834



Sponsored content

PostSponsored content



Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக