ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

தமிழரின் தொன்மை
 krishnanramadurai

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

புதிய சமயங்கள்
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இட்லிக்கடை மீனாட்சி!

View previous topic View next topic Go down

இட்லிக்கடை மீனாட்சி!

Post by krishnaamma on Tue Mar 06, 2018 7:40 am

அன்று, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நாள்... விழாக்கோலம் பூண்டிருந்தது, கூடல் மாநகர்.
நகரின் மையப் பகுதியான முத்துப்பிள்ளை சந்து முனையில், இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள், 70 வயது மீனாட்சி கிழவி. உலக நடப்பு பற்றி எந்தவித அக்கறையும் கொள்ளாது, இட்லி வியாபாரத்தில் முனைப்புடன் இருந்தாள். 


''ஏத்தா... இன்னைக்கு மீனாட்சி திருக்கல்யாணம்; மீனாட்சின்னு பேர் வச்சிட்டு, திருவிழாவுக்கு போகாம, இப்படி இட்லி கடையே கதின்னு கிடக்கறியே....'' இட்லி வாங்கிய செல்லத்தாயி, சும்மாயிராமல், கிழவியின் வாயை கிண்டினாள்.


''அடி போடி பொசகெட்டவளே... நான், அந்த மீனாட்சிய பாக்கப் போயிட்டா, அவளா இன்னைக்கு எனக்கு கஞ்சி ஊத்துவா... இல்லன்னா நீ ஊத்தப் போறியா... இந்த மீனாட்சி பாடு பட்டாதாண்டி கஞ்சி...'' என்று செல்லத்தாயியை ரெண்டு விரட்டு விரட்டவும், அவள், ''கிழவிக்கு ரோஷத்த பாரு,'' என்று சொல்லி, சிரித்தவாறு சென்று விட்டாள். 


தன், 30 வயதில், இந்த இடத்தில் இட்லி கடை போட்டவள், மீனாட்சி. தானும் ஜீவித்து, தன் இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து, இன்றும் யாருக்கும் பிடி கொடுக்காமல், கடன் இல்லாமல், காலந்தள்ளுகிறாள்.
இட்லி கடையின் ஆவிதான் அவள் விடும் மூச்சுக்காற்று; இட்லி கடை மீனாட்சி என்றால், அந்த ஏரியாவில் உள்ள சின்னப் புள்ளைக்கும் தெரியும்.


பரபரப்பாக அவள் இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மீனாட்சி கிழவியின் தங்கை மகன் கருப்பையாவும், அவன் மனைவி ஈஸ்வரியும், அவளிடம் அந்த விஷயத்தை எப்படி சொல்வதென்று தெரியாமல் தயங்கி நின்றனர். ''ஏண்டி... புருஷனும், பொண்டாட்டியும் ஒண்ணும் பேசாம நிக்கறீங்க... என்ன விசயம்?'' என்றவாறு, ஆவி பறக்கும் இட்லியை, வெந்து விட்டதா என்று விரலால் குத்திப் பார்த்தாள், கிழவி.

''பெரியம்மா... அரசரடியில, பெரியப்பன் சாகக் கிடக்கறாராம்; போன் வந்திருக்கு. ஒருமுறை போய் பாத்துட்டு வந்துடலாம்; கடையை எடுத்து வை,'' என்று பயந்தபடியே சொன்னான், கருப்பையா.


''ஆமா அத்தை... உங்க மக்கமாறு ரெண்டு பேரும் அப்பனை பாக்க போறாங்களாம், போன் வந்துச்சு,'' என்றாள், ஈஸ்வரி. 


எந்த பிரதிபலிப்பையும் காட்டாமல், இட்லி சுடுவதில் கவனமாக இருந்தாள், மீனாட்சி கிழவி. 
மனதிற்குள் எண்ண ஓட்டங்கள், பின்னோக்கிப் போயின...


மீனாட்சியின் கணவன் ராசு, கொத்தனார்; கட்டுமானப் பணியில் கை தேர்ந்தவன். இரண்டு பெண் குழந்தைகள் நண்டும் சிண்டுமாய் இருக்கையில், தன்னுடன் வேலை பார்த்த சித்தாள் மாயா மீது காதல் கொண்டு, அவளுடன் ஓடிப் போனான், ராசு. கடைசி வரை மீனாட்சியையும், குழந்தைகளையும் எட்டிப் பார்க்கவே இல்லை. 


புருஷன்காரன் ஓடிவிட்டதால், இரண்டு குழந்தைகளுடன் நிர்கதியாக நின்றாள், மீனாட்சி. வாழ்ந்தாக வேண்டும், இரு பெண் பிள்ளைகளையும் கரை சேர்க்க வேண்டுமே என்ற கவலையில், அன்று போட்ட இட்லி கடைதான், இன்றும் மீனாட்சிக்கு உயிர் கொடுக்கிறது. 40 ஆண்டு காலம் நாய் படாத பாடு... புருசன் என்ற நினைப்பே அவளுக்கு அற்றுப் போனது. கழுத்தில் தொங்கும் தாலியில்லாத மஞ்சள் கயிறு ஒன்று தான் அவள் சுமங்கலி என்பதற்கான ஒரே அடையாளம்!


கட்டுமான கான்ட்ராக்டில் பணம் தாராளமாக வரவே, மாயாவிற்கு ஆண், பெண் என்று இரண்டு பிள்ளைகளை கொடுத்து, அவளையும் விட்டு, கமலவள்ளி என்பவளுடன் சென்று விட்டான், ராசு. 


மீனாட்சி மற்றும் மாயா போன்று ஏமாளி இல்லை, கமலவள்ளி. ஏற்கனவே ரெண்டு பெண்டாட்டி கட்டி, அவர்களை விட்டு, தன்னிடம் வந்தவன், தன்னை விட்டுப் போக மாட்டான் என்பது என்ன நிச்சயம்... என்று கருதி, அகப்பட்டதை சுருட்டுடா ஆண்டியப்பா... என்ற பாணியில், ராசுவிடமிருந்த நகை, பணம், வீட்டுப் பத்திரம் என, அனைத்தையும் சுருட்டி, எங்கோ ஓடி விட்டாள். 


பணம் மற்றும் பெண் துணையின்றி தவித்தான் ராசு. வயதும், 60ஐ, நெருங்கி விடவே, முன்னைப் போல், வேலை செய்ய முடியாமல், மதிப்பற்று, வாழ்க்கையில் சாரமற்று போனான். குடிக்க கஞ்சியின்றி, ஊத்துவார் கஞ்சிக்கு உட்காரும் நிலை ஏற்பட்டது. இரண்டாவது மனைவி மாயாவின் மகள் தான், இரக்கப்பட்டு, கஞ்சி ஊற்றினாள். ராசுவின் இந்நிலையை கேள்விப்பட்டாலும், அதைப் பற்றி கவலைப்படவில்லை, மீனாட்சி.தொடரும்..............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: இட்லிக்கடை மீனாட்சி!

Post by krishnaamma on Tue Mar 06, 2018 7:41 am

''கிழவிக்கு என்னா வைராக்கியம் பாரு... என்னதான் இருந்தாலும், தாலி கட்டின புருசன் சாகக் கிடக்கிறான்; போய் பாக்காம இருக்கலாமா,'' என்றாள், செல்லத்தாயி.

''எந்த ஆம்பிள ஒழுங்கா இருக்கான்... இம்புட்டு வயசாச்சு, ஆனாலும் கிழவிக்கு இவ்வளவு வைராக்கியம் இருக்கக் கூடாது,'' என்றாள், இன்னொருத்தி. 


இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி, ''எந்த ஆம்பிள தப்பு பண்ணாம இருக்கான்னு, ஒரு தப்பை நியாயப்படுத்தி பேசுறீகளே... மீனாட்சி அத்தை, 40 வருஷமா ஒத்தையாயிருந்து மல்லாடிக் கிட்டிருக்கே... இதே தெருவில் பல வருஷமா குடியிருக்கிற உங்களுக்கு தெரியாதா... ஒரு கெட்ட சொல் வாங்கியிருக்குமா... இந்த காலத்தில, புருசன் சரியில்லன்னா, இன்னொருத்தன தேடிக்கிறாளுக... யாருக்கு பயந்து, கிழவி ஒழுக்கமா வாழ்ந்தா... மனசுக்குள் இருக்கற வைராக்கியத்தால தானே வாழ்ந்தா... அதை குறைச்சு பேசுறீங்களே...'' என்றாள். 


புரணி பேசிய பெண்கள் பேச்சடங்கினர்.அன்று மாலை, ராசு இறந்து விட்டார் என்ற செய்தி, மீனாட்சி கிழவிக்கு வந்தது.


'இப்பவாவது, புருசன் செத்த எழவிற்கு கிழவி போகுதான்னு பார்ப்போம்...' என்று, மீனாட்சியின் வீட்டிற்கு வேவு பார்க்கச் சென்றனர், அத்தெரு பெண்கள் இருவர். புருசன் செத்தது அறிந்து, ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை மீனாட்சி கிழவி. எண்ணெய் தேய்த்து தலை முழுகியவள், என்ன நினைத்தாளோ, கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றை கழற்றி, வெறுப்புடன் வீசியெறிந்தாள். 


குளித்து, தலை முடியை அள்ளி முடித்து, சுங்குடி சேலையொன்றை கட்டி, வெளியே கிளம்பினாள். மவுனமாக, கிழவியை வேடிக்கை பார்த்தனர், தெருவாசிகள். மாசி வீதியை நோக்கி அவள் வந்த போது, திருக்கல்யாணம் வைபவம் முடிந்து, நகர்வலம் வந்து கொண்டிருந்தாள், அன்னை மீனாட்சி. மீனாட்சியம்மையின் தரிசனத்திற்காக, கூட்டம் அலை மோதியது. அந்த கூட்டத்திற்குள் செல்லாமல், ஒரு கணம் நின்றவள், அம்மன் வரும் திசையை நோக்கி, கையெடுத்து கும்பிட்டு, கடை வீதியை நோக்கி, திரும்பி நடந்தாள். 


மஞ்சள், குங்குமம், மாங்கல்ய பாக்கியத்துடன் நகர்வலம் வரும் மீனாட்சியை அவள் தரிசிக்க விரும்பவில்லை. 
மளிகைக் கடையில், இட்லிக்கான அரிசி, உளுந்து, பலசரக்கு சாமான்களை வாங்கியபடி வீட்டிற்கு நடையை கட்டினாள்.


மறுநாள் காலை, எவ்வித பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தாமல், வழக்கம் போல் இட்லி கடையை திறந்தாள். 40 ஆண்டுகள் நெறி பிறழாது வாழ்ந்து காட்டிய மீனாட்சி கிழவி, ஒவ்வொரு பெண்ணிற்கும் சுய சார்பை, தன்னம்பிக்கையை கற்றுக் கொடுத்து விட்டாள். இளமையானாலும், முதுமையானாலும், ஒரு பெண்ணிற்கு தேவையான வலிமையும், உதவியும் அவளுக்குள்ளேயே உள்ளது என்பதை, தன் வாழ்க்கையின் மூலம் சக பெண்களுக்கு உணர்த்தி விட்டாள், மீனாட்சி கிழவி! 

மு.சுந்தரம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: இட்லிக்கடை மீனாட்சி!

Post by SK on Tue Mar 06, 2018 10:48 am

எனக்கும் இதே போல ஒரு பெண் தெரியும்
தனது ஒரே ஆன் பிள்ளைக்காக மட்டுமே வாழ்ந்தவர்
இன்று நானும் அவரை நிர்கதியாய் விட்டுவிட்டு விட்டுவிட்டு வந்துட்டேன்
ஆனாலும் வைராக்கியம் குறையாம வாழ்கிறார் என் அம்மா

அழுகை அழுகை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4994
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: இட்லிக்கடை மீனாட்சி!

Post by krishnaamma on Tue Mar 13, 2018 10:58 am

@SK wrote:எனக்கும் இதே போல ஒரு பெண் தெரியும்
தனது ஒரே ஆன் பிள்ளைக்காக  மட்டுமே வாழ்ந்தவர்
இன்று நானும்  அவரை நிர்கதியாய் விட்டுவிட்டு விட்டுவிட்டு வந்துட்டேன்
ஆனாலும் வைராக்கியம் குறையாம வாழ்கிறார் என் அம்மா

அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1261375


உங்களுக்கு என்ன பதில் போடுவது என்று தெரியாமல் ஒருவாரமாக மௌனமாக இருந்தேன் செந்தில்...........இன்றும் தெரியவில்லைதான், என்றாலும்   நான் என் பதிவுகளுக்கான பதில் போடாமல் இருந்தது கிடையாது ...அது தான் .......ஜஸ்ட் ஒரு பதில் போட வந்தேன் ! ........சோ சாரி செந்தில் ! சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: இட்லிக்கடை மீனாட்சி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum