ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது

View previous topic View next topic Go down

பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது

Post by ayyasamy ram on Sun Feb 04, 2018 6:03 pmஆறு பெண்களுடன் தொடங்கிய பத்ம விருதுகளின் கணக்கு
64 ஆண்டுகளில் மொத்தம் 577-ஆக உயர்ந்திருக்கிறது.

காந்தியவாதியான ஆஷா தேவி அரியநாயகம்,
பத்ம விருதுகள் தொடங்கப்பட்ட 1954-ல் பத்மஸ்ரீ விருது
மூலம் கவுரவிக்கப்பட்டார்.

அதே ஆண்டு அச்சம்மா மத்தாய், மிருணமாய் ராய்,
பெரினா கேப்டன், அமல்பிரவா தாஸ் ஆகியோருக்கு
பத்மஸ்ரீ விருதும் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பத்ம பூஷண்
விருதும் வழங்கப்பட்டன.

பத்மஸ்ரீ விருது உருவாக்கப்பட்ட ஆண்டுகளிலிருந்து
இன்றுவரை 2,913 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இவர்களுள் 434 பேர் பெண்கள். இதுவரை 103 பெண்கள்
பத்ம பூஷண் விருதையும் 27 பெண்கள் பத்ம விபூஷண்
விருதையும் பெற்றிருக்கிறார்கள்.

இதுவரை வழங்கப்பட்ட 4,457 பத்ம விருதுகளில் ஐந்தில்
ஒரு பங்குதான் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆறு பேருடன் தொடங்கிய கணக்கில் 2013-ல்
கூடுதலாகப் பெண்கள் 24 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு 19 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு 14 ஆகக் குறைந்துள்ளது. சமூகப் பணி,
ஆட்சிப் பணி, இலக்கியம், கல்வி, மருத்துவம், பொறியியல்,
தொழில், விளையாட்டு உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளின்
கீழ் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

பெண்களுக்கெனத் தனிப் பிரிவு இல்லை. இந்தப் பிரிவுகளில்
இயங்கும் ஆண்களுடன் போட்டிபோட்டுத்தான் இந்த
விருதுகளுக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இதிலிருந்து இந்தியப் பெண் சமூகம் பெற்றுள்ள
அங்கீகாரத்தையும் கணக்கில்கொள்ள முடியும்.
-
----------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35080
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது

Post by ayyasamy ram on Sun Feb 04, 2018 6:04 pm


இந்த ஆண்டு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள 14 பேரில் பிஹார்
நாட்டுபுறப் பாடகி ஷ்ரத்தா சின்காவுக்கு மூன்றாவது உயரிய
விருதான பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி பாங், சுபாஷினி மிஸ்த்ரி, லஷ்மி குட்டி, சுலகாட்டி நரசம்மா,
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், லெண்ட்டினா தாக்கர், சித்தவ்வா
ஜோடதி, நவ்ஃபா மர்வாய், நானம்மாள், சைகோம் மிராபி சானு,
சுபதானி தேவி, ஜெய்ஸ்ரீ கோஸ்வமி மஹந்தா, மல்டி ஜோஷி
ஆகிய 13 பேருக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, சமூக சேவை, மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட பல்துறைப்
பங்களிப்புக்காக இவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் சுபாஷினி மிஸ்த்ரி, லஷ்மிகுட்டி, நரசம்மா, சித்தவ்வா
ஜோடதி, நானம்மாள் ஆகிய நால்வரும் தனித்துவமானவர்கள்.
பெரும் பின்னணி அற்ற எளிய பெண்கள். சித்தவ்வா ஜோடதி (44)
தவிர மற்ற நால்வரும் மூதாட்டிகள். நரசம்மாள், நானம்மா ஆகிய
இருவருக்கும் 98 வயது. சுபாஷினி மிஸ்த்ரி, லஷ்மி குட்டி ஆகிய
இருவருக்கும் 75 வயது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நானம்மாள்
நாம் நன்கு அறிந்த யோகா ஆசிரியர்.
-
------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35080
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது

Post by ayyasamy ram on Sun Feb 04, 2018 6:05 pmஏழைகளுக்கு மருத்துவம்

சுபாஷினி மிஸ்த்ரி, கொல்கத்தாவைச் சேர்ந்தவர். உரிய மருத்துவ
சிகிச்சை கிடைக்காததால் 24 வயதில் கணவனை இழந்தார்.
கணவனைச் சார்ந்து வாழ்ந்து பழகியிருந்த அவரால், அந்த
அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அவருக்கு நான்கு குழந்தைகள்.

அவர்களின் பசியைப் போக்க வீட்டு வேலைக்குச் சென்றார்.
நாட்கள் இப்படியே கழிந்துகொண்டிருந்தன. மருத்துவ வசதி
கிடைத்திருந்தால் கணவனை இழந்திருக்க மாட்டோம் என்ற
வேதனை அவரைத் தொடர்ந்தது.

தனக்கு நேர்ந்த இந்த கதி, இன்னொரு ஏழைப் பெண்ணுக்கு நேரக்
கூடாது என உறுதி எடுத்தார். ஏழைகளுக்கான இலவச மருத்துவ
மனையை உருவாக்க நினைத்தார். மிச்சமிருக்கும் வாழ்க்கையை
அதற்காகச் செலவிட முடிவெடுத்தார். தான் சம்பாதிக்கும் ஐந்து
பைசாவைக்கூட அதற்காகச் சேமித்தார்.

வீட்டு வேலை பார்ப்பது மட்டும் போதாது எனக் காற்கறிகள்
விற்றார், கிடைக்கும் சிறு சிறு வேலைகளையெல்லாம் செய்தார்.
மூத்த இரு குழந்தைகளையும் படிக்கவைக்க முடியாமல்
ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தார். மற்ற இரு குழந்தைகளையும்
மருத்துவமனைத் திட்டத்துக்காகப் படிக்க வைத்தார்.

மகனை மருத்துவராக்கினார். மகளை மருத்துவமனை உதவிப்
பணிக்காகப் படிக்க வைத்தார்.

1993-ல் அவரது கனவு நனவானது. ஒரு தற்காலிக மருத்துவ
மனையைத் தொடங்கினார். 1996-ல் கொல்கத்தாவின் பியாஜ்
அக்ன்ஸ் புக்குர் பகுதியில் நிரந்தர மருத்துவமனைக்கான
அடிக்கல்லை அன்றைய மேற்குவங்க ஆளுநர நாட்டினார்
நடப்பட்டது. இன்று இந்த மருத்துவமனை 12 மருத்துவர்கள்,
24 படுக்கைகளுடன் ஏழைகளுக்குச் சேவை செய்துகொண்டிருக்கிறது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35080
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது

Post by ayyasamy ram on Sun Feb 04, 2018 6:06 pm


மூலிகை மூதாட்டி

காணி என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் லஷ்மி குட்டி.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாத இவர், நாட்டார்
வழக்காற்றியல் அகாடமியில் ஆசிரியராக இருக்கிறார்.

இந்தத் துறை தொடர்பாகக் கவிதைகளும் கட்டுரைகளும்
எழுதியுள்ளார். திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோ மீட்டர்
தொலைவில் பொன்முடிக்கு அருகில் அடர்ந்த காட்டுப்
பகுதியில் தனியாக இவர் வாழ்ந்துவருகிறார். இவருடைய
கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மகன் ரயில்வேயில் பணியாற்றுகிறார். மருத்துவச்
சேவைக்காகத்தான் இவருக்கு இந்தக் கவுரவம்
அளிக்கப்பட்டிருக்கிறது. 500-க்கும் மேற்பட்ட மூலிகை
மருந்துகளைக் கண்டறிந்துள்ளார்.

விஷமுறிவு மருந்து மூலம் பலருடைய உயிரைக்
காப்பாற்றியுள்ளார். “எல்லா நோய்களுக்கான மருந்தும்
இயற்கையிடம் உள்ளது” என்கிறார் லஷ்மிகுட்டி.

மகப்பேறு சேவை

மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும்
பிரசவம் என்பது மறுபிறப்புதான். அந்த அளவுக்குச்
சிக்கலான காரியமாகவே அது இருக்கிறது.

ஆனால், நரசம்மா என்னும் தனி மனுஷி தனது 77 வருட
சேவையில் 1,500-க்கும் மேற்பட்ட பிரசவங்களைப்
பார்த்திருக்கிறார். பெண்களின் கோணத்தில் பார்த்தால்
இது இமாலய சாதனைதான். கர்நாடக மாநிலம் தும்கூட்
மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது 20-வது வயதில்
தற்செயலாகப் பிரசவம் பார்ப்பவராக மாறினார்.

தன் அத்தையின் பிரசவத்துக்கு உதவினார். அந்தச்
சம்பவம் அவருக்குப் பின்னாளில் பத்மஸ்ரீ விருதுக்கான
விதையாக இருக்கப் போகிறது என்பதை அவர்
அறிந்திருக்க மாட்டார். சிறு நகரங்களில்கூட
மருத்துவமனைகள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில்
கூட நரசம்மாவைத் தேடிப் பலரும் வருகிறார்கள்.
நரசம்மா இந்தச் சேவைக்குப் பணம் வாங்குவதில்லை.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35080
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது

Post by ayyasamy ram on Sun Feb 04, 2018 6:07 pmதேவதாசிகள் மீட்புப் பணி

மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த சித்தவ்வா,
ஏழு வயதில் தேவதாசியாக அர்ப்பணிக்கப்பட்டவர்.
அதற்காக அவருக்குப் புதுச் சட்டையும் பச்சை வளையலும்
அணிவிக்கப்பட்டன. மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்
இந்த அம்சங்கள் அவருக்குப் பிடித்திருந்தன.

பூசாரி அவரது கழுத்தில் ஒரு கயிறு கட்டியுள்ளார்.
அவர் 7-ம் வகுப்பு படித்தபோது ஒரு ஆணுடன் அனுப்பி
வைக்கப்படும் வரை என்ன நடக்கிறது என்பதை அவரால்
அறிய முடியவில்லை.

அவருடன் இருந்த ஆண் மூலம் அவரது குடும்பத்தினரின்
தேவைகள் பூர்த்தியாகியுள்ளன; அவரது தேவைகளும்.
ஒரு மகளும் பிறந்தாள். அந்த ஆண் அன்பானவர்தான்.

ஆனால், தேவதாசி முறைப்படி சித்வ்வாவைத் திருமணம்
செய்துகொள்ள முடியாது. இதுபோல் ஆயிரக்கணக்கான
பெண்கள் தேவதாசி முறையால் பாதிக்கப்பட்டிருப்பதை
சித்தவ்வா அறிந்துகொண்டார்.

அவர்களை மீட்கும் பணியில் தன்னை அர்ப்பணித்தார்.
அதற்காக ‘மாஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.
இதுவரை 3,600 தேவதாசிப் பெண்களை மீட்டுள்ளார்.
500 குழந்தைத் திருமணங்களைத் தடுத்துள்ளார்.
-
----------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35080
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது

Post by Dr.S.Soundarapandian on Sun Feb 04, 2018 9:13 pm

சூப்பருங்க :நல்வரவு:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது

Post by மூர்த்தி on Sun Feb 04, 2018 9:50 pm

பாரத ரத்னா விருது 1954 ஜனவரி இரண்டாம் திகதி அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.இதில் பத்ம விபூசன்,பத்ம பூசன்,பத்ம சிறி என மூன்று விருதுகள் தரப்படுகிறது.இந்த விருதுகள் ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தினத்தன்று அறிவிக்கப்படுகிறது. பணம் தரப்படுவதில்லை,விருதைப் பெறுவோர் தலைநகர் சென்று வர பிரயாணச் செலவு தரப்படுகிறது.முதன் முதலாக1954 இல் பாரத ரத்ன விருதைப் பெற்ற மூவர்- சி.இராஜகோபாலாச்சாரி அவர்கள்,டாக்டர்.சர்வபள்ளி இராதாகிருஷ்னன் அவர்கள்,C.V.இராமன் அவர்கள். (1930 இல் நோபல் பரிசை பெற்றார்)

விருதைப் பெற்ற முதல் பெண் இந்திரா பிரியதர்சனி காந்தி ஆவார்.
இசைக்காக விருது பெற்ற முதல் பாடகி (கர்நாடக இசை) 1998

வெளி நாட்டவர்களுக்கு 16 விருதுகள் வழங்கப்படுகின்றன.

முதல் விருது பெற்ற வெளி நாட்டவர் - கான் அப்துல் கபார் கான் (Khan Abdul Gaffar Khan )
இரண்டாவதாக பெற்ற வெளி நாட்டவர் நெல்சன் மண்டேலா ஆவார்.(1990)

2018 இல் பிரகாஷ் நந்தா (Ved Prakash Nanda) அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர் உட்பட விருது பெற்ற வெளி நாட்டவர்கள் 16 பேர்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 968
மதிப்பீடுகள் : 466

View user profile

Back to top Go down

Re: பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum