ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வருகிறது இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி… மெட்ரோ ரயிலை விட குறைந்த கட்டணம்!

View previous topic View next topic Go down

வருகிறது இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி… மெட்ரோ ரயிலை விட குறைந்த கட்டணம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 29, 2017 9:12 am

பரபரப்பு. காலை நேரத்தில் அது நிறையவே இருக்கும். பெருநகரங்களில், அதுவும் இந்த உள்ளூர் ரயில், ஷேர் ஆட்டோ அல்லது பஸ் ஏறிப் போகிறவர்கள் பாடு எப்போதும் திண்டாட்டம்தான். டிராஃபிக் அப்படி! ஒரு பத்து நிமிடம் தாமதமாக சென்று பஞ்ச் வைத்தால்கூட, சம்பளத்தில் பிடிக்கும் நிறுவனங்கள் இங்கு உண்டு. இந்தியாவில் பல நகரங்களில் மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 10 ரூபாய் அதிகம் என்றாலும் பரவாயில்லை என அதைத் தேர்ந்தெடுத்தவர்கள் ஏராளம். இப்போது அதன் அடுத்த கட்டமாக, விரைவில் வரவிருக்கிறது பாட் டாக்ஸி (Pod Taxi). தனிப்பட்ட விரைவான போக்குவரத்து (Personal rapid transit) என்று அழைக்கப்படும் இது, விரைவில் நம் இந்தியத் தலைநகரான டெல்லியில் வரவிருக்கிறது.
Third party image reference
சில வருடங்களுக்கு முன்பிருந்தே பரவலாக பேசப்பட்ட இந்தத் திட்டம், நடைமுறை சிக்கல்கள், பட்ஜெட் என்று பல காரணங்களுக்காகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நித்தின் கட்கரி அவர்களின் கனவு திட்டமான இதற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரைப்படி, 4,000 கோடி செலவில் இதற்கான பணிகள் ஏலம் விடப்படவுள்ளது. முதற்கட்டமாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டப்படி, டெல்லி-குர்கான் பைலட் பாதையில், டெல்லி-ஹரியானா எல்லையிலிருந்து குர்கானில் உள்ள ராஜீவ் சௌக் வரை பாட் டாக்ஸியை நிறுவ முடிவுசெய்யப்பட்டுள்ளது. 12.3 கி.மீ. தூரத்திற்குப் போடப்படும் இந்த முதல் பாதை, அரசு, தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படுத்தும் திட்டமாக இருக்கும்.

நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6893
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: வருகிறது இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி… மெட்ரோ ரயிலை விட குறைந்த கட்டணம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 29, 2017 9:13 am

பாட் டாக்ஸி (Pod Taxi) என்றால் என்ன? எப்படிச் செயல்படுகிறது?
தனிப்பட்ட விரைவான போக்குவரத்து (Personal rapid transit) என்று அழைக்கப்படும் இது, போக்குவரத்து நெரிசலுள்ள இடங்களில், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மக்களைக் கொண்டுசெல்ல பயன்படுத்தப்படுகிறது. உயரத்தில் ட்ராக் போடப்பட்டு அண்டையில், தொங்கியவாறு ‘pod’கள் அதிவேகமாகச் செல்லும். நம் மெட்ரோ ரயில் போலவே செயல்படும் இதன் மிகப்பெரிய பலம், இது ஒரு தானியங்கி. தூரத்தில் இருந்துகொண்டே இதன் செயல்பாடுகள் முழுவதையும் கட்டுப்படுத்த முடியும். இதன் ‘pod’ ஒன்றில் ஆறு பேர் வரை பயணம் செய்யலாம். எதிர்காலத்திற்கான போக்குவரத்துத் திட்டமாக கருதப்படும் இதன் மூலம், காற்று மாசடைவதை வெகுவாக குறைக்க முடியும். சூரிய சக்தியிலும் இதை இயக்கலாம் என்பதால் எரிபொருள் பிரச்னையும் ஏற்படாது.


இந்திய அரசு அறிவித்துள்ள பாட் டாக்ஸி திட்டம் குறித்து சில முக்கியத் தகவல்கள்
ஐந்து பேர் செல்லக்கூடிய வகையில் நிறுவப்படும் இந்த ‘pod’கள் முழுக்க முழுக்க தானியங்கி. இவை நிலத்திலிருந்து 5 முதல் 10 மீட்டர் உயரத்தில், மேலே இருக்கும் ட்ராக்கில் தொங்கும் வகையிலோ, அல்லது இதற்காக அமைக்கப்பட்ட தளத்தில் ஓடும் வகையிலோ அமைக்கப்பட்டிருக்கும்.
தானியங்கி என்றாலும், வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்பாட்டுத் தளத்திலிருந்தும், ஆங்காங்கே நிறுத்தங்களில் இருந்தும் கண்காணிக்கப்படும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6893
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: வருகிறது இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி… மெட்ரோ ரயிலை விட குறைந்த கட்டணம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 29, 2017 9:15 am

வானிலை மாற்றங்கள் ஏற்பட்டாலும், இதை முழுக்கட்டுப்பாட்டில் எப்போதும் வைத்திருக்க முடியும். கீழே சாலையில் நெரிசல் என்றாலும், மேலே எந்தத் தடையுமின்றி இதில் பயணம் செய்யலாம்.
சூரியச் சக்தி பயன்படுத்தினாலும், இல்லாவிட்டாலும் இதற்காகும் எரிபொருள் செல்வது மிகவும் குறைவு தான். எனவே, இதன் கட்டணம், பெருநகரங்களில் தற்போதுள்ள மெட்ரோ ரயிலைவிடக் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12.3 கீ.மீ. தூரத்தைக் கடக்க முதலில் டெல்லியில் நிறுவப்படும் இது, விரைவில் மற்ற இந்திய நகரங்களுக்கும் வந்துவிடும்.
[size=37]
[/size]
Third party image ரெபெரென்ஸ்


ஒரு மைல்கல் திட்டமாக கருதப்பட்ட இது, இன்றுவரை கிடப்பில் போடப்பட்டதற்கான காரணம், அரசின் கொள்கை கமிஷனான NITI Aayog சிவப்பு கொடி காட்டியதுதான். இந்தத் தொழில்நுட்பம் குறித்த அச்சம், பாதுகாப்பானதாக இருக்குமா என்ற கவலை, நிறுவப்படுவதற்காகும் அதீத பொருட்செலவு, இதையெல்லாம் யோசித்துவிட்டு, முதலில் 1 கி.மீ., கட்டமைத்து அதைச் செயல்படுத்தி காட்டவேண்டும் என்றெல்லாம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, Automated People Mover (APM) வழிமுறைப்படி, அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ் (ASCE) வகுக்க, இந்தியாவின் இந்த முதல் தனிப்பட்ட விரைவான போக்குவரத்து (PRT) திட்டம் உயிர்பெறவிருக்கிறது. வாகன வருகை குறித்த ஆடியோ மற்றும் வீடியோ காட்சி எச்சரிக்கை அமைப்பு, ட்ராக்கில் இருந்து பாட் விலகினால் எச்சரிக்கை மணி, கண்காணிப்பு கேமராக்கள், ஆடியோ தொடர்பு, அவசர அழைப்பு வழிமுறைகள் மற்றும் தீ பாதுகாப்பு, உள்ளிட்ட மேம்பட்ட வசதிகள் இதில் முக்கியமானவை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6893
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: வருகிறது இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி… மெட்ரோ ரயிலை விட குறைந்த கட்டணம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 29, 2017 9:18 am

Automated People Mover (APM) வழிமுறைப்படி வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு போன்ற விஷயங்களுக்கு அதிகம் செலவு ஏற்படுத்தாத, ஆனால் அதே சமயம் பாதுகாப்பான முறையில், இந்தத் தனிப்பட்ட விரைவான போக்குவரத்து (PRT) திட்டம் நிறைவேற்றப்படும்” என்று இந்தத் திட்டத்தை தற்போது தூசி தட்டிய உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது. அதன்படி, இதை வழிநடத்தப் போக்குவரத்து நிபுணர் எஸ்.கே.திராமதிகாரி தலைமையில் ஐந்து நபர்கள் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.


“தடைகள் நீங்கிவிட்டதால், கூடிய விரைவில் இந்தத் திட்டத்திற்கான ஏலம் விடும் பணிகள் தொடங்கப்படும். உயர்மட்டக் குழுவின் உத்தரவுப்படி, பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்படும். போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும், போக்குவரத்துத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவும் இந்தத் திட்டம் கைகொடுக்கும்” என்று திரு.திராமதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6893
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: வருகிறது இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி… மெட்ரோ ரயிலை விட குறைந்த கட்டணம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 29, 2017 9:19 am

சில கேள்விகள்
“2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மும்பையிலிருந்து அகமதாபாத் நோக்கி பயணம் செய்யும்” என்று இதே மத்திய அரசு இதற்கு முன்னர் அறிவித்தது. 508 கி.மீ. தூரத்தை மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் கடந்து செல்லவிருக்கிறது புல்லட் ரயில். இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு 1.1 லட்சம் கோடிகள். அப்போது இது அத்தியாவசிய திட்டம் தானா என்ற கேள்வியை எதிர்க்கட்சியான காங்கிரஸ் வைத்தது. “நீங்கள் செய்ய முயன்று தோல்வியடைந்த திட்டத்தைத்தான் நான் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் போகிறேன். இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் எல்லோரும் மாட்டு வண்டியில் செல்லுங்கள்” என்று விதண்டாவாதத்துடன் மோடி பதிலளித்தார். நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளின் நிலையென்ன, உத்தரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் மக்களைக் காக்கவேண்டிய மருத்துவத் துறையே முதலில் ஆரோக்கியமான நிலையில் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளை முன்வைத்து, தற்போது இந்தத் திட்டத்திற்கும் எதிர்ப்பலைகள் வரலாம். அப்போது பிரதமர் மோடி அனைவரையும் வேண்டாமென்றால் சைக்கிளில் போக சொல்வாரோ என்னமோ?


எது எப்படியோ, ஒரு துறையின் வளர்ச்சியைப் பார்த்துவிட்டு, வளராத துறைக்கு நீங்கள் ஏன் மதிப்பளிக்கவில்லை என்று கேட்பது நியாயமில்லை என்றாலும், தர்க்கங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு இரண்டு கேள்விகளை மட்டும் ஆளும் அரசு தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.


புல்லட் ரயில் அறிவித்திருக்கிறோம். பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயிலே இன்னமும் முழுமையாக இயக்கப்படுவதில்லை. இந்த நிலையில், தற்போது 4000 கோடி செலவில், இந்த நவீன போக்குவரத்துத் திட்டம் தேவையா?
தொழில்நுட்ப பிரச்னைகள், திட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் பிரச்னை, பாதுகாப்பு குறித்த கலக்கம் என்று இதற்கு தற்போதும் உலகளவில் எதிர்ப்புகள் உள்ள நிலையில் இது நிச்சயம் இந்தியாவில் கொண்டுவரப்பட வேண்டுமா?
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6893
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: வருகிறது இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி… மெட்ரோ ரயிலை விட குறைந்த கட்டணம்!

Post by SK on Fri Dec 29, 2017 11:01 am

நாட்டின் உள்கட்டமைப்பு என்று வரும்போது இந்த திட்டம் அவசியம்

அனால் மருத்துவம் அதியவசியம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4945
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

Re: வருகிறது இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி… மெட்ரோ ரயிலை விட குறைந்த கட்டணம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 29, 2017 11:50 am

@SK wrote:நாட்டின் உள்கட்டமைப்பு என்று வரும்போது இந்த திட்டம் அவசியம்  

அனால் மருத்துவம் அதியவசியம்
மேற்கோள் செய்த பதிவு: 1255222
நம் டிராபிக் ஜாம் குறைந்தால் சரி
நன்றி
நண்பா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6893
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: வருகிறது இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி… மெட்ரோ ரயிலை விட குறைந்த கட்டணம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum